செவ்வாய், 3 நவம்பர், 2020

டிரம்ப் ஆண்டாலும் பைடன் ஆண்டாளும் எனக்கொரு .....

"எப்ப வோட்டு போட போறீங்க"

காது கிழிய கேட்டு கொண்டே நேற்று என் அருகில் வந்தாள், இளைய ராசாத்தி.

"நாளைக்கு தானே  காலையில் போய் போடுவேன்

" கடைசி நாள் வரை வைக்கணும், போஸ்டலில் அனுப்ப வேண்டியது தானே.."

"மக, நான் எல்லாம் அந்த காலத்து ஆள். நமக்கு அங்கே போய் வரிசையில் நின்னு .. என் வோட்டு என்ன ஆச்சி? என் வோட்டு என்ன ஆகும்ன்னு டென்ஷனில் நின்னு, பேரை சொல்லி அவங்க, எல்லாம் சரியா இருக்கு, அங்கே போய் வோட்டை போடுங்கன்னு சொல்லும் போது கிடைக்குற த்ரில் வேணும்"

"இதுல என்ன த்ரில்..?"

"நம்ம ஓட்ட நமக்கும் முன்னால எவனும் போட்டு இருக்க கூடாது இல்ல!!"

"அது எப்படி, ஐடென்டிபிகேஷன் கேப்பாங்க தானே "

"சரி, அதை விடு, நாளைக்கு போறேன்.."

"நான் , அம்மா அக்கா மூணு பேரும் எங்க வோட்டை போஸ்டலில் போன வாரமே அனுப்பிட்டோம் "

"சோம்பேறிங்க நீங்க மூணு பேரும்.. "

"கடைசி நாள் வரை அனுப்பா இருக்குற நீங்க சொல்றீங்க"

என்று பேசும் போதே..அலை பேசி அலற, அதில் என்னை பெத்த 94  மகராசி..

"விசு, என் ஐடி கார்ட் எங்கே இருக்கு?"

"அது எதுக்கு இப்ப?, என்கிட்ட பத்திரமா இருக்கு"

"நான் வோட்டு போட போகணும், சீக்கிரம் எடுத்துன்னு வா..!"

"அம்மா.. இந்த கொரோனா காலத்தில் எதுக்கு நீங்க வெளிய போயினு, வேணாம்"

"எடுத்துன்னு வா" 

 அலைபேசி ஓய்ந்தது..

மனதில்... என்னடா இது! யார் நம்மட்ட பேசினாலும் ஆர்டர் தான் வருது..

அலை பேசி மீண்டும்  அலற, மூத்த ராசாத்தி..

"நாளைக்கு தான் போறீங்களாமே.."

"எஸ்"

"எல்லாம் படிச்சீங்கதானே.. ""

"எது?"

"நல்லது கெட்டது, தேவை தேவை இல்லைன்னு "

"யார் எனக்கு ப்ரெசிடெண்ட்டுன்னு ஒரு குத்து.. இதுல படிக்க என்ன இருக்கு?"

"டாட், டேபிளில் உங்க பேரை போட்ட புக் ஒன்னு இருக்கு.. அதை எடுத்து படிங்க.. அதுல எது எதுக்கு தேர்தல்ன்னு போட்டு இருக்கு"

"ஓ, நான் ப்ரெசிடெண்டுக்கு மட்டும் தான்னு நினைச்சேன்"

"நினைச்சேன், படிங்க.."

எடுத்து படிக்க ஆரம்பித்தேன்..

இந்த தேர்தல் ஜனாதிபதி, உதவி ஜனாதிபதி மட்டும் மற்றும், வட்டம் மாவட்டம் லொட்டு லொசுக்குன்னு பல பதவிகளுக்கு மட்டும் இல்லாமல் மற்றும் 

பதினேழு வயசு பிள்ளைகள் வாக்களிக்கலாமா ?

சிறை சாலை சென்றோருக்கு சில உரிமைகளை மாற்றலாமா ?

சொத்து வரியை இன்னும் உயர்த்தி அதில் வரும் பணத்தை பள்ளி கூடங்களுக்கு பயன் படுத்தலாமா? 

என்று நாட்டிற்க்கே பொதுவான கேள்விகளும்,

மற்றும், கலிபோர்னியா மாநிலத்திற்கான சில கேள்விகளும், அதையும்  தாண்டி எங்கள் ஊருக்கு மட்டும் சொந்தமான  மற்றும் சில "YES OR NO" கேள்விகளுக்கும் இருந்தன.

