செவ்வாய், 16 செப்டம்பர், 2014

அண்டை நாட்டில் அசிங்க பட்டான் ஆட்டோக்கார அரசியல்வாதி

பாகிஸ்தானில் விமானத்தில் ஒரு அட்டகாசமான புரட்சி.

வலைதளைதில் நுழைந்து செய்திகளை படித்து கொண்டு இருக்கையில், தீடீரென்று ஒரு செய்தி எதிரில்  வந்தது.

பாகிஸ்தானில் கோபம் அடைந்த விமான பயணிகள் முந்தைய மந்திரி மற்றும் தற்போதைய MLA  ஒருவரையும் தாமதமாக வந்த காரணத்தினால் திட்டி வெளியே துரத்தினார்கள்".

கனொலியை காண இங்கே சொடுக்கவும் 

அடே டே, நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் நமக்கும் எதில் வித்தியாசம் இருகின்றதோ இல்லையோ, இந்த இரு நாடுகளின் அரசியல்வாதிகளின் அராஜகத்தில் ஒற்றுமை உண்டே, ஓர் விமான பயணிகள் இதை எப்படி சாதித்தார்கள் என்று அறிய அவர்கள் கொடுத்த இணைப்பை  தட்டினேன், அங்கே நடந்தது.

ஓர் விமானத்தில் 200 பயணிகளுக்கும் மேல் அமர்ந்து உள்ளனர். அந்த விமானத்து அதிகாரிகள் விமானம் புறப்பட இன்னும் 2 மணி நேரம் ஆகும் என்று அறிவித்து உள்ளனர். ஏன் என்று கேட்டதற்கு, தொழில் நுட்ப காரணத்தினால் (technical reasons) என்று ஒரு பொய்யை அவிழ்த்து விட்டனர்.

200 பயணிகளில் ஒருவர் எப்படியோ, இது தொழில் நுட்ப காரணத்தினால் அல்ல, ஓரிரு அரசியல் வாதிகளின் செல்வாக்கினால் என்று அறிந்து அதை மற்றவர்களுக்கு சொல்ல பிரச்சனை ஆரம்பித்தது. ஏற்கனவே நொந்து போய் அமர்ந்து இருந்த பிரயாணிகள், இது பொய் என்று அறிந்ததும் கொதித்து விட்டனர்.  தாமதமாக உள்ளே நுழைந்த இருவரையும் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். பார்க்கவே மகிழ்ச்சியாய் இருந்தது. இது பாகிஸ்தானில் மட்டும் அல்லாமல் இந்திய அரசியல்வாதிகளுக்கும்  மற்ற செல்வாக்கு உள்ளவ்ரகளுக்கும் நல்ல பாடம் ஆகும்.

இந்த இணைப்பை பார்க்கையில்... நான் கேட்ட சில விவாதங்கள்.... நமக்கும் நம் அண்டை நாட்டிற்க்கும் என்னே ஒரு ஒற்றுமை என்று என்னை வியக்க வைத்தது.

கேட்டவைகளில் சில.. ( தமிழாக்கத்தோடு)

 மந்திரி ரெஹ்மான் மாலிக் அவர்களுக்காக தானே காத்து கொண்டு இருக்கின்றீர்கள்? அவர் உள்ளே வந்தால் அனுமதிக்க மாட்டோம்.

காப்டனிடம் உடனே கதவை மூட சொல்லுங்கள்.

மந்திரி வரட்டும்.. அவரை அனைத்து பிரயாணிகளிடம் மன்னிப்பு கேட்க்க செய்வோம்.

இன்னும் எத்தனை நாள் தான் இந்த நாட்டில் இந்த அட்டூழியத்தை பொருத்து கொள்ள முடியும்..

