வெள்ளி, 5 ஜூன், 2020

மனைவி ஜோக்ஸ் - சரியா தவறா?

மனைவி ஜோக்ஸ் என்பது  உலகின் அனைத்து சாராரிடமும்  பொதுவாகவே இருக்கும் ஒன்று.

மனைவியின் சமையல் பற்றி...

மனைவியின் செலவு பற்றி ...

மனைவியின் தோழிகளை பற்றி..

மனைவியின் பெற்றோரை பற்றி...

மனைவியின் கண்டிப்பாய் பற்றி ...

மனைவியின் பேச்சை பற்றி ...

என்று ...

உலகின் அனைத்து ஆண்களும் மனைவி ஜோக்ஸ் அடித்து கொண்டு இருப்பார்கள்.



உதாரணத்திற்கு ..

நான் குழந்தையாக இருந்த போது , என் அன்னை என்னை தூக்கி வைத்துள்ளதை போல்  ஒரு புகை படத்தை பார்த்தேன். அந்த படத்தில் குழந்தையாகிய நான் வானத்தை பார்த்து  வாய் விட்டு சிரிப்பேன். அந்த படத்திற்கான தலைப்பில் நான் " அடியேன் கடைசியாக வாய் விட்டு சிரித்த தருணம் " என்று எழுதி இருப்பேன்.

அதற்கு பதிலாக பின்னூட்டத்தில்..

"அடே அடே .. கடைசியா நீங்க சிரிச்ச தருணமா? உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா, சொல்லவே இல்லை.. "

"நம்ம அம்மா பக்கத்துல இருந்தா இப்படி வானத்தை பார்த்து  வாய் விட்டு சிரிப்போம் , நம்ம புள்ளய்ங்க அம்மா பக்கத்துல இருந்தா பூமியை பார்த்து அழுவோம்"

இப்படி பல கருத்துக்கள். இந்த கருத்துக்கள் பல அம்மணிகளிடம் இருந்து தான் வந்தது.

இந்த ஜோக்ஸ் சாப்பாட்டிற்கான உப்பு போல் சேர்த்து கொள்ள பட்டால் சுவையே, அதுவே ஓவராக போனால் உப்புள்ள பண்டமாய் இருந்தாலும் அதிக உப்புள்ளதால் பண்டாரமாகி குப்பைக்கு தான் போகும்.

என்னுடைய நிறைய பதிவில் என் அம்மணியை பற்றியும் எங்கள் தினசரி வாழ்வை பற்றியும் நிறைய எழுதி இருப்பேன். நான் அம்மணியை பற்றி என்ன எழுதினாலும் அது அவர்களை மனதளவில் பாதிக்க கூடாது என்று நினைத்து எழுதுவேன்.

நாலு பேரை சிரிக்க வைக்கின்றேன் என்று சொல்லி "தொட்டு  தாலி கட்டிய அம்மணியை" முகம் சுழிக்க வைப்பது விழலுக்கு இறைத்த நீர் போல் தான்.


சில நாட்களுக்கு முன் நான் காலையில் எழுந்தவுடன் என் ஜோதிடத்தை பார்க்க மாட்டேன், என் மனைவியின் ஜோதிடத்தை பார்த்து என் நாள் எப்படி இருக்க போகின்றது என்று முடிவு செய்வேன் என்று ஒரு பதிவில் எழுத...

அருகில் வசிக்கும் தோழி ஒருவர், அருமையான முடிவு. பிழைக்க தெரிஞ்ச ஆளு. உங்க வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே என்று சொல்ல..

நானோ..

சரி, என்னை விடுங்க.. அங்க உங்க ஆத்துக்கார் ஜாதகத்தை காலையில் எழுந்தவுடன் நீங்க படிக்குறீங்களானு கேட்க...

அவரு ஜாதகத்தை எழுதுறதே நான், இதை வேற படிக்கணுமான்னு போட்டாங்களே ஒரு போடு.

உப்பு.. மீண்டும்  சொல்கிறேன்.. உப்பு போல் நகைசுவை இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியே..

பல வருடங்களுக்கு முன் பங்களூரில் வாழ்ந்த எர்னஸ்ட் இக்னாசியஸ், தன் மனைவியை கலாய்த்து ஒரு பாடல் எழுதினார். அம்புட்டு அருமையான ராகம் மற்றும் வார்த்தைகள்.

நண்பர்கள் கூடும் எந்த  பார்ட்டியிலும் இந்த பாடல் கண்டிப்பாக "நேயர் விருப்பமாக" பாட படும். அம்மணியை சற்று கலாய்த்தாலும் இந்த பாடலை அம்மணிகளும்  சேர்ந்து தான் பாடுவார்கள்.

இதோ, எங்கள் இல்லத்தில் இந்த பாடல் ஒலிக்கையில்.




பாடலின் வரிகள்..

I married a female wrestler
As massive as can be,
She had bulging muscles,
Which quite facinated me. 
She said she loved me truly
She also said by heck,
If I ever catch you messing around
I'll break you bloody neck.

அய்யய்யோ, what shall I do,
How shall I save my skin,
I have married a Female  Wrestler
Now look the mess I'm in ..
அய்யய்யோ..அய்யய்யோ...அய்யய்யோ...

One day we were invited
To a fancy dressing ball,
She dressed as Dara Singh,
We wrestled in the hall, 
We wrestled through the fox trot
I was powerless to resist,
we wrestled through the tango,
But I fainted in the Twist.

அய்யய்யோ, what shall I do,
How shall I save my skin,
I have married a Female  Wrestler
Now look the mess I'm in ..
அய்யய்யோ..அய்யய்யோ...அய்யய்யோ...

To make things worse I have fallen
For the pretty girl next door,
She is skinny but I love her 
 like I never loved before 
 But If my wife should find out
The thought just makes me rave,
My friends you'll have to buy some flowers
And put them on my grave.

அய்யய்யோ, what shall I do,
How shall I save my skin,
I have married a Female  Wrestler
Now look the mess I'm in ..
அய்யய்யோ..அய்யய்யோ...அய்யய்யோ...



5 கருத்துகள்:

  1. சூப்பர் சார். இன்னும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  2. விசு மிக அருமையாக இருக்கிறது.

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. முதல் கருத்து உங்கள் வீடியோவிற்கானது. முன்பும் எப்போதோ போட்டிருக்கிறீர்களோ? அப்படியான ஒரு நினைவு

    துளசிதரன், கீதா

    நாலு பேரை சிரிக்க வைக்கின்றேன் என்று சொல்லி "தொட்டு தாலி கட்டிய அம்மணியை" முகம் சுழிக்க வைப்பது விழலுக்கு இறைத்த நீர் போல் தான்.//

    இதை நான் கண்டிப்பாக அப்படியே வழி மொழிவேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப அழகான மற்றும் ஆழமான பதிவு சார். பாடல் Awesome! அலவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்தானெ!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...