Monday, December 1, 2014

அழகிருக்குது உலகிலே..

கடந்த "கேக் வேணுமா, கேக்கவே வேண்டாம்" என்ற பதிவில்  விடுமுறையும் அதுவுமா கேக் வாங்க போனதை பற்றி எழுதி இருந்தேன். அந்த  ATM ல் (என்னாது கேக் வாங்க  ATM  மா என்று நினைப்பவர்கள் அந்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்) என் இளைய மகள் எங்களுக்கு வேண்டிய கேக் பற்றிய விவரத்தை டைப் செய்து கொண்டு இருக்கையில் அருகில் இருந்த "பெண்கள் அழகு நிலையம்" என் கண்ணை கவர்ந்தது.


இந்த நிலையத்தின் பெயர் " Painted Woman Nail Bar"   என்று வெளிய இருக்கும் அறிவிப்பு பலகை சொல்ல, அடே தே... "பெவெர்லி ஹில்ஸ் " பகுதியில் உள்ளதே நன்றாக இருக்கும் என்று ஆர்வ கோளாறில் எட்டி பார்த்தேன்.
உள்ளே அனைத்தும் பிங்க் நிறத்தில். சுவற்றில் இருந்து தரை வரை, எல்லாவற்றையும் பிங்க் நிறத்தில் செய்து வைத்து இருந்தார்கள். அடே டே இங்கே வர வேண்டும் என்றால் வீட்டை எழுதி வைக்க சொல்வார்கள் போல் இருகின்றதே என்று எண்ணி அந்த பண அட்டவனையை பார்த்தேன்.. அரை மணி நேரத்திற்கு 45 டாலர் என்று போட்டு இருந்து.


அதை படித்தவுடன் எதோ ஒரு நினைவில் என் சுண்டுவிரலை  (அன்று காலை சுண்டு விரலுக்கு என்ன ஆனது என்று வேறு ஒரு பதிவு போட்டு இருந்தேன் அல்லவா.. அதை படிக்க இங்கே சொடுக்குங்கள்) பார்த்தேன். அந்த விரலே என்னை நோக்கி, நான் என்ன உன்னை இந்த மாதிரி செலவு செய்து பராமரிக்கவா கேட்கின்றேன். கொஞ்சம் வலியில்லாமல் என்னை பார்த்து கொள்ள கூடாதா என்று பரிதாபமாக என்னை பார்த்தது.

சரி 45 டாலருக்கு இவர்கள் என்ன தான் செய்வார்கள் என்று ஆராய்ந்து பார்த்ததில் கிடைத்த ஒரு சாம்பிள்..

அந்த அட்டகாசமாக அழகு செய்ய பட்டு இருந்த விரல்களை பார்த்து கொண்டு இருந்த நான் அப்படியே..அந்த கடையின் வெளியே திரும்ப அங்கே நிறுத்தி வைக்க பட்டு இருந்த காரை பார்த்து அலறிவிட்டேன்.

ஒரு புத்தம் புதிதானா "ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce)" கார். இதையும் பிங்க் நிறத்தில் வர்ணம் பூசி அந்த கடையின் எதிரிலேயே வைத்து இருந்தார்கள். இந்த வண்டி இங்கே ஏன் என்று விசாரித்ததில், நம் இல்லம் இவர்கள் கடையின் அருகில் இருந்தால் , நாம் இவர்களை தொலை பேசியில் அழைத்தால் அவர்களே இந்த ரோல்ல்ஸ் ராய்ஸ் வண்டியை நம் வீடு வரை எடுத்து வந்த நம்மை அழைத்து செல்வார்களாம். அதற்க்கு வேறு தனி கட்டணமாம்.

அடே.. டே.."ஆண்டவன் படைச்சான் என்கிட்டே கொடுத்தான்" என்ற பாட்டுக்கேர்ப்ப தான் இங்கே "பெவர்லி ஹில்ல்ஸ் (Beverly Hills)" பெண்கள் வாழ்கின்றார்கள்  என்று நினைக்கும் போது தான், இந்த மரமண்டைக்கு ஒரு போதி மரத்து அறிவு பிறந்தது.

