மீள் பதிவு தான்.. ஜூலை 4 ... சுதந்திர நாள்.. இவர்களை மறக்க கூடாதே..அதனால் மீண்டும் ஒரு முறை..
அது என்னமோ தெரியல.. கணக்கு பிள்ளை ஆனா நாள் முதல் இன்று வரை கிட்ட தட்ட 30 வருஷம், டிசம்பர் 31ம் தேதி ஊருல இருக்குற எல்லாரும் குடும்ப சகிதமா வீட்டில் என்சாய் பண்ணி கொண்டு இருக்கும் போது நான் மட்டும் அலுவலக வேலையா தனியா இருப்பேன்.
வருட கடைசியாச்சே.. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தலை கடைசியா ஒரு முறை பார்த்து கொண்டு இருக்கும் போது...
மதிய 12 மணி போல்..
டாடி ...
சொல்லுமா.
எங்க ஆளே காணோம்..
எங்கயா? ஒரு நாளுக்கு மூணு முறை நாலு பேரும் சாப்பாட்டு மேசையில் உட்காரனும் இல்ல.
அதுக்கு என்ன இப்ப?
நிதானமா கேளு... உட்காரனும் இல்ல..
ஆமா.
உட்கார்ந்துட்டு ஒருத்தர் மூஞ்ச ஒருத்தர் பாத்துனே இருந்தா பசி போகுமா ?
போகாது.. அதுக்கு என்ன இப்ப?
அதனால் தான் பணம் சம்பாரிக்க வேலைக்கு வந்து இருக்கேன்.. உனக்கு என்ன வேணும்?
இன்னைக்கு டிசம்பர் 31, உலகம் முழுக்க வீட்டில் இருக்கும் போது உங்களுக்கு மட்டும் என்னவாம்?
அது கணக்கு பிள்ளைகளுக்கு கிடைத்த சாபம், மகள்.. 5:30 மணிக்கு வரேன்..
ஓகே டாடி.
என்று அலைபேசியை அவள் அணைக்க அறையின் கண்ணாடி கதவை யாரோ தட்ட திரும்பி பார்த்தால் என்னோடு பணிபுரியும் IT டைரக்டர்.
என்ன விஷ் . வருட கடைசியும் அதுவுமா ? வீட்டுக்கு போல?
இல்ல டாம். கொஞ்சம் வேலை இருக்கு. வாட் அபௌட் யு ?
எனக்கும் ...ஓகே, வாட் ஆர் யு டூயிங் பார் லஞ்ச் ..
இங்கே தான் வெளியில் ஏதாவது...
யு வான்ட் டு ஜாயின் மீ..
வை நாட்?
என்று சொல்லி இருவரும் அருகில் இருந்த மெக்சிக்கன் கடைக்கு சென்றோம்.
டாம் இந்த தேசத்தை சேர்ந்த வெள்ளைகாரன், அடியேன், ஜல்லிகட்டுக்கு போராடும் தமிழன், இருவரும் சேர்ந்து மெக்சிக்கன் இடம்.. "என்னமோ போ மாதவா" என்று இருவரும் கிளம்பினோம். மெக்சிக்கன் உணவு பொதுவாக நம் உணவை போல் தான் இருக்கும் .
நீ இதுக்கு முன்னால இங்கே வந்து இருக்கியா டாம்?
ஒ எஸ்.. ஏன்.
அப்படினா எனக்கும் நீடே ஆர்டர் பண்ணு ...
ஓகே..என்று ஸ்பானிஷ் மொழியில் எதோ சொல்ல .. அந்த பெண்மணி சிரித்து கொண்டே சமையலறை நோக்கி சென்றாள்
என்ன ஆர்டர் பண்ண டாம்?
அதை எல்லாம் விளக்கி சொல்ல முடியாது, ஒரு அஞ்சு நிமிஷம் இரு, வரும்..
என்று சொல்ல, நான் என் அலைபேசியை எடுக்க முயல.. அவரோ..
விஷ்.. இப்ப எதுக்கு போன்அதை உள்ள வை.. ஏதாவது பேசு.. சுத்தி முத்தி பார்.
