ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

ஆஸ்திரேலியாவில் முருங்கைகாய் சாம்பார்...

அருமை நண்பரொருவருக்கு ஆஸ்திரேலியாவில் நடந்த  சம்பவம் ...

பாரதி சொன்ன எதை ஒழுங்கா செய்தோமோ இல்லையோ..."திரை கடல் ஓடி திரவியம் தேடு" என்பதை ஓடோடி செய்து  கொண்டு இருக்கிறோம். இப்படி நம் நாட்டை விட்டு ஆஸ்திரேலியா சென்ற நண்பர் ஒருவர் பட்ட பாடு தான் இது.



ஆஸ்திரேலியாவில் ஒரு பழக்கம்  உண்டு.7-8 நண்பர்கள் ஒன்று சேர்ந்து வார இறுதியில் கூடிமகிழும் பொது, ஒரே ஒரு குடும்பம் சமைப்பதற்கு   பதில், அன்று வருகின்ற அனைத்து குடும்பங்களும்  தம் தம் வீட்டில் இருந்து ஒரு உணவு எடுத்து வருவார்கள். இப்படியாக வரும் உணவை அனைவரும் சேர்ந்து ரசித்து உண்ணுவார்கள். இந்த நிகழ்ச்சியை நடத்தும் நபர் ( host  ) வருகிற அனைவரிடம்பேசி யார் யார் என்ன என்ன  எடுத்து வர வேண்டும் என்று சொல்லிவிடுவார். இவ்வாறாக யார் யார் என்னஎன்ன  எடுத்து வர வேண்டும் என்று சொல்வது மிக முக்கியம். ஒரு முறை இவ்வாறாக முன் கூடியே திட்டமிடாததால், வந்த எல்லோருமே, முருங்கைக்காய் சாம்பார் எடுத்து வந்து   அவனவன் பட்ட அவதி... நினைக்கவே முடியவில்லை..

இவ்வாறான உணவு எடுத்து வரும் முறையை ஆஸ்திரேலியாவில் "bring a plate" , "தட்டு எடுத்து வா" என்பார்கள். இதையே அமெரிக்காவில் "potluck" என்பார்கள், ஐரோப்பாவில் சில நாடுகளில் " Jacob's Supper" இந்தியாவில் "கஞ்ச பையன்" என்பார்கள்.

சரி இப்போது, ஆஸ்திரேலியாவில் நடந்த நிகழ்ச்சிக்கு போகலாம். நம் நண்பர் ஒருவர் அங்கே சிட்னி நகரில் புதிதாக குடி ஏறினார். அவர் அங்கே இருந்த தெருவில் இருந்த மற்ற இல்லத்தார்கள் புதிதாக வந்த இவர்களை வரவேற்க ஒரு டின்னெர் ஏற்பாடு செய்தனர்.   நாள் குறித்த பின், அவர்களில் ஒருவர் நம் நண்பரிடம், "உங்களை வரவேற்று உங்கள் குடும்பத்தை பற்றி அறிய நாங்கள் எல்லாம் இந்த சனி ஒரு டின்னெர் தயார் செய்து கொண்டு இருக்கிறோம். நீங்கள் கூட உங்களால் முடிந்த வரை "  bring a plate" என்று சொல்லி இருக்கிறார். இங்கே நாம் ஏற்கனவே படித்த படி,  'bring a plate"  என்றால் நீங்களும், உங்களால் ஆன உணவை எடுத்து வாருங்கள் என்று அர்த்தம்.

நண்பர் தான் இந்நாட்டிற்கு புதிது ஆயிற்றே. தாய் நாட்டில் " உன் வீட்டிற்க்கு வந்தால் என்ன தருவாய், என் வீட்டிற்க்கு வந்தால் என்ன எடுத்து வருவாய்" என்ற கலாச்சாரத்தில் வாழ்ந்து வந்தவர். இப்போது புதிய நாட்டில். சாப்பாடிற்கு வா, ஆனால்,"உன் வீட்டில் இருந்து தட்டை எடுத்து வா" என்பதை கேட்ட உடன்  குழப்பம்  ஆகி விட்டார்.

