புதன், 24 ஜூன், 2020

கண்ணதாசன் எழுதிய பாட்டிற்கு சம்பளம் வாங்கிய வாலி (கண்ணதாசன் 7)

"சைனா டவுன்"ன்னு ஒரு ஹிந்தி படம். சக்கை போடு போடுது. படத்தின் கதையை கேட்டா என்னமோ MGR க்கே எழுதி இருக்க மாதிரியே இருக்கு என்று சொல்லி கொண்டே வந்தார் அக்காலத்து இயக்குனர் K ஷங்கர். இது நடந்த வருடம் 1968 .

அப்படி என்ன MGR க்கு ஏத்த கதை?

இரட்டை பிள்ளைகளின் அப்பா கொலை செய்ய படுகிறார். ஒரு குழந்தையை அம்மாவும் இன்னொரு குழந்தையை அந்த கொலைகாரனும் வளக்குறாங்க. அம்மா செண்டிமெண்ட்!  ஒரு குழந்தை ஹோட்டலில் நடமாடி பாடுபவர் !இன்னொருத்தார் கொள்ளைகாரார்! சண்டை பாட்டு ஆட்டம்னு..! எல்லாம் MGRக்கு சரியா அமையும்!

என்று அவர் சொல்ல ஒரு தயாரிப்பாளரும் அதற்கு மயங்கி விழ "சைனா டவுன்"  படத்தின்  தமிழ் படைப்பாக  வெளி வந்தது MGRரின் "குடியிருந்த கோயில்" 

படம் சூட்டிங் எல்லாம் முடிந்து கடைசியாக போட்டு பார்க்கையில்..

"எல்லாம் சரி, அம்சமா வந்து இருக்கு. இருந்தாலும் கண்ணதாசன் பெயரே பட டைட்டிலில்  வரலையே"

என்று MGR கவலை பட..

"ஏன்யா? நான் தான் இதுல நாலு பாட்டுக்கு நல்லா எழுதி கொடுத்து இருக்கேனே, கூடவே ஆடலுடன் பாடலும்ன்னு பித்தனை வைச்சி ஒரு பாட்டு. "

என்று வாலி புலம்ப..

"இருந்தாலும் கண்ணதாசன் பாணியில் ஒரு பாட்டு வேணும்னே.. "

என்று தயாரிப்பாளர் கேட்டு கொள்ள.. இயக்குனர் கண்ணதாசனிடம்..

'படம் முழுக்க தயாராயிடிச்சி.. ஒரே பாட்டு தான் பாக்கி.. நீங்க எழுதி கொடுத்தா  போதும்..."

"என்ன சங்கர்.?என்னிடமே கதையா? டைட்டிலில் என் பேர் வரணும்னு யாரோ ஆசை பட்டதா கேள்வி பட்டேன்"

"ஹி ஹி.. "

"சரி சீனை சொல்லு!!!"

'MGR ஒரு பாடகர்.. ரொம்ப தன்னம்பிக்கை உள்ளவர், நல்ல பாடும் ஆடும் திறமை சாலி. எந்த பெண்ணையும் தன் வசீகரத்தால் கவருவார்.. அவர் பணி புரியும்  ஹோட்டலுக்கு ஒரு அழகான இளம் பெண் வராங்க. அவர்கள் மனதை கவருவது போல் ஒரு பாட்டு"

"இத எழுத நான் எதுக்கு?, வாலியையே எழுத சொல்லு. கடைசி நேரத்தில் நான் உள்ளே நுழைஞ்சா அவன் கோவிச்சுக்குவான்."

"அத நான் பாத்துக்குறேன்.. நீங்க எழுதி தாங்க"

என்று சொன்னபோதும் கண்ணதாசன் மறுக்க.. இயக்குனர் மீண்டும் வாலியிடம் வந்து, கண்ணதாசன் எழுதி தர மறுத்துட்டார். எனக்கு ஒரு உதவி பண்ணுங்க என்று சொல்லி அதே சீனை விவரித்து..

"தப்பா யோசிச்காத வாலி.. இந்த பாட்டை நீயே எழுதினாலும் கண்ணதாசனே எழுதின மாதிரி வரணும். அதை கண்ணதாசன் தான் எழுதினாருனு தயாரிப்பாளர் நம்பனும்னு"

சொல்ல..

வாலியும் அதை ஒரு சவாலாக எடுத்து கொண்டு பாடலை எழுதினார்.  பதிவு செய்ய பட்ட பாடலை தயாரிப்பாளரிடம் போட்டு காட்ட தயாரிப்பாளரும்  ஆஹா ஓஹோ என்று பாராட்ட..

இயக்குனர்..

"பாட்டு நல்லா தான் வந்து இருக்கு..இருந்தாலும் ஒரு பிரச்சனை"

"என்ன பிரச்னையானாலும் பரவாயில்லை, இந்த பாட்டு எனக்கு படத்தில் வேண்டும், எப்படி!!? என்ன பிரச்சனை? "

"கண்ணதாசன் எழுத மறுத்துட்டார், வாலியே எழுதி கொடுத்துட்டார்'

'அப்படியா, கேட்க அப்படியே கண்ணதாசன் பாணியில் இருக்கே, பரவாயில்லை, சரி.. பாட்டும் நல்லா வந்து இருக்கு படத்தை கண்ணதாசன் பெயர் இல்லாமலே வெளியிட வேண்டியது தான்"

என்று சொல்லி படத்தை வெளியிட....

"என்னை தெரியுமா என்ற இந்த பாடல், மெகாஹிட்.. பட்டி தொட்டி முதல் பங்களா வரை எங்கே பார்த்தாலும் இந்த பாடல் தான்!