ஒ.. ஐ அம் சாரி ..
என்று சொல்லி கொண்டே உள்ளே அமர்ந்து இருந்த அடுத்த சிலர் என்ன ஆர்டர் பண்ணி சாப்பிட்டு கொண்டு இருகின்றார்கள் என்று பார்க்க ஆரம்பித்தேன்.
அப்போது அந்த பெண் எங்கள் இருவருக்கும் ஆளுக்கொரு டம்ப்ளரில் வெள்ளையாக ஒரு திரவத்தை வைத்தார்கள்.
"சீயர்ஸ்" என்று சிரித்து கொண்டே டாம் குடிக்க.. நானோ..
எனக்கு இந்த சோமபானம் வகையறாக்கள் ஆகாது ..
என்று சொல்ல..
விஷ்.. திஸ் இஸ் நாட் அல்கஹால், ஐ வாஸ் ஜஸ்ட் டீசிங் யு .. திஸ் ஓன் இஸ் மேட் அவுட் ஆப் ரைஸ்.
என்று சொல்ல அதை குடித்த எனக்கோ ரொம்ப ஆச்சரியம்.இது அப்படியே நம்ம ஊர் அரிசி பாயாசம். கொஞ்சம் தண்ணியா.. அதே சுவை..
அதை குடித்து கொண்டு இருக்கும் போது மற்றொரு பெண்மணி அங்கே வந்து ஒரு சிறிய கோப்பையில் எதையோ வைக்க..
டாம் இது என்ன?
சாப்பிட்டு பார்..
என் ஆச்சரியத்திற்கு அளவே இல்லை.
இந்த கோப்பையில் கொஞ்சம் சோறு போட்டு அதில் பருப்பு ரசம் போட்டு கொடுத்து இருந்தார்கள். அதே சுவை , மணம். அடே டே, நல்ல நாளும் அதுவுமா டாம் நல்ல இடம் தான் கூட்டி கொண்டு வந்து இருகின்றார் என்று யோசித்து கொண்டே பார்வையே சுழற்றினேன்.
நிறைய பேர் குடும்பம் குடும்பமாய் வந்து இருந்தார்கள். விதவிதமான மக்கள். அத்தனை பேர் இருந்தாலும் அருகில் இருந்த ஒரு மேசை என்னை கவர்ந்தது. நான்கு வாலிபர்கள், கட்டுமஸ்தான உடல் அமைப்பு, மற்றும் கிட்டதட்ட மொட்டை அடித்தார் போல் "முடிவெட்டு"
அவர்களை பார்த்தவுடன், டாம்...
ஹாய் .. நீங்கள் மிலிடரி ஆட்களா ?
எஸ் சார்..
என்று நால்வரும் ஒன்றாக சொல்ல, அங்கே இருந்த அனைவரின் பார்வையும் எங்கள் பக்கம் திரும்பியது, டாம் அவர்கள் யாரையும் கண்டு கொள்ளாமல், அந்த நால்வரிடம் ..
தேந்க் யு சோ சோ மச் பார் யுவர் சர்வீஸ்.
ஒ, யு ஆர் வெல்கம்.
உங்களின் தியாகத்தினால் தான் நாங்கள் இங்கே சுகமாக வாழ்ந்து கொண்டு இருகின்றோம். தேங்க்ஸ் அகைன்.
ஒ.. இட் இஸ் அவர் டூட்டி. வி ஆர் ஹானார்ட்!
என்று பேசி கொண்டு இருக்கையில் எங்கள் உணவு வந்தது.
நிற்பன, நடப்பன, பரப்பான, நீந்துவன என்று அனைத்தையும் ஒரு பட்டியல் போட்டு சட்டியில் சுட சுட எங்கள் முன்னால் வைத்தார்கள்.
