திங்கள், 4 மே, 2020

கொரோனா விலாஸ் ...

கொரோனா வந்தாலும் வந்தது அதுல இந்த மத பற்று நாடு பற்றுன்னு இருக்கவங்க மற்றும் ஆன்டி இந்தியன்ஸ்  இவங்க அளப்பறையை தாங்க மிடில.

இவனுங்க கொடுக்குற இம்சைக்கு கொரோனாவே பரவாயில்லைன்னு நிலைமைக்கு  தள்ளப்பட்டு இருக்கேன்.

முதலில்..

யாரும் கட்டிபிடிக்காதிங்க..  ஒரு செய்தி  வந்தவுடன்..

"அட அட அட.. நம்ம பாரத கலாச்சாரம் பாரு. இன்னைக்கு தான் பாரத கலாச்சாரத்தை உலகமே தெரிஞ்சி இருக்குனு சங்கு ஊதி ஒரு கும்பல் பெருமை" இந்த பெருமையோடு நிக்காம..

கைகுலுக்காதிங்க.. கைகூப்பி வணக்கம் சொல்லுங்கோ.. அட அட அட பாரத  கலாச்சாரம் பாருங்கோன்னு சொன்னவுடன்..

ஜப்பான் காரன்.. கை குலுக்காம்மா மூஞ்சை பாத்து வணக்கம்ன்னு சொன்னா  கிருமி நேரா உன் மூக்குக்குல தான் போகும். அதுக்கு தான் எங்க கலாச்சாரத்தில் கைகூப்பி "சயனோரானு" சொல்லும் போகுதே முகத்தை கவுத்துக்கிட்டு நிலத்தை பார்த்து சொல்வோம். எங்க கலாச்சாரம் தான் பெஸ்ட்.



இதை கேட்டுனு இருக்கும் போதே ..

முக கவசம் அணியாமல் வெளியே போகாதீங்கன்னு இன்னொரு செய்தி வர..

ஜெயின் சமூகத்தை சேர்ந்தோர்..

அட அட அட.. எங்க கலாச்சாரத்தை பாருங்க. நூத்துக்கணக்கான வருசமா நாங்க இப்படி தான் வாழுறோம்.  எங்களை போல வாழ்ந்தால் கொரோனா எல்லாம் வராது என்ற புகழ் பாட...

இஸ்லாமிய பெண்களோ...

அட அட அட... இப்படி தான் நாங்க இம்புட்டு வருசமா வாழறோம், என்னமோ  முகக்கவசத்தை நீங்க தான் கண்டுபிடிச்ச மாதிரின்னு ஒரு படி மேல போகையில்..

உணவுகளை யாரும் கையால் தொட்டு பரிமாறவேண்டாம் என்று (அது என்னமோ.. உணவு என்றாலே.. (நம்ம அக்கா கேக்கை கையால் பிசைந்து கொடுத்த பிளாஷ் பேக் தான் வருது) மற்றும் கையால் உண்ணவேண்டாம் என்று ஒரு செய்தி வர..

வெள்ளைகாரன் ..

அட அட அட.. எங்க கலாச்சாரத்தை பாரு .. எம்புட்டு நாளா நாங்க ஸ்பூன் கத்தி முள்கரண்டின்னு வைச்சி தாக்கினு இருக்கோம்ன்னு ஒரு பில்ட் அப்...

சரி.. இது எல்லாம் அவனவன் சுய தம்பட்டம்னு சொல்லிக்கலாம். மன்னிச்சிடலாம். அடுத்த விஷயம் தான் ரொம்ப மோசம்,. அடுத்தவனை தாக்குறது.

சைனா காரன்.. பாம்பு வொவால் லொட்டு லொசுக்குன்னு இருக்குற அம்புட்டையும் தின்னதால கொரோனா வருதுன்னு ஒருத்தன் சொல்ல..

அவனோ.. சரி.. நான் பாம்பை சாப்பிடுறேன்... உனக்கென்ன. கோமியத்தை குடிச்சிட்டு சாணியில் ஒரு குளியல் போட்டு தூங்க போன்னு அவன் பதில் சொல்ல..

