வியாழன், 7 மே, 2020

ஏரி மேல போற கொரோனா!

அலை பேசி அலற !!!

"வாத்தியாரே, விஷயத்தை கேள்விபட்டியா?"

"கேள்விப்பட்டேன் பாணி, ரொம்ப தப்பு பண்ணுறாங்க"

"இன்னாது பாணியா? நீ தண்டபாணின்னு கூப்பிட்டா உன் பக்கத்துல  யாரோ இருக்காங்கோன்னு அர்த்தம், தண்டம்ன்னு கூப்பிட்டா நார்மலா இருக்கேன்னு அர்த்தம், பாணின்னு கூப்பிட்டா எதோ பிரச்சனைன்னு  ரொம்ப பீலிங்கில் இருக்கேன்னு  அர்த்தம்,அப்படி என்ன சோகமா கேள்வி பட்ட?"

"அத்தை விடு, நீ சொல்ல வந்ததை சொல்லு"

"அமெரிக்கா வாழ் தமிழ் மக்களிடம் ஒரு கணக்கெடுப்பு எடுத்தாங்களாம், அதோட முடிவை கேள்வி பட்டியா"?

"இல்லை, சொல்லு"



"இந்த கொரோனா ஊரடங்கு நேரத்துல எத்தனை பேருடைய கணவன்மார்கள் வீட்டை பெருக்கி  துடைச்சு பாத்திரம் கழுவி வீடு வேலையை செய்யுறாங்க" ன்னு ஒரு கேள்வி!"

"ஹ்ம்ம்"

"பதிலை சொன்னா சொன்னா நம்ப மாட்ட வாத்தியாரே "

"சொல்லு"

"23% கணவன்மார் இந்த கொரோனா நேரத்துல உதவி செய்றாங்களாம் வாத்தியாரே "

"வாவ்! 77% பண்ணலையா?"

"நீ ஒன்னு! மீதி 77%  கொரோனாவுக்கு முன்னாடியே துடைச்சு கழுவி வைச்சவங்கதான் "

"பாலை வார்த்த!  ஒரு நிமிஷம் அந்த 77%த்த நினைச்சி பொறாமை ஆகிட்டேன்"

"சரி, நீ என்னத்த பீலிங் ஆகுற மாதிரி கேள்விப்பட்ட?"

"வேணா விடு"

"சொல்லு வாத்தியாரே, யா காவாராயினும் நா காக்கா கூடாது, காத்தால்  பீலிங் இன்னும் அதிகமாயிடும் "

"பாணி, உனக்கே தெரியும், எங்க குடும்பத்தில  என்னை தவிர அம்புட்டு பேரும்  மருத்துவ துறையில் தான் வேலை செய்யுறாங்க"

"முன்னமே கேக்கணும்னு நினைச்சேன் வாத்தியாரே!, வூட்டுல அம்புட்டு பேரும் மருத்துவர், நர்ஸ், லேப் டெக்னீசியன், பார்மஸிஸிட் அப்படின்னு உன்னதமான வேலை செய்யும் போது நீ மட்டும் எப்படி "டப்பு எண்ணின்னு " இருக்க!?"

"ரொம்ப அவசியம்"

"சாரி, உணர்ச்சிவச பட்டுட்டேன, சொல்லு"

"ஹாஸ்பிடலில் வேலை செய்யரும் அம்புட்டு சொந்தங்களும் நட்புகளும் ஒரே ஒப்பாரி"

"ஆமா , வாத்தியாரே! நம்ம எல்லாரும் ஒர்க்  ப்ரம் ஹோம்னு பத்திரமா வூட்டுல இருக்கோம், இவங்க  நேரா போய் கொரோனா   இருக்க மருத்துவமனையிலேயே வேலை செய்யுறாங்க தானே, ஸ்ட்ரெஸ் இருக்கும் தான், என்னத்த பண்றது"

"பாணி, இவங்க ஒருத்தருக்கும் ஹாஸ்பிடலில் போய் வேலை செய்யுறது பிரச்சனை இல்ல, இந்த நாசமா போற அரசாங்கம் பண்ண வேலையை பத்தி தான் ஒப்பாரி"

"அரசாங்கம்!!,  அவங்க வேலையே இப்ப எல்லாம் தாலி அருக்குறது தானே, இப்ப என்ன பண்ணாங்க ?"

"இந்த கொரோனாவில் அவனவன் வங்கி கொள்ளைக்காரன் போல முகமூடி போட்டுக்குனு, அடுத்தவன்  வாயில துறுநாற்றம் போல ஆறு அடி தூரத்துல நின்னுக்குனு, வெந்ததை தின்னு விதி எப்ப வரும்னு இருக்கும் போது"

"என்ன வேணும்னா சொல்லு, சாராய கடைய திறந்துட்டாங்கன்னு மட்டும்ன்னு சொல்லிடாத!!"

