ஞாயிறு, 19 அக்டோபர், 2014

அதை காண மறுபடியும் வானவிலும் அங்கே வந்தது!


சிறு வயதில் இருந்தே ஆங்கில பாடல்களை மிகவும் விரும்பி கேட்பவன் நான். 1000 கணக்கான ஆங்கில பாடல்களை ரசித்து கேட்டு இருந்தாலும் அதில் ஒரு சில பாடல்கள் மனதில் நின்று விடும்.  இவ்வைகையான பாடல்களில் ஒன்று தான்



"Here Comes the Rainbow Again"!

மனிதர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் எப்படி அன்பை காட்ட வேண்டும், ஒரு நல்ல காரியம்  செய்தால் அது எப்படி பல நல்ல காரியங்கள் நடக்க வழி செய்கின்றது என்பதை ஒரு கிராமத்து புற கதையில் பாடலாக எழுதி விட்டார், இதை படைத்த " க்றிஸ் க்றிஸ்டோபேர்சன்". இந்த பாடலின் தமிழாக்கம் இங்கே.. எதோ என்னால் முடிந்தவரை மொழிபெயர்த்து இருக்கின்றேன்.

தெரு ஓரத்தில் உள்ள ஒரு சிற்றுண்டி கடையில் இக்காட்சி, 
வேலை செய்யும் பெண்ஒருத்தி தரையை கூட்டி கொண்டு இருந்தாள்.
இரண்டு லாரி ஓட்டுனர்கள், தேநீர் பருகி கொண்டு இருந்தனர்.
இரண்டு சிறு பிள்ளைகள் கடையின் கதவின் அருகே ஓடி வந்தனர்!

அந்த சாக்லேட் ஒன்று எவ்வளவு என்று அவர்கள்  அவளிடம் கேட்க..
உங்களிடம் எவ்வளவு இருக்கின்றது என்று பதில் வந்தது.
எங்கள் இருவரிடமும் சேர்ந்து 5 காசுகள் தான் இருக்கின்றது,
அவை " 5 காசுக்கு ரெண்டு"  என்று சொன்னாள் ஒரு பொய்.

வெயில் மறைய இடி சத்தம் ஒலித்தது 
காற்றிலோ  மழையின் வாசனை!
அவள் செய்தது என்ன ஒருஅழகான  'மனித தன்மை'!
அதை காண வானவிலும் அங்கே வந்தது.  


 ஆளுக்கொரு   சாக்லேட்டை வாங்கி கொண்டு பிள்ளைகள் வெளியே ஓட
லாரி ஓட்டுனர் ஒருவர் அவளிடம் 
அந்த சாக்லேட்ஸ் 5 காசுக்கு ரெண்டு என்பது பொய் தானே? 
என சொல்ல.
அவளோ, "அதனால் உமக்கு என்ன "? என்றாள்.

பின்னர் அவர்கள் அமைதியாக தங்கள் தேநீரை பருகி முடித்து,
இருக்கையை விட்டு எழுந்து அவளிடம் விடை பெற்று வெளியேறினர்..
அவள் அவர்களை தொடர்ந்து ஓடி....சத்தம் போட்டு...
நீங்கள் உங்கள் பில்லுக்கும்  மேல் அதிகமான பணத்தை தந்து விட்டீர்கள் என்று சொல்ல...
.அதில் ஒருவன்  "'அதனால் உனக்கு என்ன ? என்றான்.

வெயில் மறைய இடி சத்தம் ஒலித்தது 
காற்றிலோ  மழையின் வாசனை!
அவன் செய்தது என்ன ஒருஅழகான  'மனித தன்மை'!
அதை காண வானவிலும் அங்கே வந்தது.  

என்ன ஒரு கருத்துள்ள அருமையான பாட்டு. அந்த பிள்ளைகளை வருத்ததோடு - ஏமாற்றத்தோடு அனுப்ப கூடாது என்று அவள் அந்த சாக்லேட் "5 காசுக்கு ரெண்டு' என்று பொய் சொல்லி ஆளுக்கு ஒன்றை கொடுத்து அனுப்பியிருகின்றாள். அதை கண்ட லாரி ஓட்டுனர்கள், அதற்கான தொகையையும் அங்கே வைத்து விட்டு போய் ஒருகின்றார்கள். என்ன ஒரு அருமையான விஷயத்தை இந்த பாடல் ஆசிரியர் இவ்வளவு அழகாக சொல்லி விட்டார்.

இதில் இன்னொரு விஷயம். இந்த பாடலுக்கான இசை மிகவும் அட்டகாசம். அருமையான மெதுவான ராகத்தில்  எழுதியவரே பாடியுள்ளார். நீங்களும் கேட்டு பாருங்களேன்.




The scene was a small roadside cafe, 
The waitress was sweeping the floor.
Two truck drivers drinking their coffee.
And two Okie kids by the door.
"How much are them candies?" they asked her.
"How much have you got?" she replied.
"We've only a penny between us."
"Them's two for a penny," she lied.

