திங்கள், 26 அக்டோபர், 2015

அதிசயம் : "நடக்காதென்பார் நடந்துவிடும் ..."

என்ன டாடி, காலையில் இவ்வளவு சீக்கிரம் கிளம்ப சொல்றிங்க?

அடியே, நான் பெத்த ராசாத்தி, இன்னைக்கு என்ன தேதி ..

அக்டோபர் 25, 2018, அதுக்கு என்ன இப்ப?

அதுக்கு என்னவா? ரெண்டு வருஷம் கழித்து  இந்தியா வந்து இருக்கோம் . அதுவும் மெட்ராசுக்கு (அது என்னவோ போங்க.. இந்த சென்னை என்ற பெயர் வாயில் நுழைய மாட்டுது), இன்னைக்கு பெரிய பிளான்.

என்ன பிளான்?

மகள், நம்ம ஊரில் ஹாலிவுட்டில் இருக்கிற "யுனிவர்சல் ஸ்டுடியோ" போல், இங்க தமிழ் சினிமாவின் வரலாறை பற்றி எடுத்து சொல்லும் ஸ்டுடியோ ஒன்னு திறந்து இருக்காங்க.





ஒ சூப்பர் டாடி. சீக்கிரம் கிளம்புங்க, ஐ லைக் தமிழ் மூவிஸ்..

என்று மகள் சொன்னதும், குடும்பத்தோடு கிளம்பினோம்.

ஹோட்டல் அறையில் இருந்து அரைமணிநேரம் கழித்து அந்த இடத்தை சென்று அடைகையில் மணி 7:30 போல் இருந்தது.  உள்ளே செல்லுகையில் வாசலில் இருந்த பரிசோதகரிடம் இணையதளத்தில் ஏற்கனவே செய்து இருந்த பதிவினை காட்ட அவர் சன்னலின் வழியாக  பார்த்து மொத்த தலைகளை எண்ணி எங்களை உள்ளே அனுப்பினார். உள்ளே அமைந்து இருந்த அடுக்கு மாடி பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு, அனைவரும் நடந்து அங்கு இருந்த பிரமாண்டமான கதவை நோக்கி சென்றோம்.

சீக்கிரம் வாங்க! இங்கே சில சமயங்களில் படபிடிப்பும் நடக்கும். அதற்கான சீட்டுகளை காலையில் 8:30க்கு முன்னால் வாங்கி விட வேண்டும்.

இன்றைக்கு யாரு ஷூட்டிங் டாடி?

அது சர்பரைஸ் மகள். யாருன்னு சொல்ல மாட்டாங்க? ஆனால் கண்டிப்பா ஷூட்டிங் இருக்கும்.

அது ஏன் இங்க பண்றாங்க?

ராசாத்தி, ஒரு திரைபடத்தில் வரும் ஒரு காட்சி எடுப்பதற்கு எவ்வளவு வேலைகள் - திறமைகள் -நேரம் -பணம் வேண்டும் என்பதை பொது மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும். அதுமட்டும் இல்லாமல். இதை பார்க்கும் -  வளரும் பிள்ளைகள், நாளை அவர்களும் திரைஉலகில் மின்ன முடியும் என்ற ஒரு எண்ணத்தையும் உருவாக்கவேண்டும். அதனால் தான்.

ஒரு நிமிடம் இருங்க..

நாலு ஷூட்டிங் டிக்கட் ப்ளீஸ் ..

ஒருத்தருக்கு 150 ருபாய், 600 தாங்க.

இந்தாங்க.. இன்றைக்கு யாரு படம் ஷூட்டிங்?

ரஜினி சாரோட .. "நெற்றிக்கண் - 2", சரியா 10:30க்கு வந்துடங்க?

அடே டே.. சூப்பர் போங்க.

தாமதமா வந்தா அனுமதிக்க மாட்டார்கள். இன்னொரு விஷயம் .. அந்த இடம் "அமைதி இடம் (Silent Zone)" யாரும் பேச கூடாது மற்றும் அலைபேசி அணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

ஓகே.. இப்ப தானே 8 போல் ஆக போது .. அதுவரை என்ன செய்வது ..?

8 மணிக்கு அங்கே கண்காட்சி சாலை திறந்து விடும் ..

அதுக்கு எவ்வளவு டிக்கட்.

100 ருபாய் கொடுத்து நீங்க வாங்கின அனுமதி சீட்டில் அது அடங்கும். அத போய் பார்த்து ரசித்துவிட்டு நேரத்திற்கு வாங்க.

நேராக அந்த கண்காட்சிக்கு பார்க்க போன எனக்கு ஒரே ஆச்சரியம்..
சீராக அமைக்க பட்டு இருந்த அந்த இடத்தில் வரிசையாக கட்டப்பட்ட அறைகள்.

முதல் அறையில். .தமிழ் திரையில் முதல்முதலாக (1931ல்) வந்த " காளிதாஸ்"  என்ற படத்தை பற்றி சில விஷயங்கள் திரையில் தோன்றின. அந்த படத்தின் காட்சிகளும் சில காட்டப்பட்டன. அதை பார்த்து விட்டு மெதுவாக அடுத்த அறைக்கு சென்றோம்.

