வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

சச்சின் டெண்டுல்கர்! அனலும் இல்லை.. குளிரும் இல்ல


சச்சின் அவர்கள் "ராஜ்யசபா" உறுப்பினர் ஆனதில் இருந்து "ராஜ்ய சபா" பக்கம் தலை வைத்து கூட படுக்க வில்லை என்று அர்னாப் கோஸ்வாமி ஒரு விவாதம் நடத்தி "பரட்டை" பாணியில் பற்ற வைத்தார். இந்த நெருப்பு சற்று வேகமாக அனல் விட்டு எரிய ஆரம்பித்து இப்போது சச்சின் அவர்கள் வேறு ஒரு வழியில்லாமல் இதை பற்றி பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு, அதை பற்றி பேசினார். அவர் என்ன பேசினார் என்பதை பின்னர் பார்ப்போம். அதற்கு முன் சில விசயங்களை ஆராய்வோம்.




(picture copied from Google, I dont own it in any way...)

"ராஜ்ய சபா MP" என்பது ஒரு கௌரவமான பதவி. இதை மதிப்பவர்களுக்கு தான் இந்த பதவி கொடுக்க படவேண்டும் என்ற அந்த கால முறை மாறி, அரசியல் கட்சிகள் போடும் பிச்சை ஆகி பொய் விட்டது. நம் ஊரில் இருந்து "ராஜ்ய சபா MP  "ஆகிய  SS . சந்திரன் (நடிகராக அவர் மேல் மரியாதை இருந்தாலும், அரசியல் பொறுத்தவரை ஒரு பெரிய சுயநலவாதிதான்) ராஜ்ய சபா போய் ஏதாவது நல்ல காரியம் செய்திருந்ததை யாராவது அறிந்து இருந்தால் தயவு செய்து அதை இங்கே பரிமாறவும்.

சந்திரன் அவர்களை தொடர்ந்து ராஜ்ய சபா சென்ற மற்றொரு பெயர், " கனிமொழி" அவர்கள் மேல் தான் எத்தனை குற்ற சாட்டுக்கள் .
இந்த மாதிரி பொறுப்பான ராஜ்ய சபா பதவிக்கு அருமையான சம்பளம் மற்றும் பல வசதிகள். அதை பற்றி நான் எழுதிய இடுகையை இங்கே காணலாம்

பொது மக்களின் வேலைக்காரர்கள் ( Public Servant) ஆகிய இவர்களுக்கு கிடைக்கும் இந்த சம்பளம், வசதிகள் அளவுக்கு மீறியது. என் இடுகையை படித்த பலர், "இந்த பதவிக்கு இவ்வளவு பணமா" என்று அலறியது தான் நினைவிற்கு வருகிறது.

சரி, இப்போது சச்சினிடம் வருவோம். என்னை பொறுத்தவரை சச்சின் ஒரு சுயநலவாதி. ஆட்டதிலேயும் சரி, வாழ்க்கையிலேயும் சரி.  சச்சின் அவர்கள் எந்த காரியம் என்றாலும் தனக்கு என்ன இலாபம் என்று பார்த்து செய்வார்.
இவர் இந்திய அணிக்காக ஆடும் போது "சூதாட்டம்" கிரிக்கெட்டில் தலை விரித்து ஆடியது. கிட்ட தட்ட 25 வருடங்கள் ஆடிய இவர் அந்த சூதாட்டத்தை பற்றி வாய் திறக்கவில்லை. எவன் எப்படி போனால் எனக்கு என்ன?

விளையாடினோமா?
விளம்பரத்தில் நடித்தோமா?
விழாக்களுக்கு சென்றோமா?
பணத்தை சேர்த்தோமா?

அதுதான் இவர் குறி. இந்த நான்கையுமே நன்றாக செய்தார். மற்றபடி, இந்த சூடாட்டத்தினால் ரசிகர் எப்படி ஏமாந்தால் எனக்கு என்ன என்று இருப்பவர்.
இவரை காங்கரஸ் ராஜ்ய சபா உறுப்பினர் ஆக்கியதே, ஒரு சுயநல திட்டம் தான். எப்படியும் தாம் பண்ண   அநியாயதினால் மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினம் என்று நினைத்து, இப்படி ஏதாவது செய்து தப்பிக்கலாம் என்ற எண்ணத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை.

