வெள்ளி, 17 ஜூலை, 2020

சினிமாவா?! இல்லாட்டி Moral Science வகுப்பா?

சரி...

இன்னாடா இது வாழ்க்கையே இப்படி தலை கீழே இருக்கே, வெளிய எங்கேயும் போக முடியலைன்னு என்று நினைக்கையில்...

எங்கேயும் வெளிய போக முடியாது! சினிமா, விளையாட்டு, கான்சர்ட், நண்பர்கள் இல்லம் இப்படி அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டதால் ...

சரி, ஒரு தமிழ் படமாவது பாக்கலாம்னு நினைச்சி டிவியை ஆன் பண்ணேன்.  அதில் ப்ரைம் டைம் சேனல் தட்டி தமிழ் மூவிஸ் என்று தேடியதில் "திருமணம் " என்ற ஒரு படம் வந்தது. 

வியாழன், 16 ஜூலை, 2020

இந்த கூத்தாடிய என்ன பண்றது?

காதலியை அடிச்சி துன்புறுத்துவது. சட்டத்துக்கு புறம்பா காட்டுக்குள் போய்  வேட்டை ஆடுவது, தொண்டை வரை குடிச்சிப்புட்டு காரை ஓட்டினு ரோட்டுல படுத்துன்னு இருந்த அன்றாண்டகாய்ச்சிகளை வண்டி ஏத்தி சாவடிகிறது ...
உள்ளங்கை சேற்றில் படாத விவசாயி!

இப்ப சமீபத்தில்," வாரிசு - குடும்பம்" பின்பலம் இல்லாமல் முன்னேறும் நடிகர்களை வளர விடாமல் தடுப்பது..

என்று பல உன்னதமான செயல்களுக்கு சொந்தகார்தான், " சல்மான் கான்"

என்னமோ சினிமாவில் ஒரு நடிகராகி பிரபலம் ஆகிவிட்டால் உலகமே தன் காலில், தனக்கு எல்லாருமே அடிமை .. நான் .. நான்.. நான்..

என்ற ஒரு போக்கு.

குடித்து விட்டு ஆட்களை கார் ஏற்றி கொன்ற வழக்கில் இவருக்கு ஆதரவாக வந்த தீர்ப்பை படித்தால்...

இல்லத்தரசிகளுக்கு ஒரு சலாம்!

அறிந்தோ அறியாமலோ தெரிந்து தெரியாமலோ புரிந்தோ புரியாமலோ வாழ்க்கையில்...

விடிந்தவுடன் கணவன் வேலைக்கு செல்வான், பிள்ளைகள் பள்ளி / கல்லூரிக்கு செல்வார்கள். 

அம்மணி மட்டும் இல்லத்தில் இருந்து இவர்களுக்கான மதிய மற்றும் இரவு உணவை தயாரிப்பதிலும் மற்றும் இல்லத்தை சுத்தம் செய்வதிலும் நேரத்தை கழிப்பார்கள். 

அது என்ன பெரிய வேலை? ஒரு மணி நேரத்தில் இந்த வேலை எல்லாம் முடித்து விட்டு பின்னர் புத்தகம் படிப்பது ( அந்த காலத்தில்) தொலை காட்சி  (இந்த காலத்தில்) பார்ப்பது என்று சுகமாய் இருப்பார்கள் 

என்று தான் நினைத்து இருந்தேன்.

கொரோனா இவை அனைத்தயும் மாற்றி போட்டது.

மார்ச் மாதம் முதல் வாரம் துவங்கி அடியேன் இல்லத்தில் இருந்து வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம். அம்மணியும் சரி, பிள்ளைகளும் சரி தங்கள் வேலையை எப்போதும் போல் மருத்துவமனையிலும் அலுவலகத்திலும் தான் தொடருகின்றார்கள்.

புதன், 15 ஜூலை, 2020

நல்ல வே(லை)ளை நான் பிழைத்து கொண்டேன்.

கொரோனா வந்தாலும் வந்தது அதின் கொடுமைகள் தலைவிரித்து ஆடி கொண்டு இருந்தாலும் சில, மிகவும் சில நல்ல காரியங்களை இந்த கொரோனா நமக்கு கற்று தந்து கொண்டு   இருக்கின்றது.

அதில் முக்கியமான சில..

ஆடம்பர திருமணம் முற்றிலுமாக தவிர்க்க படுகின்றது.

ஊரடங்கின் மூலம் இல்லத்திலேயே பணி. சிறு குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர்கள் இருக்கும் வீட்டில் இது ஒரு மிக பெரிய உதவி.

சுகாதாரம். அனைவரும் தங்களை தாமே சுத்தமாக வைத்து கொள்ள வேண்டிய நிர்பந்தம்.

