செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

மீண்டும் "கடல் மீன்கள் " இம்முறை பசிபிக் பெருங்கடலில் இருந்து...

விசு, வர திங்கள் என்ன பிளான்?

திங்களும் அதுவும்மா என்ன பிளான்? வேலைக்கு போயிட்டு வீட்டிற்கு வந்து ராசத்திகளை ஒரு ரெண்டு மணிநேரம் விளையாட கூட்டிக்கொண்டு போவேன் அவ்வளவு தான். ஏன் கேட்கின்றாய்?

இல்ல, விசு, இந்த திங்கள் நம்ம ஊருக்கு கடல் மீன்கள் வருதாம், நீயும் உன் குடும்பத்தோடு வந்தா எல்லாரும் சந்தோசமா போயிட்டு வரலாமே.

டேய், கடல் மீன்கள் ஒரு நல்ல படம், ஆனாலும் ரொம்ப பழைய படம் ஆச்சே.அது எப்படி இப்ப இங்க வருது? ஒரு வேளை நீ மணி ரத்தினத்தின் "கடல்" படத்த சொல்லுற போல இருக்கு. எனக்கு தான் மணிரத்தினம் படத்த பாத்து ரசிக்கும் அளவிற்கு ரசனை இல்லையே, நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க.

அட, சும்மா சினிமா பத்தியே பேசுறியே, இது நிஜமான கடல் மீன்கள் விசு.

என்னா குரு குழப்புற...?

ஒன்னும் இல்ல விசு, வருடத்திற்கு ஒருமுறை இந்த சீசனில் "க்ரானியன்" என்று அழைக்கப்படும் இந்த நெத்திலி வகை மீன்கள் கூட்டம் கூட்டமா கரைக்கு வரும். அது இங்க கரைக்கு வந்து மணலில் முட்டை போடும், அப்ப நம்ம கரையில் நின்று நமக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சேகரிக்கலாம். அப்புறம் வீட்டிற்கு வந்து, மிளகாய், மஞ்சள், உப்பு போட்டு ஒரு வறுவல். கூடவே சீராக சாம்பாவில் அருமையான எலுமிச்சை சாதம். சேத்து வைச்சி தாக்குனா  நம்ம ஊரு காசிமேட்டில் இருக்கிற மாதிரி ஒரு பீலிங். வா, விசு போயிட்டு வரலாம்.

சூப்பர் பிளான் மாப்பு. நெத்திலி வறுவல் சாப்பிட்டு கொஞ்சம் நாள் ஆகிவிட்டது. திங்கள் கண்டிப்பா போகலாம்.

சரி விசு, இந்த மீனை பிடிக்க ஒவ்வொரு குடும்பமும் ஒரு லைசென்ஸ் வாங்கணும், அதை இந்த வாரத்திலே வாங்கி விட வேண்டும், அதுக்கு ஒரு 6 டாலர். ஓகே?

சரி, மாப்பு, ஓகே. என் பக்கத்து வீட்டு வெள்ளைகாரனிடம் ஒரு 4 பகட் கடன் வாங்கி வரட்டும்மா? சுத்தம் பண்ணி" ப்ரீஸ்" பண்ணிடலாமே.

இந்த பேராசை தானே வேண்டாங்கிறது. வீட்டுக்கு ஒரு பகட்.அதுக்கும் மேல பிடிக்க கூடாது.

ஓகே, மாப்பு, இது திங்கள் முழுவதுமா, இல்ல ஒரு குறுப்பிட்ட நேரத்திலையா?

இரவு 9-11 வரை தான், அதுக்கும் மேல ஒன்னும் கிடைக்காது.

குரு, என்னை வச்சி காமடி கீமடி எதுவும் பண்ணலையே...

என்னை நம்பு விசு, இது உண்மை. வேணும்னா இங்க விக்கிபீடியா பக்கத்தை படிச்சு பாரு, இன்னும் நிறைய விஷயம் போட்டு இருக்கான். அது மட்டும் இல்லாமல் இந்த "யு டுப்" வீடியோ கூட பாரு.

தேங்க்ஸ் குரு, திங்கள் சாயங்காலம் சந்திப்போம், மறக்காம நல்ல ஒரு காமரா எடுத்துனு வா, குரு,

காமரா ஏன் விசு?

இல்ல குரு, இந்த விசயத்த வச்சி ஒரு ப்ளாக் எழுத போறேன்.  திங்கள் கிழமை அந்த போட்டோ போட்டா எல்லாரும் பாப்பாங்க இல்ல, அது தான்.

விசு , ப்ளாக், ஆளுங்க படிக்கிறதோடு இருந்தா சரி, எலுமிச்சை சாதம், நெத்திலி வருவல்ன்னு விமானம் ஏறி இங்க வந்துட போறாங்கோ.

11 கருத்துகள்:

  1. வணக்கம்

    அழிவின் அறிகுறி.. என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம். தகவலைப்பார்க்கிறேன்
    விக்கிபீடியா பக்கம் பகிர்வுக்கு நன்றி
    என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வடிந்து உருகும் தாயுள்ளம்:
    த.ம 2வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரூபன், இது ஒரு இயற்கையின் விளையாட்டு. இந்த இனம் இப்படி தான் வருட கணக்கில் வாழ்கிறது. வருகைக்கும் வார்த்தைக்கும் வாக்குக்கும் நன்றி.

      நீக்கு
  2. உண்மையாகவே வா ! பார்ப்பதற்கு எப்படி இருக்கும் ! அதைவிட சாப்பிட ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை சாப்பிட்டவுடன் புகை படத்தோடு சொல்லுகிறேன், நண்பா...

      நீக்கு
  3. பதில்கள்
    1. வருகைக்கு நன்றி மைதிலி. வார்த்தைகளுக்கும் நன்றி.

      நீக்கு
  4. இது தெரியாத தகவல்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத்தனை வருடம் இந்த ஊர் முட்டத்தில் தங்கி இருந்த எனக்கே இந்த வருடம் தான் தெரிந்தது.

      நீக்கு
  5. வீடியோ பார்த்தேன் நண்பரே
    கரையிலேயே அல்லவா துடிக்கின்றன
    அளவோடு உண்டு, இவ்வுரினத்தை வாழ வைப்போம் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, இந்த மீன்கள் கரையில் ஒதுங்குவதே முட்டையிட தான். இவை கோடிகணக்கான முட்டையிட்டுவிட்டு கரையில் தங்கி விடும். அதை தான் நாங்கள் சேகரிக்க வேண்டுமாம். ஒரே வாரத்தில் அந்த முட்டைகள் மீன் குஞ்சுகளாகி மீண்டும் கடலுக்குள் சென்று விடுமாம். இது வருடாவருடம் நடக்கும் நிகழ்ச்சி. இந்த இனம் அழிய வாய்ப்பே இல்லை.

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...