செவ்வாய், 19 செப்டம்பர், 2017

MP பென்ஷன் வேண்டாம் - நடிகர் சரத்குமார் !


நெஞ்சு பொறுக்குதில்லையே..

இந்த வாரம் ஒரு செய்தி படித்தேன்.

//எம்பிக்கான பென்ஷன் எனக்கு வேண்டாம்.. ராஜ்யசபா செயலருக்கு சரத்குமார் கடிதம்//

இந்த நடிகர் சரத்குமார் 2006 ம் ஆண்டு M P பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். 2006 ல் இருந்து இன்று வரை நம் வரி பணத்தில் இருந்து ஓய்வூதியம் கொடுக்க பட்டுள்ளது.

சரி.. ஓய்வூதியம் என்பது ஒரு சராசரி ஆள் வயதான காலத்தில் இனிமேல் தன்னால் உழைக்க முடியாது என்ற நிலை வரும் போது இத்தனை
 நாள் செய்த பணிக்காக தரப்படுவது.



இப்படி பட்ட ஓய்வூதியத்தை ஐந்தே வருடம் M P  யாக  இருந்த ஒருவருக்கு எப்படி தரலாம்?


எல்லா விஷயத்திலும் கட்சிகள் எதிரும் புதிருமாக இருந்தாலும் இந்த மாதிரி பண பட்டுவாடா விஷயத்தில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

அவனவன் இங்கே அன்றாட காய்ச்சியாக அடுத்த வேளை சோறு எங்கே இருந்து வரும்ன்னு அவதி படும் போது இவங்களுக்கு ஓய்வூதியம்.

அம்புட்டும் நம் வரி பணத்தில் இருந்து.

இவங்க MP யா இருக்கும் போது எத்தனை ஆணி புடுங்குனாங்க என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த பதவிக்கு மாதத்திற்கு குறைந்தபட்சம் இரண்டரை லட்சத்தில் இருந்து மூணு லட்சம் வரை  வரி பணம் வீணடிப்பு.

சரி, நம்மை பிடிச்ச ஏழரை ஒழிஞ்சதுனு விட்டுட முடியாது. இந்த அஞ்சு வருஷம் வேலை செஞ்ச இவங்களுக்கு வாழ்க்கை முழுக்க பென்ஷன்.

சரத்குமாரை எடுத்து கொள்வோம்.

2002 ல் இருந்து 2007 வரை M P யாக இருந்தவர்.. இன்றுவரை
 பென்ஷன் வாங்கி உள்ளார்.

மொத்தம் பத்து வருடம். மாதரத்திற்கு ஐம்பதாயிரம் என்றே வைத்து கொள்வோம் .. வருடத்திற்கு ஆறு லட்சம். மொத்தம் பதினோரு வருடத்திற்கு  கிட்டத்தட்ட 66  லட்சம்.

இவ்வளவு பணம் இந்த கடைசி 11   வருடத்தில் பெற்று கொண்டு இவர் ஆற்றிய பணிகள் என்ன?

நடிகர் சங்க தலைவர் .... ( அதுலயும் ஊழல் - லஞ்சம் குற்றசாட்டு - கும்பகோணம் தீ விபத்து நன்கொடை கணக்கு இன்னும் வரல)

சினிமா கிரிக்கெட் தொடர்..

சித்தியை ஸ்டுடியோவுக்கு அழைத்து செல்லும் பணி.

மகனை பள்ளிக்கு அழைத்து செல்லும் பணி.

மாதம் ஒரு முறை ச ம க வின் அறிக்கை  ...

இதுக்கு எதுக்கு பென்ஷன்?

இவர் ஒரு உதாரணம் தான்..

இந்த ராஜ்ய சபா MP பென்ஷன் வாங்கி நமக்காக தன்னலமின்றி உழைத்த  சிலரின் பெயர்களை தருகிறேன்  .. வாழ்த்துங்கள்.

86 ல் இருந்து இறக்கும் வரை பென்ஷன் பெற்ற சிவாஜி கணேசன்
99  ல் இருந்து பென்ஷன் வாங்கும் வைஜஜெயந்தி மாலா..
03 ல் இருந்து பென்ஷன் வாங்கும் ஷபானா ஆஸ்மி...
05  ல் இருந்து பென்ஷன் வாங்கும் லதா மங்கேஷ்கர்
86 ல் இருந்து இறக்கும் வரை பென்ஷன் பெற்ற சோ ராமசாமி
12 ல் இருந்து இன்று வரை சம்பளம் வாங்கி கொண்டு இருக்கும் நடிகை ரேகா மற்றும் டெண்டுல்கர்

இது எல்லாம் கூட பரவாயில்லை..

SS சந்திரன் ன்னு ஒரு காமெடி நடிகர்.. அவருக்கு கூட இந்த பதவி கொடுத்து பென்ஷன் தந்தாங்க..

நெஞ்சு பொறுக்குதில்லையே..


பின் குறிப்பு :

இது ஐம்பதாயிரம் இல்ல.. நாற்பதாயிரம்ன்னு சொல்லினு கிளம்பிடாந்திங்க.. ஆயிரம் ரூபாயாவே இருந்தாலும் அது வீண் தான்..

ரெண்டாவது.. நாங்க வாங்கின பென்ஷனை அப்படியே ஏழைகளுக்கு கொடுத்தோம்னு சொல்லிடாதீங்க.. ப்ளீஸ்.

3 கருத்துகள்:

  1. புள்ளி விபர கணக்கு கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே...

    பதிலளிநீக்கு
  2. சரத் குமார் இப்போதாவது வேண்டாம் என்று சொன்னாரே அதற்காக கொஞ்சம் பாராட்டலாம். இது போல் எத்தனை எம்பிக்கள் எம்.எல் ஏ க்கள் பென்ஷன் வாங்கிக் கொண்டிருக்கிறார்களோ? இந்த லட்சணத்தில் அரசு செலவில் மணிமண்டபம் வேறு

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...