Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Monday, April 20, 2020

விசு .. வேலை வேண்டும்!

ஞாயிறு மதியமும் அதுவுமா மகளிர் மூவரும் குட்டி தூக்கம் போட்டு கொண்டு  இருக்கையில் பூனை நடை போட்டு (மூவரில் யாராவது ஒருத்தர் எழுந்தாலும் ஏதாவது ஒரு வேலையை சொல்லுவாங்க) சமையலரை சென்று ஒரு தேநீர் போட்டு அதை பருகி கொண்டே  பின்னால் உள்ள தோட்டத்தில் அமர்ந்து இருக்கையில், இளைய ராசாத்தி முதுகை தட்டினாள்.

"டீ வேணுமா!!!? "

"ப்ளீஸ்... தேங்க்ஸ் !!!"

"என்ன மக சோகமா இருக்க , என்ன ஆச்சி!!!?"

"ஹ்ம்ம்... ஒன்னும் இல்ல!!!"

என் அகத்தில்...  உன்  அகத்தின்  அழகு தான் முகத்தில்  தெரியுதே.. என்று எண்ணி கொண்டே..

"ஓகே. If you want to talk, you know where to find me"

என்று சொல்லி சமையலறைக்குள் நுழைய..

"இந்த கொரோனா.. ஐ ஹேட் இட்!!!!"

என்று கதறினாள்.

"இங்க வா..!!!! "


Thursday, April 9, 2020

கொரோனா - கணக்கின் கணக்கு!

ஜனவரி மற்றும் பிப் மாதத்திலேயே "கொரோனா" என்ற வார்த்தை  பேச்சுவாக்கில் இருந்தாலும் அது இவ்வளவு தீவிரமான நோயாக மாறி வாழ்க்கை முறையையே மாற்றி விடும் என்று அனைவரை போல அடியேனும் நினைக்கவில்லை.

மார்ச் முதல் வாரத்தில், நிறுவனத்தின் மேலதிகாரிகள் கூட்டத்திற்கான 911  (அவசர) அழைப்பு வர, இது என்னவாய் இருக்கும் என்று நகத்தை கடித்து கொண்டு அலுவலகத்திற்குள் நுழைய, மேலும் கீழும் நடந்து கொண்டு  இருந்த எங்கள் ப்ரெசிடெண்ட்..

"I am not asking you, I am telling you"!!

என்று கூறிவிட்டு, நாளை முதல் யாரும் அலுவலத்திற்கு வரக்கூடாது. அவரவர்களுக்கு தேவையான பொருட்களை ( கணினி, பிரிண்டர்) போன்றவற்றை இன்று வேலை முடிந்து போகும் போது வீட்டிற்கு எடுத்துகொண்டு போக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Saturday, November 4, 2017

அம்மணியை கவர...கவிழ்க்க ஒரு ஐடியா!

அம்மணியின் பிறந்தநாள் நாளைக்கு... ரெண்டு ராசாதிக்களும் ரகசியமா பிறந்த நாள் பரிசு வாங்கிட்டாளுங்க.. என்ன பரிசுன்னு கேட்டேன் ... "இட்ஸ் எ சீக்ரட்ன்னு" சொல்லி தொரத்திட்டாளுங்க.

கடந்த சில வருடங்களாகவே நம்ம வாங்கி கொடுத்த ஒன்னும் வேலைக்கு ஆகல, அதனால் இந்த வருஷம்.. என்ன வேணும்னு நேராவே கேட்டுட்டேன்.

நல்ல வேளை.. கேட்டீங்க.. நீங்க பாட்டுக்கு ஏதாவது வாங்கினு வந்துடுவீங்களோன்னு பயந்தேன்..

நல்ல மாட்டுக்கு நாலு சூடு.. சொல்லு.. வானவில்லை வளைக்கட்டும்மா.. இல்லாட்டி ....

Monday, January 18, 2016

பாடலாசிரியர் கார்கி வைரமுத்து அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்.

