2040 ல் ஒரு மாணவ-மாணவியின் பதில். இது கற்பனையாகவே இருக்கவேண்டும், இந்த பதிலுக்கு 0 மதிப்பெண் கிடைத்தால் நமக்கு மகிழ்ச்சி. இதே பதிலுக்கு அதிக மதிப்பெண்கள் கிடைத்தால், அய்யகோ!
2019 ம் இறுதியில் சைனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் ஒரு பரிசோதனை நிலையத்தில் மனிதனால் உருகுவாக்க பட்டது தான் இந்த கொரோனா வைரஸ் என்று மேற்கத்திய நாடுகள் குற்றம் சாடுகையில் சீன நாட்டு தலைமையோ அந்த வைரஸ் வொவ்வால், பாம்பு மற்றும் வேறு சில விலங்குகளினால் உருவானது என்ற விளக்கம் தந்தது.
இந்த வைரஸின் தாக்கத்தை சற்றும் புரிந்து கொள்ளாத WHO என்ற சுகாதார இயக்கம், யாரையும் எச்சரிக்காத நிலையில் 2020 ன் ஆரம்பத்தில் சைனாவில் இருந்து வெளிநாடு சென்ற பயணிகள் இந்த வைரஸை மற்ற நாடுகளுக்கு எடுத்து செல்ல இந்த வைரஸ் உலகத்திற்கே ஆபத்தை (பண்டமிக்) உருவாக்கியது.
ஆரம்பத்தில் சீனா, அடுத்து இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளை படு பாதாளத்திற்கு தள்ளிய இந்த வைரஸ் சில மாதங்கள் கழித்து அன்றைய வல்லரசான அமெரிக்காவை தாக்கியது.
இவ்வாறாக ஐரோப்பியாவியையும் அமெரிக்காவையும் தாக்கிய வைரஸ் தட்ப வெப்ப நிலை மற்றும் எதிர்சக்தி அதிகம் கொண்ட இந்தியர் மற்றும் ஆப்ரிக்க மண்ணை மட்டும் பெரிதளவில் தாக்கவில்லை.
அடுத்த சில மாதங்களில் அனைத்து நாடுகளும் கவனமான பல முடிவுகள் எடுக்க, இந்தியாவின் அமைந்துள்ள தமிழ்நாடு என்ற மாநிலத்தின் தலைமை எடுத்த முடிவுகள் அனைவரையும் வியக்க வைத்தது.
கிட்டத்தட்ட 50 நாட்கள் ஊரடங்கு என்று பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைத்த அனைத்தும் வீணாக போகும் வகையில் மே 7 , 2020 அன்று தமிழக ஜனாதிபதி (அன்றைய நாட்களில் முதல்வர் என்று அழைக்கபட்டார்) சாராய கடைகளை திறந்தார்.
இது அவசியமா என்று அநேகர் கேட்க, அண்டைய நாடுகளான கேரளா ரிபப்லிக், நம்ம கர்நாடகா தேசம், யுனைட்டட் ஸ்டேட்ஸ ஆப் ஆந்திரா அண்ட் கேரளா (அன்றைய இந்திய மாநிலங்கள்) சாராய கடைகளை திறந்ததால் மட்டுமே நாங்களும் திறந்தோம் என்று விளக்கம் அளித்தார்.
திறந்து மதுக்கடையில் மதுபிரியர்கள் ( அதற்கு முன் குடிகாரர்கள் என்று அறிய பட்டவர்கள்) சமூக விலகல் மற்றும் ஊரடங்கை முற்றிலும் தவிர்த்து விட்டு முண்டியடித்து கொண்டு வைரசை பகிர , ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் மட்டும் பொதுமக்கள் கொத்து கொத்தாக மாண்டு வீழ்ந்தனர்.
வருவாயை மட்டுமே மனதில் கொண்டு திறந்த இந்த மதுக்கடையின் மூலம் பரவிய இந்த வைரஸ் இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் பொருளாதாரத்தையும் பெருமளவில் பாதிக்க, ஒவ்வொரு மாநிலமாக தன் அரசாங்கம் மற்றும் அதிகாரிகளை இழக்க நாடே பல துண்டுகளாக சிதறியது. வசதி படைத்தோர் கப்பல் மற்றும் தனி விமானத்தில் வேறு சில நாடுகளுக்கு இடம்பெயர, இல்லாதோர் விதி என்று செத்து மடிந்து கொண்டு இருந்த காலத்தில் ..
2021 இல் இருந்து 2028 வரை இந்தியாவின் பெரும்பஞ்சம் காலமாக மாறியது. 2028 ன் ஆரம்பத்தில் இந்த வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்க பட, அதற்கு முன்னே எஞ்சி இருந்த மக்களின் உடலில் இந்த எதிர்சக்தி தானாக உருவாக மீதம் இருந்த மக்கள் இனி இந்த ஜனநாயக முறை தங்களுக்கு தாங்காது என்று முடிவு செய்து தங்கள் வாழ்க்கையை பண்டமாற்றுமுறைக்கு மாற்றி அமைத்து கொண்டு கிறிஸ்துவுக்கு முன் வருடமாக 200 நாட்களுக்கு செண்டு விட்டனர்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒரே வருடத்தில் முற்றிலும் அறவே ஒழிக்கும் முயற்சில் கிட்டத்தட்ட அனைவரும் வெற்றி கொள்ளும் நேரத்தில் அந்த மே 7ம் தேதி தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட அங்கே வருகை தந்த மது பிரியர்களால் அந்த வைரஸும் புத்துயிர் பெற்று உலகத்தையே தலைகீழாக மாற்றி போட்டது.
இதுவே மே 7ம் தேதி "இன்டர்நேஷனல் டிசாஸ்டர் டே" என்று பின்னர் மாறியது!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக