சென்ற வாரம் தாய்க்கு பின் தாரம் என்ற ஒரு பதிவிட்டு இருந்தேன், அதன் தொடர்ச்சி தான் இது. அந்த பதிவை படித்து விட்டு இதை படிக்குமாறு கேட்டு கொள்கிறேன். அதை படிக்க இங்கே சொடுக்கவும்...தாய்க்கு பின் தாரம்
என்னங்க .... சின்னவ குரல் கொஞ்சம் வித்யாசமா இருக்கே, நீங்க கவனித்தீர்களா?
இல்லையே, அப்படி ஒன்னும் தெரியவில்லையே...
உங்க காதுல... ஈயத்த ....
காலையில் ஈர துணிய தான் நானே காய வச்சிட்டேன்...
ரொம்ப சந்தோசம்ங்க ...சரி, சின்னவளிடம் கொஞ்சம் பேச்சி கொடுத்து குரலில் உங்களுக்கு ஏதாவது வித்தியாசம் தெரியுதா பாருங்க!
ஐந்து நிமிடம் கழித்து....
எனக்கு ஒன்னும் வித்தியாசம் தெரியவில்லை..
இல்லைங்க ...ரெண்டு நாள் முன்னாலே கொஞ்சம் பனியில் நனைந்தாள், தானே .. அதனாலே அவளுக்கு சளி புடிக்க போதுன்னு நினைக்கின்றேன்.
இப்ப பிடிச்சி இருக்கா?
இல்லை, இது தான் ஆரம்பம்.
நீங்க ஒரு வேலை பண்ணுங்க...
சொல்லு..
நம்ம தண்டபாணி வீட்டிற்கு போய், சுந்தரியிடம் சொல்லி கொஞ்சம் துளசி இலை வாங்கின்னு வாங்க.
என்னா, இதுக்கு போய் இவ்வளவு தூரம் போகனுமா? இந்த இருமல் மருந்து டானிக் ஏதாவது கொடேன்.
எங்க, இந்த மருந்து எல்லாம் சைடு எபெக்ட் நிறைய தொந்தரவு. ஒன்னு கெடக்க ஒன்னு ஆகிடும். இதுக்கு நம்ம நாடு வைத்தியம் தான் சரி.
என்னங்க பேசறிங்க? அவளுக்கு சளி பிடிக்க போகுதுன்னு சொல்றேன், இவ்வளவு அலட்சியமாய் இருக்குரிங்க?
சரி, சாரி.. இதோ போறேன்.
ஐந்து நிமிடம் கழித்து, சுந்தரி வீட்டில் ...
ஹலோ சுந்தரி.. எப்படி இருக்கீங்க?
நல்ல இருக்கோம் அண்ணா. என்ன அண்ணா? சின்னவளுக்கு உடம்புக்கு ஆகலையாமே?
அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை சுந்தரி? இன்னும் ரெண்டு நாளில் சளி பிடிக்கும் போல் இருக்கு. நம்ம வீட்டில் தான் " வரும் முன் காப்போம் " பாலிசி ஆச்சே.. அதுதான்.
என்ன அண்ணா? இவ்வளவு சாதாரணமா சொல்லிட்டீங்க? இந்தாங்க .. துளசி இலை, அக்கா இப்ப தான் போன் பண்ணி கொடுக்க சொன்னாங்க.
நன்றி சுந்தரி, எங்க தண்டம்?
அவரா? இப்ப தான் சாரதி வீட்டிற்கு போய் இருக்கார்!
என்ன விஷயம்? என்னை விட்டு விட்டு ஏதாவது பார்ட்டி ரெடி ஆகுதா?
நீங்க ஒன்னு அண்ணா.. இங்கே எங்க மூத்த பிள்ளைக்கும் கொஞ்சம் சளி பிடிக்கும் போல் இருக்கு. அது தான் சாரதி வீட்டில் இருந்து கொஞ்சம் கற்பூர வள்ளி வாங்கி வர சொல்லி அனுப்பி இருக்கேன்.
ஏன் சுந்தரி... எங்க வீட்டு பிள்ளைக்கு சளின்னு சொல்லி உன்னிடம் துளசி வாங்க வந்தா .. நீ உங்க வீட்டு பிள்ளைக்கு சளின்னு சொல்லி கற்பூர வள்ளி வாங்க அனுப்பி இருக்கியே... ? இந்த துளசி - கற்பூரவள்ளியில் எது தான் இதற்கு நல்ல மருந்து?
ரெண்டுமே சரிதான் அண்ணா.. இருந்தாலும்... இவளுக்கு துளசியோட கற்பூரவள்ளி தான் வேலைசெய்யும்.
சரி வரேன் சுந்தரி தேங்க்ஸ்...
வழியில், அலை பேசியில்...
தண்டம்...
சொல்லு வாத்தியாரே..
கற்பூர வள்ளி கிடைத்ததா?
நான் அதை எடுக்க வந்தது உனக்கு எப்படி தெரியும் வாத்தியாரே?
டேய், வீட்டிற்கு வீடு வாசப்படி. என் ரெண்டாவது ராசாத்திக்கு சளி வரபோதுன்னு நான் இப்ப தான் உங்க வீட்டில் சுந்தரியிடம் துளசி இலை வாங்க வந்தேன்.
