சென்ற வாரம் பதிவில் எழுதியதை போல், Football சீசன் ஆரம்பித்து விட்டது. இந்தியாவில் கிரிக்கட் போல் அமெரிக்காவில் Football is a religion. இந்தியாவிலாவது கிரிக்கெட் மட்டும் தான் பிரபலமான விளையாட்டு. இங்கே basketball, baseball, Ice Hockey என்று மற்ற விளையாட்டுகளும் பிரபலமாக இருந்தாலும் Football, Fottball தான்.
கடந்த ஆறு மாதங்களாக காய்ந்து போய் வீட்டில் விட்டத்தை பார்த்து கொண்டு இருந்த என்னை போன்றோருக்கு இந்த வாரம் அறுசுவை என்று தான் சொல்லவேண்டும்.
Ready for Game |
வியாழன் அன்று Football சீசன் ஆரம்பிக்க, வெள்ளி மற்றும் சனி US OPEN Tennis , அரை இறுதி மற்றும் இறுதி ஆட்டம். அதுமட்டும் இல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சார்ந்த NBA Los Angels Lakers மற்றும் Los Angels Clippers அணிகளும் பிளோரிடாவில் சிறப்பாக ஆடிக்கொண்டு இருக்கின்றன. இந்த இரண்டு அணிகளில் ஒன்று தான் இறுதி ஆட்டத்தில் பங்கேற்கும் என்றும் கோப்பையை வெல்லும் என்றும் எதிர் பார்க்க படுகின்றது.
இது இப்படி போய் கொண்டு இருக்கையில்.. பழம் நழுவி பாலில் விழுவதை போல்,, இந்த வியாழன் முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு US OPEN GOLF துவங்க இருக்கின்றது.
திருவிளையாடல் தருமி போல் " எனக்கில்லை, எனக்கில்லை" என்று ஒப்பாரி வைத்து கொண்டு இருந்த எனக்கு திகட்ட திகட்ட பரிமாட படுகின்றது.
எங்கேயோ ஒரு குரல்..
"இப்படி போட்டு தாக்கின்னு இருக்கீயே, வூட்டுல வேலை கீலை எதுவும் செய்யலையா? அம்மணி ஓகேவான்னு "
பொறாமையில் கேக்குறது கேக்குது.
சற்றே, கொஞ்சம் பின்னோக்கி செல்வோம்.
சில நாட்களுக்கு முன் வாட்சப்பில் ஒரு பதிவு படித்தேன்.
"முப்பதில் துவங்கி ஐம்பது வரை குடும்பத்திற்காகாவே வாழ்ந்த ஒரு மனிதனின் ஐம்பது + மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும் "
எம்புட்டு உண்மை!
இந்த 30 - 50 காலத்தில், நமக்கு நாம வாழ்ந்ததே தெரியாம மணியையும், ராசத்திகளையும் பத்தியே நினைப்பு இருந்ததால் இந்த விளையாட்டு எல்லாம் எப்பாவது அத்தி பூத்தார் போல் தான்.
பிள்ளைகள் ரெண்டும் ஆண்டவன் புண்ணியத்தில் கல்லூரிக்கு போறாங்க. அம்மணி மருத்துவமனை வேலை சமூக சேவைன்னு பயங்கர பிசி.
அதனால நாம தனி காட்டு ராஜா..
சரி தலைப்புக்கு வரணுமா?
மூத்தவள் கல்லூரியின் இறுதி வருடம். வீட்டில் இருந்து ஒரு 200 கிலோமீட்டர் தொலைவில் ஒரு வீட்டில் சில ரூம் மேட்ஸ் கூட. முழுநேர வேலை மற்றும் கல்லூரியில் படிப்பு.
இளையவள், இந்த வருடம் கல்லூரியில் Freshman. இந்த பாழாபோன கொரோனாவினால் அம்புட்டும் ஆன்லைனில். வீட்டில் இருந்து தான் படிப்பு. நம்ம தான் பிள்ளைகளுக்கு சின்ன வயதில் இருந்து ஸ்போர்ட்ஸில் இன்ட்ரெஸ்ட் காட்டி வளத்துட்டோமே..
