நேற்று ஒரு பதிவு எழுத அதற்கான பின்னூட்டங்களில் அனானிமஸ் ஒருவர் " விசு மதுவிலக்கை பற்றி உன்னுடைய கருத்து" என்னவென்று ஒரு கேள்வி கேட்டார்!
ஆள் என்னதான் அனானியா இருந்தாலும் கேள்வி அன்னோன்னியமான கேள்வி தானே। இவருக்கு எப்படி பதில் சொல்வது என்று நினைத்து
மது!!! அது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு। அதனை உடனே அறவே ஒழிக்க வேண்டும் என்று ஆரம்பித்தால் அம்சமாக இருக்கும் என்று ஒரு திட்டம் போட்டு அமருகையில் உள்ளிருந்து ஒரு அசரீரி!
விசு இந்த கேள்விக்கு நீ என்னமோ "ஒழுங்கு முத்துன கிழங்கு தோல் "போல நாடகம் போடாத! உண்மையை சொல்லு।
அதை எப்படி சொல்லுவேன் !!?
வாழ்க்கையில் பல மறக்கமுடியாத நிகழ்ச்சிகள், சுவைகள் நம்மில் என்றுமே நின்றுவிடும்। அப்படி நின்றதில் ஒன்று தான் என்வாழ்வின் முதல் சோமபானம் (பீர்).
பதினாறு முடிந்து பதினேழு ஆரம்பிக்கையில் புது ஊர் புது நண்பன் ஒருவன் "வா விசு" என்று வாங்கி கொடுத்த பீர் பாட்டில் மூடியை பல்லிலே கடித்து துப்பி முதல் முறையாக ஒரு வாய் முழுங்க...
சில்லனென்று சற்று கசப்போடு அது இறங்க।। அடே டே , இது ஒரு மாதிரி நல்லா இருக்கே என்று நினைக்க வைத்தது. 18 ல் இருந்து 23 வரை குறைந்த பட்சம் வாரத்திற்கு ஒருமுறை நட்புகளோடு சோசியல் ட்ரிங்க்ஸ்!
என்ன தான் இருந்தாலும் படிப்பில் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும் என்ற பிடிவாதத்தால் குடி எப்போதுமே இரண்டாம் பட்சமாகத்தான் இருந்தது ।
அந்த காலத்தில் ஒரு நாள் அளவுக்கு மீறி போக அங்கே வந்த என் ஒன்று விட்ட அண்ணன், தமிழ் ஆசிரியர் ...
"என்ன இளையவனே,மது அதிகமாக பருகிவிட்டாயா? தடுமாறுகிறாயே !!?"
என்று சொல்லும் போதே தலை சுத்தி போய் வாந்தி எடுக்க!
"அய்யகோ।। இளையவனுக்கு சோமபானத்தை தரமாக பருக கற்று தர தவறிவிட்டேனே" என்று நொந்து கொண்டே।।
"என்ன பருகினாய் இளையவனே!!?"
"பீரில் தான் ஆரம்பிச்சோம் ! அப்படியே ரம்மிற்க்கு போய்ட்டோம் !'"
"ஓ என் கடவுளே ! ஒரு சராசரி மனிதன் செய்யும் தவறை புரிந்துவிட்டாயே !பருகுவதற்கு முன் குப்பியை ஒரு முறை ஆராய்ந்து படிக்க வேண்டாமா! "?
"குப்பி? அப்படினா!!?"
"குப்பி, புட்டி , இளையவனே!"
"குட்டி !!!! அது எல்லாம் இல்ல, சும்மா கொஞ்சம் ஓவராக குடிச்சிட்டோம் !"
"அய்யகோ! குப்பியையும் புட்டியையும் சேர்த்து எழுதி குட்டி என்று கூறிவிட்டாயே !" , ஆங்கிலத்தில் பாட்டில் என்பார்கள், இளையவனே!"
"ஓ பாட்டில்! படிச்சேன்! பீர் ரம்ன்னு தான் போட்டு இருந்துச்சி!"
"நுனி புள் மேய்ந்துள்ளாயே இளையவனே !"
"புள் எல்லாம் குடிக்கல, குவாட்டர் தான் !"
