செவ்வாய், 23 டிசம்பர், 2014

கோழி கூவுது .... கொக்கர "கோ"

சென்ற வாரம் நான் எழுதிய பதிவில் "அச்சச்சோ புன்னகை" என்ற பதிவில் அருமை நண்பன் சம்பத் என்னிடம்,

"என்ன விசு ? கோழிய அடிச்சி கொழம்பு கொதிக்கும் வாசனை வரும் போது தானே எழுவ? இப்ப எல்லாம் கொஞ்ச நாளா கோழி கூவும் போதே எழுறியே என்ன விஷயம்?"

கேட்டதாக எழுதி இருந்தேன். இதை படித்த என் கல்லூரி தோழனும் சக பதிவருமாகிய கோயில்பிள்ளை அவர்கள் (இவர் ஒரு தமிழ் விரும்பி, அருமையான பதிவாளர். இவரின் படைப்புக்களை படிக்க இங்கே சொடுக்கவும்), இப்படி பொதுவாக சொன்னால் எப்படி? கோழி கூவுற நேரத்தையும் மற்றும் கோழி கொழம்பு கொதிக்கும் நேரத்தையும் சற்று விவரித்தால் தானே நீ எத்தனை மணிக்கு எழுவாய் என்பது படிப்பவர்களுக்கு புரியும் என்றார். அதனால் தான் இந்த பதிவு.

இந்த பதிவை படிக்கும் முன், (சற்று இங்கே சொடுக்குங்கள்)  என் "அச்சச்சோ புன்னகை" யை படித்து விட்டு மாறு கேட்டு கொள்கிறேன்.

இப்போது இன்றைக்கான பதிவிற்கு வருவோம். "பொழுது விடிய கோழி கூவுது" என்ற கிராமிய பேச்சில் சொல் குற்றம் இல்லாவிடினும்  பொருள் குற்றம் உண்டு.

குற்றமா ?  எங்கள் பேச்சிலா ? யார் சொன்னது? என்று எந்த ஒரு கிராமத்து வாசகரும்  பதிவரும்   கேட்பதற்கு முன் என் தன்னிலை விளக்கத்தை இங்கே வைக்கின்றேன் .

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இதுவரை கோழி எப்போதுமே கூவியது கிடையாது. சேவல் தான் கூவும். வளரும் நாட்களில்  பள்ளி பரீட்சைக்கு காலை 5 மணிக்கு எழுப்புவதில் இருந்து, அடுத்த நாள் போக வேண்டிய ரயிலிற்கு என்னை எழுப்பியதும் இந்த சேவல் தான். 
Picture Courtesy : Google
 
ஏன், முதல் முறையாக வீட்டில் தொலை காட்சி பெட்டி வந்த நாட்கள் அவை. உலக கோப்பையை இங்கிலாந்தில் வென்று விட்டு இந்திய அணி   ஆஸ்திரேலியாவில் நடக்கும்   "World Championship"  ஆட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்டு சென்றது . முதல் ஆட்டம் தொலை காட்சியில்  காலை 4:45 க்கு ஒளிபரப்பு என்று  கடிகாரத்தில் 4:30க்கு அலாரம்  வைத்து விட்டு தூங்க சென்றேன் .  நான் " உப்பு விற்க செல்லும் போது தான் மழை  பெய்யுமே" , அந்த ராசி அன்றும் தொடர கடிகாரம் என்னை எழுப்ப மறந்து விட்டது.  இருந்தாலும் அந்த சேவல் என்னை மறக்க வில்லையே . 4:45க்கு என்னை கூவி எழுப்ப ஆரம்பித்தது.  அந்த நன்றியை மறக்க இயலுமா ?

விஷயத்திற்கு வா என்று கோயில்பிள்ளை கூவுவது கேட்கின்றது . "கோழி கூவும் போது எழுவது" என்பது காலை  4:30ல் இருந்து 5:00 வரை என்று அர்த்தம்.

சரி இப்போது சம்பவம் நடந்த நாளுக்கு வருவோம் .

//"என்ன விசு ? கோழிய அடிச்சி கொழம்பு கொதிக்கும் வாசனை வரும் போது தானே எழுவ? இப்ப எல்லாம் கொஞ்ச நாளா கோழி கூவும் போதே எழுறியே என்ன விஷயம்?"//

இது எந்த நேரம்? என்னை பொறுத்தவரை கோழி கொதிக்கும் நேரம் மதியம் ஒரு 11:30 யில் இருந்து 12:00 வரை. ஏன் என்றால் அந்த நேரத்தில் தான் ஒவ்வொரு வீட்டிலும் கொழம்பு கொதிக்கும். ஏன், காலை உணவிற்கு கோழி கொழம்பு வைக்க மாட்டார்களா என்று கேட்கும் நண்பர்களுக்கு தனக்கு வசதி நிறைய என்று ஒரு பெருமை. எங்களை போல் நடுத்தர குடும்பத்தில்  பிறந்தோர்க்கு ஞாயிறு மதியம் மட்டும் தான் கோழி குழம்பு.

ஏன் நேற்று வைத்த கோழி கொழம்பு மீதி இருந்தால் அதை காலையில் சூடு பண்ணி இருக்கலாமே, அந்த வாசனையில் நீ எழுந்து இருக்கலாம் என்று கூறும் நண்பர்களுக்கு :
நேற்று வைத்த கோழி கொழம்பை  காலையில் இட்லி தோசைக்கு  வைத்து சாப்பிடுவது தமிழர் பண்பாடு தான் . ஆனாலும் இந்த கொழம்பை யாரும் கொதிக்க வைக்க மாட்டார்கள். இதை சூடு செய்வார்கள். சூடு செய்யும் போது தூங்குபவனை எழுப்புவதற்கு தேவையான வாசனை அதில் வராது .  

விஷயத்திற்கு வா என்று கோயில்பிள்ளை மீண்டும் கூவுவது கேட்கின்றது. கோழி கொழம்பு கொதிக்கும் போது என்பது என்னை பொறுத்தவரை கண்டிப்பாக மதியம் 11:30 - 12:00 தான் .

என்நட்புக்களே நான் சொல்வது சரிதானே ?

பின் குறிப்பு :
இந்த சேவலுக்கும்  எனக்கும் தான் என்ன ஒரு நட்ப்பு. சிறுவயதில் இருந்தே என்னை கூவி   கூவி  நேரத்திற்கு எழுப்பும் இந்த சேவல், கடைசியாக ஒரு முறை  தான் இறந்த பின்னும்  என்னை எழுப்பி  (சற்று தாமதமாக இருந்தாலும் ) விட்டு தான் சென்று இருக்கின்றது. என்ன? முன்பு "கூவி பறக்க "எழுப்பியது கடைசியாக ஒரு முறை "ஆவி பறக்க " எழுப்பியது !


www.visuawesome.com

 

3 கருத்துகள்:

  1. கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவலே!
    இப்ப மணி எத்தனை ?
    கோயில் மணியிடம் கேட்டுச் சொல்லுங்கள்.
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  2. வலைப் பூ நண்பருக்கு,
    வணக்கம்!
    அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்துக்கள்
    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.fr

    (இயக்குனர் சிகரம் கே.பி அவர்களுக்கு கவிதாஞ்சலி!
    பங்கு பெற வாருங்கள்
    குழலின்னிசை வலைப் பூ பக்கமாய்!)
    நன்றி!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...