கடந்த சில நாட்களாக இணைய தளத்தில் சில பதிவர்களின் கவிதைகளை படித்தேன். யாருமே அறியாத பதிவர்கள், ஆனால் இவர்களின் கவிதையின் தரமோ அபாரம்.

இவ்வளவு சீராக ... நேர்த்தியாக அர்த்தமுடன் எழுதும் இவர்களை உலகறியவில்லையே என்ற ஏக்கம், என்னை வருத்த படசெய்தது .

Tuesday, October 27, 2015

ரஜினியின் "முரட்டுகாளை" & கமலின் "குரு" எனக்கு கிடைத்த வாய்ப்பு!

இது சென்ற பதிவின் தொடர்ச்சி. அந்த பதிவை படித்து விட்டு இங்கே வந்தால் இன்னும் நன்றாக புரியும். அதை படிக்க இங்கே சொடுக்குங்கள் ...

அதிசயம் : "நடக்காதென்பார் நடந்துவிடும் ..."(தொடர்ச்சி..1)


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் "பொழுதுபோக்கு பூங்கா"விற்கு அக்டோபர் 25, 2018 குடும்பத்தோடு வந்த நான், அப்படி என்ன ஒரு எதிர் பாராத காட்சியை காட்சியை பார்த்தேன்.

திரும்பி பார்த்த நான் அக்காலத்து மாமன்னர்கள் உடையணிந்த இரண்டு மன்னர்களையும் மற்றும் அவர்கள் இருவரின் மத்தியிலும் நடந்து வந்த ஒரு மூதாட்டியும் பார்த்தேன். நான்காம் வகுப்பில் நான் படித்த வரலாற்று நாடகம் நினைவிற்கு வர அந்த மூதாட்டியை அவ்வையார் என்று அறிய நிறைய நேரம் பிடிக்கவில்லை. அம்மை அவ்வையார்... அப்போது அந்த மன்னர்கள்... ஒருவேளை ...அதியமானும் .. தொண்டைமானும்..

Monday, October 26, 2015

அதிசயம் : "நடக்காதென்பார் நடந்துவிடும் ..."

என்ன டாடி, காலையில் இவ்வளவு சீக்கிரம் கிளம்ப சொல்றிங்க?

அடியே, நான் பெத்த ராசாத்தி, இன்னைக்கு என்ன தேதி ..

அக்டோபர் 25, 2018, அதுக்கு என்ன இப்ப?

அதுக்கு என்னவா? ரெண்டு வருஷம் கழித்து  இந்தியா வந்து இருக்கோம் . அதுவும் மெட்ராசுக்கு (அது என்னவோ போங்க.. இந்த சென்னை என்ற பெயர் வாயில் நுழைய மாட்டுது), இன்னைக்கு பெரிய பிளான்.

என்ன பிளான்?

மகள், நம்ம ஊரில் ஹாலிவுட்டில் இருக்கிற "யுனிவர்சல் ஸ்டுடியோ" போல், இங்க தமிழ் சினிமாவின் வரலாறை பற்றி எடுத்து சொல்லும் ஸ்டுடியோ ஒன்னு திறந்து இருக்காங்க.

Sunday, January 4, 2015

புடவைக்கு ஒரு பூவா - தலையா ...!

சென்ற பதிவில் "புடவை அழகா இருக்கே?!" என்ற தலைப்பில் நண்பன் தண்டபாணியும் அடியேனும் பட்ட அவதி பற்றி எழுதி இருந்தேன். இந்த பதிவு அதன் தொடர்ச்சி. இந்த பதிவை படிப்பதற்கு முன் சென்ற பதிவை ஒரு முறை படித்து விட்டு வரும் படி கேட்டு கொள்கிறேன் (இங்கே சொடுக்கவும்) .

சரி.. இன்றைக்கான பதிவிற்கு வருவோம்.  சென்ற பதிவை முடிக்கும் போது ... மாட்டி கொண்டோமா .. மாட்டி கொண்டோமா? என்று தான் முடித்தேன்.

