என்ன டாடி, கொஞ்சநா நாளாகவே தண்டபாணி மாமாவிடம் இருந்து போன் வரல, அவரும் வீட்டுக்கே வரல.. சண்டையா?
கேட்டு கொண்டே வந்தாள், இளைய ராசாத்தி.
ஆமாம் மகள். ரொம்ப நாள் ஆச்சி இல்ல. ஹோப் எவரிதிங் இஸ் ஆல்ரைட் வித் ஹிம்.
என்று சொல்லிவிட்டு, அலைபேசியில் அருமை நண்பனை அழைத்தேன்.
ஹலோ!
தண்டம்.. எங்க ஆளே காணோம்.
வாத்தியாரே, கொஞ்சம் பிசி அப்புறம் கூப்பிட்டா ?
ஓகே.
மனதிலோ.. அட பாவி.. சனியும் அதுவுமா அவனே நம்மை கூப்பிட்டு பேசுவானே, இப்ப என்ன அவ்வளவு பிசி என்று நினைத்து .. என் வேலையை பார்க்க ஆரம்பித்தேன்.
மதியம் ஒரு 12 போல், என்ன தண்டபாணி கூப்பிடலையே..என்று நினைத்து ..
இன்னொரு போனை போட
வாத்தியாரே.. சாரி.. சுத்தமா மறந்து போச்சு.. ஏதாவது அவசரமா?
அவசரம் இல்ல பாணி. என்னா கொஞ்சம் நாளா ...?
வாத்தியாரே.. அவசரம் இல்லை தானே.. நான் கொஞ்சம் பிசி, அப்புறமா கூப்பிடட்டா..
ஓகே ..
என்று அலைபேசியை அணைத்து விட்டு..
இவனுக்கு என்ன ஆச்சி, என்று நினைத்து கொண்டு.. மாலை வண்டியை கிளப்பி நேராக பாணியின் வீட்டிற்கு சென்றேன்.
பாணி.
சொல்லு வாத்தியாரே..
எப்படி இருக்க? குடும்பத்தில் எல்லாம் நலம் தானே.?
இருக்காங்க வாத்தியாரே, ஒரு 15 நிமிஷம் இரு இதோ வந்துடறேன்.
என்று சொல்லி வெளியே கிளம்பினான். அவனையே யோசித்து கொண்டு அமர்ந்து இருந்த என்னை, ஒரு அறிந்த குரல் அழைத்தது.
விசு தம்பி ...
தண்டபாணியின் அம்மாவே தான். மகனை பெத்த மகா ராசி.
அம்மா.. நீங்க எப்ப வந்திங்க?
ஒரு மாசம் ஆச்சி. எப்படி இருக்கீங்க. மனைவி பிள்ளைகள் எல்லாரும்?
நல்ல இருக்கோம். உங்களை பார்த்தது ரொம்ப சந்தோசம்.
பேசி கொண்டே இருக்கும் போது.. பாணியின் மனைவி சுந்தரி வந்தார்கள்.
அண்ணே.. எப்ப வந்திங்க?
இப்ப தான்.
என்ன சொல்லாம கொல்லாம..
இல்ல இந்த பக்கம் வந்தேன், அது தான் சும்மா பார்த்துட்டு போகலாம்னு..
சரி, ஒரு நிமிஷம் இருங்க.. அவர் வந்தவுடன் டீ போட்டு தர சொல்றேன்.
தேங்க்ஸ்..
பேசி கொண்டே இருக்கும் போது பாணியின் அருமை ராசாத்தி ஓடி வர...
மாமா.. எங்கே ஆளையே காணோம்?
கொஞ்சம் பிசி மகள்.. எப்படி? படிப்பெல்லாம்.. ?
எல்லாம் ஓகே மாமா.. அப்பாவ பாத்தீங்களா.. ?
என்று அவள் கேட்க்கையில் பாணி திரும்ப வந்தான்.
பாணி.. ஒரு அஞ்சு நிமிஷம் பேசணும்..
கண்டிப்பாக, வாத்தியாரே.. இங்கேயே இரு, இப்ப வரேன்...
டேய் .. ஒரே நிமிஷம்.. முகத்தில் என்ன வெட்டு காயம்?
அப்புறம் விவரமா சொல்றேன், இரு..
பாணி..
உக்காரு.. எவர்திங் கேன் வெயிட்.. வாட்ஸ் யுவர் ப்ராப்ளம், மேன்? ஐ அம் வோர்ரிட். கன்னத்தில் என்ன காயம். வாய் நாக்கெல்லாம் வேற செவந்து இருக்கு? என்ன ஆச்சி?
வாத்தியாரே.. உனக்கே தெரியும் நான் கொஞ்சம் சோம்பேறியான பார்ட்டி.