இவரும் உடனே ஏற்று கொண்டார். ஏன். ஆசை யாரை விட்டது. இந்த பதவியில் வரும் பலன்களை மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள் புரியும். இதில் வேறு ஒரு விஷயம் என்ன வென்றால் இவருக்கு கொடுத்த இந்த பதவி Information Technology துறைக்காக கொடுக்க பட்டது.  சரி, கிடைத்தது பெற்று கொண்டார்.பதவி ஏற்பு விழாவில் பெரிய  பேச்சு வேற (சந்திர பாபு ஒரு அறிவு ஜீவி தான். சும்மாவா பாடினார்... மேடை ஏறி பேசும் போது ஆறு போல பேச்சு, கீழ இறங்கி வந்த போது சொன்னதெல்லாம் போச்சு) . அதோடு சரி. அந்த பக்கமே போகவில்லை.

இவர் ஏன் இங்கே போகவில்லை என்று அர்னாப் கோஸ்வாமி கேட்டதிற்கு காங்கிரசின் அர்த்தமற்ற பதில்.
"சச்சின் அவர்கள் ஒரு ஸ்லொ ஸ்டார்ட்டர். கொஞ்சம் நாட்க்கள் கொடுங்கள், வருவார்". (பதவி ஏற்று இரண்டு வருடங்கள் கழித்து )

இது என்ன கிரிக்கெட் விளையாட்டா? மெதுவாக விளையாடி சதம் அடிக்க. மக்கள் சேவை ஐய்யா! மக்களின் பணம் வேறு.  சரி, அரசியல்வாதிகளின் வாயில் இருந்து என்று தான் அறிவான சங்கதி வந்தது என்று இந்த காங்கரஸ் காரரை புறக்கணித்து விட்டு, சச்சின் இதை பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

நேற்று, டெல்லியில் பேசிய சச்சின், பத்திரிக்கை நிருபர்களும், மீடியாக்களும், நான் ஏன் "ராஜ்ய சபா" போகவில்லை என்று கேட்கின்றார்கள். நான் அவர்களுக்கு கூற விரும்புவது என்னவென்றால், "பத்திரிகையாளர்களே, நீங்கள் மற்றவர் விஷயத்தில் தலையிடாதீர்கள், உங்கள் வேலையை கவனியுங்கள்".

என்ன ஒரு முட்டாள்தனமான பேச்சு. பத்திரிகை காரர்களின் வேலையே மற்றவர்களை கவனித்து அவர்கள் செய்யும் தவறுகளை திருத்துவது தானே! சச்சின் சொல்வதை பார்த்தல், மீடியாக்கள் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு "அம்புலிமாமா" பாணியில் கதை எழுத வேண்டும் போல இருக்கிறது.

உன்னால் மக்களுக்குகாக நேரம் ஒதுக்க முடியாவிட்டால் ஏன் இந்த பொறுப்பை ஏற்று கொள்ளவேண்டும்? விம்பெல்டன் போய் டென்னிஸ் பார்க்க நேரம் உள்ளது (மரியா... மரியா.. மரியா), விளம்பரத்திற்கு நேரம் உள்ளது. வரி கட்டாமல் இறக்குமதி செய்த வாகனத்தில் சுற்றுலா போக நேரம் உள்ளது. ஆனால் ராஜ்யசபா போக நேரம் இல்லை.

கேட்கின்றவன் கேனையா இருந்தால்.......(fill in the blanks, please)

பின் குறிப்பு : இதை படிக்கும் யாரவது, நான் சொல்வது எல்லாம் தவறு, சச்சின் இந்த பணத்தை வசதிகளை எல்லாம் வேண்டாம் என்று சொல்லித்தான் இந்த பதவியை ஏற்று கொண்டார் என்று சொல்லி நிரூபித்தால், இந்த இடுகையை திரும்ப பெற்று கொண்டு, அடுத்த  இடுகையில், நானும் "அம்புலிமாமா' கதை எழுதுவேன்.

6 கருத்துகள்:

  1. sachin Ferrari car'ku tax exemption vaangi, athae car'a vithu bank'la pottathulu irunthu theriyum avan eppadi patta alpam'nu.

    James

    பதிலளிநீக்கு
  2. சச்சின் டெண்டுல்கர்!
    சிறந்த துடுப்பாட்ட வீரர்!

    பதிலளிநீக்கு
  3. சச்சின், விளம்பரத்தில் நடித்ததற்கு, நடிகர் என்ற முறையில் வரி கட்டுவதில் முறைகேடு செய்தார் (வரிச்சலுகை பெற்றார்) என்று கேள்வி. இந்தியாவில் 5 ரூபாய் திருடினால் தப்பு. 5 கோடி திருடினால் விடுதலை. சத்யம் ராஜுவைப் பற்றி ஒரு பத்தி எழுதவும். பல்லாயிரம் கோடி சுருட்டலுக்கு 10 லட்ச ரூபாய் மற்றும் 6 மாத சிறையாம்.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...