Sunday, September 14, 2014

(8)மூன்றாம் பிறை - தொடர் கதை

மறைந்த இயங்குனர் பாலு மகேந்திராவுக்கு ஓர் அஞ்சலி!

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும் 

தொடர் கதை... (சென்ற இடுகை படிக்க இங்கே சொடுக்கவும்)ரயில் பயணம் தொடர்ந்தது.

லக்ஷ்மியின் அப்பா படித்தவர், நல்ல உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். எந்த ஒரு காரியத்தையும் நல்லதா, கெட்டதா என்று சிந்தித்து செயல் படுபவர். அவர் நினைவுகளோ அந்த ரயிலை விட வேகமாக ஓடி கொண்டு இருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு வாடகை வண்டியில் தானும் தன்  மனைவியும் லக்ஷ்மியை தேடி ஊட்டிக்கு சென்றது. அங்கே அவளை கண்ட போது, அவள் அந்த வைத்தியர் கொடுத்த மருந்தில் மயக்கத்தில் இருந்தாள். என்ன பேசுகிறோம் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் அந்த மருத்துவரையும் மற்றவர்களையும் கண்டபடி திட்டி விட்டார்.
சிறுது நேரம் கழித்து, மயக்கம் கலைந்த லக்ஷ்மி, அம்மா - அப்பா என்று அவர்களை அழைத்து மீண்டும் தன சுய நினைவிற்கு வந்ததும்,  எல்லாவற்றையும் மறந்து அந்த வைத்தியரிடம் :

ஐயா, பெரிய மனசு பண்ணி என்னை மன்னித்து  கொள்ளுங்கள், அவரசரத்தில் ஏதோதோ தவறாக பேசிவிட்டேன். உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.

நன்றி சொல்ல வேண்டுமானால், இந்த பெண்ணை இவ்வளவு நாளாக நல்ல முறையில் கவனித்து இங்கு அழைத்து வந்தாரே, அந்த தம்பிக்கு நன்றி சொல்லுங்கள்.

அதற்க்கு பின் அந்த காவல் அதிகாரிகளிடம்..

சார், இப்ப தான் லட்சுமி கிடைத்து விட்டாள், அதுவும் முழு சுகத்தோடு. அந்த பையன் வேற தலைமை ஆசிரியர் என்று சொல்லுகின்றீர்கள்,  இனிமேல் எதற்கு கோர்ட் கேஸ் என்று, நான் கேசை திரும்ப பெற்று கொள்கிறேன் ..

ஒரு வேலை அந்த படத்தில் இருந்தது இந்த பையனாக இருக்குமோ? லக்ஷ்மிக்கு இந்த சில மாதங்களில் நடந்த நிகழ்சிகள் நினைவிற்கு வந்து இருக்குமோ...என்ன ஒரு சோதனை இது!

ரயில் ஓடி கொண்டே இருந்தது..

அங்கே மதராசில், லட்சுமி...

இரண்டு நாட்கள் விபசார விடுதியில் இருந்தேனா? ஒ மை காட், என்ன என்ன நடந்ததோ தெரியவில்லையே. அதற்கு பிறகு கிட்ட தட்ட ஒரு வருடம் ஊட்டியில் முன் பின் தெரியாத ஒருவருடன் வாழ்ந்து வந்தேனா? இது எப்படி சாத்தியம்.

சற்று நிதானித்தாள். இரண்டு முக்கிய வேலைகள். முதல் வேலை, யார் இந்த ஆள். என்னை அந்த விபசாரவிடுதியில் இருந்து அழைத்து சென்றது.

இரண்டாவது, என்ன ஒரு சமூகம் இது. மனநிலை குறைந்த பெண்ணை கூட விட்டு வைக்காத சமூகத்தை மாற்ற வேண்டும். ஊட்டியில் இருந்து   திரும்ப வந்து முதல் வேலையாக   கதிர் மற்றும் அவன் கூட்டத்தை கண்டு பிடித்து அவர்களை கம்பி எண்ண செய்ய வேண்டும்,

என்று நினைத்து கொண்டே வீட்டிற்கு வந்தாள்.

என்ன லட்சுமி, இவ்வளவு அவசரமா ஊட்டி கிளம்பனும்ன்னு சொல்லுறியே.. அப்பாவிற்கு ஏதும் ஆகவில்லையே.

அப்பா நல்லா தான் இருக்கார் அம்மா. எனக்கு தான் பிரச்சனை.