இம்மாதிரியான சில பயன்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த அட்டவணையில் இன்னொன்றையும் சேர்த்து கொள்ளலாம்.

கடந்த நான்கு மாதங்களாக அமெரிக்க தமிழ் சங்கங்கள் எதிலும் இருந்து .. 

ஞாயிறு, 12 ஜூலை, 2020

ஹவாய் தீவில் செக்க செவேலென்று ஒரு பப்பாளி !

வளரும் வயதில் பொதுவாகவே நாம் அனைவரும் விரும்பி ருசித்து உண்ணுவது பழங்கள். பழங்கள் பலவிதம் தான். அவை அனைத்திற்கும் தனி தனி மணம் குணம் நிறம் வாசம் சுவை என்று உண்டு.

பொதுவாகவே யாராவது விருந்தினர் இல்லத்திற்கு நாம் சென்றாலோ நம் இல்லத்திற்கு யாராவது வந்தாலோ ஆப்பிள் மற்றும் ஆரஞ் எடுத்து செல்வது வழக்கம்.

இவை இரண்டும் தவிர திராட்சை மற்றும் வாழை பழம் இல்லத்திற்கு வருவதை அடிக்கடி கண்டு இருக்கின்றேன். காலத்திக்கேற்ப இல்லம் வரும் அடுத்த பழம் மா !

இப்படி பல வித பழங்களை வைத்து தாக்கினாலும் எது என்னமோ தெரியலை என்னோ தெரியல அந்த காலத்தில் பப்பாளி பழத்தின் மேல் அவ்வளவு ஈர்ப்பு வந்தது இல்லை.

சனி, 11 ஜூலை, 2020

அஜித் சூர்யா விஜய் = அமர் அக்பர் அந்தோணி!

அமர் அக்பர் அந்தோணி என்று அந்த காலத்தில் ஒரு படம். இந்தியில் வெளி வந்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. சிறு வயதில் அந்த படத்தின் தலைப்பை கேட்க்கும் போதே மனதில் ஒரு நிம்மதி. எதோ என்னையும் அறியாமல் ஒரு சந்தோசம். இந்தியாவின் இறையான்மையே இந்த ஒற்றுமையில் இருப்பது போல் ஓர் உணர்வு.

தமிழிலும் சங்கர் சலீம் சைமன் என்று ஒரு படம் மற்றும் தெலுங்கில்  ராம் ராபர்ட் ரஹீம் என்ற இன்னொரு படம் வந்தது. இந்த படங்களை பார்க்கும் போதே நம்மையும் அறியாமல் இப்படியும் ஒருமையாக இருக்கலாமே என்ற உணர்வு தொற்றி கொள்ளும்.

இந்த மத நல்லிணக்கம் ஒற்றுமை கடந்த சில வருடங்களில் சீர் குலைந்து சின்னா பின்னமாகி மட்டும் அல்லாமல் ஏறகுறைய பிணமாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டம்.

நடிகர் பொன்னம்பலம்! என்னதான் நடக்குது?

நேற்று நடிகர் பொன்னம்பலம் அவர்கள் உடல்நல குறைவினால் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காணொளி ஒன்று காண நேரிட்டது.

கூடுதல் தகவலாக இவரின் மொத்த மருத்துவ செலவுகளையும் அதுமட்டும்மல்லாமல் இவர் பிள்ளைகளின் படிப்பு செலவுகளையும் நடிகர் கமல்ஹாசன் ஏற்று கொண்டு இருக்கின்றார் என்ற செய்தியையும் படித்தேன்.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கமல்ஹாசன் அவர்களின் மனிதாபிமான உதவிக்கு மனமார்ந்த நன்றி.

இந்த பதிவை நான் எழுத சில காரணங்கள் உண்டு.

நடிகர் பொன்னம்பலத்தை பல முன்னணி நடிகர்கள் படத்தில் நான் பார்த்த நினைவுண்டு. இவரை பற்றி கொஞ்சம் ஆராய்ந்தால் இவர் நூற்றுக்கும் மேலான படங்களில் நடித்துள்ளார்.  நடிப்பு மட்டுமில்லாமல் சண்டை பயிற்சியாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

வியாழன், 9 ஜூலை, 2020

கட்டை மட்டும் இல்லாட்டி கட்டையில் போயிடுவோம்!

கொரோனா  காலத்தில் இல்லத்தில் இருந்தே வேலை செய்ய ஆரம்பித்து மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது. மருத்துவதுறையில் பணிபுரியும் அம்மணியோ, 

"சும்மா எப்ப பார், எப்ப ஆபிஸ்க்கு போவேன்னு புலம்பின்னு இருக்காதிங்க, இது இன்னும் ரொம்ப நாளைக்கு போகும்ன்னு "

சொல்லிட்டு, வேளைக்கு கிளம்பிட்டாங்க. எனக்கு மட்டும் தான் வீட்டில் இருந்து வேலை. இவங்க மூணு பேரும் கிளம்புடுறாங்க.

