சென்ற பதிவில் நான் "மணிரத்தினம் படத்தை பார்த்து ரசிக்கும் அளவிற்கு எனக்கு ரசனை இல்லை" என்று எழுதி இருந்தேன். அதை படித்து விட்டு நண்பர் ஒருவர் ஏன் என்று கேட்ட கேள்விக்கான பதில் பதிவு.
சில மாதங்களுக்கு (வருடங்கள் ?) முன், அட்லாண்டா நகரில் வசிக்கும் நண்பன் ஒருவனை அழைத்தேன்.
குரு.. விசு பேசுறேன்,
சொல்லு விசு... எப்படி சுகம்?
இருக்கேன் குரு, நீங்க எல்லாம் எப்படி.
இருக்கோம் விசு. இப்ப நான் என் குடும்பத்தார் மற்றும் சில நண்பர்கள் எல்லாம் சேர்ந்து "ராவணன்" படம் போய் கொண்டு இருக்கிறோம்.
மாப்பு, அது மணி ரத்தினம் படம் இல்ல?
ஆமா விசு, நல்லா நினைவு இருக்கு, அக்னி நட்சத்திரம் பார்த்துட்டு நீயும் நானும் போட்ட ஆட்டம்.
அது சரி மாப்பு, மணிரத்தினம் படத்திற்கு போறிங்களே, 3 மணி நேரம் "டைம் பாஸ்சுக்கு" என்ன பண்ணுவிங்க?
விசு, இந்த "மதுரை குசும்புவ" இந்தியாவிலே விட்டுட்டு வரலியா? கூடவே விமானத்தில் கூட்டிட்டு வந்துட்டியா?
இல்ல, குரு, அக்னி நட்சத்திரம் நம்ம பாக்கும் போது "அறியாத வயசு, தெரியாத மனசு" அவர் என்னதான் காதுல பூ சுத்தினாலும் அங்கேயே நின்று அசடு வழிந்தோம். இப்ப கூட அதை நினைத்தால் என்னடா, இவ்வளவு பெரிய முட்டாளா இருந்து இருக்குமேன்னு ஒரு குற்ற உணர்ச்சி.
என்ன சொல்ல வர, விசு.
மாப்பு, நிரோஷா அறிமுகம் ஆகும் காட்சியில், கார்த்திக் ரோட்டில் நண்பர்களோடு உட்கார்ந்து கொண்டு இருப்பார். இந்த அம்மா நேரா வந்து " ஐ லவ் யு" ன்னு சொல்லுவாங்க... அதை பாத்து நீயும் நானும் ஜொள்ளு வழிந்தோம், ஏன் தெரியுமா? இந்த மாதிரி நமக்கும் ஆகா கூடாதான்னு? ஆகுமான்னு, ஒரு அல்ப ஆசை. இப்ப அந்த காட்சியை பாத்தா என்னாட இவ்வளவு பெரிய முட்டாளா இருந்து இருக்கோமேன்னு ஒரு பீலிங்.
நான் கடைசியா பாத்த அவரோட படம், நாயகன் என்று நினைக்கிறன்.
என்னா விசு சொல்லுற? அதுக்கு பிறகு வந்த ரோஜா, பாம்பே எல்லாம்.. என்ன அப்படி ஒரு விரோதம்?
விரோதம்ன்னு சொல்ல மாட்டேன், குரு. ஒரு, ஸ்பரிசம் இல்லாமல் போச்சு.
விவரமா சொல்லு விசு.
இல்ல மாப்பு, நான் "வசனத்த" ரொம்ப கேட்டு ரசித்து விரும்பி பார்க்கிற ஆளு.இவர் படத்துக்கு போனா எதோ "புஷ்பக் விமானம்" படத்த பாக்குற மாதிரி ஒரு பீலிங். வசனமே இல்லையே குரு. நம்ம எல்லாம் என்ன செவிடன்களா?
ஆமா பா, இருந்தாலும், ரோஜா, பாம்பே எல்லாம் ஹிட் தாணே.
ஆமா, குரு, ஆலை இல்லாத ஊரில் இலுப்ப பூ சக்கரை கதை தான். நான் சொன்னாலும் நம்ப போவது இல்லை. தமிழ் மக்கள் பேசி வாழ்கின்றவர்கள், இந்த வசனம் இல்லா ஊமை "கான்செப்ட்" கொஞ்சம் நாள் போகும், ஆனா அது கூடிய சீக்கிரம் சலித்து விடும்.
ஆமா விசு, அதுக்கு அப்புறம் வந்த அவர் படம் எல்லாம், ஊத்திகிச்சி.
அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு குரு.
ரோஜா, பம்பாயில் போட்ட அதே இசையை ரெஹ்மான் அவர்கள் எல்லா படத்திற்கும் போட்டு விடுகிறார். ஒரு பாட்டை கேட்டவுடனே எல்லா பாட்டையும் கேட்ட மாதிரி ஒரு பீலிங். அது கூட ஒரு காரணம்னு நினைக்கிறன்.
சும்மா, உனக்கு பிடிகாதுன்னு சொல்லி ரீல் விடாதே விசு, பாட்டுங்க எல்லாம் ஹிட் தான்.