அதை பார் வாத்தியாரே.. உன் ராசாத்தி சளிக்கு துளசி போதுமாம், எங்க வீட்டு ராசாத்திக்கு கற்பூர வள்ளி தான் வேணுமாம். இது எல்லாம் சும்மா வாத்தியாரே, நம்ப ரெண்டு பெரும் வீட்டில் ஒரு அஞ்சு நிமிஷம் கம்ப்யூட்டர் எதிரில் உட்கார கூடாது, எதையாவது சொல்லி வெளியே அனுப்பிடுவாங்க.
சரி தண்டம், அங்கே பக்கத்தில் அந்த இந்தியன் கடையில் வெயிட் பண்றேன், ஒரு நிமிஷம் வந்து எனக்கும் கொஞ்சம் கற்பூர வள்ளி இலை கொடுத்து விட்டு போ.
ஏன் வாத்தியாரே,
டேய் இவ்வளவு நேரத்தில் சுந்தரி நீ சாரதி வீட்டுக்கு போன கதையை சொல்லி இருப்பாங்க. இப்ப நான் வீட் டிற்கு போனவுடனே நேரா சாரதி வீட்டிற்கு போய் கற்பூர வள்ளி வாங்கி வான்னு ஆர்டர் வரும் .
அதும் சரிதான். உன்னிடம் ஒரு கேள்வி கேட்க்க வேண்டும் வாத்தியாரே,
சொல்லு..
போன வாரம் எனக்கு ஒரே இருமல் வாத்தியாரே.. சில நேரத்தில் நான் விட்ட இருமலில் நுரையீரல் வெளியே வந்து விழுந்த மாதிரி சத்தம். அப்ப ஏதாவது மருந்து இருக்கானு சுந்தரியிடம் கேட்டேன். அதுக்கு, இது எல்லாம் ஒரு விஷயமா? சுடு தண்ணி கொஞ்சம் குடிச்சிட்டு அந்த இருமல் டானிக் கொஞ்சம் குடிச்சிட்டு நேரா தூங்க போன்னு, சொல்லிட்டா. இப்ப பிள்ளைக்கு வர போற சளிக்கு இவ்வளவு பண்றாளே, இதுக்கு என்ன அர்த்தம்?
அதுதான் தண்டம்... " தாய்க்கு பின் தாரம்"
சரியா சொன்ன வாத்தியாரே..
பிறகு...என் இல்லத்தில்..
இந்தா மா, துளசி இலை..
எங்க... இன்னொரு சின்ன வேலை.. கொஞ்சம் சாரதி வீடு வரை போய் கற்பூர வள்ளி இலை வாங்கின்னு வாங்க!
நீ எப்படியும் கேட்பன்னு சொல்லி நான் அதை ஏற்கனவே வாங்கி வந்துட்டேன்.
கல்யாணம் ஆனதில் இருந்து நீங்க ரொம்ப சமத்து ஆய்டிங்க
.
ரொம்ப தேங்க்ஸ்.
சரி அந்த இந்தியன் கடைக்கு போய் கொஞ்சம் இஞ்சி சுக்கா, கருப்பெட்டி, ஒரு கிலோ கொள்ளு வாங்கின்னு வாங்க.. கிளம்புங்க...
சில மணி நேரங்கள் கழித்து..
அம்மாடி ... கொஞ்சம் நேரமா தொண்டை லேசா கரகரன்னு இருக்கு, கொஞ்சம் வலி வேற, இருமல் சளி வரும் போல இருக்கு, ஏதாவது கிடைக்குமா?
"இது எல்லாம் ஒரு விஷயமா? சுடு தண்ணி கொஞ்சம் குடிச்சிட்டு அந்த "இருமல் டானிக்" கொஞ்சம் குடிச்சிட்டு நேரா தூங்க போங்க!
WWW.VISUAWESOME.COM
அருமை..அருமை நண்பரே.. நாம என்ன தான் intelligent யோசிச்சு ஒரு வேல பண்ணலாம்..அதுக்கு ஒரு additional வேல இருக்கும்..
பதிலளிநீக்குதாய்க்கு பின் தான் தாரமே.. :)
// நம்ம நாடு வைத்தியம் தான் சரி.//
பதிலளிநீக்குஎந்த நாடு ...........?
அவங்க ஊர் ஈழம் தானே... அதை தான் சொல்றாங்க !
நீக்குதொடர .......
பதிலளிநீக்குஹாஹாஹா! அருமை! அவங்க யோசனையே வேறதான்!
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குதம 2
பதிலளிநீக்குநேற்று படித்தேன் கருத்திட்டதாக நினைவு .
பதிலளிநீக்குநகைச்சுவையாக எழுதுவது அரிதான விஷயம். அது உங்களுக்கு நன்றாக வருகிறது. வாழ்த்துக்கள் .
பதிவின் கடைசி பத்திக்குப் பின் உள்ள இடைவெளியை நீக்கி விடவும்
வருகைக்கு நன்றி முரளி அவர்களே. நீங்கள் கூறிய அந்த திருத்தத்தை செய்து விட்டேன். சுட்டி காட்டியதற்கு நன்றி.
நீக்குஹா... ஹா... அருமை...
பதிலளிநீக்குஎழுத்துக்கள் ஏன் சிறியதாக ஆகி விட்டது...?
பதிலளிநீக்குஹாஹஹாஹ்ஹ செம நண்பரே! பாவம் ங்க நீங்க தண்டம் சாரதி எல்லாம்.....செம ரைடுன்னு சொல்லுங்க.....அதுவும் கடைசில உங்களுக்கு வரப்போற சளிக்கு மருந்து கிடைச்சுது பாருங்க.....ஹஹஹஹ் தாய்க்குப் பின் தாரம் சூப்பர்!
பதிலளிநீக்கு