பார்த்தவுடன்.. சிறிய வயதில் முனியாண்டிவிலாசில் கையில் பணம் இல்லாத நேரத்தில் முகத்திற்கு அருகே ஒரு "டிரே" முழுக்க வித விதமான ஐட்டம் வைத்து .. இது வேண்டுமா அது வேண்டுமா என்று கேட்பார்களே அந்த நினைவு தான் வந்தது.
வைத்த அந்த பெண் அங்கு இருந்து நகரும் முன் , டாம் .. அவளிடம்..
அந்த நால்வரின் பில்லையும் என்னிடம் தாருங்கள் ...
கண்டிப்பாக, ஆனால் அவர்களிடம் சொல்லி அவர்களின் சம்மந்தம் பெற்றவுடன் தான் அதை உங்களிடம் தர முடியும்
என்று கூறி அவர்களிடம் சென்று அந்த விஷத்தை கூறினாள். அதை கேட்டவுடன் அந்த நால்வரில் ஒருவன் எழுந்து எங்கள் மேசைக்கு வந்து, சிரித்து கொண்டே,
தேந்க் யு சோ மச், யு டோன்ட் ஹவ் டு டூ இட், பட் திஸ் டைம் வி ஆர் கோயிங் டு டிக்லைன், யுவர் ஆபர்,
ஏன்..
உங்களுக்கு முன்னால் வந்த இன்னொரு குடும்பம், அதோ அங்கே இருக்காங்க பாருங்க .. அவங்க எங்க பில்லை கட்டிவிட்டார்கள்.
என்று மீண்டும் ஒரு முறை நன்றி கூறி விடை பெற, எனக்கோ மனதில் உளைச்சல்.
என்ன ஒரு கலாச்சாரம் ஐயா இது. நல்ல நாளும் அதுவுமா, குடும்பத்தோடு , நண்பனோடு வெளியே போய் சாப்பிடற வேளையில், நாட்டை காக்கும் வீரர்களுக்காக மனதார நன்றியும் பாசமும் காட்டுகின்றார்களே.. இந்த பழக்கம் எனக்கு ஏன் வரவில்லை என்று நினைக்கையில்.
பல வருடங்களுக்கு முன் நடந்த பல நிகழ்சிகள் மனதில் வந்தது.
எத்தனை முறை ரயில் பிரயாணங்களில் அருகில் ஒரு ஒரு இரும்பு பெட்டியில் தன் பெயரை பொரித்து கொண்டு "கட்டியவளையும் ராசாத்திகளையும்" மீண்டும் எப்போது சந்திபோம் என்று தெரியாமல் சோகமாக சென்று கொண்டு இருந்த ராணுவ வீரர்கள் தான் எத்தனை பேர்.. அவர்களிடம் ஆறுதலாக ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்து விட்டேனே ..
அதே வீரர்கள் .. மூன்று நான்கு வருடம் கழித்து இல்லத்திற்கு திரும்புகையில், குருவி சேர்த்தார் போல் சேர்த்து வைத்த பணத்தை செலவு செய்ய மனம் இல்லாமல் சாப்பிடாமல் பயணிப்பார்களே, அவர்களுடன் ஒரு உணவை பகிர்ந்து கொள்ளாமல் விட்டு விட்டேனே.
இரவு நேர பிரயாணத்தில் எனக்கு படுக்கை இருக்க, தூக்கம் வரமால் கழிவறை பக்கம் செல்லுகையில், அங்கே கதவின் அருகில், தன் இரும்பு பெட்டியின் மேல் அமர்ந்து கொண்டு கன்னத்தில் கை வைத்து கொண்டு தூங்கிய வீர்கள் எத்தனை பேரை பார்த்து இருப்பேன். அடுத்த நாள் எனக்கு என்ன? அவர்களுக்கு தானே தலை போகும் வேலை.. அவர்களை அழைத்து என் இருக்கை - படுக்கையை கொடுக்காமல் விட்டு விட்டேனே.
