வியாழன், 21 செப்டம்பர், 2017

திருமணம் வெற்றி பெற சில ரகசியங்கள்....

அலை பேசி அலறியது...

சொல்லு சாரதி..

என்னத்த சொல்றது...சித்தப்பூ..

பின்ன எதுக்கு கூப்பிட்ட...?

சொல்றதுக்கு தான்...

சரி சொல்லு...

ஆபிசில் ஒரு பிரச்சனை...?

கன்டினியூ..

கூட வேளை செய்யுற ஒரு மெக்சிக்கன் அம்மணி என்னிடம்  "டீ  அமோ " ன்னு சொல்லிடிச்சி...

டீ வேணுமான்னு அவங்க மொழியில் கேட்டு இருப்பாங்க... வேணாம்னு சொல்லிடு..

சித்தப்பூ... பி சீரியஸ்... "டீ அமோ " னா "ஐ லவ் யு" ன்னு அர்த்தம்.

எங்க கம்பெனியில் 500 க்கும்   மேலே மெக்சிகன் தான் ..நானும் சொல்ல கேள்வி பட்டு  இருக்கேன்,

சித்தப்பூ... சொல்லவே இல்லையே.. இந்த விஷயம் அண்ணிக்கு
தெரியுமா?



டே... அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்றத கேள்வி பட்டு இருக்கேன்.. எனக்கு இன்னும் எங்க வீட்டு மாமணியே "டீஆமோனு" சொன்னது இல்ல..

ஏன்.. "அரேஞ்ட் மேரேஜா"..?

அரேஞ்ட் தான் ... அம்புட்டும் அம்மணி அரேஞ் பண்ணது...

சரி விஷயத்துக்கு வா... இப்ப நான் என்ன பண்றது..?

டீ அமோ.. மீ டூ ன்னு சொல்லி வை..!

சித்தப்பூ.. பிரேமாவுக்கு தெரிஞ்சா...

சனிக்கிழமை பால் தான்.. 2  % Fat  Free !

இப்ப என்ன பண்ண சொல்ற?


"அஸ்தலவிஷ்டா பேபின்னு " அர்னால்டு சிவாஜிநகர் பாணியில் சொல்லு.

அப்படினா.. ?

அப்புறம் பாக்கலாம்னு.. அர்த்தம்..

அப்புறம் பாக்கலாம்னா?

ஒரு வேளை உனக்கும் பிரேமாவுக்கும் எதோ பிரச்சனை வந்து பிரேமா உன்னை ஊரை விட்டு தள்ளி வைச்சா.. இவங்கள பிக்கப் பண்ணிக்கலாம் இல்ல.. அது தான் முன்னேற்பாடா?

சித்தப்பூ. .உன் மனசுல தான் என் வாழ்க்கையை பத்தி என்ன என்ன நல்ல விஷயமா யோசிச்சி வைச்சி இருக்க...இப்ப என்ன  பண்றது...?

அந்த அம்மணியிடம் .. நேர போய்... "எஸ்டோய்  பிளிஸ்ட்மெண்ட்டே  கேஸடோ" ன்னு சொல்லிடு..

இன்னாது.. "சனம் தேறி கசமாலாமா" .. அவளை விடு எனக்கே ஹிந்தி தெரியாதே ...அப்படினா என்ன அர்த்தம்.. ஏடா கூடமா ஏதாவது சொல்லி தராத சித்தப்பூ..

 "எஸ்டோய்  பிளிஸ்ட்மெண்ட்டே  கேஸடோ" ன்னா... ஐ அம் ஹாப்பிலி மேரீட்ன்னு அர்த்தம்.

நான் எதுக்கு பொய் சொல்லணும்?

இதுல ஏது பொய்.. ? நீ மேரீட் தானே..

மேரீட் தான் .... ஆனா .. ஹாப்பிலி மேரீட் நான் இல்லையே. பிரேமா தானே.. நான் சும்மா தான் குப்பையை கொட்டினு  இருக்கேன்.

"ஹேப்பி வைப் .. ஹாப்பி லைப்". தெரியும் தானே.. நேரா சொல்லிடு..

நீ ஒன்னு.. உடனே அதை தான் சொன்னேன்..அதுக்கு அவ...

அவ..

நான் பொய் சொல்றேன்னு  சொல்றா...

நீ எங்கேயோ தப்பு பண்ணி இருக்க சாரதி..

என்ன சொல்ற..?

அந்த அம்மணியை நீ தவறா  லீட் பண்ணி இருக்க..

சித்தப்பூ... என்ன சொல்ற...?

உனக்கு கல்யாணம் ஆனத அவளுக்கு சொல்லி இருக்கியா?

இல்ல..

இந்த மாதிரி பிரச்னை வர கூடாதுன்னு தான் வருசத்துக்கு ஒரு முறை நீ குடும்பத்தோட சந்தோசமா இருக்க மாதிரி பெண்டாட்டி புள்ளை குட்டிகளோடு ஒரு போட்டோ எடுத்து ஆபிசில்   மாட்டி வைக்கணும்.. அத செஞ்சியா?