இப்படி பேசி கொண்டு இருக்கையில்..முதல் ஆசாமி உள்ளே நுழைகிறார். அவர் முகத்தை பார்த்தவுடன், அடே டே, பாகிஸ்தானிலும் சரவணபவ உள்ளதா? என்று என்னை நானே கேட்டு கொண்டேன். ஏன் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. அவர் முகத்தில் சரவணபவாவில் "புல் மீல்ஸ்" சாப்பிட ஒரு திருப்தி தெரிந்தது. இப்போது மற்ற பிரயாணிகள் இவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தனர்.

தங்கள் பெயர்...

நான் வெளியே அமர்ந்து கொண்டு இருந்தேன்.

அது இருக்கட்டும், தங்கள் பெயர்...

நான் வெளியே அமர்ந்து கொடுந்து இருந்தேன்,

அது இருக்கட்டும், 200 பேருக்கும் மேலே இங்கே உள்ளே இருக்கும் போது நீ ஏன் - எங்கே வெளியே அமர்ந்து இருந்தாய்? நாங்கள் உன்னை வெளியே பார்க்கவில்லையே..

எனக்கும் அடுத்து கடைசி பிரயாணி வருவார், நான் வெளியே அமர்ந்து இருந்தேன்,

சரி, உள்ளே அமர்ந்துள்ள பிரயாணிகளுக்கு மன்னிப்பு சொல்.

நான் வெளியே அமர்ந்து தானே இருந்தேன்

நீங்கள் அரசியல்வாதியா? வெளியே எங்கே அமர்ந்து இருந்தீர்கள், எங்களில் ஒருவரும் உங்களை பார்க்கவில்லையே, எப்படி?

நான் வெளியே தான் இருந்தேன், கடைசி பிரயாணி வருவார் என்று காத்து இருந்தேன்.

எங்கள் அனைவரையும் என்ன முட்டாள் என்று நினைகின்றாயா? வெளியே இருந்தேன் என்று பொய் சொல்கிறாய். நீ அரசியவாதி தானே? உன் பெயர் என்ன?

இவர்கள் இப்படி கேட்டு கொண்டு இருக்கும் போது, அந்த நபர் இவர்களையும் மீறி தன் இருக்கையை அடைந்து விட்டார்.

 இங்கே மறுபடியும் சத்தம்.

இந்த விமான கதவு உடனே மூட பட வேண்டும். மந்திரி ரெஹ்மான் மாலிக் உள்ளே வரகூடாது. காப்டனிடம் சொல்லுங்கள்.

இப்படி ஒரு உத்தரவு விட்டு விட்டு.. உள்ளே சென்ற ஆசாமியை தேடி கொண்டு போனார்கள் சில பிரயாணிகள்.

எங்கே ரெஹ்மான் மாலிக்கின் ஆள்..எங்கே... (அவரை கண்ட வுடன்),

விமானத்தில் இருந்து வெளியேறு... உடனே வெளியேறு..

உனக்கு வெட்கம், மானம் எதுவுமில்லையா, வெளியே போ .
வெட்கம் மானம் ரோசம் இல்லை, நீ எல்லாம் ஒரு.. வெளியே போ..  விமானத்தை விட்டு வெளியே போ..இவர் ஒரு VIP . என்ன வெட்க்க கேடு.. உன் பெயர் என்ன..

டாக்டர் ரமேஷ்..

உடனே வெளியே போ, உன் பையை எடுத்து கொண்டு வெளியே போ..

டாகடர் அவர்களே... நீங்கள் ஒரு MLA, இந்த மாதிரி காரியம் செய்வதற்கு நீங்கள் தலை குனிய வேண்டும். வெளியே போங்கள்.

இவ்வாறாக பேசி, இந்த ஆசாமியை ஒருவழியாக அனுப்பிவைத்தார்கள். இவர் வெளியே சென்றதும், ஒரே கைத்தட்டல், ஆரவாரம், வெற்றி களிப்பு
பிறகு..