காஷ்மீரில் இருந்து மூன்று நாட்களுக்கு முன் புறப்பட்டு பல ரயில் மற்றும் பேருந்தை பிடித்து விட்டு கடைசியாக தான் கிராமத்திற்கு செல்ல வேண்டிய கடைசி பேருந்தை விட்டு விட்டு, காலை வரை அங்கே காத்து இருந்த ராணுவ வீர்கள் தான் எத்தனை பேர்.. அவர்களில் ஒருவரை என் ஊர்தியில் அழைத்து சென்று அவன் இல்லத்தில் விட்டு இருந்தால் அவன் தன் குடும்பத்தோடு ஒரு கூடுதல் நாளை கழித்து இருப்பானே.
இது எல்லாம் கூட சரி. எதிரில் வந்த எந்த ஒரு வீரனுக்கும் வாயை திறந்து மனதார ஒரு நன்றி கூட சொல்லாமல் வாழ்ந்து இருந்து இருகின்றேனே ..
இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் அது வாய்ப்பு என்றே அறியாமல் வாழ்ந்து இருந்து இருகின்றேனே ..
எங்கே தவறினேன். நாட்டை காக்கும் நம் சொந்தங்களை அவர்கள் வாழ்வதே தெரியாமல் வாழ்ந்து விட்டேனே! எங்கே தவறினேன்!
என்று நினைத்து கொண்டு இருக்கையில்.. அருகில் இருந்த டாம்..
என்ன , விஷ். இந்தியன் நீங்க நிறைய காரம் சாப்பிடுவிங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன். இதுக்கே கண்ணுல தண்ணி.
சாரி டாம்.. ஆமா.. மிளகாயை கடிச்சிட்டேன் .. என்று ஒரு பொய் சொல்லி சமாளித்தேன் .
பின் குறிப்பு :
பரிமாறிய அந்த பெண்மணியிடம். உணவு ரொம்ப பிரமாதம். அடுத்த வாரம் எங்க வீட்டு அம்மணியும் கண்மணிகளையும் கூட்டி கொண்டு வரலாம்னு இருக்கேன்.
ஒ.. தேங்க்ஸ்.. ப்ளீஸ் பிரிங் தெம்.
ஆனால் எனக்கு ஒரு உதவி செய்யணும் ..
என்ன? காரம் குறைவா போடணும?
அடே டே காரம் எல்லாம் ஓகே.. ஆனா.. நீங்க சாப்பாட பரிமாறும் போது முதலில் அந்த சட்டி, பிறகு அந்த கோப்பை, கடைசியா அந்த டம்பளர் திராவகம் பரிமாறனும்.
ஏன்.. அப்படியே தலைகீழ சொல்றீங்க..
என்னத்த சொல்வேன்.. சின்ன வயதில் இருந்தே கறி
சோறு, ரசம் சோறு , பாயசம்ன்னு பழகிட்டேன். இப்ப அதையே ரிவர்ஸில் சாப்பிட கஷ்டமா இருக்கு.

நம்ம ஊர் அரிசி பாயாசம்
அதை குடித்து கொண்டு இருக்கும் போது மற்றொரு பெண்மணி அங்கே வந்து ஒரு சிறிய கோப்பையில் எதையோ வைக்க..
சோறு - பருப்பு ரசம்
டாம் இது என்ன?
சாப்பிட்டு பார்..
என் ஆச்சரியத்திற்கு அளவே இல்லை.
இந்த கோப்பையில் கொஞ்சம் சோறு போட்டு அதில் பருப்பு ரசம் போட்டு கொடுத்து இருந்தார்கள். அதே சுவை , மணம். அடே டே, நல்ல நாளும் அதுவுமா டாம் நல்ல இடம் தான் கூட்டி கொண்டு வந்து இருகின்றார் என்று யோசித்து கொண்டே பார்வையே சுழற்றினேன்.
நிறைய பேர் குடும்பம் குடும்பமாய் வந்து இருந்தார்கள். விதவிதமான மக்கள். அத்தனை பேர் இருந்தாலும் அருகில் இருந்த ஒரு மேசை என்னை கவர்ந்தது. நான்கு வாலிபர்கள், கட்டுமஸ்தான உடல் அமைப்பு, மற்றும் கிட்டதட்ட மொட்டை அடித்தார் போல் "முடிவெட்டு"
அவர்களை பார்த்தவுடன், டாம்...
