வாழ்க்கை தான் எப்படி மாறிவிட்டது? சென்ற வருடம் இதே மாதத்தில், கனடாவில் டொரொன்டோவில் ஒரு திருமணத்திற்கு சென்றேன். டொரொன்டோவில் அடியேனின் அக்காவும் குடும்பத்தோடு வாழ்கிறார்கள் தானே. அதனால் திருமணம் முடிந்ததும் அவர்களோடு இரண்டு நாள் இருந்து விட்டு வரலாம் என்று திட்டம்.
கிளம்ப இரண்டே நாட்கள் இருக்கையில்
"கம்பெனியின் தலை, வெள்ளி காலையில் ஒரு அவசர மீட்டிங் இருக்கு " ஊரில் தானே இருக்க!?"
"ஐயோ.. டொரொன்டோ போக வேண்டி இருக்கே "
"வாட் !, RAPTORS - WARRIRORS பாஸ்கெட்பால் பைனல்ஸ் பாக்க போறியா"?
மனதில்..ஆசை என்னமோ தாசில் பண்ணத்தான்.. அமைஞ்செதென்னவோ எருமை மேய்க்க தான்.
"இல்ல, ஒரு கல்யாணத்துக்கு!!!"
"போற தான் போற, பைனல்ஸும் பாத்துட்டு வா"
இவருக்கு எப்படி விளக்க போறேன்னு ஒரு நொடி நினைத்து விட்டு. சலங்கை ஒளி கமலஹாசன் பாணியில்..
"இரண்டு விஷயம்"
ஒன்னு..
"அந்த ஆட்டத்துக்கான டிக்கட்ஸ் தலைக்கு ஆயிரம் டாலர்"
இரண்டு ...
"அந்த கேம் திங்கள் கிழமை, நான் சன்டே ராத்திரி ரிட்டர்ன் டிக்கெட் போட்டாச்சு"
"அதை எல்லாம் நான் பாத்துக்குறேன் "
டிக் டிக் டிக் படத்தில் இது ஒரு நிலா காலம் படத்தில் நடுவில் ஒரு ஆண் குரல் ...
"ஹா.. றங்குன ராகா ரீஹா ராஹா றங்குறாக றீரா ராக "
ன்னு பாடுமே அந்த குரல் மனதில் ரீங்காரமிட ..
"பாஸ், இருந்தாலும் வூட்டுல அம்மணி.."
"போன் போட்டு கொடு"
போட்டேன்...
"ஹெலோ,நான் தான் !!"
!!!???"
"விஷ் டொரொன்டோ போறானாமே.. "
"!!!?"
"சொன்னான், எனக்கு ஒரு உதவி"
"!!!!"
"தேங்க்ஸ், அவன் அங்கே திங்கள் கிழமை தங்கி ஒரு கேம் போகணும், அந்த ஸ்டேடியத்தில் உள்ள இருக்கவங்களுக்கு மட்டும் ஒரு கேம் டீ ஷார்ட் கொடுப்பாங்க, அது எனக்கு வேணும், கேன் யு ஹெல்ப் மீ"
"!!"
"தேங்க்ஸ்"
டொரொன்டோ..
இறங்கிய அடுத்த நாள் திருமணம் முடிய, அடுத்து இரண்டே நாட்கள் தானே உள்ளது.
ஏற்கனவே பல முறை நயாகரா பால்ஸ் பார்த்தாகிவிட்டது .அதனால் அதை கேன்சல் செய்துவிட்டு இம்முறை டொரொன்டோவை சுற்றி பார்க்கலாம் என்று நினைக்கையில், அக்காவின் மகள்,
"அதுக்கு ஒரு வாரம் தேவை படும்" என்று சொல்ல,
ஒரு வாரம் எல்லாம் தேவை இல்லை, எல்லாரும் கிளம்புங்க, நான் ஒன்னரை மணி நேரத்தில் சுத்தி காட்டுறேன்னு சொல்லி, கிளம்ப..
அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆறு பேர் அமரும் படியான ஒரு குட்டி விமானம்.
அமர்ந்தவுடன் ஆளுக்கொரு சோமாபானம் பரிமாறபட, நாம தான் அதை தலையில் சுத்தி எறிஞ்சிட்டோமேன்னு நொந்து கொள்கையில் ...
