வெள்ளி, 12 ஜூன், 2020

கலைஞரை கலாய்த்த கண்ணதாசன் ! (கண்ணதாசன் 4 )

இன்னும் சில நாட்களில் கண்ணதாசனின் பிறந்தநாள் வருகின்றது அல்லவா. அதையொட்டி கண்ணதாசனை  பற்றிய நிறைய பதிவுகள் வரும். அதெல்லாம் வருவதற்கு முன்பே நமக்கு தெரிந்த கண்ணதாசனை (மீள் )பற்றி அடுத்த சில நாட்களில் தருவோம்.



ஒரு முறை சேலம் அருகே ஒரு இடத்தில் பேசுவதற்காக கலைஞர் கருணாநிதியும் கவியரசு  கண்ணதாசன் அவர்களும் சென்று இருந்தார்கள் . கண்ணதாசன் அவர்கள் தன்னுடைய பேச்சை முடித்து கொண்டு ஒரு அவசர “குடி” போகும் விஷயமாக அந்த இடத்தை விட்டு கிளம்பி அவர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்று விட்டார் .


தன் பேச்சை முடித்துக்கொண்டு  அறைக்கு சென்ற  கருணாநிதி அவர்கள் கதவை தட்டிய போது கண்ணதாசன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார் . தூங்கி கொண்டு இருந்தவர் எழுந்து வந்து  கதவை திறந்து விட்டு மீண்டும தூங்க செல்ல சென்றார் ..உள்ளே சென்ற கலைஞர் அவர்கள்  தன் படுக்கையில் ஒரு கருநாகத்தை கண்டு அலற , ஊரே கூடி அந்த  நாகத்தை அங்கு இருந்து விலக்கியது. ..

அதற்கு பின்  ..

"கண்ணதாசா, அந்த பாம்பை படுக்கையில் பார்த்தது பயமா இருக்கு …"

"அதுக்கு ..?"

"நீ வந்து இந்த படுக்கையில் படுத்துக்க, நான் உன் படுக்கையி ல் படுத்துக்கிரன்.."

"வெட்கமா இல்ல உனக்கு .. ?ஒரு ஆம்பிளை இப்படி பயப்படலாமா …?"

"இல்ல கண்ணதாசா.."

“பராசக்திக்கு” வசனம் எழுதியது 
நீதானான்னு  எனக்கு சந்தேகமா இருக்கு!!"

"இல்ல, அதை பார்த்த பயம் தான் .."

"ஏன்யா ? அஞ்சி அடி 7 அங்குலம் இருக்க அந்த முதுகெலும்பில்லா ஜீவனை பார்த்து இப்படி பயப்படுவியா? "

"அதில்ல கண்ணதாசா ... அந்த பாம்பு என் படுக்கையில் இருந்ததை பாத்துட்டேன் தானே அதே நினைவு வரும் அதுதான்.. "

"அதுக்கு ..!!?"

"நீ இந்த படுக்கையில் படுத்துக்கோ நான் அந்த படுக்கையில் படுத்துக்குறேன்..!!!"

"என்னய்யா மனுசன் நீ? பாம்புக்கெல்லாம் பயப்படலாமா... ? "

"பயம்னு இல்ல, ஒரு...?"

"என்ன? .. ஒன்று ரெண்டுன்னு...?"

"சரி.. என்ன சொல்ற கண்ணதாசா ? இந்த படுக்கைக்கு வாரியா? "

"ஒரு ஆம்பிளை மாதிரி தைரியமா இருக்கணும் ..இதுக்கு எல்லாம் பயப்படலாமா?  நீ அதிலே படுத்துக்க!  நான் இங்கேயே படுத்துகிறன் .."

என்று பயமே இல்லாமல் கண்ணதாசன் உறங்கப்போனார்!


3 கருத்துகள்:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...