ஹாய் .. நீங்கள் மிலிடரி ஆட்களா ?
எஸ் சார்..
என்று நால்வரும் ஒன்றாக சொல்ல, அங்கே இருந்த அனைவரின் பார்வையும் எங்கள் பக்கம் திரும்பியது, டாம் அவர்கள் யாரையும் கண்டு கொள்ளாமல், அந்த நால்வரிடம் ..
தேந்க் யு சோ சோ மச் பார் யுவர் சர்வீஸ்.
ஒ, யு ஆர் வெல்கம்.
உங்களின் தியாகத்தினால் தான் நாங்கள் இங்கே சுகமாக வாழ்ந்து கொண்டு இருகின்றோம். தேங்க்ஸ் அகைன்.
ஒ.. இட் இஸ் அவர் டூட்டி. வி ஆர் ஹானார்ட்!
என்று பேசி கொண்டு இருக்கையில் எங்கள் உணவு வந்தது.
நிற்பன, நடப்பன, பரப்பான, நீந்துவன என்று அனைத்தையும் ஒரு பட்டியல் போட்டு சட்டியில் சுட சுட எங்கள் முன்னால் வைத்தார்கள்.
நிற்பன, நடப்பன, பரப்பான, நீந்துவன
பார்த்தவுடன்.. சிறிய வயதில் முனியாண்டிவிலாசில் கையில் பணம் இல்லாத நேரத்தில் முகத்திற்கு அருகே ஒரு "டிரே" முழுக்க வித விதமான ஐட்டம் வைத்து .. இது வேண்டுமா அது வேண்டுமா என்று கேட்பார்களே அந்த நினைவு தான் வந்தது.
வைத்த அந்த பெண் அங்கு இருந்து நகரும் முன் , டாம் .. அவளிடம்..
அந்த நால்வரின் பில்லையும் என்னிடம் தாருங்கள் ...
கண்டிப்பாக, ஆனால் அவர்களிடம் சொல்லி அவர்களின் சம்மந்தம் பெற்றவுடன் தான் அதை உங்களிடம் தர முடியும்
என்று கூறி அவர்களிடம் சென்று அந்த விஷத்தை கூறினாள். அதை கேட்டவுடன் அந்த நால்வரில் ஒருவன் எழுந்து எங்கள் மேசைக்கு வந்து, சிரித்து கொண்டே,
தேந்க் யு சோ மச், யு டோன்ட் ஹவ் டு டூ இட், பட் திஸ் டைம் வி ஆர் கோயிங் டு டிக்லைன், யுவர் ஆபர்,
ஏன்..
உங்களுக்கு முன்னால் வந்த இன்னொரு குடும்பம், அதோ அங்கே இருக்காங்க பாருங்க .. அவங்க எங்க பில்லை கட்டிவிட்டார்கள்.
என்று மீண்டும் ஒரு முறை நன்றி கூறி விடை பெற, எனக்கோ மனதில் உளைச்சல்.
என்ன ஒரு கலாச்சாரம் ஐயா இது. நல்ல நாளும் அதுவுமா, குடும்பத்தோடு , நண்பனோடு வெளியே போய் சாப்பிடற வேளையில், நாட்டை காக்கும் வீரர்களுக்காக மனதார நன்றியும் பாசமும் காட்டுகின்றார்களே.. இந்த பழக்கம் எனக்கு ஏன் வரவில்லை என்று நினைக்கையில்.
பல வருடங்களுக்கு முன் நடந்த பல நிகழ்சிகள் மனதில் வந்தது.
எத்தனை முறை ரயில் பிரயாணங்களில் அருகில் ஒரு ஒரு இரும்பு பெட்டியில் தன் பெயரை பொரித்து கொண்டு "கட்டியவளையும் ராசாத்திகளையும்" மீண்டும் எப்போது சந்திபோம் என்று தெரியாமல் சோகமாக சென்று கொண்டு இருந்த ராணுவ வீரர்கள் தான் எத்தனை பேர்.. அவர்களிடம் ஆறுதலாக ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்து விட்டேனே ..
