புதன், 27 ஆகஸ்ட், 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014


நண்பர்களே, இந்த போட்டியில் சேரும் அளவிற்கு எனக்கு தமிழ் அறிவும் இல்லை, கவிதை திறனும் இல்லை. இருந்தாலும் இந்த படத்தை பார்த்தவுடன், விட்ட குறை, தொட்ட குறை போல் ஓர் உணர்ச்சி.இவளை எனக்கு நன்றாக தெரியும் என்ற ஒரு உந்துதல். எனக்கு தெரிந்த வார்த்தைகளை வீசி விட்டேன். அவ்வளவு தான். போட்டிக்காக அல்ல!  





இந்தியன் உனக்கு "தனி ஈழம்"  ஏன் என்றாள், உனக்காக என்றேன்.
எனக்கும்  உனக்கும் என்ன சம்மந்தம் என்றாள், தமிழ் என்றேன்.
நமக்கும் நம் தமிழுக்கும்என்ன சம்மந்தம் என்றாள், குலம் என்றேன்.
குலம் என்றால் கோத்திரமும் ஒன்று தானே என்றாள், ஆம் என்றேன்.

பின், நான்"வீர நடை" போடுகையில், உனக்கு என்ன "புறமுதுகு" என்றாள்,
அவமானத்தில் சிரசை தாழ்த்தினேன்,  இனி இவள் வியர்வை, என் இரத்தம்.
"தனி ஈழம்"  பிச்சை கேட்க நான் ஒன்னும்  ஈன தமிழன், அல்ல, தன்மான  தமிழன்,
"தனி ஈழம்" எங்களுக்கு  தர நீ யாரடா?

கையில் வெண்ணையை வைத்து கொண்டு நெய்யை தேடி நான் அலைய,
கம்பிகளோடு இருக்கும் சிறை கதவை அவள் கலைய,
 மறுபக்கம் உள்ள ஏணியில் ஏற அவள் துணிய,
மேலே நின்று கையை நீட்டினேன், கெட்டியாக பிடித்து கொண்டாள்.

அது அன்று... இன்றோ!

எனக்கு  ஓர் "தனி ஈழம்" , நானே அமைத்து கொண்டேன்.
காணி நிலம்  கூட அங்கே உனக்கு இல்லையே என்றா சொன்னாய்.
கழுத்தில் தாலி இருக்கையில் எவனுக்கு வேணும் காணி.
கெட்டி மேளம்  சொல்லாமலே, கட்டினேன் தாலியையும்,அவளையும்.

இன்று, என் இல்லத்தில் இரண்டு ராசாத்திகளுக்கு  அவள்  தாய்,
என் "தனி ஈழத்தில்" அவள் தான்  பட்டத்துராணி.
ராசாத்திக்கள் சரி, ராணியும் சரி, நீ யார் என்றா கேட்டாய்
"தனி ஈழம்" என்று பிச்சை கேட்க   நான் ஒன்னும் ஈன தமிழன் அல்ல, அதை உரிமையோடு அமைத்து கொண்டு கொண்டாடும் தன்மான தமிழன்.


http://www.visuawesome.com/

20 கருத்துகள்:

  1. தங்கள் எண்ணங்களை வரவேற்கிறேன்
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா! அண்ணிக்கு எழுதியா!! போட்டி முடிவு வருவதற்கு முன்னே வீட்டில் பரிசு கிடைத்திருக்குமே அண்ணா!! அருமை!! போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்கு நன்றி. நான் இந்த போட்டியில் பங்கு பெற தகுதியற்றவன் என்று அறிவேன். போட்டிக்கான அடுத்த கவிதையை நான் எழுதவே இல்லை. தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

      நீக்கு
    2. **தங்கள் வாழ்த்துக்கு நன்றி. நான் இந்த போட்டியில் பங்கு பெற தகுதியற்றவன் என்று அறிவேன். **
      எனக்கு பிடிச்சுருக்குனு தானே சொன்னேன்? இப்படியெல்லாம் பேசின அண்ணாகிட்ட டூ விட்டுடுவேனாக்கும்:((

      நீக்கு
    3. இந்த தங்கைக்காக தொடர்ந்து எழுதினா தான் அச்சு:)) சொல்லீட்டேன்!! முதலில் முயற்சி பண்ணுங்க அண்ணா! வெற்றி ரெண்டாம் பட்சம்:))

      நீக்கு
    4. பங்கேற்க்கவே தகுதி இல்லை என்று நான் சொல்றேன், நீங்க என்னமோ, பரிசை பத்தி பேசுறீங்களே..

