திங்கள், 22 ஜூன், 2020

அனுபவி ராஜா அனுபவி - (கண்ணதாசன் 6)

"அனுபவி"

என்ன ஒரு வார்த்தை!!!!?

வாழ்வில் அனைத்து பாக்கியத்தையும் பெற்று நிம்மதியாக மகிழ்ச்சி பொங்க சுகமாக வாழ்பவனை நல்லா "அனுபவிக்கிறான்" என்று சொல்லுவோம்.
.

அதே போல, அடுத்த வேளை  உணவு கூட எப்போது எங்கே இருந்து வரும் என்று  தெரியாமல் நோய்வாய்ப்பட்டு செத்தால் போதும் என்று பரிதாபமாக இருப்பவனை கூட நல்லா "அனுபவிக்கிறான்" என்று தான் கூறுவோம்.

அனுபவி..
ஒரு வார்த்தை எதிர் புதிரான அர்த்தங்கள்.

அது சரி, இதுல கண்ணதாசன் எங்க வந்தாரா?

பொறுமை!

சும்மாவே தமிழில் நாட்டியம் ஆடும் கண்ணதாசனுக்கு "அனுபவி ராஜா அனுபவி" என்ற பட தலைப்பை கொடுத்து காலில் சலங்கையை மாட்டி விட்டார்  கே. பாலச்சந்தர்.  கூடவே கண்ணதாசனின் ஆருயிர் தோழன்   MSVயின்  இசை வேறு. சொல்லவும் வேண்டுமா?



அனுபவி ராஜா அனுபவி என்ற படத்தலைப்பிற்கு ஏற்றார் இரண்டு பாடல்கள் வேண்டும்.

முதல் பாடல் இரண்டு பணக்கார வாலிபர்கள் வாழ்க்கையில் சுகமாக வாழ்வதை மட்டுமே குறிக்கோளாக வைத்து கொண்டு உல்லாசமாக உற்சாகமாக பாடுவதை போல்..

இரண்டாவது .. இந்த இரண்டு  பேரும்  இரு பெண்களை தங்களின் பாடல்களில் கிண்டல் செய்ய அந்த இரு பெண்களும் இவர்களை கயிற்றால் கட்டிப்போட்டு தண்டனை கொடுப்பதை போல்.

முதல் பாட்டில்..



அழகிருக்குது உலகிலே
ஆசை இருக்குது மனதிலே
அனுபவித்தால் என்னடா கண்ணு
அனுபவிப்போம்

என்றும்

இரண்டாவது பாடலில் ...



அழகு கிளியின் கையாலே
அடிவிழுந்தாலும் சந்தோசம்,

என்றும்

முதல் பாடலில்..

இங்கு கடவுள் படைத்த கலைகள் கூறும்
 உல்லாசம் நமக்காகே என்றும்

இரண்டாவது பாடலில் ...

அதிலே (அடியில்) தோன்றும் அடையாளம்
 அதுவும் ஒருவகை உல்லாசம்.

என்றும்....

அடேங்கப்பா. .என்ன ஒரு ரசனை என்ன ஒரு வரிகள்..

மேலும் பாடலின் நடுவில்..

நாயகர்கள் பாடுகையில்.

நாம் வாழும் உலகம் கையில்
வராமல் வாலிபம் எதற்காக ?

என்ற கேள்வியும்?

நாயகிகள் பாடுகையில்.

நடுத்தெருவில் ஒரு மகாராசா
பார்த்தாரே ஒரு பெண்ணை..
இலாபம் நஷ்டம் பாராமல்
போனாரே அவள் பின்னே..

என்ற பதிலும்!


இரண்டு பாடல்களுமே அருமை.

பாடல்களின் வரிகள் மட்டும் அல்லாமல் MSVயின் இசை மற்றும் பாலச்சந்தரின் எடுத்த விதம் என்று ..

நீங்களும் முதல் பாடல் சொன்னதை போல்

அனுபவியுங்கள்!

3 கருத்துகள்:

  1. இரு பாடல்களுமே நல்ல பாடல்கள். அனுபவித்தோம்.

    துளசிதரன் (நான் படமும் பார்த்த நினைவு)

    கீதா (படம் பார்த்ததே இல்லை ஆனால் பாடல்கள் இலங்கை வானொலியின் உபயத்தால் கேட்டதுண்டு.)

    பதிலளிநீக்கு

  2. படவிமர்சனம் செய்யும் நபர்களுக்கிடையில் பாடல் விமர்சனம் செய்யும் உங்களின் ரசனையே ரசனைதான்.

    லாக்டௌன் working from home நிலவரத்தை நன்றாக அனுபவிக்கின்றீர்கள் போல் தெரிகிறது. ம்ம்ம்ம் .. அனுபவி ராஜா… அனுபவி.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...