ஞாயிறு, 14 ஜூன், 2020

கண்ணதாசனின் பக்தி முத்தி போய் (கண்ணதாசன் 5 )

கண்ணதாசன் ஏற்று கொண்ட கொள்கையில் ஆழமாக இருந்ததே இல்லை என்பதை விளக்க  கலைஞர் விலகிய உண்மை சம்பவம்.

சேலத்தில் இருந்து நான் பேருந்து மூலம் கோவைக்கு சென்று பின்னர் கோவையில் இருந்து இன்னொரு பேருந்தை பிடித்து பொள்ளாச்சி கூட்டத்திற்கு செல்லவேண்டும். நான் கோவையிலே பேருந்தில் சென்று இறங்கி  கடைத்தெருவில் சென்று  கொண்டு இருக்கும் போது ஒரு வீட்டிற்குள் இருந்து "கருணாநிதி, கருணாநிதி" என்ற குரல் கேட்டது .

யார் என்று திரும்பி பார்த்தேன், "கண்ணதாசன்"!

பட்டை பட்டையாக விபூதி குங்குமம் இவைகளோடு அமர்ந்து இருந்தார். இறங்கி  ஓடிவந்தார் தெருவிற்கு, இல்லத்திற்கு அழைத்து போனார். அங்கே அமர்ந்து தேநீர் அருந்தினோம்.



"எங்கே போகிறாய்?"

என்று கேட்டார்.

"பொள்ளாச்சி கூட்டத்திற்கு செல்கிறேன்"

 என்றேன்.

"நானும் வரட்டுமா"?

என்றார்.

"வா" என்றேன்.

இருவரும் பேருந்தில் ஏறி பொள்ளாச்சிக்கு போனோம், மேடையில் சிலர் அமர்ந்திருந்தினர். எங்களுக்கு முன்னால் சிலர் பேசினார்கள்.

கண்ணதாசன் திடீரென்று

"நானும் பேசட்டுமா?"

என்றார்...நானோ.

"இது திராவிட கழகத்தின் மேடை. நெற்றியில் விபூதியை பட்டை பட்டையாக பூசிக்கொண்டு குங்குமத்தை வைத்து கொண்டு இந்த மேடையில் எப்படி பேசுவாய் என்றேன்?"

"அது என்ன பிரமாதம்?"

என்று கூறி உடனே அழித்து விட்டார்.

தேர்ந்து தெளிந்து ஒரு முடிவிற்கு வரமால் பேசவேண்டும் என்பற்காக விபூதியையும் குங்குமத்தையும் அழித்து விட்டு அப்படி என்ன பேசினார் தெரியுமா?


"வட்டிக்குவட்டி வாங்கும் மட்டிகள் நிறைந்த செட்டிமார் நாட்டில் பிறந்தவன் நான்" என்று துவங்கி "முழு சுயமரியாதை - நாத்திக பிரச்சாரத்தை" செய்து முடித்தார்.


காலையில் விபூதி குங்குமத்தோடு இருந்த கண்ணதாசன் மாலையில் நாத்திக பிரச்சாரம் செய்ததை கலைஞர் தன் பாணியில் நகைச்சுவையோடு பேசியதின் எழுத்தாக்கம் தான் இது.

என் கற்பனை எதுவும் இல்லை.

4 கருத்துகள்:

  1. சுவாரசியமான பதிவு. கண்ணனைப்போலவே கண்ணதாசனும் விளையாட்டுப்பிள்ளையாகவே வாழ்ந்திருப்பது உங்கள் பதிவுகளிலிருந்து தெரிகிறது சார்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல சுவாரசியமான நிகழ்வினைப் பற்றிய தகவல்.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  3. அந்தக் காலத்தின் சுவாரஸ்யமான சம்பவங்களில் ஒன்று.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...