வியாழன், 21 ஆகஸ்ட், 2014

டைரக்டர் பாக்யராஜுக்கு இது அவசியமா?

முதல் பொருள் முதல், அதாவது " First thing First".

யாம் அறிந்த திரை கதை அமைப்பாளர்களிலே, பாக்யராஜ் போல் ஒருவரையும் கண்டது இல்லை. நான் இவரின் தீவிர ரசிகன். ஒரு தனி மனிதனின் மூளைக்கு தான் எவ்வளவு ஒரு கற்பனை சக்தி என்பதை இவரின் திரை நாட்களில் - திறமையில் கண்டு கொள்ளலாம். அவ்வளவு ஒரு திறமை. அதற்கும் அடுத்தாற்போல், நகைச்சுவை தன்மை. இவரின் நகைச்சுவையும், திரைகதையும் என்றுமே நகமும் சதையும் போல் ஒட்டி கொண்டு இருக்கும். தனியாக ஒரு "காமடி ட்ராக்"  என்பது இவரிடம் கிடையாது. இது நம்ம ஆளு, டார்லிங் - டார்லிங்-டார்லிங் போன்ற படங்களை இன்றும் பார்த்து குலுங்கி குலுங்கி சிரிப்பவன் நான்.



இது நம்ம ஆளு படத்தில்..

எங்கேயா? அந்த மணப்பெண் உடைய அப்பா? என்னையா லட்டு இது? இது ஒரு சைசா? என்றவுடன் அவருக்கு ஒரு அரை விழும். அதை தொடர்ந்து, குமரி முத்து பெண்ணின் அப்பாவை, உன்னை பெரிய மனுஷன்னு நினைச்சேன், ஒரு லட்டு விவகாரத்திற்கு ஒரு ஆளை அறையிறியே என்று சொல்லிவிட்டு, அந்த அடி வாங்கிய ஆளை பார்த்து ... நீங்க யாருங்க என்று கேட்க அதற்கு அவர், "நானா, நான் தான் மாப்பிளையுடைய அப்பா என்று பதில் சொல்ல, தன பங்குக்கு குமரி முத்து ஒரு அரை கொடுப்பாரே... அந்த காட்சி அமைப்பை பார்த்து நான் வியந்தேன்.

பாக்கியராஜ் அவரகளுக்கு என்று ஒரு ரசிகர் மன்றம் இன்று இருந்தால் அதன் தலைமையாக நான் தான் இருப்பேன். அப்படி ஒரு பிடிப்பு. இன்னும் சொல்ல போனால், பொழுது போவதார்காக நான் எழுதி கொண்டு இருக்கும் அனேக இடுகைகளை, என் அறிந்த நண்பர்கள் படித்து, இது பாக்கியராஜ் சாயலில் உள்ளதே என்று அவ்வபோது ஒரு குற்றம் சாட்டுவார்கள், நானும் அதை பெருமையாகஏற்று கொள்வேன்.

சரி, இப்போது, தலைப்பிற்கு வருவோம். இவ்வளவு மரியாதை உள்ள பாக்கியராஜ் அவர்களை, இது அவருக்கு அவசியமா என்று கேட்பதின் காரணம்..

கடந்த சில வருடங்களாக, தமிழ் பொழுது போக்கு வரிசையில் முன்னே நிற்பது "நகைச்சுவை பட்டிமன்றம்". எங்கேயும் பட்டிமன்றம், எதிலேயும் பட்டிமன்றம். பார்ப்பவர்கள் எல்லாரும் பட்டிமன்ற பேச்சாளர்கள் ஆக்கிவிட்டார்கள், அதை கூட ஏற்று கொள்ளலாம். சிலருக்கு ஆர்வ கோளாறு, பலருக்கு பண- உறவு பலம்.

ஆனால் காலம் போக போக இந்த பட்டிமன்றதிர்க்கான மக்கள் ஆதரவு அதிகரித்தால் இப்போது யார் வேண்டுமானாலும் நடுவர் ஆகலாம் என்ற நிலைமை வந்து உள்ளது. இங்கே தான் என் மன உளைச்சல் வருகிறது.

திரு.பாக்யராஜ் அவர்கள், இவ்வாறான ஒரு பட்டிமன்றத்திற்கு தலைமை ஏற்க அமெரிக்கா வருகின்றார் என்று கேள்வி பட்டேன்.  உடனடியாக மனதில் ஒரு நெருடல். இவருக்கு இது தேவை தானா என்று? பேச்சாளர்களில் ஒருவர் ஒரு ""திருக்குறள்" எடுத்து விட்டார் என்று வைத்து கொள்ளுங்கள், இவருக்கு அதற்க்கு விளக்கம் தர இயலுமா? பட்டிமன்றம் என்பது ஒரு தமிழ் மரபு ஆகிற்றே. இது என்ன சோதனை? என்று யோசிக்க தோன்றியது.

சரி, இவர் நடுவர், மற்ற பேச்சாளர்கள் யார் என்று பார்த்தால் , மீண்டும் ஒரு கேள்வி குறி. தமிழ் பயின்ற நண்பன் ஒருவனிடம் சொல்லி அழுதேன், அதற்க்கு அவன், நீ பார்த்த இவர்கள் வேறு, ஆனால் இவர்கள் எல்லோரும் இப்போது, தமிழ் கற்று -பயின்று- வளர்ந்து இருக்க வாய்ப்பு உள்ளதே என்று ஆறுதலை சொன்னான்.