Monday, December 29, 2014

நலம் தானா? நலம் தானா? ....உடலும் உள்ளமும்....!

வளைகுடா நாட்டின் நாட்கள்....அலுவலத்தில் இன்னொரு நாள்...

மிஸ்டர் விசு...

சொல்லுங்க மிஸ்டர் குஞ்சு குஞ்சு...
(என்னடா இவர் பெயர் வித்தியாசமாக இருகின்றதே என்று நீங்கள் பார்ப்பது புரிங்கின்றது... அதில் பெரிய கதையே உண்டு... அதை படிக்க இங்கே சொடுக்குங்கள்)

இந்த அரசு அலுவலத்தில் இருந்து நம்ம போன மாச "பில்" இன்னும்  டெபொசிட் பண்ணவில்லை. நான் எத்தனை முறை போன் பண்ணியும் சரியான பதில் கிடைக்கவில்லை, நீங்க கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.

ஓகே ... குஞ்சு குஞ்சு.. ஐ வில் டேக் கேர் ஆப் இட். தேங்க்ஸ்.

Wednesday, December 17, 2014

அச்சச்சோ புன்னகை ....

என்னா விசு ? கோழிய அடிச்சி கொழம்பு கொதிக்கும் வாசனை வரும் போது தானே எழுவ? இப்ப எல்லாம் கொஞ்ச நாளா கோழி கூவும் போதே எழுறியே என்ன விஷயம்?

அது எல்லாம் ஒன்னும் இல்ல? நான் எப்போதும் போல தான் காலையில் ஐந்து மணிக்கு தான் எழுறேன்.

டேய், எனக்கு ஏற்கனவே காது குத்தியாச்சி, இதில் நீ வேற..
உண்மைய சொல்லு..

மச்சி, இந்த மாதிரி பொதுவா "உண்மைய சொல்லுன்னு" யாராவது கேட்கும் போது ரொம்ப ஜாக்கிரதையா பதில் சொல்ல வேண்டும். அவங்க எதோ கேட்க போய் நம்ப நம்மை பற்றிய தேவையில்லாத விஷயத்தை எல்லாம் போட்டு உடைச்சிடுவோம்.

சரி, நீ விஷயத்திற்கு வா, என்ன விஷயம்? இப்ப எல்லாம் காலையில் 5 மணிக்கு எழுந்து வெளிய போற?

சம்பத்து.. எனக்கு ஆயிரம் வேலை இருக்கும்..அதில் உனக்கு என்ன பிரச்சனை?



இல்ல நானும் ஒரு மாதமா பார்கின்றேன், நீ காலையில் எழுந்து உமா படிக்கின்றாளே அதே டைப்பிங் வகுப்பு நடக்கும் இடத்திற்கு போற. என்ன விஷயம்?

Friday, December 12, 2014

தாய்க்கு பின் தாரம்!

அலை பேசி அலறியது...

ஹலோ.. விசு பேசுறேன்..

வாத்தியாரே .. தண்டபாணி பேசறேன். உன்னிடம் ஓர் முக்கியமான விஷயம் பேசணும். இப்ப பேசலாமா? இல்லை அப்புறம் கூப்பிட்டா?

இப்ப கொஞ்சம் பிசி தான் தண்டம், இருந்தாலும் இப்பவே சொல்லு. அப்புறம்ன்னு சொல்லுன்னு போனாலும்...மனசெல்லாம் நீ என்ன பேச வந்தே என்ற எண்ணத்திலேயே இருக்கும் .. விஷயத்தை சொல்லு.

Wednesday, October 22, 2014

MS விஸ்வநாதனை கலாய்த்த கண்ணதாசன்!


நெஞ்சில் ஒரு ஆலயம்  என்ற திரைப்படம் ஸ்ரீதர் - MSV - கண்ணதாசன் மூவரும் இணைந்து வழங்கிய படம். எனக்கே 7 கழுதை வயசு ஆக போகுது, இந்த படம் நான் பிறப்பதற்கும் நான்கு வருடங்கள் முன்னதாக  வந்து உள்ளது.

