செவ்வாய், 2 ஜூன், 2020

விராட் கோலி அனுஸ்கா ஷர்மாவை விவாகரத்து செய்ய வேண்டுமாம்!

நேற்று ஒரு செய்தி படித்தேன். படிக்கும் போது அது இன்றைய நாட்களுக்கு  முட்டாள் தனமாக இருந்தாலும் அதில் பல விபரீதங்கள் எதிரி காலத்தில் இருக்கும் என்று தான் ஒரு பயம்.

கோலியின் மனைவி அனுஷ்கா "பாதல் லோக் " என்ற ஒரு வெப்சீரிஸை தயாரடித்தார்களாம். அதில் ஒரு குறிப்பிட்ட இனத்தோரை அவமான படுத்திவிட்டார்களாம். அதனால் கோலி அனுஷ்க்காவை உடனடியாக  விவாகரத்து   செய்யவேண்டும் என்று ஒருவர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளாராம்.

அது சரி, 140 கோடி (குத்துமதிப்பா) மக்கள் வாழும் நாட்டில் இந்த மாதிரி  புகார் கொடுக்கும் முட்டாள்கள் சிலராவது இருப்பாங்க தானே என்று நினைத்து கொண்டே படிக்கையில் இந்த நபர் உத்திரப்பிரதேசத்தின்  பாஜக எம் ல் ஏ ஒருவராம்.

சரி, இவரு தான் முட்டாள் தனமான புகார் கொடுத்துள்ளார், இதுல என்ன எதிர்காலத்தில் விபரீதம்ன்னு கேட்போருக்கு...

ஒரு திரைப்படமோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியோ யார் மனதையோ புண் படுத்தினால், அதற்கு எதிர்வினையாற்ற ஜனநாயக முறையில் எத்தனையோ வழிகள் உண்டு. அவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு .. "விவாகரத்து "என்று சொல்லுவது .  அதுவும்  ஆளுங்கட்சியின் நடப்பு MLA  ஒருவரிடம் இருந்து  புகார் வருமேயானால், அது இந்த ஜனநாயகத்திற்க்கே ஆபத்து.



கடந்த சில வருடங்களாக..

 என்ன மொழி பேசவேண்டும்?

என்ன உணவை உண்ணவேண்டும்?,

எந்த கடவுளை வழிபடவேண்டும்?

ஏன்?

எந்த ஊரில் வாழ வேண்டும்?

என்றெல்லாம் நாடே நெருக்கபடுகின்றது என்று அறிவோம் தானே

இந்த புகார் இந்த அட்டவணையின் அடுத்த வரி.

"யாரை மணக்க வேண்டும்,
யாரோடு வாழ வேண்டும்""

கேட்க முட்டாள்தனமாக இருந்தாலும் இந்த புகாரை குறித்து வைத்து கொள்ளுங்கள் மக்களே.. இதுவும் அமலாக்கப்படும் நாள் வரும்.

2 கருத்துகள்:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...