அடுத்த அறையில் 1931ல் இருந்து 1936 வரை வந்த படங்களை பற்றிய காட்சிகள் குறிப்புகள். அதில் எனக்கு பிடித்தது ..M.R. ராதா நாயுடு அவர்கள் நடித்த "சதி லீலாவதி" படத்தின் ஒரு காட்சி, என்னே ஒரு நடிப்பு. இவர் எந்த மொழியாய் இருந்தால் என்ன ? என்ன சாதியாய்இருந்தால் என்ன ? நடிப்புக்காகவே பிறந்து இருக்கின்றாரே என்று நினைத்து கொண்டு அடுத்த அறைக்கு சென்றேன் ..

அங்கே ... 1940- 1960 வரை வந்த படங்களின் காட்சிகளை சில துணை நடிகர்கள் பாடி - நடித்து காட்டி கொண்டு இருந்தார்கள். இன்று எனக்கு நல்ல ராசி தான்.
தமிழிலே எனக்கு மிகவும் பிடித்த பத்து பாடல்களில் ஒன்றான " கண்ணாலே பேசி பேசி கொல்லாதே " என்ற பாடலை அந்த படத்தில் வந்த காட்சி போல அவர்கள் பாடி நடித்து காட்டியது ... அடே . டே.. என்ன ஒரு அருமை.



                                       " கண்ணாலே பேசி பேசி கொல்லாதே "

1960  வருவதற்குள் மணி பத்தை நெருங்க..

டாடி.. ஷூட்டிங்.. லேட் ஆகுது ..

என்று இளையவள் குரல் கொடுக்க ..

"நெற்றி கண் 2 " நோக்கி ஓடினேன். போகும் வழியில் .. கதை என்னவா இருக்கும்? இந்நேரம் அப்பா சக்ரவர்த்தி இறந்து இருப்பார். மகன் சந்தோஷ்க்கு 65 வயது போல் ஆகி இருக்கும். கதையை எப்படி அமைத்து இருப்பார்கள் என்று எண்ணி கொண்டே ஓடும் போது ...

அடுத்த செயல அறைகளில் 1970 ... "MGR - சிவாஜி" நாட்கள் என்ற ஒரு பலகை தென்பட்டது.

ராசாத்தி.. நீங்க அம்மாவோடு .. அந்த ஷூட்டிங் போய் பாருங்க.. நான் இந்த அறைக்கு போயிட்டு வரேன்.

இங்கே என்ன இருக்கு?

அடிமை பெண் MGR சிங்கம் சண்டை காட்சியும் - மற்றும் வீர பாண்டிய கட்டபொம்மன்  படத்தில் சிவாஜி பேசி நடித்த காட்சியும், அதில் அவர்கள் அணிந்து இருந்த உடைகளும் இருக்காம்.

டாடி.. அந்த ஷூட்டிங் அரை மணிநேரம் தான், அதை பார்த்துவிட்டு இங்கே எல்லாரும் வரலாம் .. வாங்க..

டாடி.. ரொம்ப பசிக்குது.

வாங்க.. அங்கே பாருங்க  " கல்யாண சமையல் சாதம் " என்ற ஒரு உணவு விடுதி. என்ன சாப்பிட்ரிங்க ?

வெங்காய தோசை .. பருப்பு சாம்பார்.

கிளிஞ்சது போ .. அது ரெண்டையும் தான் 2015ல் இருந்து மறந்தாச்சே.. வேற ஏதாவது, ச்சீப்பா அசைவத்தில் சாப்பிடுங்க..

பின் குறிப்பு :
அடே டே .. என்ன ஒரு அருமையான விஷயம். சினிமா என்பது தெரிந்தோ தெரியாமலோ , தமிழனின் அங்கத்தில் ஒன்றாகிவிட்டது. அதை ஒரு கலையாக ஒழுங்காக சீர்படுத்த இந்த நடிகர் சங்கம் சென்ற மூன்று ஆண்டுகளில் அமைத்த இந்த இடம் .. சூப்பர்.. என்று நினைக்கையில்..

டாடி.. அங்கே பாருங்க..

என்ன ..என்று எட்டி பார்த்த நான் அதை எதிர் பார்க்கவே இல்லை.

தொடரும் ...

தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்கவும் 

ரஜினியின் "முரட்டுகாளை" & கமலின் "குரு" எனக்கு கிடைத்த வாய்ப்பு!


 

9 கருத்துகள்:

  1. கற்பனை - கண்காட்சி இப்படித்தான் இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது...!

    பதிலளிநீக்கு
  2. அருமையான கற்பனை! நிஜமாக இருக்கக்கூடாதா என்ற ஏக்கத்தை உருவாக்கிவிட்டது. வழக்கம் போல் துள்ளலான நடை.!
    த ம 2

    பதிலளிநீக்கு
  3. வித்தியாசமான கற்பனை. தொடர்ச்சிக்காகக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. வாசிப்பவரையும் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றது-எழுத்து நடை!
    சார்.
    thodarkiren.

    பதிலளிநீக்கு
  6. சட்டென காலம் கடக்கும்
    படிப்பவரையும் அணைத்து இழுத்துச் செல்லும்
    எழுத்தின் லாவகம் மிகவும் இரசித்...தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. கற்பனை செம நண்பரே! அருமை...பொளந்து கட்டுறீங்க இன்னும் வெங்காயத்தையும் பருப்பையும் விடவில்லை போல.அஹஹஹ் தொடர்கின்றோம்..

    பதிலளிநீக்கு
  8. இப்படி ஒன்று ஆரம்பித்துவிட்டீர்களா என்று நினைத்துவிட்டேன் , கலக்கிட்டீங்க விசு. உங்கள் கற்பனையும் நகைச்சுவையும் பிரமாதம்

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...