இரண்டு நாயகர்கள் ஒரு நாயகி. படத்தின் கதை - திரை கதை அமைப்பு பாடல்கள் இசை எல்லாம் நன்றாக அமைய இது ஒரு காவியம் ஆகிவிட்டது.

Wednesday, October 1, 2014

நான் ஒரு முட்டாளுங்க....


ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட பின் நம் தமிழ் சினிமாகாரர்கள், ஜெயலலிதாவிற்கு ஆதரவாக பேசி கொண்டு வருவது, " நான் ஒரு முட்டாளுங்க" என்று அவர்களை பற்றி அவர்களே பாடி கொண்டு வருவது போல் தெரிகிறது.

Tuesday, September 30, 2014

பாஸ்போர்ட் - போஸ்ட் ஆபிஸ்- பேங்க் வேலை எல்லாம் முடிந்தது.

ஏங்க...

சொல்லு மா...

எங்க மாமா வந்து இருக்காரு இல்ல, அவர் இன்னும் மூணு நாளில் ஊருக்கு கிளம்புறாரு, அவரை இன்றைக்கு கொஞ்சம் பக்கத்தில் உள்ள மால் (கடை) கூட்டி கொண்டு போய் வேண்டியத வாங்கி கொடுங்க.

அய்யய்யோ, இன்றைக்கா? கொஞ்சம் வேலை இருக்கே...

என்று நான் சொன்னதும், மாமா பேச ஆரம்பித்தார்.

பரவாயில்லை விசு, வேற நாள் பார்த்துகொள்ளலாம்.

இல்லங்க... இன்றைக்கே முடித்து விடுங்கள். அது சரி, அப்படி என்ன வேலை?

Sunday, September 14, 2014

(8)மூன்றாம் பிறை - தொடர் கதை

மறைந்த இயங்குனர் பாலு மகேந்திராவுக்கு ஓர் அஞ்சலி!

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும் 

தொடர் கதை... (சென்ற இடுகை படிக்க இங்கே சொடுக்கவும்)



ரயில் பயணம் தொடர்ந்தது.

லக்ஷ்மியின் அப்பா படித்தவர், நல்ல உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். எந்த ஒரு காரியத்தையும் நல்லதா, கெட்டதா என்று சிந்தித்து செயல் படுபவர். அவர் நினைவுகளோ அந்த ரயிலை விட வேகமாக ஓடி கொண்டு இருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு வாடகை வண்டியில் தானும் தன்  மனைவியும் லக்ஷ்மியை தேடி ஊட்டிக்கு சென்றது. அங்கே அவளை கண்ட போது, அவள் அந்த வைத்தியர் கொடுத்த மருந்தில் மயக்கத்தில் இருந்தாள். என்ன பேசுகிறோம் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் அந்த மருத்துவரையும் மற்றவர்களையும் கண்டபடி திட்டி விட்டார்.


Saturday, September 13, 2014

கடலை நோக்கி போனாரே..

அலறி அடித்தது அலாரம். என்னடா சனியும் அதுவுமா அலராம என்று நினைத்து கொண்டே இருக்கையில் மனைவி அதை நிறுத்தி விட்டு,...
ஏங்க... சீக்கிரம் எழுங்க... லேட்டா போனா நல்லது கிடைக்காது.
என்ன சொல்லுற...

Tuesday, September 2, 2014

துப்பாக்கி கையில் எடுத்து....

என்னங்க, கொஞ்சம் வங்கி வரைக்கும் போயிட்டு வரமுடியுமா?

வங்கியா. எதுக்கு, எல்லாத்தையும் தான் ஆன் லைனில் செய்யலாமே, இதுக்கு எதுக்கு அங்கே போக வேண்டும்.

அய்யோ, அது அங்கே, இது பெங்களூர். கொஞ்சம் போய் அந்த பாஸ் புக்கில் எல்லா என்ட்ரியும் போட்டுட்டு கொஞ்சம் ரூபாயும் எடுத்துட்டு வாங்க.

