திருமணமான இந்திய தம்பதிகளுக்கான அறிவுரை.
இந்த நிகழ்ச்சியில் மனைவிகளுக்கு என்ன பயன் என்று என் மனைவி கேட்க்க அதற்க்கு பதிலாக அவர்கள் சென்ற நிகழ்ச்சியில் கூட ஒரு கணவர் முரட்டு காளை போல வந்தார். அவரை பசு மாடாக்கி அனுப்பினோம் என்று சொல்ல.... நானும் என் நண்பர்கள் என்று அழைக்கப்படும் மற்ற சிலரும் தம் தம் மனைவிகளோடு இந்த அறிவுரை நிகழ்ச்சிக்குபலி கடா போல் இழுத்து வரப்பட்டோம்.
(I dont own this picture, just googled it, liked it, and pasted it!, thanks google)
நானும் சரி, என் நண்பர்களும் சரி, மனைவிகளிடம் சற்று செல்லமான கோவத்தை காட்டிவிட்டு எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். சற்று நேரம் கழித்து அந்த பேச்சாளர் வந்தார். அவர் ஒரு சுய அறிமுகம் தந்தார். அவரின் அறிமுகத்தை கேட்ட நாங்கள் எல்லாரும் அதிர்ந்தே போய்விட்டோம்.
ஏன் என்றால், எங்களுக்கு அறிவுரை தரும் இவர் திருமணமே பண்ணாதவராம். நாம் படும் பாடு இவருக்கு எப்படி தெரியும் என்று அருகில் அமர்ந்து இருந்த அருமை நண்பன் தண்டபாணியிடம் கேட்க்க.. அவன்..
வாத்தியரே.. கல்யாணமே பணிக்காம இவ்வளவு சந்தோசமா இருக்காரே.. இவர் நிச்சயம் அறிவாளி தான்.. என்னதான் சொல்றாருன்னு கேட்போம் என்றான்.
சரி என்று தலையை ஆடிவிட்டு அவர் சொல்வதை கவனிக்க ஆரம்பித்தேன்.
பேச ஆரம்பித்தார்.
உங்களில் யார் எல்லாம் தங்கள் மனைவிக்கு இன்று காலையில் " I love you" சொன்னீர்கள்"?
எவனுமே கையை தூக்க வில்லை.
சரி, உங்களில் யாராவது அவரின் மனைவிக்கு இதுவரை " I love you' சொல்லி இருக்கீறீர்களா? (ஆரம்பிச்சிட்டான்யா.. ஆரம்பிச்சிட்டான்...)
தண்டபாணி மட்டும் கையை தூக்கி, அணைத்து கணவர்களுக்கும் எதிரி ஆனான். நான் உடனே குறுக்கே நுழைந்து, நீ எப்போது 'I love you" சொன்னாய் என்று கேட்க்க தண்டபாணி, நாங்கள் கல்லூரியில் படிக்கையில் காதலித்தோம் அப்போது என்றான். அது இந்த கணக்கில் வராது என்று நான் சொல்ல, ஏன் என்று தண்டம் கேட்க்க, இவர் கேட்ட கேள்வி மனைவியிடம் சொன்னீர்களா என்று? காதலியிடம் என்று அல்ல என்று விவரிக்க அனைவரும் ஒப்பு கொண்டனர்.
அவர் உடனடியாக எல்லா கணவரையும் எழுந்து நிற்க சொல்லி நீங்கள் எல்லாரும் தம் தம் மனைவியிடம் "I love you" சொல்லுங்கள் என்று சொல்ல அவனன் முகத்தில் அசடு வழிய... ஒரு வழியாக சொல்லி வைத்தோம்.
இப்போது அடுத்த கேள்வி.
ஒவ்வொரு கணவனும் தம் தம் மனைவியை பற்றி இரண்டு நல்ல காரியங்கள் சொல்ல வேண்டும்.. யார் முதலில் என்று கேட்க்க, அவனவன் முகம் பேய் அறைந்ததை போல் ஆனது. (பேய் அறிந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்லுகிறேன்).
எந்த கணவரும் எதுவும் சொல்லாததை பார்த்த அந்த பேச்சாளர், அங்கே இருக்கும் ஒவ்வொரு கணவனையும் தனியே எழுந்து நிற்க வைத்து கேட்க்க ஆரம்பித்து விட்டார்.
அங்கே இருந்து வந்த சில பதில்கள்.
"திடு திப்புன்னு இப்படி ரெண்டு நல்ல காரியம்னா நான் எப்படி சொல்ல முடியும்? ரெண்டு நாள் டைம் கொடுங்க"
"ஒன்னுன்னா பராவயில்லை, நான் ஏதாவது சொல்லி வைப்பேன்... ரெண்டுக்கு எங்க போவேன்"?
"நான் இந்த மாதிரி நல்ல இடத்தில (இது நடந்த இடம் ஒரு கோயில்) எப்போதும் பொய் சொல்ல மாட்டேன்", வேணும்னா வெளிய வந்து கேளுங்க, சொல்றேன்"
"வச்சிக்கினா இல்லன்னு சொல்லுறேன், யோசித்து யோசித்து பார்க்கின்றேன், எதுவும் வரமாட்டேன்குது".
"இந்த மாதிரி பொது இடத்தில தன்னை பத்தி பேச கூடாதுன்னு என் மனைவி சொல்லி இருக்கா? அதனால நான் இந்த விளையாட்டிற்கு வரல"
"காலையில் வேலைக்கு போயிட்டு சாயங்காலம் தான் வருவா"
இதையெல்லாம் கேட்ட அத்தனை மனைவிகளும் சற்று அதிர்ந்தே விட்டனர்.