அட பாவி.. ஒரு மனைவி .ரெண்டு ராசத்திக்கள்.. இவர்கள் மூவரும் இந்த கடையை பார்த்தால் கதை கந்தல் ஆக விடுமே (மனதில் ஓர் 45  ... 45.. ரெண்டு 45 , தொண்ணூறு ..மூணு 45 .. நூற்று முப்பத்தி ஐந்து என்று ஒரு வாய்ப்பாடு  மின்னொளி போல் வந்து ஒளிந்தது).

உடனே அவர்கள் மூவரும் அந்த கடையை பார்க்க கூடாது என்பதற்காக அவர்களிடம் பேச்சு கொடுத்து கொண்டே வந்து வண்டியில் அமர்ந்து அவர்கள் அதை பார்க்க வில்லை என்று பெருமூச்சி விட்டேன்.

வண்டி எடுத்தவுடன்.. இனி எங்கே கிளம்பினாலும், அங்கே அருகில் வேறு என்ன என்ன கடை இருக்கிறது என்று விசாரித்து விட்டு தான் கிளம்ப வேண்டும் என்று நினைத்து வண்டியை விடுகையில்.. என் மூத்த ராசாத்தி..

டாடி.. அந்த பிங்க் கடை சூப்பர் இல்ல?

எந்த கடை மகள்?

அதுதான் டாடி.. அந்த விரல் அழகு படுத்தும் நிலையம்..

அப்படியா.. அந்த மாதிரி கடையை நான் பார்க்கவே இல்லை...

என்ன டாடி.. வெளியே ஒரு ரோல்ல்ஸ் ராய்ஸ்.. உள்ளே எல்லாம் பிங்க் நிறம்.. பார்க்கவே நன்றாக இருந்தது..

அப்படியா.. (ஆண்டவனே .. நாட்டாமை வண்டிய திருப்புன்னு யாரும் சொல்ல கூடாது)... நான் கவனிக்கவே இல்லை.

அது பாருங்க டாடி.. இங்கே அரை மணிநேரத்திற்கு ஒன்லி 45 டாலர்..

என்னாது.. ஒன்லி யா? (நான் என்ன இந்திய உள்துறை அமைச்சர் ஜெட் லியா)
இன்னும் கொஞ்சம் காசு கொடுத்தால் நம்மை வீடு வரை அழைத்து வந்து விடுவார்களாம்.

அப்படியா மகளே...

ஆமா டாடி..

இது எல்லாம் உனக்கு எப்படி தெரியும்.

டாடி.. இந்த கேக் கடை போகலாம்னு முடிவு செய்தவுடனே அருகில் என்ன என்ன கடை இருக்குன்னு கொஞ்சம் செக் பண்ணேன். நாங்கள் மூணு பேரும் இந்த அழகு நிலையத்திற்கு போகலாம்ன்னு தான் நினைச்சோம், ஆனால், போன் பண்ணி கேட்க்கும் போது இன்னும் ரெண்டு நாளைக்கு டைம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்...

அவங்களுக்கு டைம் இருக்கோ இல்லையோ.. நமக்கு கொஞ்சம் நாள் டைம் தான் என்று வண்டியை விட்டேன்..

பின் குறிப்பு ;

ஏன் டாடி.. அந்த கடையை தாண்டி நடக்கும் போது நீங்க ரொம்ப அவசரமா அவசரமா எங்கள் மூணு பேரையும் மறைத்து மறைத்து பேசி கொண்டே வந்தீர்களே.. நாங்க அந்த கடையை பார்க்க கூடாதுன்னு ஏதாவது மனதிலேயே பிளான்னா?

சே சே.. டாடி அப்படி எல்லாம் செய்வேனா? அந்த கடை அங்கே இருந்ததையே நான் கவனிக்கவில்லை..