மேல நான் சொன்ன அம்புட்டு விளையாட்டையும் பார்க்க இளையவளும் தயாராகி நாங்க இரண்டு பேரும் சனி கிழமை விவாதித்து பேசி கொண்டு இருக்கையில், எதிரில் வந்த அம்மணி..
"இந்த ஞாயிறு எனக்கு பயங்கர வேலை இருக்கு. காலையில் நாலு மணி நேரம் ஆன் லைன் மீட்டிங் அப்புறம் அடுத்த நாலு மணி நேரம் கொஞ்சம் படிக்கணும்"
இளையவள், " ஒரு வேலை பண்ணுங்க. உங்களுக்கு தேவையானதை எல்லாத்தையும் எடுத்துக்குனு உங்க ரூமுன்னு போய் கதவை பூட்டிக்குங்க., நாங்க டிப்பன் லன்ச் டி காப்பின்னு என்னவேணும்னாலும் அனுப்புறோம் "
அம்மணிக்கு நேரத்துக்கு டீ - முறுக்கு - பிஸ்கட் |
"ஏன்?"
"நாள் முழுக்க சரியான Football "
"நான் வேணும்னா, என் ஆபிசுக்கு போயிட்டு சாயங்காலம் வரட்டுமா "
You cant have football without Wings |
என்று அம்மணி இளையவள் கேட்க, நான் மயங்கி விழுந்து விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.
மாம்பழம் - நெத்திலி லவ்லி காம்போ |
"ஆபிஸ் எல்லாம் வேண்டாம், இங்கேயே இருங்க, நாங்க உங்களை தொந்தரவு பண்ண மாட்டோம், நீங்களும் எங்களை தொந்தரவு பண்ண கூடாது.. "
என்று சொல்ல இருவரும் சிரிக்க.. மனதில்..
அட பாவி...மகள் சொன்னவுடன் சிரிச்சினே, எல்லாத்துக்கும் ஓகேன்னு சொல்றாங்களே.. இதையே சில வருடத்துக்கு முன்னால நான் சொல்லி இருந்தா.. !!!?
"வீட்டில ஆயிரம் வேலை இருக்கு.. இதுல விளையாட்டு என்ன வேண்டி இருக்குன்னு"
சொல்லி இருப்பாங்களே என்று நினைத்து..
என்ன சுகம்.. !!! |
நமக்கு தான் வாயில பிரச்னையாச்சே.. அம்மணியிடம் கேட்டேவிட்டேன்.
"என்ன, மகளுக்கு மட்டும் சிரிச்சினே, எல்லாத்துக்கும் ஓகேன்னு சொல்லுற.. இதையே நான் சொல்லி இருந்தா... Hmm, afterall blood is thicker than water, ah"
"ஐயோ.. அவ பாவங்க.. காலேஜில் சந்தோசமா பிரெண்ட்ஸ் கூட இருக்க வேண்டியவ, வயசான உங்களோடு மாட்டினு இருக்கா.. கொஞ்சமாவது சந்தோசமா இருக்கட்டும். அதுதான். "
மனதில்..
அடுத்த பிப்ரவரி Superbowl வரை நிலைமை இப்படியே இருக்கணும். என்று நினைத்து கொண்டே ஆட்டத்தை பார்க்க.. ஞாயிறின் கடைசி ஆட்டம்..எனக்கு பிடித்த லாஸ் ஏஞ்சல்ஸ் "RAMS " அணி தன்னுடைய முதல் ஆட்டத்தை வெற்றியோடு துவங்கியது.
GO RAMS !
மாம்பழம் - நெத்திலி - அடடே இதுவரை தெரியாமல் போச்சே...!
பதிலளிநீக்குவிளையாட்டு வர்ணனைகளும் தொடரட்டும்...
பதிலளிநீக்கு