வெறும் காய்வகைகள் மட்டும் சாப்பிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வராதுன்னு இவன் சொல்ல..

காயை மட்டும் சாப்பிட்டா கொரோனா மட்டும் தான் வராது.. மத்த எல்லாம் வரும்ன்னு இவன் சொல்ல..

அம்மாம் பெரிய சிக்கன்குனியாவுக்கே சிறந்த  மருந்து கருவாடு தான். இது என்ன ஜுஜுபி கொரோனா?  நேரா பேசின் பிரிட்ஜ் பக்கம் போய் கால் கிலோ நெத்திலி கால் கிலோ வாழை கால் கிலோ வாஞ்சீரம் கருவாடு வாங்கி.. கத்தரிக்காய் போட்டு கிண்டி காரமா ஒரு குழம்பு வைச்சி தாக்கு. அப்புறம் கொரோனா ஒன்பது தலமுறைக்கு உன் வூட்டு பக்கமே வராதுன்னு இன்னொருத்தன் சொல்ல.. 

இன்னொரு கும்பல்.. அப்பவே சொன்னேன் ... PETA PETA பேட்டை விலங்குகளை  கொல்லாதீர்கள்ன்னு பீட்டர்  விட..

சரி,  அப்படியே ஆடு மாட நாங்க  இனிமேல் கொல்ல மாட்டோம் சாப்பிட மாட்டோம்.. ஆனா.. இம்புட்டு ஆடு மாடுகளை கொல்லாம  விட்டா  இருக்குற புள் பூண்டு காய் வகைகள் அதுக்கே பத்தாது அப்புறம் மனுஷன் எதை தின்னுவான்.. அதனால் கொன்னா பாவம் தின்னா போகும்ன்னு போட்டு தாக்குன்னு தாக்க..

என்னமோ ஆபிசில் உக்கார்ந்து பைலை பாக்குற ஸ்டைலில் ஆயி போறதுனால தான் இந்த மாதிரி வைரஸ் பரவுது, எங்களை மாதிரி யோகா பாணியில் முட்டிய மடக்கி உக்காந்து பாருன்னுன்னு இன்னொருத்தன் எடுத்து விட


ஆளுக்கொரு குவார்ட்டர் டெய்லி வுட்டா கொரோனாவாது மண்ணாகட்டியாவதுன்னு  பல குடிமக்கள் எடுத்து சொல்ல..

கீழே கிடக்குற ரூவா நோட்டுகளை எடுக்காதிங்க.. அதுல கொரோனா  இருக்குன்னு ஒரு கும்பல் சொல்ல..

பசியோட சாவுறதை விட.. அந்த நோட்டை எடுத்து ஒரு வேளை சமைச்சி சாப்பிட்டாவது நிம்மதியா போய் சேருறேன்னு  இன்னொரு கும்பல் பதில் சொல்ல...

என்னத்த சொல்வேன் போங்க!  

5 கருத்துகள்:

  1. என்னத்த சொல்வேன் போங்க! அதுதான் எல்லாத்தையும் சொல்லிட்டிங்கலே வேற என்ன சொல்ல இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா..இப்படிச் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டு பார்த்தால் நீங்களும் அதையேச் சொல்லியிருக்கீங்க. ஹை-ஃபைவ்

      நீக்கு
  2. ஆஹா.ஆமாம் இல்லை எனச் சொல்லத் தோன்றுகிறது...வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு

  3. என்னமோ ஆபிசில் உக்கார்ந்து பைலை பாக்குற ஸ்டைலில் ஆயி போறதுனால தான் இந்த மாதிரி வைரஸ் பரவுது, எங்களை மாதிரி யோகா பாணியில் முட்டிய மடக்கி உக்காந்து பாருன்னுன்னு இன்னொருத்தன் எடுத்து விட : இது மட்டும் வேணாம் தம்பி , அனுபவிச்சவன் சொல்றேன்.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...