திங்கள், 29 டிசம்பர், 2014

நலம் தானா? நலம் தானா? ....உடலும் உள்ளமும்....!

வளைகுடா நாட்டின் நாட்கள்....அலுவலத்தில் இன்னொரு நாள்...

மிஸ்டர் விசு...

சொல்லுங்க மிஸ்டர் குஞ்சு குஞ்சு...
(என்னடா இவர் பெயர் வித்தியாசமாக இருகின்றதே என்று நீங்கள் பார்ப்பது புரிங்கின்றது... அதில் பெரிய கதையே உண்டு... அதை படிக்க இங்கே சொடுக்குங்கள்)

இந்த அரசு அலுவலத்தில் இருந்து நம்ம போன மாச "பில்" இன்னும்  டெபொசிட் பண்ணவில்லை. நான் எத்தனை முறை போன் பண்ணியும் சரியான பதில் கிடைக்கவில்லை, நீங்க கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.

ஓகே ... குஞ்சு குஞ்சு.. ஐ வில் டேக் கேர் ஆப் இட். தேங்க்ஸ்.



ஹலோ...

மஸ்கட் முனிசிபாலிட்டி?

ம்ம்ம்...

திஸ் இஸ் விஷ் காலிங், கேன் யு பார்வர்ட் மீ டூ யுவர் AR ( Accounts  Receivable )?

மாப்பி இங்கிலீஷ்... ஒன்லி அரபி...

ஐ வில் கால் பேக், தேங்க் யு.

மிஸ்டர் குஞ்சு குஞ்சு..

எஸ் மிஸ்டர் விசு..

நான் அந்த நம்பர் ட்ரை பண்ணேன், அங்கே ஒரு அரபி நண்பர் எடுத்து  "மாப்பி இங்கிலீஷ்" என்று சொல்லிவிட்டார்.

ஒ.. அப்படியா.. நம்ப மஜீத்  (மஜீத் என்பவர் ஒரு அரபியர், எங்கள் அலுவலத்தில் பணி புரிபவர்) வந்தவுடன், அவரை வைத்து பேசி பார்க்கலாம்..

ஓகே மிஸ்டர் குஞ்சு குஞ்சு...மஜீத் வந்தவுடன் என் அலுவலகம் வர சொல்லுங்க... தேங்க் யு..

சில நிமிடங்கள் கழித்து..

Picture Courtesy : Google

மிஸ்டர் விசு...

எஸ் மஜீத்.. கே பாலாக்... (எப்படி உள்ளீர்கள்)

தமாம் ... (சுகமே)...

அடுத்த எல்லா உரையாடலும் ஆங்கிலத்தில் தான், அதை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்..

மஜீத், இந்த மஸ்கட் சிட்டி அலுவலகத்தில் இருந்து கொஞ்சம் "டெபொசிட்" வர தாமதமாகிறது. இன்றைக்கு காலையில் அவர்களை கூப்பிட்டேன். அங்கே இருக்கும் நபர் தொலைபேசியில் "மாபி இங்கிலீஷ்"  என்று கூறி விட்டார். அந்த நபரிடம் நீங்கள் பேச முடியுமா?

நோ ப்ரோப்ளம் விசு..  ஐ வில் டாக்..

அவரை கூப்பிடும் முன்.. இதுதான் நம்ம பில். அதன் தேதி, மற்றும் மொத்த தொகை எல்லாம் குறித்து கொள்ளுங்கள்.

ஓகே.. அந்த எண்ணை கூப்பிடுங்க விசு..

நானே, அந்த எண்ணை அழைத்து, அது ரிங்கிய போது மஜீத்திடம் கொடுத்தேன்.

எனக்கு அரபி அவ்வளவு பேச தெரியாவிட்டாலும் ..கொஞ்சம் புரியும்,, அதை வைத்து அடுத்து நடந்த உரையாடலின் தமிழாக்கம் .. எனக்கு கேட்டது எல்லாம் நண்பன் மஜீத்தின் குரல் தான். அதில் இருந்தே அடுத்தவர் என்ன சொல்லி இருப்பார் - கேட்டு இருப்பார் என்பதை நாம் யூகிக்க முடியும்...