டேய் பாவி, நான் முதலில் என்ன சொன்னேன், " இவர் படத்த பார்த்து ரசிக்கும் அளவிற்கு எனக்கு ரசனை பத்தாதுன்னு தானே சொன்னேன். அவர் அறிவாளி தாண்டா. நான் தான் ஞான சூனியம்" அதனால் தான் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். அது சரி, கடைசியா வந்த அவரோடு 5-6 படத்த நான் பாக்காமல் விட்டு விட்டேனே... நீ தான் அவர் ரசிகன் ஆச்சே, அந்த படங்களில் நம்ம பாக்குற மாதிரி ஒரு ரெண்டு சொல்லு, இந்த வாரமே DVD வாங்கி வந்து பாக்குறேன்.
கடைசியா வந்த... 5-6 படத்தில் நல்ல படம்,....அது வந்து..வந்து...
வந்து, வந்துன்னு நொந்து போகாதே...போய் ராவணன் பாத்துட்டு வர வழியில் எனக்கு ஒரு போன் போடு.
சரி விசு..
குரு...மணிரத்தினம் படம் எல்லாம் பார்த்த ஆள் தானே நீ..
ஆமா விசு... முதல் ஷோ, முதல் நாள்.
சரி, வீர பாண்டிய கட்டபொம்மன் படத்த மணிரத்தினம் எடுத்து இருந்தா ... அந்த வரி கட்டமாட்டேன் என்கிற காட்சியில் வருகின்ற வசனம் (எங்கள் வீட்டு பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயே..மானம் கெட்டவனே...) என்னவா இருந்து இருக்கும் சொல்லு...
தெரியவில்லையே விசு.. நீ தான் சொல்லேன்...
துரை : கட்டனும், வரி கட்டனும்..
கட்டபொம்மன்; கட்ட மாட்டேன், வரி கட்டமாட்டேன்.
(முன்பு எங்கேயோ படித்த ஜோக்.என் கற்பனை அல்ல)
4 மணி நேரம் கழித்து;
விசு, என்ன சொல்றதுனே தெரியலே...
எதை பத்தி..
ராவணன் படத்த பத்திதான்..
சரி விடு... வசனம் ஏதாவது இருந்ததா இல்லை, ஊமை படமா...?
என்னத்த சொல்லுவேன் விசு, நான் பாத்தது ஹிந்தி ராவணன், படம் ஆரம்பிக்கிற வரை எனக்கே இது ஹிந்தின்னு தெரியாது. அது மட்டும் இல்லாமல் ஹிந்தி தான் எனக்கு சுத்தி போட்டாலும் வராதே.
http://www.visuawesome.com/

மணி ரத்னம் படத்தில் மவுனராகம் மட்டும் ரொம்ப பிடிக்கும்! தளபதி, ரோஜா, போன்றவை ஓக்கே! மற்றவை போர் ரகம் தான்!
பதிலளிநீக்குஇந்த வசனம் இல்லாத விசனமான படம் வந்ததுக்கு காரணமே மௌனராகம் தான். அந்த படத்து கதைக்கு (அதில கதையா?) வசனம் அதிகமா தேவை படவில்லை. என்னமோ போங்க.. மீண்டும் சொல்லுறேன். அவர் அறிவாளி தான். நான் தான் ஞான சூனியம். எனக்கு ரசனை இல்லை, அம்புடுதேன்.
நீக்குவசனம் இல்லை என்றாலும் ஒரு மெல்லிய இழை மணிரத்னம் படத்தில் இருக்கும். உதாரணம் தளபதி,நாயகன். தளபதி நல்ல படம். அத கூடவா பாக்கல ?
பதிலளிநீக்குதளபதி படத்தை ஏன் தவறவிட்டேன் என்று தெரியவில்லை. இருந்தாலும் எதுவும் பெரிய விஷயத்தை மிஸ் பண்ணியது போல் எதுவும் தோன்றவில்லை.
நீக்குமணி ரத்னம் படத்தில் எனக்குப் பிடித்தது நாயகன் மட்டும்தான்
பதிலளிநீக்குஎன் சொல்லை நம்பாதவர்கள், கரந்தை ஐயா அவர்களின் வாக்கை கேட்டாவது எனக்குள் ஒரு உண்மை உண்டென்று புரிந்தால் சரி. வருகைக்கு நன்றி ஐயா.
நீக்குநீங்கள் எழுதியதைப் படிக்கும் போது யோசிக்கத் தோன்றுகிறது.... வசனமோ, வெளிச்சமோ குறைவு என்பதை பிடிக்காதிருந்தாலும் நம் வயதுக்கு பிடித்த விஷயங்கள் இருந்ததால் அந்தப் படங்களை ரசித்திருக்கிறோம் என்பது.... இன்னமும் கூட அஞ்சலியில் வசனமும், வெளிச்சமும் கூட்டியிருக்கலாமோன்னு பல நேரங்களில் நினைத்ததுண்டு..
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி எழில்! சரியாக சொன்னீர்கள். குறை பல இருந்தாலும் வயதுகேர்ப்ப ரசித்து தான் இருந்து உள்ளேன். இப்போதும் மீண்டும் சொல்லுறேன். அவர் அறிவாளி தான். நான் தான் ஞான சூனியம். எனக்கு ரசனை இல்லை, அம்புடுதேன்.
நீக்கு