ஏன் குழப்பம். எதற்காக என்னை தட்டு எடுத்து வர சொனார்கள். ஒரு வேலை இந்நாட்டு கலாச்சாரத்தில்,எங்கே போனாலும் நாம் தட்டை எடுத்து கொண்டு தான் போக வேண்டுமா? நம் நாட்டில் இவ்வாறான காரியத்தை செய்தால் பிச்சைகாரன் என்பார்களே , இப்போது என்ன செய்வது என்று தம் குடும்பத்தோடு குழம்பி விட்டார்.

அந்த நாளும் வந்தது. நண்பரின் மனைவி, தனக்கு உடம்பு சரிஇல்லை என்று தான் வரமுடியாது, வேண்டும் என்றால் நீங்களும் மகனும் போய் வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்கள். தகப்பனும், பிள்ளையும் ஆளாளுக்கு ஒரு தட்டும், கூடவே  தண்ணீர் குடிக்க ஒரு தம்ப்ளரும், எடுத்து கொண்டு அந்த குறிப்பிட்ட இல்லத்திற்கு சென்றார்கள்.

அங்கே சென்றவுடன், அவர்களை அந்த இல்லத்தோர் வரவேற்று, பின்  "உங்கள் தட்டை எடுத்து வந்தீர்களா" என்று கேட்டதற்கு இவர்கள் இருவரும்., ஆம் என்று சொல்ல அவர்கள், அதை நேராக சென்று அந்த மேசையில் வைத்து விடுங்கள் என்று சொன்னார்கள். இவர்களும் தலையை ஆட்டிவிட்டு, அந்த மேசைக்கு சென்று, தங்கள் இருவரின் தட்டுகளையும் அதன் அருகிலேயே அவர்களின் டம்பளர்களையும் வைத்து மற்றவர்களிடம் பேச ஆரம்பித்தனர்.

இவ்வாறாக பேசி கொண்டு இருக்கையில், மற்றவர்கள் ஒவ்வொருவரும் உள்ளே வரும் போது, தம் தம் வீட்டில் செய்த உணவை எடுத்து வருவதை பார்த்த நண்பர், அருகில் இருந்த ஒருவரிடம், இவர்கள் வீட்டில் தானே டின்னெர், ஏன் மற்றவர்கள் சாப்பாடு எடுத்து வருகின்றார்கள் என கேட்டார். அதற்கு அந்த நண்பர் "  bring your plate"  என்பதை விவரித்து சொல்ல, நண்பரும் அவரின் மகனும் "பேய் அறைந்ததை" போல் (பேய் அறைந்த கதையை  கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்), நேராக அந்த மேசைக்கு ஓடோடி, அங்கே அவர்கள் வைத்த காலி தட்டையும், டம்ப்ளரையும் அவசர அவசரமாக  அந்த மேசையின் கீழே மறைத்து வைத்தனர்.

எல்லாம் முடிந்த பின் வீட்டிற்க்கு வந்து சேர்கையில், நண்பரின் மனைவி, எடுத்து கொண்டு போன தட்டை ஏன் மீண்டும் எடுத்து வரவில்லை என்று கேட்க, நண்பர்...

"இது ஆஸ்திரேலியாவின் கலாச்சாரம். இங்கே யார் வீட்டிற்க்கு சாப்பாட்டிற்கு போனாலும் நம் தட்டை நாமே எடுத்து கொண்டு போக வேண்டுமாம், அதை சாப்பிட்டவுடன் அங்கேயே விட்டு விட வேண்டுமாம் என்று சொல்ல மனைவியும் நம்பி விட்டார்கள்.  இந்த பொய்யை சொல்லி பல வருடங்கள் ஆகிவிட்டது. இந்த பொய்யில் மாட்ட கூடாது என்பதற்க்காக நம் நண்பர் பல வருடங்களாக யார் வீட்டிற்க்கும் செல்ல வில்லை, யாரையும் தன வீட்டிற்க்கும் அழைக்கவில்லை.

