செவ்வாய், 23 டிசம்பர், 2014

இயக்குனர் சிகரம் மறைவோடு ஒரு சகாப்தம் முடிந்தது.

இரவு படுக்கைக்கு போகும் முன் செய்தியில் " கூத்தபிரான் அவர்கள் மறைவு" என்பதை படித்து விட்டு அவருக்கு ஒரு அஞ்சலி பதிவை போட்டு விட்டு தான் படுக்கைக்கு சென்றேன். படுக்கையில் தூக்கம் தழுவும் முன் அவரின் கிரிக்கெட் வர்ணனை நினைவில் வர எப்போது தூங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை.



காலையில் எழுந்து செய்தியை பார்த்தால் " KB மரணம்" . 1930ல் பிறந்த KB அவர்கள் தனது 86 வயதில் இறைவனை சேர்ந்தார் என்ற செய்தி. சில நாட்களாகவே சற்று சுகவீனமாக இருந்தவர். அது மட்டும் இல்லாமால் கடந்த சில மாதங்களில் தன் புதல்வனான கைலாசம் அவர்களை இழந்தவர்.  ஒர் பிள்ளையின் மரணத்தை விட சோகமான ஒன்று யாருக்கும் வர இயலாது.  இந்த இழப்பினால் KB அவர்களின் உடல் நிலை சற்று தடுமாறியது என்று எங்கேயோ படித்த நினைவு.



அருமையான இயக்குனர். அவருக்கும் எனக்கும் என்ன? நான் செலவு செய்த ரெண்டு  ரூபாயில் என்னை சிரிக்க வைத்தவர், மகிழ செய்தவர்.

ஒரு படத்தை வெற்றியாக்க இவருக்கு முன்னணி நடிகர்கள் யாரும் தேவை இல்லை. ஒரு சிரிப்பு நடிகர் இருந்தாலே போதும். நடிகர் நாகேஷ் அவர்களை முன்னிறுத்தி இவர் கொடுத்த வெற்றி படங்களை போல் இந்நாட்களில் யாராவது தர இயலுமா?

சும்மாவா அழைத்தார்கள் இவரை இயக்குனர் சிகரம் என்று.

இவரின் திறைமையை புரிந்து கொள்ள " பாமா விஜயம்" என்ற படம் ஒன்றே போதும். பக்கத்துக்கு வீட்டில் பாமா என்றொரு நடிகை குடி வர ஒரு சராசரி குடும்பஸ்தர்கள் எப்படி எல்லாம் தம்மை தாமே மாற்றி - அழிவை நோக்கி செல்கின்றார்கள் என்ற கருத்தை நகைச்சுவையோடு எடுத்து சொல்லும் படம். அதுமட்டும் அல்லாமல் இந்த படத்தில் கூட்டு குடும்பத்தின் அருமை அண்ணன் தம்பி உறவு , வரவு செலவு ( வரவு எட்டணா - செலவு பத்தணா பாடலை மறக்க இயலுமா), பிள்ளைகள் தகப்பனிடம் காட்டும் மரியாதை, வீட் டிற்கு வந்த மருமகள்களின் பொறுப்பு... அடே டே, சொல்லி கொண்டே போகலாம்.

ரெண்டு படம் ஹிட் ஆனா உடன் முன்னணி நடிகர்களை வைத்து டைரெக்ட்  செய்ய அவனவன் துடிக்கையில் ... தான் வருட கணக்கில் டைரக்சன் துறையில் கொடி கட்டி பறந்தாலும் MGR - சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் பண்ணவில்லை. நிறைய நடிகர் - நடிகைகளை அறிமுக படுத்தியவர்.  சற்று முன் கோபகாரர் என்று கேள்வி பட்டு உள்ளேன். (உண்மையா என்று தெரியவில்லை).

RIP KB !  We will miss you!

12 கருத்துகள்:

  1. உண்மையிலேயே அவர் ஒரு சாகப்தம் தான்.
    "தான் வருட கணக்கில் டைரக்சன் துறையில் கோடி கட்டி பறந்தாலும் MGR - சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் பண்ணவில்லை"
    அன்னாரது ஆத்மா சாந்தி ஆகட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் ஒரு குழப்பம் இருந்தது.. நன்றி..

      நீக்கு
    2. //எனக்கும் ஒரு குழப்பம்//...?

      நீக்கு
    3. சிவாஜியின் "எதிரொலி" இவர் இயக்கியதா ? தெரியாத விஷயம்! தகவலுக்கு நன்றி!

      நீக்கு
    4. குழப்பம் --> பாலச்சந்தர் அவர்கள் சிவாஜி வைத்து ஏதோ ஒரு படம் இயக்கியதாக நினைவு.. உறுதியாக தெரியாமல் இருந்தது.. அதனால் தான்..

      நீக்கு
  2. எதிரொலி னு த்ரில்லர் சிவாஜியை வைத்து இயக்கியுள்ளார். எம் ஜி ஆரின் தெய்வத்தாய்ப் படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார். இருந்தாலும் அவர்கள் இருவரிடம் இருந்து இவர் ஒதுங்கி, தனக்கென்று ஒரு பாதை அமைத்து அதில் ராஜாவாக இருந்தார் என்றே சொல்லணும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வருண்! இந்த எதிரொலி படம் விஷயம் இன்றுதான் எனக்கு தெரிய வந்தது. அரை குடம் ஆகி விட்டேன்! தகவலுக்கு நன்றி !

      நீக்கு
    2. ஒரு மாதிரியான த்ரில்லர். சிவாஜி ஒரு தப்பு செய்து விடுவார் . ஒரு டாக்ஸி ட்ரைவராக இருக்கும் மேஜர் சுந்தர் ராஜன் சிவாஜியை ப்ளாக் மெயில் பண்ணுவார். கே ஆர் விஜயா ஜோடினு நினைக்கிறேன். வித்தியாசமான படம். :)

      ----------

      அப்புறம் நீங்க ஒரு அரைக்குடம், நான் இன்னொரு அரைக்குடம். ரெண்டு அரைக்குடமும் சேர்ந்து இப்போ "நிறைகுடம்" ஆகிவிட்டோம். :))))

      நீக்கு
    3. இல்லை வருண் ! முழுவதும் அறியாத விஷயத்த தவறாக பதிவு செய்து விட்டோமே என்ற குற்ற உணர்வு உள்ளே இருக்கு. இதுவும் நல்ல பாடம் தான் ! இனி இன்னும் அதிகமாக கவனம் செய்ய வேண்டும் !

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...