அடுத்தவர் வரட்டும், வறுத்து எடுக்கலாம். கவலையே படாதீர்கள்... மந்திரி ரெஹ்மான் மாலிக் அவர்களுக்கும் இதே நிலை தான். 68 வருடம் நாம் பொறுமையாக இருந்தோம், இப்படியே போனால் இன்னும் 68 வருடம் இதே நிலை தான் ..

இதோ வருகிறார்... வந்து விட்டார் என்று ஒரு பிரயாணி சொல்ல...ரெஹ்மான் மாலிக் விமானத்தில் நுழைய முற்பட...

மாலிக் அவர்களே.. திரும்பி போகவும்.

கொஞ்சமாவது வெட்கம் இருந்தால் திரும்பி போகவும், உள்ளே நுழையாதே...

இவ்வளவு சத்தத்தை எதிர்பார்க்காத அவர், கிட்ட தட்ட ஓடவே ஆரம்பித்து விட்டார். பின்னர் சற்று நிதானித்து மீண்டும் நுழைய முற்பட..

மாலிக் அவர்களே, நீங்கள் மந்திரியா இருந்தால் என்ன? முதலில் மனிதானாக இருக்க கற்று கொள்ளுங்கள். நரகத்திற்கு போ, முட்டாள் நாயே...

இதை பதிவு செய்து காட்டுங்கள்.. ரெஹ்மான் மாலிக் அவர்கள் விமானத்தில் இருந்து இறக்கபட்டார், என்பது எல்லாருக்கும் தெரியட்டும்.


பின் குறிப்பு:
மனதில் சந்தோசம், புரட்சி என்பது ஓர் உணர்ச்சி. ஒவ்வொரு மனிதனுக்கும் அது தானாக வரவேண்டும். பாகிஸ்தானில் நடந்த இந்த நிகழ்ச்சி நம் நாட்டில் நடக்கும்மா? இல்லை, நாம் தொடர்ந்து அவர்களை சாஸ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி கொண்டே இருப்போமா?

ஜெய் ஹிந்த்.


www.visuawesome.com

9 கருத்துகள்:

  1. இன்றைய செய்தித்தாளில் படித்தேன்! மகிழ்ச்சியாக இருந்தது! நம்மவர்களுக்கு இந்த துணிவு வரவேண்டும்! பங்காளிகள் வழிகாட்டிவிட்டார்கள்! நாம் தொடரவேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
  2. மதவாதிகளிடம் சிக்கி சீரழியும் பாகிஸ்தானில் கூட சில நல்ல விஷயங்கள் நடக்கின்றன ,இது மட்டுமல்ல ,மலாலா விஷயம் கூட நல்ல விழிப்புணர்ச்சி போராட்டம் தானே ?
    உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டு மக்கள் நாம் என்று சொல்லிக்கொண்டு பெருமைப் பட்டுக்கலாம் .ஆனால் இங்கே நடக்கும் அரசியல்வாதிகளின் அட்டுழியம் கொஞ்சம் நஞ்சமல்ல !
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் சொல்கிறேன்.. புரட்சி என்பது, உணர்ச்சி. கேட்டு வாங்க இது பிச்சை அல்ல, நம் உரிமை. நெஞ்சு பொறுக்குதிலையே... வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. திரு .வருண் அவர்கள் பதிவிலிருந்து உங்கள் பதிவிற்கு வந்தேன்.
    எல்லோரும் சமம் என்பதை நம் அண்டை நாட்டவர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாக சொன்னீர்கள். நல்ல காரியத்தை எவன் எங்கே யார் செய்தாலும் அதை பார்த்து கற்று கொள்வதே நமக்கு நலம். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  5. நானும் படித்தேன். ஆனால் இவ்வளவு டீடெயிலாக இல்லை. விரிவான பதிவுக்கு நன்றி. இந்தியாவிலும் இப்படி ஒரு முறை நடந்ததாக நினைவு??/ இங்கும் கூடிய விரைவில் மாறும் என எதிர்பார்ப்போம் சார்...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...