"கால் பருகியதற்க்கே கால் தடுமாறி காலந்தெரியாமல் கவிழ்ந்துவிட்டாயே இளையவனே, குட்டியின் கீழே சில தத்துவங்கள் இருக்குமே அதை படித்தாயா?"
"சாரி!!?, குட்டி!!?"
"மன்னிக்கவும்! பாட்டிலின் கீழே சில தத்துவங்கள் உள்ளதே।। பருகுவதற்கு முன் படிக்கவில்லையா ?"
"இல்ல! "
அதில் தெளிவாக "குடி குடியை கெடுக்கும் " என்று அச்சடிக்க பட்டு இருக்குமே !
"எனக்கு ஏது குடி குடும்பம்!!?"
"இளையவனே அக்குடிக்கு அர்த்தம் குடும்பம் அல்ல"
"வேற என்ன ?"
"குடி குடியை கெடுக்கும்"! சமயத்தில் சாமத்தில் சோமம் பருகினால் சுறாவை நிராகரிக்க வேண்டும் !"
"புரியல "
"பீர் என்றால் அத்தோடு நிற்க வேண்டும் உன்னை யார் அதை தொடர்ந்து ரம் பருக சொன்னது? "
"ஓ! அது தான் குடி குடியை கெடுக்கும் அர்த்தமா ?"
"இளையவனே। நான் சொல்வதை நன்றாக கேட்டு கொள்"
"சொல்லுங்க!"
"மது என்பது தவறான விடயமல்ல! உடல் சோர்வாகும் போதும் சரி மனது சோர்வாகும் போதும் சரி மகிழ்ச்சியில் பொங்கும் போதும் சரி சோகத்தில் வாடும் போதும் சரி உப்பை போல் சேர்த்து கொண்டால் அனைத்தும் சரியே! இல்லாவிடில் அது உன் வாழ்க்கையையே கெடுத்துவிடும்!"
"ரியலி? இம்புட்டு பெரிய விஷயத்தை எங்கே இருந்து கத்துக்குனீங்க? "
"பல ஆண்டுகளுக்கு முன் உன்னை போல தான் நானும் சோமம் சுறா நாடு சீமை பனை தேங்காய் முந்திரி என்று இருந்தேன். ஒரு பாடில்லை திறந்த உடனேயே அதன் மூடியை கடித்து துப்பி எரிந்து விடுவேன்"
"மூடி, ஏன்"?"
"மூடி இருந்தால் தானே அந்த பாட்டிலில் மீதியை பாதுக்காக்க முடியும்.
மூடி இல்லாதால் மொத்தத்தையும் குடித்தாக வேண்டுமல்லவா? "
"வாவ்! எங்கேயோ போய்ட்டிங்க! "
"வாழ்க்கை இப்படி போய் கொண்டு இருக்கையில் எங்களுக்கு ஆங்கிலம் கற்று கொடுக்க வந்த வெள்ளை காரர் ஒருவர் ஒரு நாள் மனைவியோடு குடிப்பதை பார்த்தோம்"
"என்னாது!!? உங்க மனைவியோடு வெள்ளைக்காரர் குடிச்சாரா? என்ன சொல்றீங்க ?"
"என் மனைவி அல்ல இளையவனே, அவர்தம் மனைவியோடு "
பாட்டிலை திறந்த அவர்கள் ஆளுக்கொரு மடக்குதான்। பின்னர் அதை தள்ளி வைத்து விட்டார்கள்। ஒரே பாட்டிலை ஒன்னரை வாரம் குடித்த அவரிடம் , நான்
ஏன் ஒரே ஒரு மடக்கு? சரக்கு சரியில்லையா என்று விசாரிக்க!"
