ரவிசந்திரன், முருகன், மஹாலிங்கம், பார்த்திபன், ரகு, சீனு, பார்த்திபன், எலிசபெத், ஆல்ப்ரெட், செல்வராஜ், G குணசேகரன், M குணசேகரன், லட்சுமி, மோசஸ், சிவராஜ், ஷாமா, காளிமுத்து, அண்ணாமலை,பார்வதி, புவனேஸ்வரி, மேரி மற்றும் பலர்..
யார் இவர்கள் .. இவர்களுக்குள் உள்ள ஒற்றுமை என்ன?
ஒற்றுமைகள் பல உண்டு!
இவர்கள் அனைவரும் என் பால்ய வயது நட்ப்புக்கள்.
பண்பானவர்கள். அன்பானவர்கள், தம் தம் திறமைக்கேற்ப முதுகலை வரை படித்தவர்கள்.
அரசாங்க உத்தியோகம், தலைமை ஆசிரியர், பேராசிரியர், வங்கி அதிகாரி, வியாபாரம், இசை ஆசிரியர் என்று பல துறைகளில் பணிபுரிகின்றார்கள்.
நான் பெரிய அப்பாடக்கர் என்று இவர்கள் யாரிடமும் நான் பீலா காட்ட முடியாது. ஏன் என்றால் நம்முடைய அம்புட்டு வண்டவாளமும் தண்டவாளம் ஏறிடும். நம் அனைத்தையும் அறிந்தவர்கள் இவர்கள்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒற்றுமை! இவர்களை நான் எப்போதாவது பல வருடங்களுக்கு பின்னர் சந்தித்தால் கூட, என் குரலை வைத்தே ..
"அட பாவி... விசு.. எப்ப ஊருக்கு வந்த?"
என்று என்னை அடையாளம் கண்டு உறவாடுபவர்கள்.
"இதுல என்ன விசேஷம் விசு?" என்று உங்களில் அனைவரும் கேட்பது காதில் விழுகின்றது..
இவர்கள் அனைவரும் பார்வையற்றவர்கள்.
கடந்த சில நாட்களாக பதிவுலகத்தில் நண்பர் மகேஷ் அவர்களின் உந்துதலால் அபி, நவீன் மற்றும் பெர்னாண்டோ போன்ற பார்வையற்றோர் பதிவுகள் எழுதி வருவதை பார்த்து, மகிழ்ந்து படித்து பின்பற்றி வருகிறேன். இவர்களின் பதிவை படிக்கையில் எனக்குள் இருக்கும் என் பார்வையற்ற நட்ப்புக்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
மேலே சொன்ன பெயர்கள் சில மட்டுமே. இன்னும் நூற்றுக்கணக்கான பார்வையற்றோரை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன்.
எப்படி விசு, இத்தனை பேரை தெரியும்? நல்ல கேள்வி.
அனைத்திற்கும் கரணம் அடியேனை பெற்றெடுத்த மகராசி தான்.
இளவயதில் கணவனை இழந்த என் அன்னை, அந்த இழப்பை எல்லாம் பொருட்படுத்தாமல் சமூகத்திற்கு ஏதாவது நல்ல காரியம் செய்ய வேண்டும் என்று நினைத்து ...
1970 களின் ஆரம்பித்தில் பர்கூரில் ஆரம்பித்த பார்வையற்றோர் பள்ளியின் மாணவர்கள் தான் இவர்கள். மிகவும் சிறிதாக ஐந்தாறு பிள்ளைகளோடு ஆரம்பித்த இந்த பள்ளி தற்போது அரசாங்க அங்கீகாரம் பெற்று ஆயிரக்கணக்கான பார்வையற்றோருக்கு நல்வாழ்வு அளித்துள்ளது என்பதை நினைக்கையில்..
உள்ளம் சிலிர்க்கிறது.
இந்த நட்புகளுடன் தான் நான் பழகிய நாட்கள் எவ்வளவு இன்பம். ஒன்றாக அமர்ந்து, உண்டு, படித்து, பாடி, ஆடி, சுற்றுலா பயணம் செய்து , இவர்களுக்கு பரீட்சை எழுதி.. என்று அருமையான நினைவுகளை எனக்கு மீண்டும் பெற்று தரும் மகேஷ், அனு, பெர்னாண்டோ மற்றும் நவீனுக்கு ஆயிரம்கோடி நன்றி.
ஆம், என் கண்ணுக்குள் இருக்கும் நூறு நிலவு தான் இவர்கள்.
எத்தனை சுகமான அனுபவங்கள், உதாரணத்திற்கு..
நாங்கள் அனைவருமாக சேர்ந்து அன்றொரு நாள் "உலகம் சுற்றும் வாலிபன் " படத்திற்கு செல்ல MGR உலகம் என்று பீலா விட்டு சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் மட்டும் சென்று வர, அந்த ஜப்பானிய காட்சிகளை என் அருமை நண்பர்களுக்கு நான் படம் முடித்து வெளியே வரும் போது விளக்க...
லில்லி மலருக்கு கொண்டாட்டம் பாட்டு லொகேஷனை விளக்கி பாடி கொண்டே ...
அடே அடே என்ன ஒரு நினைவு...
ஓடியாடி வளர்ந்த இடம், தற்போது அம்மாவின் பெயரோடு... |

பர்கூர் பள்ளியின் முதல் இரண்டு மாணவர் (அம்மாவோடு). இருவருமே தற்போது அரசாங்க பணியில். |
நெகிழ்வான இனிமையான நிகழ்வுகள்...
பதிலளிநீக்குஅருமை..!
பதிலளிநீக்குவேலூரில் தங்களைச் சந்தித்த்போது நேரில் தெரிந்துகொண்ட விஷயங்களே இவை! அன்பில் சிறந்த தாய்க்கு மகனாகப் பிறந்த பேறு பெற்றுவிட்டீர்கள்! வாழ்த்துகிறேன்!
பதிலளிநீக்குஎனக்கு உங்கள் அன்னையைப் பற்றியும், அவர் ஆரம்பித்த அந்த பள்ளியைப் பற்றியும், அதில் உங்கள் அனுபவங்கள் எப்படியிருந்தது. என்பது கொஞ்சம் விரிவாகத் தெரிந்தால் நன்றாக ிருக்குமெ! என ஆசையாக ிருந்தது. அது வெகு சீக்கிரத்தில் இவ்வளவு சுவாரசியமாக நிறைவேரும் என்று நினைக்க வில்லை. அழகான அனுபவ பகிர்விற்கு ரொம்ப ரொம்ப நன்ரிகள் சார்.
பதிலளிநீக்குவிசு நீங்கள் குறிப்பிட்டிருப்பவரளிள் பெரும்பாலானோரை சந்தித்துள்ளேனே அமமவுடன்! அத்தனைபேரும் இனியவர்கள். செம காமெடி பீப்பிள் அதிலும் மகாலிங்கம் ஹையோ சிரிக்க வைச்சுட்டே இருப்பார்.
பதிலளிநீக்குஎனக்கும் இப்படியான நட்புகளோடு பழக்கமுண்டு. சென்னையில் இருந்த போது இப்படியான மாணவர்கள் சிலருக்கு பரீட்சை எழுத உதவியிருக்கிறேன்.
வலையுலகில் திருப்பதி மகேஷ் அவர் நண்பர்கள் அரவிந்த், ஃபெர்னாட்னோ, நவீன், அபி, முனிரத்தினம் சார் (இவர் வயது 70ற்கும் மேல்) இன்னும் சிலரும் மகேஷ் மூலம் ஃப்ரென்ட்ஸ்! வலையையும் நாங்களும் தொடர்கிறோம்.
இவர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிறைய சொல்லலாம். அத்தனை திறமைசாலிகள்.
நினைவுகள் என்றுமே இனிமையானவை.
கீதா
அம்மாவைப் போட்டோவில் பார்த்து மகிழ்ச்சி சில வருடங்களுக்கு முன் எடுத்தது என்றாலும் கூட...அம்மாவிற்கு எங்கள் அன்பைத் தெரிவிக்கவும்
பதிலளிநீக்குகீதா
பதிலளிநீக்குவிசு சார்,மகேஷ் எனக்கு முதுகலையில் வகுப்புத்தோழன்.மகேஷின் உந்துதலால் தான் சமீபத்தில் வலைபதிவெழுத ஆரம்பித்தேன்.எனக்கு இளங்கலை படிக்கும் போதே இரண்டு பார்வையற்ற நண்பர்கள் கார்த்திக் மற்றும் முகேஷ் இருந்தார்கள்.அன்றுமுதல் அவர்களது திறமையையும், தன்னம்பிக்கையையும் பார்த்து வருகிறேன்.நான் அவர்களுக்கு படிக்க மற்றும்வெளியே செல்ல உதவுவேன். தங்களது தாயாரின் சேவை மகத்தானது.
சார் இன்றைக்குத்தான் மகேஷ் உங்களைப்பற்றியும் அம்மா பற்றியும் பர்கூர் பள்ளிப்பற்றி சொன்னான். இப்போது இதையும் படிக்கும்போது அம்மாவை நினைத்து மிகவும் பெருமையாகவும் நெகிழ்வாகவும் இருக்கிறது. அம்மாவிற்கு என் வாழ்த்தை தெரிவிக்கவும். மகேஷ் என் பள்ளித்தோழன். 5ஆம் வகுப்புவரை little flower higher secondary school for the blind படிச்சோம். இன்னைக்கு மகேஷால எல்லாரும் என் வலைத்தளத்தை படிச்சு கருத்து பதிவு செய்து வாழ்த்துவது சந்தோஷமாக இருக்கிறது. எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே. மிக்க நன்றி சார்.
பதிலளிநீக்கு