அதே வீரர்கள் .. மூன்று நான்கு வருடம் கழித்து இல்லத்திற்கு திரும்புகையில், குருவி சேர்த்தார் போல் சேர்த்து வைத்த பணத்தை செலவு செய்ய மனம் இல்லாமல் சாப்பிடாமல் பயணிப்பார்களே, அவர்களுடன் ஒரு உணவை பகிர்ந்து கொள்ளாமல் விட்டு விட்டேனே.
இரவு நேர பிரயாணத்தில் எனக்கு படுக்கை இருக்க, தூக்கம் வரமால் கழிவறை பக்கம் செல்லுகையில், அங்கே கதவின் அருகில், தன் இரும்பு பெட்டியின் மேல் அமர்ந்து கொண்டு கன்னத்தில் கை வைத்து கொண்டு தூங்கிய வீர்கள் எத்தனை பேரை பார்த்து இருப்பேன். அடுத்த நாள் எனக்கு என்ன? அவர்களுக்கு தானே தலை போகும் வேலை.. அவர்களை அழைத்து என் இருக்கை - படுக்கையை கொடுக்காமல் விட்டு விட்டேனே.
காஷ்மீரில் இருந்து மூன்று நாட்களுக்கு முன் புறப்பட்டு பல ரயில் மற்றும் பேருந்தை பிடித்து விட்டு கடைசியாக தான் கிராமத்திற்கு செல்ல வேண்டிய கடைசி பேருந்தை விட்டு விட்டு, காலை வரை அங்கே காத்து இருந்த ராணுவ வீர்கள் தான் எத்தனை பேர்.. அவர்களில் ஒருவரை என் ஊர்தியில் அழைத்து சென்று அவன் இல்லத்தில் விட்டு இருந்தால் அவன் தன் குடும்பத்தோடு ஒரு கூடுதல் நாளை கழித்து இருப்பானே.
இது எல்லாம் கூட சரி. எதிரில் வந்த எந்த ஒரு வீரனுக்கும் வாயை திறந்து மனதார ஒரு நன்றி கூட சொல்லாமல் வாழ்ந்து இருந்து இருகின்றேனே ..
இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் அது வாய்ப்பு என்றே அறியாமல் வாழ்ந்து இருந்து இருகின்றேனே ..
எங்கே தவறினேன். நாட்டை காக்கும் நம் சொந்தங்களை அவர்கள் வாழ்வதே தெரியாமல் வாழ்ந்து விட்டேனே! எங்கே தவறினேன்!
என்று நினைத்து கொண்டு இருக்கையில்.. அருகில் இருந்த டாம்..
என்ன , விஷ். இந்தியன் நீங்க நிறைய காரம் சாப்பிடுவிங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன். இதுக்கே கண்ணுல தண்ணி.
சாரி டாம்.. ஆமா.. மிளகாயை கடிச்சிட்டேன் .. என்று ஒரு பொய் சொல்லி சமாளித்தேன் .
பின் குறிப்பு :
பரிமாறிய அந்த பெண்மணியிடம். உணவு ரொம்ப பிரமாதம். அடுத்த வாரம் எங்க வீட்டு அம்மணியும் கண்மணிகளையும் கூட்டி கொண்டு வரலாம்னு இருக்கேன்.
ஒ.. தேங்க்ஸ்.. ப்ளீஸ் பிரிங் தெம்.
ஆனால் எனக்கு ஒரு உதவி செய்யணும் ..
என்ன? காரம் குறைவா போடணும?
அடே டே காரம் எல்லாம் ஓகே.. ஆனா.. நீங்க சாப்பாட பரிமாறும் போது முதலில் அந்த சட்டி, பிறகு அந்த கோப்பை, கடைசியா அந்த டம்பளர் திராவகம் பரிமாறனும்.
ஏன்.. அப்படியே தலைகீழ சொல்றீங்க..