"அவரோ, இது என்ன குடிநீரா? வேண்டுமளவிற்கு குடிக்க! இதை அளவாக தான் நாம் முழுங்க வேண்டும்। இல்லாவிடில் இதுவே மலைப்பாம்பாகி நம்மை விழுங்கிவிடும் என்று சொல்ல அந்த வார்த்தைகளுக்கு நான் வீழ்ந்தே விட்டேன். அன்றில் இருந்து இன்றுவரை பலவருடம் ஆனாலும் , பணி முடித்து இரவு உணவிற்கு முன் ஒரு கோப்பை மட்டுமே। நீயும் அப்படியே வாழ கற்று கொள் ।
ஒன்று விட்டவனின் அறிவுரை பசுமரத்தாணி போல் நிற்க வாழ்க்கை பல வருடங்கள் ஓடியது! திருமணமான சில வாரங்களில் அம்மணி
"என்னங்க நான் முழுவாம இருக்கேன் "
என்று சொல்ல
அன்று இல்லத்தில் இருந்த குப்பி புட்டி பாட்டில் அனைத்தையும் தலையில் சுத்தி விட்டெறிந்த நான் இன்று வரை அதை தொடவேயில்லை. எத்தனை வருடமா? மூத்தவளுக்கு இப்போது 20 வயது।
தலைப்பிற்கு வருவோம் .
தமிழ் நாட்டில் மதுவிலக்கு !
சாத்தியமா?
இல்லை , சாத்தியம் இல்லை என்பதே சத்தியம் !
கடந்த பல ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு மது வெறி உண்டோ இல்லையோ அரசிற்கு மதுவின் மேல் கொலை வெறி. தமிழக அரசினால் மதுவை ஒதுக்கிவிட்டு ஒரு மாதம் கூட வரவு செலவை சமாளிக்க முடியாது। மொத்த பொருளாதாரமும் தலைகீழாகிவிடும் ।
முழு மதுவிலக்கை அமல் படுத்தினால் இந்த பழக்கத்திற்கு அடிமையாகிய பொது மக்களில் சில பேர் சில விபரீத முடிவுகளை சந்திக்க நேரிடும்। ஆனால் இது மிகவும் சிறிய பிரச்சனையே। மது என்பது தமிழக பொருளாதாரத்தின் முதுகெலும்பாகி விட்டது! இதை அறவே அகற்றுவது ஆகாத காரியம் !
சில அரசியல்வாதிகள் ।।
குடியை படி படியாக நிறுத்த வேண்டும் !
கள்ள சாராயம் காய்ச்சப்படும் !
மற்ற மாநிலங்களை பாருங்கள் !
இல்லத்தில் பிரச்சனை வரும்!
என்று சொல்வதெல்லாம் பிதற்றல் கையாலாகாத்தனம்.
முடிவாக சொல்லவேண்டுமென்றால் மக்களை விட அரசே மதுவிற்கு அடிமை! என்று இந்த அரசு அதை புரிந்து கொள்கிறதோ அன்று தமிழ் நாடு விளங்கும்.
அளவான மது ஆண்டிக்கு கேடு அல்ல, அளவற்ற மது அரசிற்கு கேடு !
குடிக்குடியை கெடுக்கும் !

💥ஒன்று மட்டும் தெளிவாகிறது..💥
பதிலளிநீக்குமக்களால குடிக்காம 40 நாள் இருக்க முடியும்...
ஆனா அத விக்காம அரசாங்கத்தால இருக்க முடியாது.
-இன்றுதான் எங்கோ படித்தேன்.
அண்ணே ।।।
பதிலளிநீக்குவேற எங்கேயும் படிக்கல இங்கே தான் படிச்சி இருப்பீங்க ! நம்ம அரசு குடிவெறியில் இருந்து மீளவே முடியாது! வேற வழியே இல்லை।
மதுவிலக்கு என்பது கொக்கு தலையில் எண்ணையை வைச்சி உச்சிவெய்யில் வந்தவுடன் கொக்கை பிடிச்ச கதை தான் !
அரசும் மக்களும் இதிலிருந்து மீள்வது சிரமம் தான்...
பதிலளிநீக்குநீங்க சிக்கிரமாக குடிக்க ஆரம்பிச்சதால் சீக்கிரமாக விட்டுவிட்டீங்க நான் லேட்டாக ஆரம்பித்ததனால் "லேட்" ஆன பிறகுதான் விட முடியும்
மதுர,
நீக்குநான் எப்பவுமே யாரிடமும் குடிப்பதை நிறுத்துன்னு சொல்ல மாட்டேன்। அலைவது பெற்று வளமோடு வாழ்। அம்புட்டு தான்।
Drinking is an art. One should learn it and practice it.