டே , அந்த அமைப்பிற்கே அடியேன் தான் ப்ரெசிடெண்ட் ... தெரியும் சொல்லு.
ஒரு மாசமா எங்க அம்மா வந்து இருக்காங்க, இனிமேல் இங்கே தான் இருப்பாங்க.
கொடுத்து வைச்சவன் பாணி நீ. எல்லாருக்கு இது அமையுமா? சரி, அவங்க இங்கே இருக்கிறது சுந்தரிக்கு பிடிக்காதா?
ச்சே .. ச்சே.. அப்படி இல்லை..
அப்புறம் ஏன் இப்படி சுடு தண்ணியில் காலை விட்டவன் போல்..
வாத்தியாரே.. மூணு சந்ததி பொம்பளைகளை கவனிக்கிறது என்ன தமாசா ?
மேலே சொல்லு ..
"அம்மா - மனைவி - மகள்". இவங்க மூணு பேரையும் சந்தோசமா வச்சிக்கணும்..
இவங்களில் ஒருத்தர மட்டும் சந்தோசமா வைச்சா பிரச்சனை, அதனால் ஓடி ஓடி வேலை செய்றேன்.. அது தான்.
சரி.. கன்னத்தில் என்ன காயம்?
காலையில் நின்னு நிதானமா ஷேவ் பண்ண நேரம் இல்லை.. என்னையே அறியாமல் டூத் பேஸ்ட் எடுத்து முகத்தில் போட்டு ஒரு இழு இழுத்தேன் .. அரை இஞ்சுக்கு கன்னம் கிளிஞ்சிடிச்சி.
சரி.. வாய் நாக்கு எல்லாம் ஏன் சிவந்து இருக்கு...
அவசரத்தில் ஷேவிங் க்ரீம் போட்டு பல் விளக்கிட்டேன்.. அது தான்.
கொஞ்சம் பொறுமையா இரு பாணி.
என்ன பொறுமை வாத்தியாரே, இவங் மூணு பேரும் மூணு வித்தியாசமான காலத்தை சேர்ந்தவங்க. அவங்களுக்கு பிடிச்சது இவங்களுக்கு பிடிக்காது.. இவங்களுக்கு பிடிச்சது அவங்களுக்கு பிடிக்காது.. இவங்க மூணு பேருக்கும் பிடிச்சது எனக்கு பிடிக்காது ...எனக்கு பிடிச்சது இவங்க மூணு பேருக்கும் பிடிக்காது..
கஷ்டம் தான் பாணி. இருந்தாலும்.. "அம்மா - மனைவி- மகள்" இப்படி மூணு பேரோட வாழ்ற பாக்கியம் எத்தனை பேருக்கு வரும்?
அந்த ஒரே ஆறுதல் தான், அது சரி.. நீ எப்படி இருக்க? ரொம்ப நாளா உன்னை காணோமே.. போனும் இல்ல? ஆளே பிடிக்க முடியலையே.. என்ன விஷயம்?
அப்படி ஒன்னும் இல்லையே..
வாத்தியாரே....முயல் புடிக்கிற நாய மூஞ்ச பாத்து சொல்லலாம்.. என்ன விஷயம்? எவரிதிங் ஆல்ரைட் வித் யு..?
வீட்டுக்கு வீடு வாசப்படி பாணி..
விவரமா சொல்லு..
எங்க அம்மாவும் இப்ப எங்க வீட்டில் தான் இருக்காங்க. "அம்மா- அம்மணி -ராசாதிக்கள்" ... மூணு சந்ததி..
எல்லாருக்கும் இது அமையுமா வாத்தியாரே.. என்சாய் மாடி.
நீ சொல்லிட்ட பாணி.. உனக்கே தெரியும் இல்ல.. என்னை விட சோம்பேறி இந்த உலகத்திலேயே எவனும் இருக்க மாட்டான். அதனால் தான் மூணு சந்ததியையும் சந்தோசமா வைச்சி இருக்கிறது கொஞ்சம் சவாலா இருக்கு.
சரியா சொன்ன வாத்தியாரே.
இருந்தாலும் பாணி.. நீ கொஞ்சம் பதறாம நிதானமா இரு.இந்த ஷேவ் பண்றது பல் விளக்குறது இந்த மாதிரி விஷயத்திலே கோட்டை விடுறியே.. வண்டி கிண்டி ஒட்டும் போது இந்த மாதிரி எதுவும் தப்பு பண்ணிடாத....
ஓ கே வாத்தியாரே .. சரி என்னை விடு.. சரவண பவாவில் புல் மீல்ஸ் சாப்பிட்டு மூணு பீடாவை ஒண்ணா போட்ட மாதிரி உன் வாய் ஏன் இவ்வளவு சிவந்து இருக்கு, வாத்தியாரே..