அனைத்தையும் படித்து விட்டு..யாருக்கு எதற்கு வாக்களிப்பது என்று முடிவு செய்து விட்டு, நாளை காலை வாரந்தோறும் அலுவலகத்தில் நடக்கும் ஒரு மீட்டிங் பத்து மணிக்கு! அதை முடித்து விட்டு வோட்டு போட செல்லலாம் என்று நினைத்துஉறங்க செல்ல..

காலையில், முதல் டெக்ஸ்ட், கம்பெனி தலையிடம் இருந்து..

"இன்றைக்கான பத்து மணி மீட்டிங் கேன்சல்ட். அதற்கு பதிலாக அனைவரும்  வோட்டு அளிக்க செல்லுங்கள்" என்று வர..

"என்ன தான் சொல்லு .. வெள்ளை வெள்ளை தான்.. தலை தலை தான்" 

என்று கூறி கொண்டு அந்த புத்தகத்தையும் எடுத்து கொண்டு வோட்டு அளிக்க  அருகில் எங்கே செல்லலாம் என்று தேட..

இல்லத்தின் அருகிலேயே.. ஒரு நூலகம், ஒரு ஆரம்ப பள்ளி, ஒரு கிறித்துவ ஆலயம். என்று மூன்று இடத்தில் இருக்கின்றது என்று அறிந்து, ஒரு கல்லில்  இரண்டு மாங்காய் அடிக்கலாம் என்று நினைத்து, ஆலயத்தை நோக்கி வண்டியை விட்டேன்.

அந்த ஆலயத்தின் வாசலில் சில போஸ்டர்கள். 



"உங்கள் பொன்னான வாக்குகளை " என்று போட்டு இருந்தது. அதை அப்படியே நோட்டமிடுகையில்.. எதோ ஒரு வட்டத்திற்க்கோ மாவட்டத்திற்க்கோ ..ஷர்மா என்று  ஒரு இந்திய பெயரை கொண்ட ஒரு நபர்  போட்டி போடுகிறார் என்று அறிந்தேன்.ஷர்மா என்ற அவரின் பெயரின் முன்னால் அமெரிக்கர்கள் தம்மை அறியும் படி "PAUL " என்று ஒரு புனை பெயரை வைத்திருந்தார். அதை பார்த்தவுடன், 



நல்ல வேளை  இங்கே அந்த மத வெறியர்கள் இல்லை, இல்லாட்டி இவரை கூட ..

ஜோசப் விஜய்.. டேனியேல் திருமுருகன் காந்தின்னு ஏதாவது பேசி இருப்பாங்கன்னு நினைத்து வண்டியை திருப்ப, பார்க்கிங் பகுதி காலியாக இருந்தது. வண்டியை நிறுத்தி விட்டு , கையில் அந்த புத்தகத்தையும் எடுத்து கொண்டு  நடக்க, எதிரில் ஒரு பலகை..

"CURB  SIDE VOTING ASSISTANCE"



உள்ளே செல்ல விருப்பம் இல்லாதவர்கள் மற்றும் செல்ல இயலாதவர்கள் இங்கேயே காரில் அமர்ந்து வாக்களிக்க வசதி செய்யப்பட்டு இருந்தது. 

அதை தாண்டி செல்ல, அடுத்து இன்னொரு பலகை, COVID - 19  என்று போட்டு சில வழிமுறைகள் பின் பற்ற வேண்டும் என்று போட்டு இருந்தது.



அதை தாண்டி செல்ல அமர்ந்து இருந்த அம்மணி,

"நல்ல வேளை அந்த புத்தகத்தை எடுத்துன்னு வந்த" என்று சொல்லி அதை ஸ்கேன் செய்து ஒரு மூன்று பக்க ஆவணத்தை இன்னும் ஒரு அட்டையினுள் மறைத்து வைத்து தந்து அங்கே போய் அந்த பூத்தில் நின்று பூர்த்தி செய்து உன் கையாலே அதை அந்த ஸ்கேன் மெசினில் போடு என்று சொல்லி..



"பேனா ஒன்னு எடுத்துக்கோ.. அதை திரும்பு தரவேண்டாம், நீயே வைச்சிக்கலாம்னு சொல்ல"

நீங்க சொல்லி இல்லாட்டியும் திரும்பி தந்து இருக்க மாட்டேன், என்று நினைத்து கொண்டே.. 

மீண்டும் ஆர்டரா, நம்ம ராசி அப்படி போல இருக்கேன்னு நினைத்து கொண்டு அனைத்தையும் செய்தேன்.

