பதிவுலகத்தில் பல வருடங்கள் உலா வந்துள்ள அடியேனை பற்றி உங்களில் அநேகருக்கு தெரியும். தங்களில் சிலரை பதிவுலகத்திற்கு வருவதற்கு முன்பே தெரியும். உங்களில் சிலர் அடியேனின் பதிவுகளை படித்து பிடித்து நெருக்கமான நட்பாகவும் மாறி விட்டீர்கள்.
மற்றும் சிலர், நட்ப்பாக மாறாவிடினும் பின்னூட்டத்தில் வாழ்த்து சொல்வீர்கள். பலர் சைலன்ட் ரீடர்ஸ். ஒரு சீக்ரட் அட்மைரர்.
என்னுடைய பதிவுகள் பொதுவாகவே என்வாழ்வின் நடந்த நிகழ்ச்சிகள் தான். உண்மையான நிகழ்ச்சிகளை நடுவில் மானே தேனே போட்டு எழுதுவேன்.
இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு ஐம்பது வயதை சார்ந்த தம்பதியரை சந்திக்க நேர்ந்தது. அவர்களிடம் நண்பர் ஒருவர்..
"மீட் விசு, இவர் தமிழில் பிளாக் எழுதுவார்"
என்று சொல்ல, அந்த அம்மணியோ...
"ஐயோ.. நீங்க தான் அதுவா.. ரொம்ப சந்தோசம், நானும் என் புருசனும் உங்க பதிவை தொடர்ந்து படிக்கிறோம். சில பதிவுகள் ரொம்ப டிராமாவா இருந்தாலும், ரொம்ப சிரிக்க வைக்கும் "
என்று சொல்ல,
பின்னர் அந்த தம்பதியினர் தங்களின் ராசாத்தியை பறி கொடுத்தவர்கள் என்றும் மிகவும் சோகத்தில் உள்ளார்கள் என்றும் கேள்வி படிக்கையில்...
அடே டே... இப்படி நேரம் காலம் எடுத்து எழுதுறோமே, ஏதாவது பயன் இருக்கான்னு நானே எனக்கு கேட்டதும் கொள்ளும் கேள்விக்கு அன்று ..
பரவாயில்லை யாராவது ஒருத்தவங்களுடைய கஷ்டத்தை ஒரு நிமிஷம் மறக்க வைக்கிறோம். தொடர்ந்து எழுதுவோம்னு எழுதுறேன்.
சரி தலைப்பிற்கு வருவோம்
நீங்க என்னை பற்றி நிறைய அறிந்ததால்.. மூணு விஷயம் சொல்ல போறேன். அதுல ரெண்டு உண்மை ஒன்னு பொய். எது பொய்யின்னு சொல்லுங்க பார்ப்போம்.
யாருக்கு தெரியும்.. சர்ப்ரைஸ் பரிசு கிடைத்தாலும் கிடைக்கும்.
1. ஒரு முறை நான் நடுகடலில் தூக்கி எறியப்பட்டேன்.
2. கல்லூரி நாட்களில் ஒரு பாடத்தில் மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் முதலாவதாக வந்தேன்.
3 .சில தமிழ் திரை படங்களில் குரூப் டான்சராக பணியாற்றி உள்ளேன்.
எங்கே சொல்லுங்கள். இவை மூன்றில், பொய் எது என்று!
பின் குறிப்பு :
சரி, இதுல எது பொய்யின்னு யோசிக்கும் போதே உங்களை பற்றி மூணு விஷயம் ஒரு பதிவில் எழுதி இங்கே அந்த லிங்க் தாங்க. நானும் மூணுல எது பொய்யின்னு கண்டுபிடிக்கிறேன்.
3) வது கதை மாதிரி இருக்கு.
பதிலளிநீக்குசரி நான் சொல்றதுல எது பொய் னு சொல்லுங்க பார்க்கலாம்
1) நான் 8 வது வரைக்கும் மக்கு. 9 பதாவதுலதான் கொஞ்சம் பாஸ் பன்ற அளவுக்கு படிக்க ஆரம்பிச்சேன்.
2) எனக்கு நீச்சல் தெரியும்
3) ஆன்லைன் உலகில் நான் பலரை நான் "ஆப்போசிட் செக்ஸ்" என்றூ நம்ப வைத்து இருக்கிறேன். இன்னைக்கு வரைக்கும்.