என்னுடைய முறை வந்தது...
'எப்படி சொல்லுவேன், எவ்வளவோ நல்ல காரியங்கள் இருக்கும் போது ரெண்டு மட்டும் சொன்னா நல்லா இருக்காது என்னை தயவு பண்ணி "எஸ்குயுஸ்" பண்ணி கொள்ளுங்கள்" என்றேன்.
இவ்வளவு நேரம் அமைதியாக கேட்டு கொண்டு இருந்த பேச்சாளர் தன் பொறுமையை இழந்து எங்களை சத்தம் போட ஆரம்பித்தார். அதை பார்த்த தண்டபாணி, அவரிடம், உங்களுக்கு ஏன் இவ்வளவு முன் கோவம், தங்களுக்கும் திருமணம் ஆகி இருந்தால் நீங்களும் இந்த முன்கோபத்தை விட்டுவிட்டு எங்களை போல பசு மாடு போல் அமைதியாக இருக்கலாம் என்றான்.
மதிய உணவிற்கு ஒரு இடை வெளி விட்டார்கள். எந்த மனைவியும் அவர்தம் கணவனிடம் பேசவில்லை.அனைவரும் மூஞ்சை தூக்கி வைத்து கொண்டு "வீட்டுக்கு வா, பேசி கொள்கிறேன்" என்ற பார்வையோடு அமர்ந்து இருந்தனர்.
இது என்னடா.. ஒழுங்கா இருந்த குடும்பத்த இவங்க கண்டிப்பா கெடுத்து விடுவார்கள் என்று கணவன்மார்கள் யோசிக்கும் போது அந்த பேச்சாளர் அங்கே இருந்த மனைவிகளிடம் தம் தம் கணவனை பற்றி ரெண்டு நல்ல காரியங்களை சொல் என்றவுடன்..அங்கிருந்த அத்தனை பெண்களும்.. ரெண்டு என்ன.."வச்சிக்க நீ" என்று போட்டி போட்டி கொண்டு கணவர்களை பாராட்டி பேச ஆரம்பித்து விட்டார்கள்.
இவர்கள் அனைவரும் பேசி முடிந்ததும் அந்த பேச்சாளர் "கணவன்மார்களே, தங்கள் மனைவியை பற்றி ரெண்டு நல்ல காரியம் என்றவுடன் நீங்கள் தடுமாறினீர்கள், ஆனால் இந்த பெண்களோ அதே கேள்விக்கு எவ்வளவு அழகாக உங்களை பற்றி பதில் சொல்கின்றார்களே, இதில் இருந்து என்ன தெரிய வருகிறது? என்றார்.
இதற்க்கு பதிலாக நான், மற்றும் அருமை நண்பன் தண்டபாணி, திருவாசகம் மற்றும் ஒன்றாக சேர்ந்து
" இதில் இருந்து கணவர்களாகிய நாங்கள் எவ்வளவு நல்லவர்கள் என்று தெரிகின்றது" என்று சொல்ல
இவர்களை திருத்தவே முடியாது என்று முனகி கொண்டு அந்த பேச்சாளர் அடுத்த நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்று விட்டார்.
பின் குறிப்பு: இந்த காரியம் நகைச்சுவையாக இருந்தாலும், மனைவிகள் தங்கள் கணவனை விட்டுகொடுக்க மாட்டார்கள் என்று காட்டுகிறது. மற்றவர்களின் எதிர் இல்லாவிடிலும் பரவாயில்லை, நம் பிள்ளைகளின் எதிரிலாவது கண்டிப்பாக மனைவியை பற்றி ரெண்டு நல்ல காரியம் சொல்லுங்கள்
.
எங்கே... இங்கே கமெண்ட் பகுதியில் உங்க மனைவி (கணவன்) பற்றி ரெண்டு நல்ல காரியங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.
வணக்கம்
பதிலளிநீக்குபடிப்பதற்கு மிக இரசனையாக உள்ளது நகைச்சுவை கலந்த கலவையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு நன்றி.
நீக்குnice comedy post sir....
பதிலளிநீக்குயாராயிருந்தாலும் மதிப்பு மரியாதை கொடுத்து, அன்பு செலுத்தும் ஓர் பெண் என் மனைவி. ஒரு பொறியியல் கல்லூரியில் professor ஆக இருந்தும், கர்வம் துளி கூட இல்லாமல், கூட்டி பெருக்குபவர் முதல் principal வரை ஒரே மாதிரியான அன்பான அணுகுமுறைதான். She is a no respecter of persons.
பதிலளிநீக்குதனக்கு இல்லாமல் போனாலும் பரவாயில்லை என பிறருக்கு கொடுத்து உதவும் குணம். இத்தனைக்கும் எங்களுக்கும் ரெண்டு ராசாத்திகள் தான். Though she knows that we need to save a lot for girls over here in India, her attitude always is 'they have been given to us by God, so they will be taken care of by God.'
மனைவி அமைவதெல்லாம்.... அருமையான மனைவி ஐயா தமக்கு. வருகைக்கு நன்றி.
நீக்குஒவ்வொரு பதிவுலும் மிளிரும் நகைச்சுவை அட்டகாசம்
பதிலளிநீக்குதங்களின் பாராட்டான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து படித்து கருத்தை தரவும்.
நீக்கு