வெள்ளி, 19 டிசம்பர், 2014

நம் நாடு நம் நாடு தான்.. அயல் நாடு அயல் நாடு தான்.

கல்லூரி நாட்களில் விரும்பி பார்த்த மற்றொரு படம் பாரதிராஜா - கமல் - இளையராஜா கூட்டணியில் வந்த "ஒரு கைதியின் டைரி". இந்த படத்தின் கதை - திரைகதை பாக்யராஜ் என்று போட்டு இருந்தாலும், இந்த படத்தின் திரை கதைமட்டுமே பாக்யராஜ் ஆவார். இப்படத்தின் கதை  Alexandre Dumas     அவர்கள் எழுதிய  The Count of Monte Christo (  இது முதலில் நாவலாக வந்து பிறகு அதே பெயரில் திரை படம் ஆகியது ) கதையின் தமிழாக்கம்.
சரி, நான் சொல்ல வந்த விஷயமே வேறு. அதற்க்கு போகலாமா?



இந்த படத்தில் மறைந்த பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் ஒரு அரசியல்வாதியாக - வில்லனாக (அரசியல்வாதி என்றைக்கு இந்தியா சினிமாவில் கதாநாயகனாக வந்தான்) வருவார். இதற்க்கு முன் சில படங்களிலேயே நடித்து இருந்தாலும், இதில் அவரின் நடிப்பு மிகவும் சீராக இருக்கும்.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மலேசியா வாசுதேவன் ஒரு சிலை திறப்பு விழாவில் பேச வருவார். இவரின் இந்த பேச்சு , நம்  நாட்டின்  ஒவ்வொரு அரசியல்வாதியின்  பொது அறிவையும், நரித்தனத்தையும் காட்டும். அது மட்டும் அல்லாமல் இவர் பேசும் இந்த அறிவுகெட்ட அர்த்தமற்ற பேச்சிற்கு மக்க்களின் கைதட்டல் நம் இந்திய மக்களின் அறியாமையை காட்டும்.

அந்த பேச்சு...

"நம் நாடு நம் நாடு தான்.. அயல் நாடு அயல் நாடு தான்'
இங்கே அரிசி அங்கே கோதுமை, இங்கே வேட்டி அங்கே பேன்ட்
இங்க சிலை .. அங்கே அது இல்லை!

நான் ஓர் நாட்டிற்க்கு சென்று இருந்தேன், அங்கே ஒரு அணை கட்டிக்கொண்டு இருந்தார்கள், அணை என்றால்  Dam, Dam  என்றால் அணை. நான் அவர்களிடம் சொன்னேன், நீங்கள் இங்கே ஓர் சிலை வைக்கலாமே என்று.. அவர்களும் செய்கிறார்கள் சிலை,... விஞ்ஞானத்தில்  அவர்கள் எவ்வளவு முன்னேறி இருந்தாலும் அவர்கள் நம்மை போல் சிலை செய்வது இல்லை என்று தான் சொல்லுவேன்...

இந்த அர்த்தமற்ற பேச்சு ... மேலும் சில வினாடிகளுக்கு போகும்..

அதை நீங்களே இங்கே பாருங்கள்.



அந்த பேச்சை கேட்க நேராக 6 :00 செல்லவும்  
இரும்பு தலைவன் எங்கள் தலைவன் என்று கு(தொ)ண்டர்கள் கூச்சலிட மலேசியா மடியில் ஏறி பேசுவார். இந்த பேச்சை பார்க்க  இந்த கானொளியில் நேராக 6:00 (நேரம்) போகவும்.

இந்த காட்சியை நான் அடிக்கடி போட்டு பார்த்ததுண்டு. அதுமட்டும் இல்லாமல் எனக்கு வரும் மேடை பேச்சு சந்தர்ப்பங்களில் பேசி காட்டுவதும் உண்டு .(இது பாக்கியராஜ் எழுதிய வசனம் என்று கண்டிப்பாக சொல்லி தான் பேசி காட்டுவேன்).

சரி, இதை பற்றி இப்போது ஏன் எழுதுகின்றேன்? ஒன்றும் இல்லை, நேற்று இந்த காட்சியை மீண்டும் பார்த்து கொண்டு இருக்கையில், அடே டே, அன்று மட்டும் அல்ல இன்றும் இந்த மாதிரி அரசியல் வாதிகள் உள்ளார்களே என்று அதிர்ந்தே  (பேய் அறைந்ததை போல்.....) போனேன்.

நீங்களும் ஒரு முறை கேட்டு பாருங்களேன், நான் சொல்வது புரியும்.

பின் குறிப்பு:
மலேசியா அவர்கள் "அணை -  Dam "  என்று சொல்லும் இடத்தில் "சுரங்கம் -  Mine "  என்று போட்டு கொள்ளுங்கள். இன்னும் பொருத்தமாய் இருக்கும்.

www.visuawesome.com

6 கருத்துகள்:

  1. அடே டே, அன்று மட்டும் அல்ல இன்றும் இந்த மாதிரி அரசியல் வாதிகள் உள்ளார்களே என்று அதிர்ந்தே (பேய் அறைந்ததை போல்.....) போனேன்.

    நீங்களும் ஒரு முறை கேட்டு பாருங்களேன், நான் சொல்வது புரியும்.//

    நண்பரே! நாங்களும் பேய் அறைந்தது போல் ஆகவா?!!!!! ஹஹஹஹ்

    பதிலளிநீக்கு
  2. நம் அரசியல்வாதிகள் என்றுமே மாறமாட்டார்கள் பாஸ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கசப்பான உண்மை தான் மணிமாறன். முதல் முறையா தம்மை இங்கே என் தளத்தில் சந்திகின்றேன். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. அன்னைக்கு ஒரு பேச்சு, இன்னைக்கு ஒருபேச்சு என்ற பித்தலாட்டம் நம்ம அரசியல் வியாதிகளிடம் இல்லையாக்கும், கேட்டோ:-)

    பதிலளிநீக்கு
  4. அந்த வசனம் அறிஞர் அண்ணாதுரை அவர்களை கிண்டல் செய்து எழுதியது போல் இருக்கும்

    பதிலளிநீக்கு
  5. என்றுமே பேச்சு மாறதவர்களோ...? ஹிஹி...

    சுயநலம்...!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...