"அதே தான்!!"

"அட பாவத்த! இது ஏரி மேல போற கொரோனா என்மேலே வந்து ஏறு கொரோனான்னு சொல்ற கதையாச்சே"

"இது நம்ம நாட்டுக்கு வந்த சாபம் பாணி, நேத்து மட்டும் தமிழ்களத்தில் அடகு கடையில் அம்புட்டு கூட்டமாம் "

"அடகுக்கடையிலும் சாராயம் விக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்"

"தண்டம், ஒரு பொண்ணு இருக்க வசதியான வூட்டுல  வாக்க பட்ட இல்ல, உனக்கு அடகு கடை கான்செப்ட்  தெரிய வாய்ப்பில்லை"

"சொல்லு"

"ஏற்கனவே எட்டு வாரம் வேலை சம்பளம் கூலின்னு எதுவும் இல்லாத மது பிரியர்கள் "

"மதுபிரியர்கள்!!?"

"அதான் பாணி குடிக்குறவங்க"

"யு மீன் குடிகாரனுங்க "

"டே, சத்தமா சொல்லாத, இப்ப அவங்க எல்லாரையும் மதுபிரியர்ன்னு மாத்திட்டாங்க"

"சொல்லு!"

"கூலின்னு இல்லாத ஆளுங்க, அம்புட்டு பேரும், பொண்டாட்டியோட தாலி, வளையல் குழந்தையோட  கொலுசுனு நேரா அடகு கடைக்கு போய்ட்டாங்க"

"பாவம் வாத்தியாரே!"

"ஹாஸ்பிடலில் வேலை செய்யுற அம்புட்டு பேரும் கொரோனா நமக்கு இன்னிக்கு தொத்துமா நாளைக்கு தொத்துமான்னு இருக்குற நேரத்துல இது வெளியில் போற ஓணான் கதை, பாணி"

"அடிப்படை அறிவு கூட   இவனுங்களுக்கு இல்லையா வாத்தியாரே, என்ன  ஒரு முட்டாள்தனம்"

"பாணி, இவனுங்களுக்கு அறிவு ரொம்பவே ஜாஸ்தி"

"புரியல"

"இம்புட்டு நாளா மக்கள் மது விளக்கு மதுவிலக்குனு  கேக்கும் போது, அதை படிப்படியா செய்யணும், திடு திப்புன்னு நிறுத்திட்டா நிறைய பிரச்சனை வரும், லொட்டு லொசுக்குனு சொல்லினு  இருந்தாங்க! இப்ப  கொரோனா புண்ணியத்துல நாப்பது நாள் கடையை மூடி இவனுங்க சொன்ன மாதிரி எந்த பிரச்னையும் வரல"

"அதையே காரணமா வைச்சி ஊத்தி மூட வேண்டியது தானே"

"நீ ஒன்னு,  இப்படியே விட்டா மதுவை சுத்தமா மறந்து வாழ பழகிடுவாங்க, அதனால அடிச்சி பிடிச்சி துறந்துட்டாங்க"

"கேவலம் வாத்தியாரே"

"இதுக்கும் மேலே இனொரு விஷயம் சொல்றேன் கேளு"

"தமிழகத்தில் அடுத்த வருஷம் தேர்தல் வரணும்! இவனுங்களுக்கு மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாதுன்னு தெரியும்। கொரோனா மேல பழியை போட்டுட்டு தேர்தலை றது பண்ணிட்டு ஜனாதிபதிக்கு ஆட்சின்னு சொல்லிட்டு அப்படியே ஒட்டிக்கலாம்னு இன்னொரு பிளான்"

"இது எல்லாம் சரி, கெடுவான் கேடு நினைப்பான் வாத்தியாரே""

"புரியல"

"இப்படி கொரோனாவை கொழுந்து விட்டு எரிய விட்டா அது இவனுகளையும் சேத்து  எரிச்சிடும், எரிக்கும்"

"என்னமோ போ"

"சரி வாத்தியாரே, அந்த 77 % வேலையை பாக்கணும்। நீயும் கிளம்பு। சதவீதம் குறைஞ்சிடக்கூடாது பாரு!

2 கருத்துகள்:

  1. 77 % வேலை செய்யும் ஆட்கள் செய்யும் வேலையை 100% செய்ய வேண்டி இருக்கிறது. ஹும்ம்ம்

    பதிலளிநீக்கு
  2. பிரியர்களால் என்னவாகும் என்று, சில நாட்களில் தெரிந்து விடும்...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...