16 கருத்துகள்:

  1. //பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்)//

    அதுவரை நானினி உங்கள் பதிவிற்கு வர வேண்டாமென நினைக்கிறேன்!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐய்யா... அப்படி சொன்னால் எப்படி. நானும் இந்த பேய் அறைந்த கதையை கண்டிப்பாக சொல்ல வேண்டும் என்று ஆரம்பிப்பேன், அனால் ஒவ்வொரு முறையும் அதை எழுத துவங்கும் பொது, பாதியிலேயே வரும் பயத்திலே நிறுத்திவிடுகிறேன். என்றாவது ஒரு நாள் மனதை திடபடுத்தி கண்டிப்பாக எழுதுவேன். வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. //எழுத துவங்கும் பொது, பாதியிலேயே வரும் பயத்திலே நிறுத்திவிடுகிறேன். //

      உங்களைப் பார்த்து பேய்கள் ஓடியதாக எனக்கு ஒரு செய்தி (பேய்களிடமிருந்து தான்) வந்ததே...!

      நீக்கு
    3. ஐயா! அது வேற கதை. என்னை பார்த்தவுடன் பயந்து ஓடி போனது ஒரு " மோகினி பிசாசு"

      நீக்கு
  2. ///அனைத்து குடும்பங்களும் தம் தம் வீட்டில் இருந்து ஒரு உணவு எடுத்து வருவார்கள்.//

    புதிதாக சமைத்து எடுத்து வருவார்களா அல்லது வீட்டில் சமைத்து வைத்து அது யாருக்கும் பிடிக்காமல் சாப்பிடாமல் ப்ரிஜில் வைத்ததை எடுத்து வருவார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிதோ.. அல்ல பழையதோ.. பூரி மட்டும் வராவிட்டால் சந்தோசம் தானே.

      நீக்கு
  3. இங்கு வந்ததுமே 'புதிதாக வாழ வரும் வெளிநாட்டவர்க்கு' என்று ஒரு புத்தகம் படிக்கக் கிடைத்த்து. இவற்றையெல்லாம் படித்துத் தெரிந்து வைத்திருந்ததால் எங்களுக்கு அழைப்பு வரும் போது குழம்பவில்லை.

    இப்போதும் கூட வெளிநாட்டிற்கு வரும் பலருக்கும் இந்த வார்த்தை குழப்பத்தைத்தான் உண்டுபண்ணுகிறது. புதியவர், அவருக்குப் புரிந்திருக்க நியாயம் இல்லை. ஆனால் இதில் சங்கடப் படவும் எதுவும் இல்லை. நிச்சயம் யாரும் பார்த்துச் சிரிக்க மாட்டார்கள். ஆதரவாகச் சொல்லிக் கொடுப்பார்கள்.

    எங்கள் வகுப்பு இறுதி நாளன்று ஒரு சீனத் தோழி நீங்கள் சொல்லி இருப்பது போல வெற்றுத் தட்டோடு வந்தார். இத்தனைக்கும் ஏற்கனவே இந்தத் தலைப்பு தெளிவாகப் பேசப்பட்டிருந்தது. இருந்தும் மொழி புரியவில்லை. யாரும் அவரைச் சங்கடப் படுத்தவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பின்னோடதிர்க்கும் நன்றி இமா அவர்களே. நல்ல கருத்து சொன்னீர்கள்.

      நீக்கு
  4. வணக்கம்

    ஆஸ்திரேலியா தமிழர்கள் பற்றிய தகவலை அறியக்கிடைத்து. நன்றாக உள்ளதுபகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. ஆஸ்திரேலியாவில்
    முருங்கைகாய் சாம்பார் பற்றிய
    சிறந்த கருத்துப் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  6. //பின்னோடதிர்க்கும்// ;))))))) ஒரு தடவை தப்பானது பரவாயில்லை. அதுவே உங்கள் 'ட்ரேட் மார்க்' ஆகிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    'பின்னூட்டத்திற்கும்' என்று வர வேண்டும் விசு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் உண்மையாகவே அந்த வார்த்தை பின்னோட்டம் என்றுதான் இதனை நாள் நினைத்து இருந்தேன். சுட்டிக்காட்டியதிற்கு நன்றி.

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...