டொரோண்டோவின் மேல் விமானம், கூட இருந்த அக்கா!
"நீ ஏன்டாஎந்த ஊர் போனாலும் அடிச்சி பிடிச்சி ஹெலிகாப்டர் இல்லாட்டி குட்டி விமானத்தில் ஏறிடுற"
என்று கேட்க..
அம்புட்டும் குரு மற்றும் வாழ்வே மாயம் கமலின் தாக்கம்ன்னு,நமக்கும் வளரும் வயதில் " பறந்தாலும் விடமாட்டேன்" மழைக்கால மேகம் ஒன்று " பாடணும்னு ஆசை இருந்ததேனு.. சொல்ல முடியாதே, அதனால்
"காரில் சுத்தி பாக்கணும்னா நாலு நாள் வேணும் இதுல இரண்டே மணி நேரம் அதுதான்."
என்று சொல்லி முடிக்கையில் ஒட்டு மொத்த நகரையும் பார்க்கையில் , அக்கா,
"அதோ பாருங்க, நம்ம வீடு.. நம்ம வீடு" என்று அக்கா சிரித்துக்கொண்டே சொல்ல ..
வளரும் வயதில், அக்கா எனக்கு போட்ட ஒவ்வொரு சோற்று பருக்கையும் நினைவில் வந்தது.
அடுத்த நாள் ஒரு முழு ஆடை வாங்கி கொம்பை மட்டும் தூக்கி எரிந்து விட்டு தலை முதல் கால் வரை சமைத்து உண்டு உறங்க முற்படுகையில்...
அக்காவின் இரண்டு ராசாதிக்களை அழைத்து..
அன்றும் இன்றும் |
"உங்களுக்கு பாஸ்கெட் பால் இஷ்டமா.. "
"வாவ்..வி லவ் இட். இந்த வருஷம் எங்க ஊர் அணி தான் பைனல்ஸ், நாளைக்கு சாயங்காலம் இங்கே டொரொன்டோவில் ஒரு ஆட்டம் இருக்கு "
"ரியலி"
"நம்ப பாக்க முடியுமா? "
"அஞ்சு மணிக்கு டிவி யில் போடுவாங்க.. குடும்பத்தோடு பாக்கலாம்"
"இல்ல நான் சொல்ல வந்தது, நம்ம ஸ்டேடியம் போய் ஆட்டம் பாக்க முடியுமா?"
"டிக்கெட் எல்லாம் பயங்கர விலை, அப்படியே இருந்தாலும் கிடைக்காது" என்று ஒருத்தி சொல்கையில் இன்னொருவள் கோகுலை தட்டி.. சீப்பான டிக்கெட் ஒன்னு ஆயிரம் டாலருக்கு மேல் "
என்று பெருமூச்சு விட..
மண் வாசனை பாண்டியன் போல், தாய் மாமன் நான் இருக்கையில் என்ன பிரச்சனை என்று..
"டொன் டோடென்"
என்று சொல்லி மூன்று டிக்கெட்டை எதிரில் வீச...
வீடே அலறியது.
அடுத்த நாள். அரங்கத்தில்...
என்ன ஒரு ஆர்ப்பாட்டம்.
(படத்துல இருக்குறது நான் தான்,ஆனா சட்டை என் பாஸ் சட்டை )
என் வாழ்நாளின் ஒரு ஹை லைட் என்று தான் சொல்லவேண்டும்.
(என்ன ஒரு ஆர்ப்பாட்டம், வாழ தெரிஞ்சவனுங்க )
இந்த அமெரிக்க பேஸ்கட்பால் ஆட்டங்களை 1989 ல் இருந்து டிவியில் பார்த்து வருகிறேன். 2002 ல் இருந்து பல ஆட்டங்களை அரங்கத்தில் இருந்து பார்த்து வந்தாலும், என் வாழ்வில் பேஸ்கட் பால் பைனல்ஸ் பார்ப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை.
என்ன ஒரு அழகு...! - ஹை லைட்டும்...
பதிலளிநீக்குஉங்கள் தயவில் இப்போது நாங்களும் ஒரு சுற்று சுற்றி விட்டோம்...நல்லார் ஒருவர் இருந்தால் போதும் எல்லோருக்கும் மழை சாத்தியம்தானே..
பதிலளிநீக்கு