      நீக்கு
    5. எதையும் பாதியிலேயே விடகூடாது அண்ணா! இன்னும் ஒன்னுதானே:) அதலான சொன்னேன்:(( ஓகே. உண்மையாவே உங்க கவிதை நல்லா இருக்கு:)

      நீக்கு
  3. ஒரு போட்டியில் பங்கு பெறுவது என்பது வெற்றிபெறுவதற்கு மட்டுமே அல்ல. அவரவரது திறமையை மற்றவரிடம் வெளிப்படுத்தவும்தான். கண்டிப்பாக இந்த கவிதையை போட்டிக்கு அனுப்பவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மாது. சென்ற வாரம் என் ரேடியோ நிகழ்ச்சியில் தங்கள் ஏற்க்கனவே கூறிய கருத்து ஒன்றை நேயர்களுக்கு சொன்னேன். நான் மிகவும் ரசித்த உங்கள் கருத்து. என் பெண்களில் பிடித்தது: துப்பறியும் வீம்பு என்ற இடுகைக்கு தாம் இட்ட பின்னூட்டம். இந்த கவிதை நான் எழுத காரணமே புகைபடத்தில் உள்ள பெண்ணின் விட்ட "குறை தொட்ட குறை" முக அம்சம் தான். இந்த போட்டியில் பங்கேற்க நாம் இரண்டு கவிதைகள் எழுத வேண்டும். ஒன்றுக்கே, உன்னை பிடி என்னை பிடி, ரெண்டுக்கு எங்கே போவேன்.

      நீக்கு
  4. அருமையாக இருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் போட்டியில் பங்கேற்க்கவே இல்லை. இது என் ஆர்வ கோளாரில் எழுதியது. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. இந்த போட்டிக்கான இரண்டாவது கவிதை எழுத வார்த்தைகளும் திறனும் இங்கு இல்லை.

      நீக்கு
  5. ஓ இவங்களை உங்களுக்குத் தெரியுமா? எனக்கு கவிதை கொடுத்ததற்கு நன்றியைச் சொல்லிவிடுங்கள்.
    அப்புறம் உங்கள் கவிதை நன்றாய் இருக்கிறது..வித்தியாசமான கற்பனை.அருமை சகோ. வாழ்க தன்மானத் தமிழன். இன்னொரு கவிதையும் எழுதி போட்டியில் பங்கெடுக்க வேண்டுகிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டிக்கான அடுத்த கவிதையை நான் எழுத இல்லை. தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

      நீக்கு
  6. தங்களின் எண்ணங்களைப் போற்றுகின்றேன்
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. கவிதை தெரியாதென பொய்யுரைத்து மெய்யான கவிதை கொடுத்து விட்டீரே நண்பா,,, மற்றொன்றையும் எழுதி விடுவீர் வெற்றி பெறுவீர். வாழ்த்துகிறேன் உம்மை....
    நண்பா எனது பதிவு மௌனமொழி காண்க... நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் கூறுகிறேன், எனக்கு கவிதை வராது. மேலே உள்ளது ஓர் ஆர்வ கோளாறினால் வந்த தர்ம சங்கடம். கண்டிப்பாக உங்கள் கவிதையை படிக்கிறேன்.

      நீக்கு
  8. இது வரை யாரும் காணாத புதிய பார்வையில்
    உருவமும் உள்ளடக்கமும் சிறந்தெழுகிறது!
    வெற்றி பெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் இருக்கும் பெண்ணை கண்டவுடன் நினைவில் வந்ததை எழுதினேன். வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி.

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...