சரி நிகழ்ச்சிக்கு வருவோம். நடுவர் பாக்கியராஜ், ஆரம்ப பேச்சில் சிலபழைய ஜோக் சொன்னார். அனைத்துமே ஏற்கனவே கேட்டு சிரித்தவை தான். மற்ற பேச்சாளர்கள் பேசுகையில், இவர் குறுக்கில்  நுழைந்து  ஜோக் சொல்வதற்காக 1-2 நிமிடம் எடுத்து  கொள்கிறார். இந்த மாதிரியான பட்டிமன்றங்களில் மற்ற பேச்சாளர்களுக்கு பேச கிடைப்பதே 7-8 நிமிடங்கள் தான். இந்த சில நிமிடங்களில் அவர்கள் பேசிக்கொண்டு இருக்கையில் அவர்களின் பேச்சை நிறுத்தி விட்டு, தன் ஜோக்கை நடுவர் சொல்ல ஆரம்பித்தால், பட்டிமன்றத்தின் சாரமே சோர்ந்து விடுகிறது.

நான் பார்த்த இந்த பட்டிமன்றத்தில் பாக்கியராஜ் பேசியது, மற்றும் சொன்னது எல்லாம், ஏற்கனவே வேறு ஒரு பட்டிமன்றத்தில் மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள் பேசியது தான் என்று நினைக்கையில்.. அடடே... பாக்யராஜே மற்றவர்களின் பேச்சை தன் பேச்சாக காட்டி கொள்கிறாரே என்று இருந்தது.

 தமிழ் பட்டிமன்ற நடுவராக இருக்க சில அடிப்படை தகுதிகள் வேண்டும் என்பதே என் வாதம். இங்கே வேறு சில காரியங்களையும் எடுத்து வைக்கிறேன்.

சில மாதங்களுக்கு  முன் தொலை காட்சியில் கமல்ஹாசன் தலைமையில்..கமலின் வெற்றிக்கு காரணம் என்ன என்று ஒரு பட்டிமன்றம். கமல்ஹாசனை நடுவில் அமர்த்தி வைத்து மற்ற பேச்சாளர்கள் எல்லாம் அவரை புகழ்ந்து தள்ளியது பார்க்கும் நம்மையே முகம் சுளிக்க வைத்தது. இதில் பேசுகையில் ஒரு பேச்சாளர், கருப்பாக இருக்கும் மக்களை பற்றி கிண்டல் செய்வார், அதற்க்கு மற்ற பேச்சாளர்களும் சரி, அவையோரும் சரி கை தட்டி சிரிப்பார்கள். இது ஒரு பட்டிமன்றமா?

இன்னொரு விஷயத்திற்கு போவோம். சில நாட்களுக்கு முன் இங்கே அமெரிக்காவில் ஒரு பட்டிமன்றம். நடுவர்களாக இரண்டு பேர். அட பாவிங்களா? ஒரு உறையில்  ரெண்டு கத்தி வைக்கலாமா? பிரபலமான ரெண்டு பேர் தங்கள் அழைப்பை ஏற்றார்கள் என்று இருவரை நடுவராக அமர்த்தலாமா?

இங்கே இன்னொரு காரியமும் சொல்லிகொள்கிறேன். சென்ற வருடம் பெரியவர் சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த பட்டிமன்றத்தில், நண்பர் ஒருவர் ஒரு "திருக்குறளை" தவறான இடத்தில உபயோகித்தார். அதை கவனித்த நடுவர் அவர்கள், உடனடியாக பேச்சாளரை நிறுத்திவிட்டு, அதை தவறு என்று கூறிவிட்டு ஏன் தவறு என்ற காரணத்தையும் எடுத்து கூறினார். அந்த தகுதி இல்லாவிடில், தரம் பிரிக்க இயலாதே...

மற்றவைகளை எல்லாம் மறந்து விட்டோம், இந்த மரபையாவது காப்போமே...

வாழ்க தமிழ்..வளர்க மரபு..

பின் குறிப்பு ; தமிழை பற்றி இவ்வளவு பேசும் உன் பதிவில் எழுத்து பிழை-சொல் பிழை இருகின்றதே என்று யாராவது சொன்னால்  அது நியாயமே.. நான் எப்போதும் சொல்வது போல் "எனக்கு தமிழின் மேல் ஒரு தலை காதல்" பிழையை சுட்டி காட்டினால், உடனடியாக தவறுக்கும், தவறியதிர்க்கும் மன்னிப்புகேட்டு, திருத்தி கொள்வேன். நன்றி.

http://www.visuawesome.com/

7 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. "திருக்குறள்" தவறை திருத்தி விட்டேன். வருகைக்கும் சுட்டி காட்டியதற்கும் நன்றி,

      நீக்கு
  2. பாக்கியராஜுக்கு பணம் பிரச்னை . என்னதான் செய்வார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணம் பத்தும் செய்யும் சரி, ஆனால் இது பணம் பித்தும் செய்யும் என்பது போல் அல்லவா உள்ளது.

      நீக்கு
  3. உண்மைதான் ஐயா ! நடுவராக இருப்பதற்கும் தகுதி அவசியம் ! லியோனி பற்றி சொல்லவே இல்லை. அவரும் நல்ல நடுவர்தான். தமிழ் புலமை மிக்கவர் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லியோனி அவர்கள் பட்டிமன்றத்தை ரசித்து பார்த்தவன் தான் நானும். அருமையான நகைச்சுவை பேச்சு, நல்ல ராகத்தோடு பாட்டு. அவர் அணியில் உள்ள முத்து நிலவன் ஐயா அவர்களும் , மதுக்கூர் அவர்களும் நன்றாக பெசுவார்ர்கள். இங்கேயும் இனியவன் என்றொரு திருஷ்டி இருந்தார் (பெண்களை கேவல படுத்தி பேசுவதில் இவருக்கு நிகர் இவரே), ஆனால் இவர் சில நாட்களாக இல்லாமல் இருப்பது ஒரு ஆறுதல்.

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...