ஹலோ..

எப்படி உள்ளீர்கள்?

கடவுள் கிருபையில் நன்றாக உள்ளேன்..

அப்படியா? ரொம்ப சந்தோசம்.. எங்கள் வீட்டிலும் எல்லோரும் நன்றாக இருக்கின்றோம்..

இங்கே கொஞ்சம் வெயில் தான்.. இது கோடை தானே..

அப்படியா? ரொம்ப சந்தோசம்.. இங்கே "கதவை திறந்தால் காற்று வாராது"..நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்..

பிள்ளைகளா? அடே  டே, எனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை.

(எதிரில் இருந்த நான் மஜீத்திடம்.. கை சைகையால் ஒரு நிமிடம் என்று சொல்ல அவர் போனை தன கையினால் மூடி)

என்ன மிஸ்டர் விசு?

என்ன மஜீத்..? 10 நிமிடமாக நலம் விசாரிக்கின்றாய், சீக்கிரம் விஷயத்திற்கு வா.. எனக்கு கொஞ்சம் வேலை இருகின்றது...

மிஸ்டர் இசு .. இது அரபி கலாச்சாரம். நாங்கள் யாரிடம் எப்போது பேசினாலும் நன்றாக நலம் விசாரித்து விட்டு தான் விஷயத்திற்கு வருவோம்.

ஓகே , மஜீத்... கெட் டு தி பாயிண்ட்.

மீண்டும் தொலைபேசியில்..

நான்தான் சொன்னேனே ... எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.. சந்தோசமாக தான் இருக்கின்றேன் ( அட பாவிங்க...  எல்லா கலாசாரத்திலும் இந்த ஜோக் இருக்கா? )

அப்படியா? உங்கள் குரலில் கண்டுபிடித்தேன், நீங்கள் கண்டிப்பா திருமணம் ஆனவர் என்று?

இது என்ன பெரிய விஷயம்.. உங்கள் குரலில் ஒரு மகிழ்ச்சியே இல்லையே...

(நான் கண்ணாலே, மஜீத், ப்ளீஸ்)

போன வார இறுதி.. நான் எங்க தாத்தா வீட்டிற்கு போய் இருந்தேன்..

அவருக்கு இப்போது தான் 89 வயது..

சோ சாரி.. உங்க தாத்தா 75 கூட தாண்ட வில்லையா? என்னுடைய அனுதாபங்கள்..நீங்க கொடுத்து வைத்தது அவ்வளவு தான்.

நான் இருக்கையில் இருந்து எழுந்தே விட்டேன், என் அவசரத்தை தாமதமாக புரிந்து கொண்ட மஜீத், எங்களுடைய "பில்லை" எடுத்து பேச ஆரம்பித்தான்!

பில் நம்பர்... ...மொத்தம்.. இவ்வளவு ரியால்..

என்று சொன்னது தான்... தொலை பேசியின் அடுத்த பகுதியில் இருந்தவர் என்ன சொன்னார் என்று தெரியவில்லை. மஜீத் தொலை பேசி கோபமாக வைத்து விட்டு..

மிஸ்டர்..விசு.. டோன்ட் வேஸ்ட் மை டைம்..?

என்ன ஆச்சி மிஸ்டர் மஜீத்..

நீங்க போட்டது 'ராங் நம்பர்..." இது எதோ மீன் மார்க்கெட்டாம்..

பின் குறிப்பு :
அட பாவி... உன் அன்பான உபசரிப்ப காட்டுவதற்கு முன்னே அதில் பேசுறது யாருன்னு கேட்காம ... என்னை திட்டறியே என்று நொந்து கொண்டே.. குஞ்சு குஞ்சுவிடம் ஆறுதலுக்காய் சென்றேன்.. மீண்டும் குஞ்சு குஞ்சா.... ? அதை இங்கே படியுங்கள்

www.visuawesome.com

5 கருத்துகள்:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...