:)
நீக்குI guess Your no 2 is lie.
ஆஹா..அடியேன் யூனிவர்சிட்டி முதல் மதிப்பெண்ணை பெற்றுஇருப்பேன் என்று தான் நினைத்து இருப்பது எனக்கு பெருமையே.
நீக்கு3 .சில தமிழ் திரை படங்களில் குரூப் டான்சராக பணியாற்றி உள்ளேன்.//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா விசு நாங்க இப்ப கூட இதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பதுண்டே!!!! நம்ம விசுவா இதுன்னு!!
கீதா
ஹலோ... அமைதி காப்போம்!
நீக்குஹா ஹா ஹா விசு அமைதியாவே இருக்கு போல!!
நீக்குகீதா
All three I guess :)
பதிலளிநீக்குCross my heart and hope to die. Only one of them is a lie, trust me. Otherwise the whole fun is gone.
பதிலளிநீக்குVisu
2
பதிலளிநீக்குதனபாலன், எனக்கு இருக்க அறிவுக்கு நான் எல்லாம் அமெரிக்காவில் இருக்க வேண்டியவன். ஜுஜுபி ஒரு யூனிவர்சிட்டி ரேங்க் எடுத்து இருக்க முடியாதுன்னு நினைச்சிடீன்களே...
நீக்குGrrr....
1 வது?
பதிலளிநீக்குதுளசிதரன்
ஆஹா..அடியேன் யூனிவர்சிட்டி முதல் மதிப்பெண்ணை பெற்றுஇருப்பேன் என்று தான் நினைத்து இருப்பது எனக்கு பெருமையே.
நீக்கு1. நடுக்கடல்.
பதிலளிநீக்குஆஹா..அடியேன் யூனிவர்சிட்டி முதல் மதிப்பெண்ணை பெற்றுஇருப்பேன் என்று தான் நினைத்து இருப்பது எனக்கு பெருமையே.
நீக்கு1) எந்த வயதில் என்று சொல்லவில்லை!
பதிலளிநீக்கு2) ஒரு பாடம் மட்டும் மெட்றாஸ் யுனிவர்சிட்டியில் படிக்க முடியுமா?!!
3) எந்த வருடத்தில் என்று சொல்லவில்லை!
இப்படி எல்லாவற்றிற்கும் விளக்கம் அளித்தால் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும் நண்பரே. இதுவரை என்னை பற்றி தாம் அறிந்ததை வைத்து கணிக்கவும்.
நீக்குமதராஸ் யுனிவர்சிட்டியில் முதுகலையில் தேர பத்து பாடங்கள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலேயும் 50 மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி. அந்நாட்களில் ஒவ்வொரு பாடத்திலும் முதலாவதாக வந்தோருக்கு ஒரு சந்தன மாலையும் சில புத்தகங்களும் பரிசாக அனுப்பி வைப்பார்கள்.
No.2 for sure.,because….
பதிலளிநீக்குBecause...
நீக்குநீ பண்ற அநநியாத்துக்கு உன்னை நாடு கடலில் தள்ளி விட்டாலும் இருந்து இருப்பாங்க. உன் அறிவுக்கு முதலாவது ...?
எல்லாமே உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டு. எதுவுமே அதீதமான கற்பனை அல்ல. கண்டிப்பா ஒன்று கற்பனை என்றால்தான் நான் குரூப் டான்சரை செலெக்ட் செய்வேன். ஒரு சப்ஜெக்டில் இரண்டாவதாக வந்திருக்கவும் வாய்ப்பு உண்டு.
பதிலளிநீக்குநானும் மெட்ராஸ் யூனிவெர்சிட்டியில் படித்தவன் தான். மெட்ராஸ் யூனிவெர்சிட்டியில் சுப்ஜெக்ட்க்கு எல்லாம் ரேங்க் கொடுக்க மாட்டார்கள். மொத்த மார்க் அடிப்படையில் தான் ரேங்க் வரும். மேலும் நான் படித்த காலத்தில் மார்க் ஷீட்டில் மார்க் இருக்காது. கிரேடு எ பி சி என்று தான் இருக்கும். ஆகவே 2. Jayakumar
பதிலளிநீக்குwhere's the answer???
பதிலளிநீக்குNobody cares! :)
நீக்கு