சில வாரங்களில், இன்னொரு ஸ்டுடியோவில் விஸ்வநாதனும் வாலியும் சந்திக்கையில்..

"என்ன வாலி... "என்னை தெரியுமா" பாடல் பெரிய வெற்றி, சந்தோசம் தானே, எல்லாரும் என்கிட்டையே மொத்த பாடும் கண்ணதாசன் சாயலில் இருக்கே, வாலி மாதிரியே தெரியலையேன்னு சொல்றாங்க"

"அதுவும் சரி தான், மொத்த பாட்டும் கண்ணதாசன் வரிகள் தான்"

"என்ன சொல்ற, அவரு எழுதியதை நீ எழுதியதா எப்படி.. ஏன்?"

"சம்பளம் வாங்கும் போது கூட மனசு குருகுருன்னு இருந்தது, கண்ணதாசன் மட்டும் இந்த பாட்டை கேட்டாரு, எங்கடா அவன் வாலின்னு வந்தாலும் வருவார்"

"புரியற மாதிரி சொல்லு"

"சில வருடங்களுக்கு முன்னால் நீ  " படித்தால் மட்டும் போதுமா" ன்னு ஒரு படத்துக்கு இசை அமைச்சியே, நினைவு இருக்கா?"

"எப்படி மறக்க முடியும்! அதுல ஒரு பாட்டு,  சிவாஜி ஒரே புலம்புர மாதிரி சீன். கண்ணதாசனின் வார்த்தை  ஒன்னொன்னும் ஒருத்தன் தன்னை தானே எவ்வளவு தாழ்த்தி பாட முடியுமோ அவ்வளவு தாழ்த்தி எழுதி இருப்பார், நீயும் கேட்டு இருப்பியே.."

"கேட்டு இருப்பேனா? "என்னை தெரியுமா" அந்த பாட்டோட அப்பட்ட காப்பி. கண்ணதாசன் அந்த பாட்டுல நாயகன் என்கிட்டே  என்ன என்ன இல்லைனு புலம்புறாருனு யோசிச்சேன்.. இந்த நாயகனுக்கு அதெல்லாம் இருக்கணும்னு அப்படியே அதுக்கு எதிர்ப்பதமா  மாத்தி எழுதிட்டேன் ?

என்று சொல்லும் போதே... கதவு திறக்க, கண்ணதாசன் "நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை காசின்  மேல் ஆசையில்லா காசி முனிவனும்  அல்ல" என்று பாடி ...

"வாலி ... நல்ல மனுசனையா நீர்.. என் பங்கை வெட்டும்"  என்றார்.

பின் குறிப்பு :

மேலே குடியிருந்த கோயில் என்ற சிவப்பு எழுத்திற்கு  ஒரு முறை மீண்டும் செல்லுங்கள். அதுவரை தான் நடந்த சம்பவம். அதற்கு பின் வந்தது அனைத்துமே அடியேனின் கற்பனையே.,

என்னை தெரியுமா, நான் கவிஞனும் அல்ல இரண்டும் ஒரே பாடல் தான்.. எதிரும் புதிருமாக..



8 கருத்துகள்:

  1. அப்போது எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் ஏழாம் பொருத்தமாய் இருந்த நேரம். வாலி கோலோச்சினார். உங்கள் கற்பனை ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடே டே, இந்த "ஏழாம் பொருத்தம்" தெரியாம போச்சே. கற்பனையை இன்னும் ஓடவிட்டூர் இருக்கலாமே..

      வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சைனா டவுன் படத்தில் இதற்கான பாடல் முக்கமது ரஃபி பாடிய "பாரு பாரு தேகோ" என்று நினைக்கிறேன். மறுபடி மறுபடி பாரு என்று அர்த்தம் வந்தாலும், தமிழில் எழுதும்போது (bhaaru என்று உச்சரித்தாலும்) பாரு, தேகோ இரண்டும் ஒரே அர்த்தம் அந்தந்த மொழிகளில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு பிடித்த கபூர் ஷம்மி தான். பாடல்களில் அவர் பண்ணும் சிலுமிஷத்தை மிகவும் ரசிப்பேன். இந்த பாடலை எப்படியோ தவறவிட்டேன்.
      Thanks to you... இப்போது பார்த்தேன்.

      நீக்கு
    2. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நினைத்ததை முடிப்பவன் (சச்சா ஜூட்டா)கதையும் கிட்டத்தட்ட இதுதான்

      நீக்கு
  3. விசு உங்கள் கற்பனை பாதி என்று வாசிக்கும் போதே தெரிந்துவிட்டது!!! ஹா ஹா ஹா ஹா...

    அருமையான பாடல்கள் இங்கு பகிர்ந்திருக்கும் வீடியோ மற்றும் வரிகளில் சொல்லியிருப்பதும்...

    உங்க பதிவையும் ரசித்தேன் விசு

    கீதா

    பதிலளிநீக்கு
  4. விசு அருமையான் நிகழ்வைப் பற்றிய பதிவு. புதிய தகவலும் கூட.
    நீங்கள் க்டைசியில் சொன்ன பிறகுதான் கீழே வருவது எல்லாம் உங்கள் கற்பனை என்று தெரிந்தது. மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ரசித்தேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  5. "என்னை தெரியுமா...?" Ring tone சில வருடங்களாக...

    விரல்கள் நடிப்பதை காண வேண்டுமா...? "காட்டு மானை வேட்டையாட " முன்பு...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...