அம்மாடி...

13 comments:

 1. "சே சே.. டாடி அப்படி எல்லாம் செய்வேனா?"- செஞ்சிடிங்களே. :)..
  தகவலுக்கு நன்றி..

  ReplyDelete
 2. //சே சே.. டாடி அப்படி எல்லாம் செய்வேனா? அந்த கடை அங்கே இருந்ததையே நான் கவனிக்கவில்லை..//
  இப்படிதான் சொல்லி சமாளிக்க வேண்டும் இல்லை என்றால் மில்லியனராக இருக்க முடியாது அல்லவா

  ReplyDelete
  Replies
  1. ஐயா .. இந்த மில்லினர் என்ற விஷயத்தை எங்கே இருந்து தெரிந்து கொண்டீர்கள் என்று அறியேன். ஆனால் அது ஒரு பொய் தகவல் என்பதை மற்றும் அறிவேன்.

   Delete
  2. உங்கள் பதிவுகளில் வரும் பேய்கதை போன்றதுதான் இதுவும் ஹீஹீ

   Delete
  3. தமிழா, பேய் கதை உண்மை தான், அதை சொல்ல பயமாய் இருக்கின்றது. நீங்கள் சொல்லும் இந்த மில்லினர் கதை பொய் .. இதை கேட்க்க பயமாக இருக்கின்றது.

   Delete
  4. நண்பர் மதுரை தமிழன் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்..
   நானும் மறந்து விட்டேன், நன்றி மதுரை தமிழன் அவர்களே..:)

   Delete
  5. வாங்க நண்பா ! பரவாயில்லை இவர் திருந்தி விட்டார் என்று சந்தோஷ பட்டு முடிக்கவில்லை அதற்குள் "பழைய குருடி கதவை திறடி" என்ற சொல்லுக்கேற்ப ... வந்து விட்டீர்கள்.

   நானும் உம்மை போல் நெற்றி வேர்வை மானிட்டரில் விழ உழைக்கும் வர்க்கம் தான் ஐயா !

   Delete
  6. அதை தான் நாங்களும் சொல்லுகிறோம்..
   உங்கள் ஒரு துளி வியர்வைக்கு ஒரு 1000 டாலர் கிடைக்கிறது.. :)
   எங்களுக்கு நாள் முழுவதும் வியர்வை விட்டாலும் 1 டாலர் இல்லை..
   சரிதானே நண்பர் மதுரை தமிழன், alfy அவர்களே..?

   Delete
  7. ஒரு துளி வியர்வைக்கு ஆயிரம் டாலர் பெற நான் "படையப்பா "இல்லை, சாதாரண "சடையப்பா" தான் ! இதில் நண்பர் அல்பி யை ஏன் அழைக்கின்றீர்? கிணறு வெட்ட பூதம் கதையாகிவிட்டதே...

   Delete
  8. இந்த தன்னடக்கம் தான் உங்களை இந்த உயரத்துக்கு வைத்து இருக்கிறது.. :)
   நண்பர் alfy'யும், உண்மை தமிழனும் தானே உங்களை பற்றிய உண்மையை உறுதி செய்ய முடியும்..

   Delete
 3. ஹஹஹஹ்ஹ்... செம அதுவும் உங்க வாய்ப்பாடு இருக்கே அது ஹஹஹஹஹ.....அப்போ வீட்டுல பெண்கள் இருந்தா கஷ்டமோ....!!!?

  இங்க கூட இந்த நெய்ல் ஆர்ட் ரொம்ப ஃபேமஸ் ஆகியிருக்கு நண்பா! நாங்களும் கொஞ்சம் கேர்ஃபுல்லாத்தான் இருக்கோம்...நீங்க சொல்லிருக்கீங்களே அந்த கடைசி பன்ச் பிங்குறிப்பு...ஹஹஹ்ஹ...ரொம்ம்ம்ம்ம்ம்பவே ரசித்தோம்....

  ReplyDelete

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...