யு டுயூப் வந்தாலும் வந்தது, நேரம் போகலைன்னு அந்த காலத்து பாடல் ஒன்னு கேக்கலாம் போயிட்டு வந்தா, அடுத்த நாளே அந்த பாடல் வந்த காலத்து அம்புட்டு விஷயங்களும் ஸ்கிரீனில் வந்துடுது.
அப்படி வந்ததுல ஒன்னு தான் முந்தானை முடிச்சி படத்துல ஒரு காட்சி.
ஊருக்கு கைக்குழந்தையோடு வந்த வாத்தியார் பாக்யராஜ் மேல முதலில் வம்பு பண்ணி பிறகு பரிதாபப்பட்டு அதுக்கு அப்புறம் காதல் வயப்பட்டு அவரை கல்யாணம் பண்ணிக்கனும்னு ..
"வாத்தியார் என்னை கெடுத்துட்டாருன்னு"
ஊரையே கூட்டி ..அதுக்கு ரெண்டு பொடிசுங்கள சாட்சிக்கு வைச்சிட்டு, அதுமட்டும் இல்லாம ஒரு குழந்தை மேல துண்டு போட்டு தாண்டிடு அவரை கல்யாணம் பண்ணி அப்புறம் "Happily lived ever after"
இதே படம் இந்த காலத்துல ரிலீஸ் ஆனா யோசிச்சி பாருங்க.... மவனே..
பாடம் சொல்லிக்கொடுக்குறேன்னு ஊருக்கு வந்துட்டு, பரிதாபத்துக்காக யாருடைய குழந்தையையோ கையோட எடுத்துன்னு வந்து ..ஊருல்ல இருக்க வயசுக்கு வந்த சின்ன பொண்ணை கற்பழிச்சிட்டாருன்னு மாதர் சங்கங்கள் டின் கட்டி இருப்பாங்க.
அல்ப காம சுகத்திற்காக ஒரு பச்சிளங்குழந்தை மேலே பொய் சத்தியம் பண்ணி துண்டை போட்டு தாண்டியதால் தமிழக கலாச்சாரமே செத்துபோகிகினு இன்னொரு கும்பல் கிளம்பி இருப்பாங்க..
அதை கூட விடுங்க.. நம்ம பிரீ செக்ஸ் பீட்டா ராதா, மட்டும் அந்த காலத்தில் இவ்வளவு பெரிய சமூக சேவகியா இருந்து இருந்தா, பாக்யராஜை ஓட ஓட விரட்டி இருப்பாங்க.
காலம் தான் எப்படி மாறிடிச்சி பாருங்க. அந்த காலத்தில் இந்த படத்தின் வெற்றிக்கு காரணமே தாய்குலத்தின் மகத்தான ஆதரவு தான். ஒருத்தன் என்னை கெடுத்துட்டான்னு சொல்லி, அதையே காரணமா பஞ்சாயத்தை கூட்டி, இது எல்லாம் ஒரு விஷயமே இல்லைன்னு படம் இவ்வளவு பெரிய வெற்றி அடைஞ்சதை இன்னைக்கு நினைச்சா ஆச்சரியமா இருக்கு.
அது மட்டுமா....?
தீபா டீச்சர் பாத்திரத்தில் டீச்சர் வர்கத்தையே அவமான படுத்திட்டாங்கன்னு.. இது டீச்சர் தவறா? அவர்களை பார்த்து ஆஅ ஆஆஆ ...ன்னு சத்தம் விட்ட பெருசுங்க தவறானு "கேள்வி நேரம்", "காலத்தின் குரல்"." ஆயுத எழுத்து" மட்டும் இல்லாம நீயா நானா நிகழ்ச்சியில்.. நீங்க அந்த பெண்ணாய் இருந்தால் என்ன பண்ணி இருப்பீங்க ... என்றெல்லாம் நிகழ்ச்சி வந்து இருக்கும்.
பாக்யராஜ் பண்ண புண்ணியம், இந்த படம் 80களில் வந்தது. தப்பிச்சாரு!

நடந்திருக்கும்... உண்மை தான்...
பதிலளிநீக்கு