வீட்டுல அவங்களோடு படுற பாடே போதும்.. இதுல ஆபிசில் வேற அவங்க போட்டோவா?

டே.. அப்படி வைச்சி இருந்தா அந்த அம்மணி இப்படி சொல்லி இருக்காதே..

சரி.. அந்த அம்மணியிடம் நீ பொதுவா எப்படி பேசுவ..?

காலையில் பார்த்தவுடன்  "நல்லா தூங்குனியான்னு" கேப்பேன்..

அப்புறம்...

"கனவு ஏதாவது வந்ததான்னு" கேப்பேன்..

அப்புறம்..

"டிப்பன் என்னன்னு" கேப்பேன்..

அப்புறம்...

"லஞ்ச்   என்னனு" கேப்பேன்..

அப்புறம்..

"3 மணிக்கு கிச்சனுக்கு   டீ  குடிக்க போகும் போது வறீயான்னு " கேப்பேன்..

எதுக்கு?

டீ குடிக்க தான்.. கூட கூட பேசாத சித்தப்பூ ....

அப்புறம்..

"ஈவினிங் என்ன விஷேஷம்ன்னு" கேப்பேன்...

அப்புறம்..

"ராத்திரி எப்ப தூங்குவேன்னு" கேப்பேன்..

அப்புறம்...

மீண்டும் காலையில்...

சொல்லு...

"நல்லா தூங்குனியான்னு" கேப்பேன்..

இது தான் தினந்தோறுமா...?

சே சே... வெள்ளி கிழமை சாயங்காலம்....

சாயங்காலம்...

"வீக் எண்டு என்ன விஷேஷம்ன்னு" கேப்பேன்..

அப்புறம்..

திங்கள் காலையில் "வீக் எண்டு எப்படி போச்சின்னு" கேப்பேன்..

வேற..

வேற என்ன கேக்க இருக்கு...?

சாரதி.. இம்புட்டு விஷயத்தை நீ ப்ரேமாட்ட என்னைக்காவது கேட்டு இருக்கியா?

ஹ்ம்.. நா... அது வந்து... நீ...

கேட்டு இருக்கியா?

ஆபிசில் வேலை  செய்யுற எதோ ஒரு அம்மணியிடம் நீ இம்புட்டு கேட்டு இருக்க.. அது தான் அவங்க நீ ஏதோ கோடு போடுறேன்னு யோசித்தின்னு ரோடு போட்டுட்டாங்க..

இப்ப என்ன பண்றது..?

மூணு வேலை  பண்ணு .. முதலில் ஒரு குடும்ப போட்டோ எடுத்து ஆபிசில் வை..

இரண்டாவது...?

அந்த அம்மணியிடம்.. இது எல்லாம் வேலைக்காவதுன்னு சொல்லிடு...

மூணாவது..?

ஆபிசில் இந்த மாதிரி ஆச்சின்னு ப்ரேமாட்ட சொல்லிடு..

முதல் ரெண்டு சரி.. மூணாவது எதுக்கு...?

தர்ம அடிக்கு தான்..

சித்தப்பூ.... !

முதல் ரெண்டு மட்டும் பண்ணு... மூணாவது நான் தமாஷ் பண்ணேன்..

ஒரு விஷயம் கேக்கட்டா சித்தப்பூ.

கேளு...

நீ போட்டோவை  வைச்சி இருக்கியா?

நான் வைக்க தேவை இல்லை.. முகத்தில் இருக்கும் சந்தோச ரேகையை பார்த்தே  பார்த்தே எனக்கு கண்ணாலம்  ஆயிருக்கும்னு.. அமெரிக்கன் ஆப்ரிக்கன் ஜப்பான்காரங்க எல்லாருக்கும் தெரியும்..

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு..

என்னத்த சொல்றது..?

போட்டோ வைச்சி இருக்கியா?

இருந்தேன் .. இப்ப எடுத்துட்டேன்..

ஏன்.. ஆபிசில் ஏதாவது விசேஷமா?

ஆபிசில் இல்ல.. வீட்டுல விஷேசம் ..


புரியல..

இன்னொரு நாள் விளக்கமா சொல்றேன்..

பின் குறிப்பு :

எனக்கு நடந்த அந்த சோக கதையை இவனுக்கு எப்படி சொல்வேன்... 

6 கருத்துகள்:

  1. அருமை நண்பரே "அந்த" சோக கதை கேட்க ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
  2. ஹாஹாஹா கடைசி பஞ்ச்!!!

    ரசித்தோம்...விசு!

    பதிலளிநீக்கு
  3. நல்ல காமடி பதிவு ரசித்தேன் மகிழ்தேன்

    பதிலளிநீக்கு
  4. வீட்டுல விசேசமா..? அண்ணே.. சந்தோசம். Congratulations!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...