என்ன சொல்லற லட்சுமி?

அம்மா, என் முழு பெயர் என்ன?

பாக்கியலட்சுமி, ஏன் கேக்குற?

இல்ல அம்மா, என்னை "விஜயா" "விஜி"ன்னு ஒருத்தன் கூப்பிட்டான், அது தான்.

விஜி...அப்படி எல்லாம் உனக்கு பெயர் இல்லை, அவன் வேற யாரையோ தவறாக நினைத்து உன்னை அப்படி கூப்பிட்டு இருப்பான்.

லட்சுமி காரை வேகமாக ஓட்ட துவங்கினாள். அப்பாவிற்கு முன்னால் நாம் ஊட்டி  போய் சேர வேண்டும் என்ற எண்ணத்தோடு. மனதில், அவன் என்னை விஜயா என்று தவறாக அழைக்கவில்லை. வேண்டும் என்றே தான் அப்படி அழைத்தான். யார் எனக்கு அந்த பெயர் வைத்தது?. ஊட்டியில் சென்று இந்த ஆளை பார்த்தால் இந்த கேள்விக்கு எல்லாம் பதில் கிடைக்கும்.

அருகில் அமர்ந்து இருந்த அவள் தாயின் மனதில்:

 விஜி... விஜி... எங்கேயோ  யாரோ இவளை விஜி விஜி என்று அழைப்பதை பார்த்தேனே, கேட்டேனே... எங்கே, எப்போது அதை கேட்டேன்? சிறிது நேரம் கழித்து அவளுக்கு பதில் வந்தது.

லட்சுமி... இப்ப நினைவிற்கு வருகிறது. நாம் ஊட்டியில் இருந்து திரும்பி வரும் போது ரயில் நிலையத்தில் ஒரு மனநலம் குன்றி பிச்சைகாரன் போல இருந்த ஒருவர் உன்னை விஜி, விஜி என்று அழுது கொண்டே அழைத்தார்.

அம்மா, என்ன அம்மா, எனக்கு இது நினைவிற்கே வரவில்லையே.

எனக்கு நல்லா நினைவிற்கு வருகிறது. அவர் உன்னை... விஜி விஜி என்று தான் அழைத்தார். அவர் முகம் எனக்கு நல்லா நினைவில் உள்ளது..

உடனே, தன் பையில் கையை விட்டு அதில் அவள் வரைந்து வைத்து இருந்த படத்தை காட்டி,

அம்மா, இவரா அவர்...

ஆமா லட்சுமி, இவரே தான்.

காரை இன்னும் வேகமாக ஓட்ட துவங்கினாள்.

தொடரும்...அடுத்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்


www.visuawesome.com


9 comments:

 1. ம்ம் காத்திருப்போம் அடுத்து என்ன நடக்குமோ??, தொடருங்கள் சார்...

  ReplyDelete
  Replies
  1. கமல் ஒபெனிங் இல்லாமல் உங்கள் பொறுமையை மிகவும் சோதிக்கின்றேன் என்று நன்கு அறிவேன். இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருக்கவும்.உங்கள் வருகைக்கும் உற்சாகதிருக்கும் நன்றி.

   Delete
 2. அசத்தலான நடையில் செல்லும் உங்கள் எழுத்து என்னை வசீகரிக்கிறது. கதை படிக்கும் போதே திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாது, எங்க ஆளை கொஞ்சம் நாளா காணவில்லையே என்று நினைத்தேன். வருகைக்கு நன்றி, தொடர்ந்து படித்து தங்கள் கருத்தை கூறுமாறு கேட்டு கொள்கிறேன்.

   Delete
 3. வணக்கம்
  அண்ணா.

  தொடர் மிக அருமையாக உள்ளது.... அடுத்த மர்மம் என்னவென்று காத்திருக்கேன்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ரூபன் அவர்களே. எல்லாம் தம்மை போன்றோரின் உற்ச்சாகம் தான்.

   www.visuawesome.com

   Delete
 4. Good going Visu. I narrated the story so far to Selwyn. He said it is very nice.
  Sujatha

  ReplyDelete
  Replies
  1. என்னாது? நீங்க படிச்சிட்டு அவருக்கு கதை சொல்றிங்களா ? அடேங்கப்பா. அடுத்த கதைக்கான தலைப்பு ரெடி. "ஆஸ்திரேலியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி".

   Delete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...