வியாழன், 7 மே, 2020

பொண்டாட்டிக்கு பயந்தவர் இல்ல, "துணைவியாரின் மகிழாளர்!"

"சித்தப்பூ..."

சிரித்து கொண்டே பேச்சை ஆரம்பித்தான் அருமை நண்பன் சாரதி !

"சொல்லு சாரதி, என்ன ரொம்ப நாள் கழிச்சி போன் பண்ற? வூட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?! உங்க ஊரில கொஞ்சம் பரவாயில்லைன்னு கேள்விபட்டன். அம்மணி வேற மருத்துவர், எல்லாம் ஓகே தான?! "

"எல்லாம் ஓகே  தான், இருந்தாலும் ஒரு சின்ன பிரச்சனை, அம்மணி தான் எனக்கே சொன்னாங்க"

"என்ன பிரச்சனை!!?"

"இப்ப எல்லாம் நீ நம்ம பிரெண்ட்ஷிப் பத்தி பதிவே போடுறதில்லையாம், எப்ப பாரு தண்டம் தண்டம்னு  இருக்கியாம் "

"அதுவும் சரிதான். நம்ம தான் இப்ப கொஞ்ச நாளா  மீட் பண்றது இல்லையே சாரதி! கன்டென்ட் வேணுமே!"



என்று பேசும்போதே தண்டம் அழைக்க..

"சாரதி, ஒரு  நிமிஷம் தண்டம் கூப்பிடுறான்"

"நான் உன்கூட பேசுனாலே அவனுக்கு வேர்த்துடுமே, கான்பரன்ஸில் போடு"

"ஒரு நிமிஷம்...., ஹலோ தண்டம்"

"வாத்தியாரே!!?"

"டே, நீ கான்பரன்ஸில் இருக்க, சாரதியும் இருக்கான்"

"ஹலோ சாரதி, எப்படி இருக்க?"

"சித்தப்பூ..ஏன்  அடிச்சி பிடிச்சி நானும் லைனில் இருக்கேன்னு சொன்ன? அவன் என்ன பத்தி ஏதாவது சொல்ல வந்தானா? "

"சே சே..!!"

"வாத்தியாரே, நீ பாட்டுக்கு சொல்லமா கொள்ளாம கான்பரன்ஸில் போட்டுட்டியே. நான் ஒரு வேளை சாரதியை பத்தி ஏதாவது உளறி இருந்தா? "

"அவனவன் பிரச்சனை அவனவனுக்கு, விஷயத்தை சொல்லு "

"சித்தப்பூ.. வந்தான்  தான் பார் தண்டம், உனக்கு கன்டென்ட் தான்!!!"

"ஹி ஹி.."

"வாத்தியாரே.. நேத்து பேசும் போது இந்த குடிகாரர்களை "

"யு மீன் மதுப்ரியர்ஸ்"?

"அவங்களே தான், இந்த குடிகாரர்களை மதுபிரியோர்ன்னு மரியாதையா மாத்தி கூப்பிடுறாங்கனு சொன்னீயே.. "

"அதுக்கு இப்ப என்ன ?"
 
"அதே மாதிரி மத்தவங்களையும் மரியாதையா கூப்பிடனும் "

"புரியல!!"

"இனிமேல் அம்மணிக்கு பயந்தவங்கள  "துணைவியாரின்  மகிழாளர்!"ன்னு கூப்பிடனும்"!

"கிழிஞ்சது போ "!

அதை கூட அப்படி சொல்ல கூடாது, "தையல் விட்டு விட்டது, செல்" என்று தான் சொல்லனும்.

"சித்தப்பூ.. வந்தான் பார் தண்டம்.. செம கன்டென்ட், நீ இனிமேல்  "துணைவியாரின்  மகிழாளர்" தான் தண்டம்!"

"வாத்தியாரே, சாரதி சிகரட் பிடிப்பான் தானே.."

"எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன், விட மாட்ற்றான்"

"இனிமேல் அவன் "புகை ரசிப்போர்"!

"சூப்பர் தண்டம்,  சித்தப்பூ.. இந்த பெண்களை கலாட்டா பண்ற அதுதான் ஈவ் டீசிங் ஆளுங்க, அவங்கள எப்படி கூப்பிடுவ ? "

"மாலை ஆசை காட்டுவோர்"

'ஈவுக்கு அர்த்தம் மாலை இல்ல சித்தப்பூ.. ஈவ்ன்னா இங்க ஏவாளுன்னு அர்த்தம்".

"ஓ, அப்ப "ஏவாளை ஏய்ப்பவர்கள்?"

"சூப்பர், பிக்  பாக்கெட்அடிக்குறவங்க"

"அடுத்தவர் பணத்தை இச்சையாளர்கள் "

"இந்த பான்  பராக் , வடக்கனுங்க!! ?"

"துப்புரவில்லாமல் துப்புபவர்கள்"

"சூதாட்டத்தில் மயங்கியவர்கள் ?'

"கிரிக்கெட் விசிறிகள் "

"பலனா விஷயத்துல வீழ்ந்தவங்க"?

"சிற்றின்ப சில்மிஷிகள்"

"கஞ்சா ட்ரக்ஸ் எடுக்குறவங்க?"

"மயக்கதில் மயங்குபவர்கள்"

"முகநூல் - ட்வீட்டர் அடிமைகள் ?"

"வாழ்வில்லா   மனிதர்கள்!"

" ஊரான் பணத்தை கொஞ்சம் கூட மனசாட்சியில்லாம திருடுரவங்க?"

"அரசியல்வாதிகள்!"

"ஓ.. சூப்பர்"

"எப்பப்பாரு போனில் இருக்கவங்க..? !"

"வேலை கெட்டவனுங்க", போனை வை தண்டம், பாக்கலாம் சாரதி, முக்கியமான வேலை இருக்கு"

"கிளம்பு சித்தப்பூ, உடனே பதிவு எழுதுடுவியே. என் பேரையும் போடு.. எனக்கும் ரசிகர்கள் இருக்காங்கன்னு  தெரியும் தானே! ".

3 கருத்துகள்:

  1. இப்படி எல்லாம் பதிவு எழுதுபவர்களை எப்படி அழைப்பது என்று சொல்லாமல் விட்டுவிட்டிங்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழையா எழுத்தாளர்கள் !

      நீக்கு
    2. அப்ப பதிவுகளை படிக்கும் வாசகர்களை அழையா வாசகர்கள் என்று சொல்லாமே

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...