என்னத்த சொல்வேன்.. சின்ன வயதில் இருந்தே கறி
சோறு, ரசம் சோறு , பாயசம்ன்னு பழகிட்டேன். இப்ப அதையே ரிவர்ஸில் சாப்பிட கஷ்டமா இருக்கு.
நல்ல அனுபவம், நன்கு ரசித்தேன். நன்றி. மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html
பதிலளிநீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குசெம...
பதிலளிநீக்குடச்சிங்
வாழ்த்துக்கள்..!!
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஇனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!
வெளி நாட்டிலிருந்து எதை எதையோ கற்றுக் கொள்கிறோம். இது போன்ற ஒரு எண்ணம் கூட நமக்குத் தோன்றியதில்லை. அருமையான பகிர்வு விசு சார்.
பதிலளிநீக்குஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அடி ஆத்தி..உரிமையா ... விசு ... விசுன்னு கூப்பிடுவாகளே.. இது என்ன.. புதுசா .. விசு சார்?
நீக்குவருகைக்கு நன்றி எழில். புத்தாண்டு வாழ்த்துக்கள்.
என்னதான் சொல்லுங்கள் – வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான். நாம்தான் தமிழர், பண்பாடு என்று நம்மைநாமே மெச்சிக் கொள்கிறோம். எங்கள் வங்கியில் வேலைபார்த்த முன்னாள் ராணுவவீரர் ஒருவர், வட இந்தியர்கள் போன்று, தமிழர்கள் ராணுவ வீரர்களுக்கு மரியாதை தருவதில்லை என்று குறைபட்டுக் கொள்வார்.
பதிலளிநீக்குசுவாரஸ்யமான பதிவு. பாராட்டுக்கள் மற்றும் எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!
விசு! தொடர்ந்து உங்கள் பதிவுகளை படித்தாலும் பின்னூட்டத்தில் வள வளக்கும் நான் அது என்னமோ தெரியலை ஒன்றும் சொல்ல தோணாமல் படித்து விட்டு போய் விடுவேன்.
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அர்பஜான் என்ற அமெரிக்கன் கேம்பில் ஈராக் போரின் போது சுமார் ஒரு லட்சத்துக்கும் மேல் அமெரிக்கன் ஆர்மிக்காரர்கள் இருந்தார்கள்.இப்பொழுதும் சுமார் 20000க்கும் மேல் இருப்பார்கள் என நினைக்கிறேன். அங்கே பணிபுரியும் ஒருவரிடம் கேட்ட தகவல் இது.
பதிலளிநீக்குOther side of the coin என்பதால் போரில்லாத உலகம் எப்பொழுது வருமென்று தோன்றுகிறது.
புத்தாண்டு தினத்தில் வலைத்தளத்தில் படித்த முதல் பதிவு. மனதை தொட்டது பாராட்டுகள் . உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினட் அனைவருக்கும் புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅற்புதம்...
பதிலளிநீக்குஇதே போல் இல்லாதவர்களுக்கும் கொடுக்கும் மனம் வந்தால், சொர்க்கம் இங்கேயே.
யோசிக்க வைத்துவிட்டீர்கள்! அருமையான பதிவு! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குசெம டச்சிங்க் விசு! நேற்றிலிருந்து நெட்வொர்க் இல்லாம இன்னிக்கு மாலை வந்த போது வாசித்தது. அருமை. நானும் வாழ்த்துவது உண்டு வீரர்களை இங்கு..இதைச் சொல்லலாமா வேண்டாமா நம்ம பெருமையா சைக்கிள் காப்ல சொல்றா மாதிரி ஆகிடுமோனு யோசிச்சு சரினு போட்டது...இது..
பதிலளிநீக்குமெக்சிகன் சாப்பாடு அருமையா இருக்கும்---வெஜ்..சாப்பிட்டது உண்டு வீட்டில் செய்ததும் உண்டு..ஆனா என்ன இங்க மெக்சிகன் சில்லி மிஸ் ஆகும்..
Great post!!! wonderful expression!!! Happy to read this!!!
பதிலளிநீக்கு