வாக்கு சீட்டை பதிவு செய்த பின்னர், கட்டை விரலில் மை வைக்கும் இடத்தை தேடுகையில்.. அங்கே இருந்த இன்னொரு தன்னார்வலர்,

"Take one I voted Sticker" என்று சொல்ல, ஓ இங்கே மையெல்லாம் இல்லையேன்னு என்று சொல்லி கொண்டே என் ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டு  வெளியேறினேன்.

பொதுவாகவே இங்கே தேர்தல் முடிவுகள் தேர்தல் அன்று இரவே வந்து விடும். ஆனால் இம்முறை கொரோனாவின் தாக்கத்தினால் தபால் வாக்குகள்   பல கோடிகளை கடந்து இருப்பதால் இறுதி முடிவுகள் வர பல நாட்களாகலாம் என்று சொல்ல படுகின்றது.

வாழ்க ஜனநாயகம்.

பாரத் மா...

I mean 

"God Bless America"!

13 கருத்துகள்:

  1. அங்குள்ள நடைமுறைகளை தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது..விரிவானப்பகிர்வுக்கு வாழ்த்துகள்ர

    பதிலளிநீக்கு
  2. பொறந்த விடும் மோசம் புகுந்த வீடும் மோசம் என்று பெண்கள் சொல்லுவது போல அமெரிக்கா வந்த இந்தியர்களின் நிலைமை ஆகிடுச்சு

    பதிலளிநீக்கு
  3. நீங்க சொல்லி இல்லாட்டியும் திரும்பி தந்து இருக்க மாட்டேன், என்று நினைத்து கொண்டே.. //

    ஹா ஹா ஹா ஹா இப்படி இங்க நாம செய்யறத பப்ளிக்கா சொல்லிக் காட்டணுமா!!

    தேர்தலுக்கு என்ன அழகான ஏற்பாடுகள்...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கடமையைச் சரியாகச் செய்த விசு அவர்களுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. It is over Visu!! Trump is done! Biden came back and took a lead in PA as well, just like WI and MI. Now he is leading in PA by 14.000 votes. The problem was mail-in-ballot goes 80% in favor of democrats and in-person voting heavily favor Republicans. In, Michigan, Wisconsin and Pennsylvania, they counted the in-person voting first and so republicans had a lead. Once they started counting mail-in-ballot, the lead shrinks and eventually to goes to Democrats. They will call PA soon (20 electoral votes). Already biden has 253 (leaving AZ, NV, GA)> Just PA is enough to take it to 273! So it is done!

    There will be law suits and there wont be any peaceful transfer of powers and all that bs. But it is over. Trump era is over! Let us unify our nation. We are divided by these guys really rally badly! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Varun, All I am hoping for is a Smooth transition. Forget the Nation, our family was so divided and we couldnt even have a peaceful dinner without a political argument. It was becoming aekward. Time to heal and move forward.

      PS : Thank God for Football. Its sill the uniting bond!

      நீக்கு
  6. ***our family was so divided and we couldnt even have a peaceful dinner without a political argument**

    அடப்பாவமே! என்ன விசு, உங்களை ஆண்டவன் இப்படி சோதிச்சுட்டான்! போன ஜென்மத்திலே நெறைய பாவம் செய்துட்டீங்களோ? இதை வாசிக்கும் முன்னால வரை, நாந்தான் பெரிய பாவினு நெனச்சுட்டு இருந்தேன்...:)

    பதிலளிநீக்கு
  7. Doing OK, Visu? You have been quiet for a while. Rams lost to 49ers! Did you cry? lol

    Trump lost too!

    One after another! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Varun,

      Doing great and thanks for checking.

      RAMS losing to 49ers was a bummer, they shouldnt have lost it. Anyways, I am sure theyd make it to play offs and from thereon its who plays better on that day.

      I still cant figure out whos going to beat STEELERS but still not convinced that they are Superbowl material.

      We as a family are enjoying the Football season and with regards to Trumph, people have spoken. He needs to be gracious in defeat.

      Lots of Great games coming up this week.The newly built SOFI Stadium isnt allowing spectators .. :(

      We are planning on travelling to a away game. Let me know if theres one in your hometown and we will come knocking.

      GO RAMS.

      நீக்கு
  8. OK, here is the playoff scenario for rams!

    ***The Rams failed to clinch a playoff berth this weekend in losing to the Seahawks. They'll now need either a win in Week 17 or a loss by the Bears to do so. If the Rams lose and the Bears win, L.A. will miss the postseason after entering Week 16 with a 96.2% chance to make the playoffs, per FPI.***

    I think rams will beat Cardinals and get into Playoff! :)

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...