செவ்வாய், 16 ஜூன், 2020

அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க?!

நேரு ஒரு மீம்ஸ் பார்த்தேன். மீம்ஸ் என்றாலே பொதுவாக சிரிப்பு தான் என்றாலும் "Every joke has got some truth" என்ற சொல்லுக்கேற்ப அதனுள் உள்ள உண்மை சற்றே சிந்திக்க வைத்தது.

இந்த மீம்ஸ் பிரதமர் மோடியை பற்றியது.

If you see any boy below 14 years of age selling chai "PLEASE DO NOT buy chai from him. We cannot afford to risk another Chaiwala becoming our PM in the future. Please Educate, send him to school, and save our Country.

(பதினான்கு வயது சிறுவன் யாராவது டீ விற்பதை கண்டால் அவனிடம் டீ வாங்காதீர்கள். இம்மாதிரியான ஒருவர் மீண்டும் பிரதமரானால் இந்நாடு தாங்காது. அதற்கு பதில் தயவே செய்து அந்த சிறுவனை பள்ளிக்கு அனுப்பி படிக்கவையுங்கள்)

சில வார்தைகளிலே நாட்டு நடப்பையும், சமூக சிந்தனையையும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை பற்றியும் படிப்பின் முக்கியதுவத்தையும் இந்த மீம்ஸ் எவ்வளவு அழகாக காட்டி இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.



மற்ற விஷயங்களை பின்னர் பார்ப்போம். இப்போது நாட்டை ஆள படிப்பறிவு முக்கியமா என்று அலசலாம். படிக்காதவர்கள் இந்நாட்டை நன்றாக ஆளமுடியுமா? ஆண்டு இருக்கின்றார்களா?

கண்டிப்பாக, இந்த கேள்விக்கு பதில்  "காமராஜ்" படிக்காதவர், இருந்தாலும்  கண்ணியமானவர். நன்றாக தான் ஆண்டார்.

படித்தவர்கள் இந்நாட்டை நாசம் பண்ணவில்லையா?

கண்டிப்பாக.. படிக்காதவர்களை விட படித்தவர்கள் தான் இந்நாட்டை அதிகம் நாசம் பண்ணவர்கள். அதில் துளி கூட சந்தேகம் இல்லை.

படிப்பினால் சிலருக்கு அங்கீகாரம் கிடைத்தாலும் அதனால் வரும் அகங்காரம் தான் அதிகம். கல்வி மட்டுமே ஒருவனை நல்ல மனிதனாக மாற்ற முடியாது.

எந்த பிள்ளையும்  நல்ல பிள்ளை தான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவாரவாதும் தீயவராவதும் பெற்றோர் வளர்ப்பினிலே..

நம் எல்லாரும் அறிந்த ஒன்றே.

அதுவும் தவறு தான். எனக்கு தெரிந்த எத்தனையோ பெற்றோருக்கு தகாத பிள்ளைகள் உண்டு, தகாத பெற்றோருக்கு  நல்ல பிள்ளைகள் உண்டு.

என்னை பொறுத்தவரை ஒருவன் நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் அவன் சுற்றுசூழலை பொறுத்தே. இன்னும் கூற போனால் "Show me your friends and I will tell you who you are".

ஒருவனை அறிய விரும்பினால் அவன் நட்புக்களை முதலில் அறியுங்கள். அது பிரதமர் மோடியாக இருக்கட்டும், அல்ல பக்கத்து வீட்டுக்கு பால் ஊத்துபவராக இருக்கட்டும். அவரின் நட்ப்பை வைத்தே முடிவு செய்து விடலாம்.

மீண்டும் படிப்பிற்கு வருவோம். படிப்பு மட்டுமல்லாமல் நாம் எதை செய்தாலும் அதில் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான  விஷயம்  ஒற்றுமை.

ஒற்றுமையை நாம் படித்தவர்களிடம் இருந்து மட்டும் தான் கற்று கொள்ள தேவையில்லை.

காக்கையை போல் ஒற்றுமை. காகம்  எந்த பள்ளிக்கும் செல்லவில்லை.

நாட்டை ஆள கல்வி முக்கியமாக இருக்கலாம் , ஆனால் அவசியம் இல்லை. அதைவிட சமூக ஒற்றுமை குணம் மிகவும் முக்கியம்.

காக்க கூட்டத்தை பாருங்க அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க!

2 கருத்துகள்:

  1. படிப்பினால் சிலருக்கு அங்கீகாரம் கிடைத்தாலும் அதனால் வரும் அகங்காரம் தான் அதிகம். கல்வி மட்டுமே ஒருவனை நல்ல மனிதனாக மாற்ற முடியாது.//

    டிட்டோ...

    //அதுவும் தவறு தான். எனக்கு தெரிந்த எத்தனையோ பெற்றோருக்கு தகாத பிள்ளைகள் உண்டு, தகாத பெற்றோருக்கு நல்ல பிள்ளைகள் உண்டு.//

    நானும் அடிக்கடி சொல்லுவது.

    அடுத்து ஒரு குழந்தை நல்ல முறையில் வளர வேண்டும் என்றால் நல்ல சூழல் அமைய வேண்டும் என்பதும் அதே தான் விசு.

    ஏட்டுக் கல்வி வேறு அனுபவக் கல்வி வேறு, நல்ல சிந்திக்கும் திறன், நல்ல முடிவெடுக்கும் வல்லமை, அரவணைத்துச் செல்லும் திறன்.

    //காக்க கூட்டத்தை பாருங்க அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க!//

    விசு மக்கள் தொகை அதிகமானதால் இதுங்க மனுஷங்க்ளோடு வாழ்ந்து வாழ்ந்து அதுவும் நகரத்துல, அதுங்க குணம் மாறி வருகிறது!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...