சரி, வரேன்.

நேராக பெங்களூர் மாஸ்க் ரோட்டில் உள்ள வங்கியில் நுழைந்த எனக்கு "மலரும் நினைவுகள்"! பல வருடங்களுக்கு முன் அருகே இருந்த கல்லூரியில் வேலை கிடைக்க, முதல் சம்பளமே எல்லா பிடிப்பும் போக 1800 ருபாய். முதல் சம்பளம் வாங்கிய பின் ஆரம்பித்த வங்கி கணக்கு. இன்னும் ஓடி கொண்டு இருக்கிறது.

Thursday, August 21, 2014

டைரக்டர் பாக்யராஜுக்கு இது அவசியமா?

முதல் பொருள் முதல், அதாவது " First thing First".

யாம் அறிந்த திரை கதை அமைப்பாளர்களிலே, பாக்யராஜ் போல் ஒருவரையும் கண்டது இல்லை. நான் இவரின் தீவிர ரசிகன். ஒரு தனி மனிதனின் மூளைக்கு தான் எவ்வளவு ஒரு கற்பனை சக்தி என்பதை இவரின் திரை நாட்களில் - திறமையில் கண்டு கொள்ளலாம். அவ்வளவு ஒரு திறமை. அதற்கும் அடுத்தாற்போல், நகைச்சுவை தன்மை. இவரின் நகைச்சுவையும், திரைகதையும் என்றுமே நகமும் சதையும் போல் ஒட்டி கொண்டு இருக்கும். தனியாக ஒரு "காமடி ட்ராக்"  என்பது இவரிடம் கிடையாது. இது நம்ம ஆளு, டார்லிங் - டார்லிங்-டார்லிங் போன்ற படங்களை இன்றும் பார்த்து குலுங்கி குலுங்கி சிரிப்பவன் நான்.

Tuesday, August 19, 2014

மீண்டும் "கடல் மீன்கள் " இம்முறை பசிபிக் பெருங்கடலில் இருந்து...

விசு, வர திங்கள் என்ன பிளான்?

திங்களும் அதுவும்மா என்ன பிளான்? வேலைக்கு போயிட்டு வீட்டிற்கு வந்து ராசத்திகளை ஒரு ரெண்டு மணிநேரம் விளையாட கூட்டிக்கொண்டு போவேன் அவ்வளவு தான். ஏன் கேட்கின்றாய்?

இல்ல, விசு, இந்த திங்கள் நம்ம ஊருக்கு கடல் மீன்கள் வருதாம், நீயும் உன் குடும்பத்தோடு வந்தா எல்லாரும் சந்தோசமா போயிட்டு வரலாமே.

டேய், கடல் மீன்கள் ஒரு நல்ல படம், ஆனாலும் ரொம்ப பழைய படம் ஆச்சே.அது எப்படி இப்ப இங்க வருது? ஒரு வேளை நீ மணி ரத்தினத்தின் "கடல்" படத்த சொல்லுற போல இருக்கு. எனக்கு தான் மணிரத்தினம் படத்த பாத்து ரசிக்கும் அளவிற்கு ரசனை இல்லையே, நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க.

அட, சும்மா சினிமா பத்தியே பேசுறியே, இது நிஜமான கடல் மீன்கள் விசு.

என்னா குரு குழப்புற...?

ஒன்னும் இல்ல விசு, வருடத்திற்கு ஒருமுறை இந்த சீசனில் "க்ரானியன்" என்று அழைக்கப்படும் இந்த நெத்திலி வகை மீன்கள் கூட்டம் கூட்டமா கரைக்கு வரும். அது இங்க கரைக்கு வந்து மணலில் முட்டை போடும், அப்ப நம்ம கரையில் நின்று நமக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சேகரிக்கலாம். அப்புறம் வீட்டிற்கு வந்து, மிளகாய், மஞ்சள், உப்பு போட்டு ஒரு வறுவல். கூடவே சீராக சாம்பாவில் அருமையான எலுமிச்சை சாதம். சேத்து வைச்சி தாக்குனா  நம்ம ஊரு காசிமேட்டில் இருக்கிற மாதிரி ஒரு பீலிங். வா, விசு போயிட்டு வரலாம்.