And the daylight grew heavy with thunder,
With the smell of the rain on the wind.
Ain't it just like a human.
Here comes that rainbow again.

One truck driver called to the waitress,
After the kids went outside.
"Them candies ain't two for a penny."
"So what's it to you?" she replied.
In silence they finished their coffee,
And got up and nodded goodbye.
She called: "Hey, you left too much money!"
"So what's it to you?" they replied.

And the daylight was heavy with thunder,
With the smell of the rain on the wind.
Ain't it just like a human.
Here comes that rainbow again.


நல்லதையே செய்வோம்,

17 கருத்துகள்:

  1. நீண்ட நால் ஆசை ஒன்று உங்கலின் இந்த பதிவின் மூலம் எனக்கு நிறைவேரியது சார்.

    தமிழாக்கம் சூப்பர்.
    அதிலும் சொல்லிருந்த கருத்து டச்சிங் சார்.

    தொடர்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பதிவின் மூலம் உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறியதா? குழப்பமாக உள்ளது. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. மிக அருமையான கருத்தை, வாழ்வியல் அர்த்தத்தைச் சொல்லும் பாடல்! அதை எழுதிய " க்றிஸ் க்றிஸ்டோபேர்சன்" அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். எங்களுக்கு ஆங்கிலப் பாடல்கள் அத்தனைப் பரிச்சயமில்லை. ஒரு சில தவிர....இப்போது தங்களிடம் அறிகின்றோம். அவர் பாடியிருப்பதும் அழகாக உள்ளது.

    தங்கள் தமிழாக்கம் மிக மிக அருமை! மிக்க நன்றி பகிர்வுக்கு!

    பதிலளிநீக்கு
  3. english songs ellam na music keka nallaa irunthal keppen. but lyrics purinjukka try
    pannuna manda kaayum.

    oru aarvam enakku oru song oda lyrics aachum purinjukkanumenu.
    antha kurai intha pathivu pokkiduchu sir.

    பதிலளிநீக்கு
  4. Are we losing such "HUMANITY" or is it that such Humanities are taken as insane act and not being highlighted.

    Sridhar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sridhar,
      I would say its a "Combo" of what you have mentioned. But then again, songs and moments like this bring in that lil' hope and confirms, all is not lost!. Thanks for coming Bro, appreciate your comment as well.

      நீக்கு
  5. ஆஹா! எப்போதோ கேட்ட பாடலிது. சிறு வயதில் வார்த்தைகள் புரியாமல் பிடிக்காமல் கேட்டது இன்றைக்கு மனதுக்குள் மழைத்துளி போல இறங்குகிறது.மறந்தே போனேன். நினைவூட்டியதற்கு நன்றி.

    Donna Summer பாடிய She works hard for the money என்ற பாடலை கேட்டதுண்டா? முடிந்தால் யூ டியுபில் விடியோவுடன் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேஷா கேட்டேள் போங்கோ! " She works hard for the money" சூப்பர் பாட்டு ஆச்சே, அதை எப்படி கேட்காமால் விட்டு இருக்க முடியம். அந்த பாடலை ரசித்து இருக்கின்றேன். வருகைக்கு நன்றி, காரிகன்,

      நீக்கு
  6. அருமையான பாடல்! அழகாய் மொழிபெயர்த்து பகிர்ந்தமைக்கு நன்றி!வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம்மை போன்றவர்கள் இதையும் விட சிறப்பாக எதுகை மோனையோடு தமிழ் ஆக்கம் செய்து இருப்பார்கள் என்பதை யோசிக்கும் போது, "விசு உனக்கு இந்த வேலை தேவையா? " என்ற கேள்வி எனக்குள்ளே வருகின்றது.
      வருகைக்கு நன்றி, தளிர் அவர்களே.

      நீக்கு
  7. பாடலின் இசையும் பொருளும் மிக அருமை.
    பாராட்டுக்கள் பகிர்வுகளுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இசையும் வார்த்தைகளும் பொருள் சேர்ந்து மனதை நெருடிய பாடல் அல்லவா? அதினால் தான் "யாம் பெற்ற இன்பம்" என்னும் கருத்தை மனதில் கொண்டு, என்னால் முடிந்த இளநீரை சுமந்து வந்தேன். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  8. கவிதை நடையிலேயே நீங்கள் செய்திருக்கும் மொழிபெயர்ப்பு அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி, மாது அவர்களே. எங்கே இந்த அருமையான பாடலை என் மொழியாகத்தினால் சொதப்பி விடுவேனோ என்ற பயம் மனதில் இருந்தது.

      நீக்கு

  9. உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  10. மனதைத் தொடும் வரிகளோடு அருமையான பாடல்; மெத்தென்ற இசை. அழகான மொழிபெயர்ப்பு. மொத்தத்தில்... இடுகை அற்புதம்.

    தீபத்திருநாளன்று உங்கள் வீட்டிற்கும் பலவர்ண வானவில் ஒன்று வரட்டும். வாழ்த்துக்கள் விசு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி இமா அவர்களே..வருகைக்கும் வார்த்தைக்கும்...

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...