வா, விசு எப்ப ஊருக்கு வந்த?
போன வாரம்தான், வாழ்க்கை எப்படி ஓடுது சந்துரு?
ஏதோ போது விசு. ஒன்னாம் தேதி ஆனா சம்பளம், புள்ளை, குட்டி...வெந்தத தின்னு விதி வந்தான்னு.. இருக்கோம். நீங்க எப்படி?
உங்களை மாதிரி புள்ளை குட்டி தான், இருந்தாலும் உங்களோட கொஞ்சம் "பாசிடிவா" தான் இருக்கேன். இப்படி வாழ்கையை நொந்து கொள்வதற்கு பதில் உங்களை கொஞ்சம் பிசியா வைச்சிக்கிங்க. ஏதாவது "பார்ட் டைம்" வியாபாரம் போல நடந்துங்க.
நான் யோசித்ததையே சொன்ன விசு.. கொஞ்சம் நாளாவே இங்க "டாஸ்மாக்னு" ஒன்னு ஆரம்பிச்சு வியாபாரம் ஓஹோன்னு சக்கை போடு போடுது.
அட பாவி, அது அரசாங்கம் நடத்துற "சாராய கடை" தானே. அதை இனிமேல் தனியார் நடத்த முடியாதுன்னு நினைக்கிறன்.
நான் அத சொல்லவில்லை, வேற பிளான் வச்சி இருக்கேன்.
சந்துரு, அட பாவி..கள்ள சாராயம் ஏதாவது காய்ச்சலாம்ன்னு திட்டமா? வேண்டாம் சந்துரு...அது மட்டும் இல்ல, அது சட்டத்திற்கு புரம்பானது. இது ஒரு விபரீத விளையாட்டு.
அட கொஞ்சம் பொருமை ப்ளீஸ், விசு.
நான் விவரமா சொல்றேன் கேளு. "சாராய கடை வந்தா சனி" வந்த மாதிரி. சனி என்றைக்காவது தனியா வந்து இருக்கா? இந்த கடைகள் ஆரம்பிச்சதில் இருந்தே கூடவே சில மற்ற தொழில்களும் ஆரம்பிச்சி இருக்கு.
டேய் சந்துரு பாவி, இது எல்லாம் உனக்கு தேவையா? பேசாம இந்த பிசினெஸ் எல்லாம் விட்டுவிட்டு "வெந்ததே தின்னே" வாழ்க்கையை ஒட்டிக்கோ. அதுதான் உனக்கு சரி.
விசு, ஒரே நிமிஷம். நான் சொல்லவந்தது வேற. இப்ப எல்லாம் "சில்லி சிக்கன்னுக்கு" ரொம்ப "டிமாண்ட்". அதனால நான் ஒரு கோழி பண்ணை ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன்.
(picture copied from Google, I dont own it in any way...)
வங்கியில் ஒரு 75000 கடன் கேட்டு இருக்கேன். நாளைக்கு காலையில் 7500 ரூபாயோடு போனா ஒரு மாசத்தில "அப்ருவ்" ஆகிவிடும்.
7500 ருபாய் எதுக்கு? டிபாசிட்டா?
இல்ல விசு, இது 10% காலம். எந்த வங்கியில் என்ன கடன் வாங்கினாலும் அதுக்கு 10% முதலில் நம்ப வெட்டிவிட வேண்டும்.
அட பாவி, என்னடா... இது ... கலியுகம் தான் போ.
அடுத்த நாள் மாலை..
என்ன சந்துரு.. கடன் விஷயம் எல்லாம் நல்லபடியா முடிந்ததா?
ஆமா விசு.. ஒரு வாரத்தில் "அப்ரூவ்" ஆகும்ன்னு சொல்லி இருக்காங்கோ.
சந்தோசம்..அப்புறம் பாக்கலாம்.
விசு, இப்ப சும்மா தானே இருக்கே.. வா, அங்கே பக்கத்தில் உள்ள "சில்லி சிக்கன்" கடைக்கு போய் நம்ம கோழி பண்ணை ஆரம்பிக்கிரத பத்தி பேசி அவனுக்கும் சப்ளை செய்யலாமான்னு விசாரிக்கலாம்.
சரி, சந்துரு...
கடையில் நுழைந்த பின்,
வணக்கம், என் பெயர் சந்துரு.. நான் இங்கே பக்கத்தில் தான் இருக்கேன். அடுத்த மாசம் இங்கே ஒரு கோழி பண்ணை ஆரம்பிக்க போறேன். உங்களுக்கும் "சப்ளை" பண்ணலாம்னு தான் அதை பத்தி பேச வந்தேன்,
டேய், "சந்துரு அண்ணனுக்கு" ஒரு ப்ளேட் "சில்லி சிக்கன்' எடுத்துனு வாடா. அண்ணே சந்தோசம், அண்ணே. ஆரம்பிச்சவுடன் வாங்க, இங்க நம்ப மக்கள் குடிக்கிறத பாத்தா நம்ப ஊருக்கு இன்னும் ஒரு நாலு அஞ்சி கோழி பண்ணை தேவை படும்.
சந்துரு.. சூப்பர்.. டேஸ்ட், தம்பி பில் எவ்வளவு?
அண்ணே, முதலாளி உங்களிடம் இருந்து காசு வாங்க கூடாதுன்னு சொல்லிட்டார்..
ஒரு வாரம் கழித்து...
என்ன சந்துரு.. அவசரமா போற?
அந்த வங்கி கடன் விஷயமா தான் விசு.
ஒரு வாரத்தில் வந்துடும்னு சொன்னீயே.. இன்னும் வரலியா?
இல்ல விசு, அதுல ஒரு சின்ன பிரச்சனை ஆகிவிட்டது.
என்னடா பிரச்சனை ?
ஒன்னும் இல்ல, என்னுடைய 10% அதிகாரி நேத்து ராத்திரி மண்டைய போட்டுடாரு.
சரி, அதினால் என்ன? கடன் வந்துடும் இல்ல...
தெரியல விசு. வங்கில போய் கேட்டா, ஒருவாரம் கழித்து அடுத்த அதிகாரிய வந்து பாருன்னு சொல்றாங்க..வரும் போது மறக்காம அந்த முக்கியமான விஷயத்தோடு வந்துடுன்னு சொல்றாங்க.அந்த முக்கியமான விஷயம் என்னவா இருக்கும் விசு?
அடுத்த ஆளுக்கான 7500 தான். இது கூட புரியாம எப்படி சந்துரு பிசினஸ்ல சமாளிக்க போற?
இன்னொரு 7500 நான் எங்க போவேன்? இப்ப என்ன பண்றது விசு.
சந்துரு, தலைக்கு வந்தது தலைப்பாய்யோட போச்சின்னு விட்டு விடு..
அப்ப நான் கொடுத்த அந்த 7500 ருபாய்?
அன்னிக்கு அந்த கடையில் ப்ரீயா கொடுத்தான் இல்ல, ஒரு ப்ளேட் "சில்லி சிக்கன்", அது ஒரு ப்ளேட் 7500ன்னு மனச ஆறுதல் பண்ணிக்கோ.
வணக்கம்
பதிலளிநீக்குஉரையாடலில் சொல்லிய கருத்தை கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறந்த பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்