சூப்பர் பிளான் மாப்பு. நெத்திலி வறுவல் சாப்பிட்டு கொஞ்சம் நாள் ஆகிவிட்டது. திங்கள் கண்டிப்பா போகலாம்.

சரி விசு, இந்த மீனை பிடிக்க ஒவ்வொரு குடும்பமும் ஒரு லைசென்ஸ் வாங்கணும், அதை இந்த வாரத்திலே வாங்கி விட வேண்டும், அதுக்கு ஒரு 6 டாலர். ஓகே?

சரி, மாப்பு, ஓகே. என் பக்கத்து வீட்டு வெள்ளைகாரனிடம் ஒரு 4 பகட் கடன் வாங்கி வரட்டும்மா? சுத்தம் பண்ணி" ப்ரீஸ்" பண்ணிடலாமே.

இந்த பேராசை தானே வேண்டாங்கிறது. வீட்டுக்கு ஒரு பகட்.அதுக்கும் மேல பிடிக்க கூடாது.

ஓகே, மாப்பு, இது திங்கள் முழுவதுமா, இல்ல ஒரு குறுப்பிட்ட நேரத்திலையா?

இரவு 9-11 வரை தான், அதுக்கும் மேல ஒன்னும் கிடைக்காது.

குரு, என்னை வச்சி காமடி கீமடி எதுவும் பண்ணலையே...

என்னை நம்பு விசு, இது உண்மை. வேணும்னா இங்க விக்கிபீடியா பக்கத்தை படிச்சு பாரு, இன்னும் நிறைய விஷயம் போட்டு இருக்கான். அது மட்டும் இல்லாமல் இந்த "யு டுப்" வீடியோ கூட பாரு.

தேங்க்ஸ் குரு, திங்கள் சாயங்காலம் சந்திப்போம், மறக்காம நல்ல ஒரு காமரா எடுத்துனு வா, குரு,

காமரா ஏன் விசு?

இல்ல குரு, இந்த விசயத்த வச்சி ஒரு ப்ளாக் எழுத போறேன்.  திங்கள் கிழமை அந்த போட்டோ போட்டா எல்லாரும் பாப்பாங்க இல்ல, அது தான்.

விசு , ப்ளாக், ஆளுங்க படிக்கிறதோடு இருந்தா சரி, எலுமிச்சை சாதம், நெத்திலி வருவல்ன்னு விமானம் ஏறி இங்க வந்துட போறாங்கோ.

Friday, August 15, 2014

நீ கணக்கு எழுத தான் லாயிக்கு!


கோடை விடுமுறை முடிய போகிறது. என் மூத்த ராசாத்தி 9 வகுப்பு முடித்து 10ம் வகுப்பு செல்ல தயார். இங்கே பள்ளி கூட்டத்தில் 9, 10,11, 12ம் வகுப்பே என்று யாரும் சொல்லமாட்டார்கள். இவர்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு பெயர் :

9ம் வகுப்பு : Freshman
10ம் வகுப்பு : Sophmore
11ம் வகுப்பு : Junior
12ம் வகுப்பு : Senior

Thursday, August 14, 2014

"பாரதி ராஜா - இளைய ராஜா" - ஒரு மாஸ் காம்பினேஷன்



என் இனிய தமிழ் மக்களே என்ற கம்பீரமான குரலை அறியாத தமிழன் இல்லை என்று சொன்னால் அது மிகையாகது. 16 வயதினிலே படத்தை பார்த்தவுடன் மனத்தில் வந்த முதல் எண்ணம். அடேங்கப்பா? தமிழ் சினிமா உலகிற்கு ஓர் "தங்க புதையல் வேட்டை தான்" .

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...