வெள்ளி, 8 மே, 2020

உன் ராசிபலன், என் ராசிபலன், என் ராசி உன் ராசி!

வாத்தியாரே!!!"


அலை பேசி அலற அடித்து பிடித்து எடுக்க எதிரில் அலறினான் அருமை நண்பன் தண்டபாணி. 

 "ரிலாக்ஸ் தண்டம், இம்புட்டு என்ன அவசரம்? கொரோனான்னு சொல்லிட்டு அம்புட்டு பேரும் வீட்டில தான இருக்கோம்" 


"இந்த கொள்ளில போற கொரோனாவை.. நான் என்னத்த சொல்வேன் வாத்தியாரே?"

"கஷ்டம் தான் தண்டம், என்ன ஆச்சி'?




"இன்னைக்கு ராசிபலன் பாத்தியா வாத்தியாரே"?


"டே, நான் என்னைக்கு தான் ராசிபலன் பார்த்தேன், நமக்கு தான் வருசத்துல 365 நாளும் ஒரே ராசி பலன் ஆச்சே"


"365 நாளும் ஒரே ராசி.. எங்க அதை சொல்லு!!!?"


"சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டே யிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் உண்டாகும். சிலர் உங்களை மட்டம் தட்டி பேசினாலும் உணர்ச்சி வசப்படாமல் இருக்க பாருங்கள்.  தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்த முயற்சிப்பார்கள். குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்"


"வாத்தியாரே, நான் என் ராசியை கேக்கல வாத்தியாரே உன் ராசியை கேட்டேன்"


"தண்டம், இது நம்ம ரெண்டு பேர் ராசி மட்டும் இல்ல, ஒட்டு மொத்த ஆம்பிளைங்க ராசி, சரி நீ போன் போட்ட விஷயத்தை சொல்லு"


"ராசிபலன் பார்த்தேன் வாத்தியாரே, இன்னைக்கு நாள தேத்துறது ரொம்ப கஷ்டம் போல இருக்கு"


"ஒரு நிமிஷம் இரு. நீ மிதுனம் தானே, நானே படிச்சிக்குறேன்"

// குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபா ரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள//.


படித்த பின்,


" நல்ல நாள் போல தானே இருக்கு தண்டம். இதுக்கு எதுக்கு டென்ஷன்?"


"வாத்தியாரே.. நல்லா சொன்ன போ. நம்ம எப்ப வாத்தியாரே காலையில் எழுந்தவுடன் நம்ம ராசிபலனை பார்த்தோம். வூட்டுக்காரமாவோட ராசிபலனை பார்த்து தானே நம்ம நாள் எப்படி இருக்கும்னு முடிவு செய்வோம்!!!"


"சுந்தரிக்கு என்ன போட்டு இருக்கு?"


"புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கணவர் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வரும்.. பழைய நினைவுகளில் மூழ்கும் நாள். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிரச்சினைகளின் ஆணி வேரை கண்டறிவீர்கள்"


"தண்டம் மவனே நீ செத்த!"


"இப்ப நான் என்னத்த செய்வேன் வாத்தியாரே!!?"


"இதுவும் கடந்து போகும்ன்னு தைரியமா இரு. இதுக்கு ஏன் கொரோனாவை கரிச்சி கொட்டுற?"


"இந்த மாதிரி ராசிபலன் நாள் அன்னிக்கு நான் காலையில் எழுந்தவுடனே ஆபிசில் நிறைய வேலைன்னு சொல்லிட்டு ராத்திரி பன்னெண்டு ஒண்ணுக்கு  தான் வூட்டுக்கு வருவேன். இந்த கொரோனாவால இப்ப வூட்டை விட்டு வெளியே போக முடியாதே வாத்தியாரே.."


"சமாளி தண்டம்"


"எப்படி வாத்தியாரே.. ஒரு பிரச்சனையா, ரெண்டா? ஏழரை ஒண்ணா வந்து இருக்கே வாத்தியாரே, புதிய முயற்சிகள்-பிள்ளைகளின் வருங்காலம்- விலை உயர்ந்த ஆபரணம்-உறவினர்களுடன் மனஸ்தாபம்- பிரச்சினைகளின் ஆணி வேர் , நான் இப்ப என்னத்த பண்ணுவேன் வாத்தியாரே?"


"'தைரியமா இரு பாணி. ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான்..ஹி ஹி!!! "


"என்ன வாத்தியாரே , சிரிச்ச மாதிரி சத்தம் கேட்டுச்சே, அடுத்தவனுக்கு இடுக்கண் வந்தா நகுகவா? "


"சே சே..நான் போய் சிரிப்பேனா!!!?"


"அதானே பார்த்தேன், இன்னைக்கு காலையில் உன் வூட்டுகாரம்மாவோட  ராசிபலனை பார்த்த நானே சிரிக்கல..நீ எப்படி சிரிப்ப?"


"எங்க வூட்டு அம்மணி ராசியா? அப்படி என்ன போட்டு இருக்கு?"


"அதை எப்படி என் வாயால சொல்வேன், நீயே படி, ஆல் தி பெஸ்ட்"


அடித்து பிடித்து அம்மணியின் ராசி பலனை பார்த்தால் ..


//கணவன்-மனைவிக்குள் விரிசல்  உண்டாகும் வாய்ப்பு அதிகம்.  முடிந்த வரை விலகியே இருங்கள். தேவையில்லாமல் ஈகோ அதிகரிக்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க முடியாத நாள். பல நாள் பாக்கி இருந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலாம்.   குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்//


பாழாபோன கொரோனா! நான் இப்ப என்ன செய்வேன்?

7 கருத்துகள்:

  1. ஹலோ வயசனவங்களும் வந்து படிப்பாங்க அதனால கொஞ்சம் பெரிய எழுத்தில் போடுவது தானே... இதிலும் சிக்கனமா மில்லியனரே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுர,

      காசா பணமா? எழுத்தை பெருசா மாத்திட்டேன். உன்னோட இன்னொரு கம்மெண்ட்டை டெலீட் பண்ணிட்டேன். குடுமபத்துல குழப்பம் வபிராகூடாது பாரு..

      ஹி ஹி.

      நீக்கு
  2. அய்யய்யோ இதோ நான் உடனே போய் எ ன் மனைவி ராசியைப்படிக்கிறேன் .
    இந்த ராசியெல்லாம் நான் கல்யாணத்தின் முன் பாட்டில்தான் பாடியிருக்கிறேன் .அந்தப்பாடல் ஏனோ இப்ப ஞாபகம் வருது . அதுல ஒரு நல்ல சொலுஷன் சொன்னான் .நான்தான் கவனி க்காம விட்டுட்டேன் .

    கன்னிராசி என் ராசி
    ரிஷபக்காளை ராசி என் ராசி
    பொருத்தம்தானா நீ யோசி : அது
    பொருந்தாவிட்டால் சந்நியாசி .

    பதிலளிநீக்கு
  3. ஹாஹாஹா . நீ காற்று நான் மரம். என்ன சொன்னாலும் தலையாட்டுவேன். பாடிடுங்க

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...