வியாழன், 1 அக்டோபர், 2015

ஒரு "கோட்டை"யிலே என் "குடி" இருக்கும்.

வாங்க .. வாங்க .. வாங்க..

என்ன ஒன்னும் புரியலையா? தலைப்பு கண்ணதாசன் பாடல் "ஒரு கோப்பையிலே என் குடி இருக்கும்" போல இருக்கு, ஆனால் கோப்பைக்கு பதில் "கோட்டை"ன்னு இருக்கா ?


அது ஒன்னும் இல்லேங்க. இந்த மாதம் 11ம் தேதி , புது கோட்டையில் நம்ம சக பதிவர்கள் எல்லாரும் கூட போறாங்களே, அதை தான் சொன்னேன்.


அது சரி... "குடி" இருக்கும்ன்னு ஏன் சொன்னேன்னா? "குடி" என்றால் "குடும்பம்" அல்லவா! என் வலைபதிவு குடும்பத்தை தான் சொன்னேன். நம் வலைபதிவு குடும்பத்தினர் அனைவரும் வரும் 11ம் தேதி புதுகோட்டையில் சந்திகின்றார்கள் அல்லவா? அதை தான் சொல்கிறேன்.





இந்த "குடும்பத்தின் சில அங்கத்தினரை நான் என் புத்தக வெளியீடு விழாவில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இன்னும் சிலரை தொலை பேசியில் பேசும் வாய்ப்பும் கிட்டியது, ஆனால் இவர்களில் பலரையும் அடியேன், அறியேன்.

இப்படி அறியாமல் கிடைத்த நட்பிற்கு "வலைபதிவே " காரணம். ஒருவரை ஒருவர் அறியாமலே, ஒருவரின் பின்னணியே தெரியாமலே அவரின் வார்த்தைகளை படித்து -  ரசித்து - புசித்து - வெறுத்து - எதிர்த்து ....அடே டே, எத்தனை உணர்வுகள்.

இப்படி கண்ணால் காணாதவரை சந்திக்கும் வாய்ப்பு அல்லவா இது. இந்த நிகழ்ச்சி இந்த நாளில் இங்கே நடக்கும் என்று சில மாதங்களுக்கு முன்பே அறிந்து, அதற்கேற்றார் போல் அங்கே வர அனைத்தையும் ஏற்பாடு செய்து இருந்தேன். ஆனால், யார் வைத்த கண்ணோ.. வாய்க்காமல் போய் விட்டது.

சரி, எனக்கு தான் கிட்டவில்லை, சீ .. சீ , இந்த பழம், புளிக்கும் என்றும் பொய் சொல்ல மனம் வரவில்லை. இந்த அருமையான நிகழ்ச்சியில் நீங்கள் அனைவரும் நேராக சென்று பங்கேற்க விழா குழுவினர் சார்பாகவும், ஒவ்வொரு பதிவினரின் சார்பாகவும் கேட்டு கொள்கிறேன்.

எத்தனை போட்டிகள், எத்தனை பரிசுகள், புது கோட்டை நண்பர்களின் உபசரிப்பு, விழா குழுவினரின் அனுசரிப்பு .. அய்யோ.. எனக்கு இல்லையே என்று ஏங்க வைக்கின்றது.






வாருங்கள் .. கொண்டாடுங்கள்.

பின் குறிப்பு :

எனக்கு தெரிஞ்சவங்க எல்லாரும் என்னை தெரியாதவங்கள நான் ரொம்ப விசாரித்ததா சொல்லுங்களேன்..ப்ளீஸ்.

9 கருத்துகள்:

  1. அட அட அட..உங்க வாசமே தனிதான் நண்பா! நன்றி அழைப்புக்கு நன்றி வணக்கம்.

    பதிலளிநீக்கு
  2. //எனக்கு தெரிஞ்சவங்க எல்லாரும் என்னை தெரியாதவங்கள நான் ரொம்ப விசாரித்ததா சொல்லுங்களேன்..ப்ளீஸ். ///

    அப்படியே நானும் விசாரித்தாக சொல்லுங்க நண்பர்களே மதுரைத்தமிழன் ஏன் வரவில்லை என்று யாரும் கேட்டால் அவர் பூரிக்கட்டையால் அடிவாங்கி நகர முடியாமல் கிடக்கிறார் என்று சொல்லி சாமாளிங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹும்! நகைச்சுவை மன்னர்கள், அமெரிக்காவின் கிழக்கும், மேற்கும் வெல்லூரில் மட்டும்தான் சந்திப்பா....புதுக்கோட்டையில் இல்லையா....அப்ப சென்னைக் "கோட்டை" க்குப் போட்டியோ!!? ஹாஹ்ஹ்ஹ

      நீக்கு
    2. வேலூரில் எங்கே சந்தித்தோம் என்பதையும் கொஞ்சம் சொல்லிவிடுங்கள். மக்கள் தவறாக எடுத்து கொள்ள போகின்றார்கள்.

      நீக்கு
  3. புதுக்கோட்டையில் வலைக் குடும்பம் ..உங்க வழி தனி வழி :) அருமை விசு

    பதிலளிநீக்கு
  4. புதுக்கோட்டையில் சந்திப்போம். அழைப்பிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. எஸ்.ரா. வருகிறாரா? எனக்கு கலந்து கொள்ள முடியவில்லையே.. :(

    பதிலளிநீக்கு
  6. மிக்க நன்றி நண்பரே! மிக மிக அழகான அழைப்பு!! உங்கள் நடையில்!

    ஃபீட் பர்னர் ஏன் தகவல ரொம்ப லேட்டா அனுப்புதுனு தெரில....இப்பதான் உங்கள் பதிவு வந்தது எங்கள் பெட்டிக்கு...அதான் தாமதம்...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...