அப்படி ஒன்னும் இல்லையே..
இல்ல வாத்தியாரே, சிவந்து தான் இருக்கு..
டேய்.. உன் வாய் சிவந்து இருக்கிரனால உனக்கு எல்லார் வாயும் அப்படி தான் தெரியும்.சரி பார்க்கலாம், வரேன்.
பின் குறிப்பு :
அடித்து பிடித்து எழுந்து அருமையா ஒரு டீ போட்டு அதில் சக்கரைக்கு பதில் சோடா மாவை போட்டு அடியேன் குடித்ததை எப்படி நண்பனிடம் சொல்வேன்?
என்ன தான் சவாலாக இருந்தாலும்.. இந்த மூன்று சந்ததியையும் திருப்தி படுத்திவிட்டு ... படுக்கைக்கு செல்லும் முன்.. மனதில் ஒரு நிம்மதி வருதே...
என்ன விசு.. என்ன பிரச்சனை வந்தாலும் இப்படி பிச்சி உதுருற .. என்னமோ போ விசு..
என்று எனக்கு நானே சொல்லி குறட்டை விடுவதில் தான், என்ன சுகம்.. இது என்ன சுகம்...

பதிலளிநீக்குஆஹா இந்த அருமையான நகைச்சுவை பாணி பதிவை படிச்சு ரொம்ப நாளாக ஆச்சே.... ஆமாம் இது எங்களது நண்பர் விசு எழுதுகிற மாதிரி இருக்கே.... எங்க நண்பர் விசு இப்படிதான் அருமையாக எழுதுவார் அவர் தளத்தை இப்போ யாரோ ஒருத்தர் ஹேக் பண்ணிட்டு இப்போ கார்டூன் போட்டுகிட்டு இருக்கார். ஆனால் இன்று அவரை மாதிரியே ஒருத்தர் நகைச்சுவை பாணியில் அருமையான பதிவை எழுதி இருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள்
அப்ப இனிமேல் கார்ட்டன் வேண்டாம்ன்னு சொல்றிங்களா? ரொம்ப பிடிச்சு இருக்கே தமிழா?
நீக்குநாலவது சந்ததிக்கும் உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன் & பிரார்த்திக்கிறேன்
பதிலளிநீக்குபிச்சி உதறீட்டீங்க.....
பதிலளிநீக்குஇந்த மாதிரி பதிவுகள் அதிகம் இட்டு கூடிய சீக்கிரம் அடுத்த புத்தகத்தை வெளியிடவும் உங்கள் ரசிகை ஆவலுடன் அடுத்த புத்தக்கதிற்காக காத்திருக்கிறாள். அவள் வேறு யாரும் அல்ல எங்க வூட்டு மாமிதான். உங்கள் புத்தகத்தையும் சேட்டைக்காரன் புத்தகத்தையும் படித்து ரசித்து மகிழ்ந்தா
பதிலளிநீக்குஅருமை அருமை
பதிலளிநீக்குமிகக் குறிப்பாக இயல்பாக இடையில் வந்து விழுந்த
நான்தான் அதுக்கு பிரசிடெண்ட் என்பதை
மிகவும் இரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
ஹஹஹஹ் ஹப்பா என்ன சுகம் என்ன சுகம்!!!! இப்பதான் விசு பேக் டு ஃபார்ம்!! வித் தண்டபாணி!!! மிக்க நன்றி விசு...வேண்டுகோளை ஏற்று தண்டபாணியை அழைத்து வந்தமைக்கு...
பதிலளிநீக்குதண்டபாணி தாங்க்ஸ்! அடிக்கடி வீட்டுப் பக்கம் வாங்க. அப்பதான் ஸ்வாரஸ்யம்.
ஹலோ விசு...நீங்க மூணு தலைமுறைப் பெண்களைப் பற்றிச் சொல்லுகின்றீர்கள்...ஹும் எங்க வீட்டுல மூன்று தலைமுறை ஆண்கள்!!!ஹிஹிஹிஹி...அப்ப எப்படி இருக்கும் இந்தப் பெண்ணுக்கு! ஆண்கள் கட்சி எங்க வீட்டுல..பூந்து பந்தாடுவாங்க என்னை..ஹஹஹ்
கீதா
//என்ன சொல்லாம "கொல்லாம"...//
பதிலளிநீக்கு- நீங்க பயங்கர terror போல!!
Wow! Back to form!
பதிலளிநீக்குNallaa sirichu sirichu thannikku badhila vinegara kudichutten :-)
அருமையான எழுத்தோட்டம், உங்கள் பாணியே தனிதான்!!!
பதிலளிநீக்கு