சென்ற வாரம் ஒரு காணொளியை பார்க்க நேரிட்டது. அதில் ஒரு நபர் புல பெயர்ந்த தொழிலாளர்களின் பரிதாப நிலையை பற்றி பேசுகையில்..
"அவனை பாக்கவே பரிதாபமா இருக்கு. தலையில் குழந்தை கையில் ஒரு மூட்டை. பின்னால் மனைவி அவர்கள் கையில் இரண்டு மூட்டை... இதை எல்லாம் சுமந்து கொண்டு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நடந்து கொண்டு..
பாவம், அவன் மனதில் ..
"நான் போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ!!!!?"
என்று ஒரே எண்ணம் தான் இருக்கும்...
என்று பேசியுள்ளார்.
இதை கேட்டவுடன் மனதே சற்று விரக்தி அடைந்தது என்று தான் சொல்லவேண்டும்.
அவன் போன ஜென்மத்தில் நாயோ நரியா சிங்கமோ புலியோ ராஜாவோ ஆண்டியோ.. போன ஜென்மன்னு ஒன்னு இருக்குதோ இல்லையான்னு எனக்கு தெரியாது. ஆனா இந்த ஜென்மத்தில் இந்த மாதிரி அவனை பார்த்து சொல்ற அறிவிலிகளுக்கு நடுவுல பிறந்தான் பாரு... அவன் பாவம் தானு நினைக்க தோணுச்சு.
இந்த ஜென்மத்தில் நம் சக மக்களுக்கு உதவி செய்ய வக்கில்லாதவர்கள் தான் ஒருவனின் இன்னல்களை போன ஜென்மத்தினால் வந்தது என்று சாக்கு போக்கு சொல்லுவான் என்று தான் எனக்கு தோன்றுகின்றது.
ஒரு புலம் பெயர் தொழிலாளி, குடும்பத்துடன் பட்டினியுடன் சுமையுடன் நடப்பதற்கு அவன் வாழும் நாடும், மக்களும், அரசாங்கமும் மட்டுமே பொறுப்பு. அதை விட்டு விட்டு "போன ஜென்ம பாவம் " என்பதெல்லாம் ஒரு அவமானமே.
ஒருத்தன் நல்லா இருந்தா போன ஜென்மத்துல நல்லவன் என்று ஒருவன் கஷ்டத்தில் இருந்தால் போன ஜென்மத்தில் அவன் மோசமானவன் என்றும் சொல்வதை எப்படித்தான் சிலர் ஏற்று கொள்கிறாரோ?
பிறருக்கு நல்லது செய்ய மனம் இருந்தால் செய்வோம். இல்லாவிடில் அமைதி காப்போம். இந்த மாதிரி அடுத்தவரின் கஷ்டத்திற்கு போன ஜென்மத்தில் அவன் பண்ண பாவத்தின் மேல் பழியை போட்டு கொண்டு இருந்தால் உங்களுக்கு ஐயோ.
உதவி செய்ய விடாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்போம்!
"அவனை பாக்கவே பரிதாபமா இருக்கு. தலையில் குழந்தை கையில் ஒரு மூட்டை. பின்னால் மனைவி அவர்கள் கையில் இரண்டு மூட்டை... இதை எல்லாம் சுமந்து கொண்டு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நடந்து கொண்டு..
பாவம், அவன் மனதில் ..
"நான் போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ!!!!?"
என்று ஒரே எண்ணம் தான் இருக்கும்...
என்று பேசியுள்ளார்.
இதை கேட்டவுடன் மனதே சற்று விரக்தி அடைந்தது என்று தான் சொல்லவேண்டும்.
அவன் போன ஜென்மத்தில் நாயோ நரியா சிங்கமோ புலியோ ராஜாவோ ஆண்டியோ.. போன ஜென்மன்னு ஒன்னு இருக்குதோ இல்லையான்னு எனக்கு தெரியாது. ஆனா இந்த ஜென்மத்தில் இந்த மாதிரி அவனை பார்த்து சொல்ற அறிவிலிகளுக்கு நடுவுல பிறந்தான் பாரு... அவன் பாவம் தானு நினைக்க தோணுச்சு.
இந்த ஜென்மத்தில் நம் சக மக்களுக்கு உதவி செய்ய வக்கில்லாதவர்கள் தான் ஒருவனின் இன்னல்களை போன ஜென்மத்தினால் வந்தது என்று சாக்கு போக்கு சொல்லுவான் என்று தான் எனக்கு தோன்றுகின்றது.
ஒரு புலம் பெயர் தொழிலாளி, குடும்பத்துடன் பட்டினியுடன் சுமையுடன் நடப்பதற்கு அவன் வாழும் நாடும், மக்களும், அரசாங்கமும் மட்டுமே பொறுப்பு. அதை விட்டு விட்டு "போன ஜென்ம பாவம் " என்பதெல்லாம் ஒரு அவமானமே.
ஒருத்தன் நல்லா இருந்தா போன ஜென்மத்துல நல்லவன் என்று ஒருவன் கஷ்டத்தில் இருந்தால் போன ஜென்மத்தில் அவன் மோசமானவன் என்றும் சொல்வதை எப்படித்தான் சிலர் ஏற்று கொள்கிறாரோ?
உதவி செய்ய விடாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்போம்!
இன்னும் மோட்சம், கர்மா என்று ஏகப்பட்ட விஷ(ய)ங்கள் உண்டு...
பதிலளிநீக்குசார், நமது மக்கள் அனைத்தையும் லேசாக எடுத்துக்கொள்கின்றனர். பாபபுண்ய கணக்கெல்லாம் இறைவன் மட்டுமே அறிந்த வழி. அதை ஏன் மக்கள் பாதிக்கபட்டவரிடம் கூறி மேலும் பாபத்தை சுமக்க வேண்டும். பிறப்பே கர்மாதினமாகத்தான் கிடைக்கிறது. இதில் மனிதனாக பிறப்பதே பெரும் பேறு என்கிறது புனித நூல்கள். அதை புரிந்து கொண்டு வாழும்காலம்வரை நல்லதைப் பேசி, மற்றவரை உற்சாகப்படுத்தி வாழலாம். விசு சார் சொல்வது உண்மை. மற்றவர்களை வார்த்தைகளால் புண்படுத்தாமல் இருப்பதும் அஹிம்ஸையாகும்.
பதிலளிநீக்குVery True Sir. எதற்கெடுத்தாலும் பாவ புண்ணியங்களின்மேல் பழிபோடவேண்டியது. இந்த நாடும் நாட்டுமக்களும்..........
பதிலளிநீக்குfact sir. சொர்கத்தை நாம் மற்றவரை நேசிப்பதன்மூலம் காணலாம். நரகத்தை நாம் மற்றவருக்கு செய்யும் கெடுதலில் காணலாம். என்ன பாவம் செய்தானோ என்று சொல்பவனே அவனுக்கு தெரிந்தும் தெரியாமலும் ஆயிரம் பாவங்கள் செய்திருப்பான்.
பதிலளிநீக்கு