காலையில் ஒரு ஒருத்தரா இவங்க ரெடியாகி 

"ஓகே பை"

ன்னு சொல்லிட்டு போகும் போது, என்னடா நம்ம நிலைமை இப்படியாச்சேன்னு ஒரு பீலிங்.  இருந்தாலும் இது ஒரு பிரச்சனையே இல்லை, நமக்காவது வேலை வீடுன்னு ஒன்னு இருக்கே. இந்த கொரோனாவிலினால் அம்புட்டையும் இழந்து தவித்து நிக்குறவங்கள  நினைச்சி பார்க்கையில் நம்ம நிலைமை எவ்வளவோ தேவலன்னு தோணுச்சி.

புதன், 8 ஜூலை, 2020

ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாற்றாதே ஏமாறாதே..

எனக்கு  ஆங்கிலத்தில் மிகவும் பிடித்த பழமொழிகளில்  "Cheat me once shame on you, Cheat me twice shame on me"  இதுவும் ஒன்று. 

என்னை நீ ஒரு முறை ஏமாற்றினால் உனக்கு வெட்கக்கேடு.
அதே நீ என்னை மீண்டும் ஏமாற்றினால் எனக்கு தான் வெட்கக்கேடு.
 இந்த பழமொழி தான் எவ்வளவு உண்மை. இந்த பழமொழியில் அமைந்துள்ள தத்துவத்தை பின்பற்றியதால் நான் கண்ட பலன்கள் மிக அதிகம்.

நேற்று வலைத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருக்கையில்..

"மீண்டும் கிரிக்கட்! இங்கிலாந்து மேற்கிந்திய தீவுகள் நேரடி மோதல்"

என்று காண நேரிட்டது.

அட பாவத்தை.. கொரோனா சனியன் நம்மை விட்டு ஒழிந்தாலும் இந்த கிரிக்கெட் சனியன் ஒழியாது போல இருக்கேன்னு சொல்லிட்டு மனதை பிளாஷ் பேக்கிற்கு அனுப்பினேன்.

இந்தியா பாகிஸ்தான் ஆட்டம். ஷார்ஜாவில்! நம்ம நாட்டு மானம் மரியாதை எல்லாம் இதுல தான் இருக்குன்னு இவனுங்க கொடுத்த பில்ட் அப்பில் மயங்கி .

செவ்வாய், 7 ஜூலை, 2020

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க..

அருமையான வாழ்த்து வாக்கியம். இதன் உண்மையான அர்த்தத்தை கொரோனாதான் எனக்கு புரிய வைத்தது. இந்த வாழ்த்தை பொதுவாக நாம் திருமணமாகும் தம்பதியருக்கு சொல்லுவோம், மற்றும் சொல்ல கேட்டு இருப்போம். 

சிறிய வயதில்.. இது என்ன பதினாறு பெற்றுன்னு சொல்றாங்க.. அம்புட்டு பிள்ளைகளை பெற்றால் நாட்டு நிலைமை என்னாவாகுவது என்று நினைத்தது உண்டு.

பிறகு இந்த பதினாறு என்பதை என்னவென்று அறிந்தேன். அது..

கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நம்பிக்கை, நோயின்மை, முயற்சி, வெற்றி

திங்கள், 6 ஜூலை, 2020

எங்க அப்பா மட்டும் இருந்து இருந்தா? - தொடர்ச்சி

சென்ற பதிவில் அம்மணி " எங்க அப்பா மட்டும் இருந்து இருந்தா" (அதை படிக்க இங்கே சொடுக்குங்கள்)  என்று ஒரு பிட்டை போட நானோ அவரு இருந்து இருந்தா என்ன பண்ணி இருப்பாருன்னு கூகுளை தட்டி..

"Gardening ideas for small patios" என்று கேட்க பல பதில்கள் வந்தது.

பிளாஸ்டிக் பைப்பை இரண்டாக வெட்டி, முதல் வகை.


மரக்கட்டையினால் செய்து வேலியில் / சுற்றில் தொங்க விடுவதை போன்ற அடுத்த வகை.

"எவ்வளவு செலவு பண்ணீங்க.. எங்க அப்பா இருந்து இருந்தாருன்னா, ஒரு கால்குலேட்டர் எடுத்து எல்லாத்தையும் கணக்கு போட்டு சரியா பண்ணி இருப்பார் "

என்ற அசரீரி கேட்க

இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து பிளாஸ்டிக் கிட்டத்தட்ட 3 மடங்கு விலை என்று அறிந்து அருகில் உள்ள "ஹோம்  டிப்போ" கடைக்கு சென்று உள்ளே நிலைய முயலுகையில் முக வசம் இல்லை என்று அவர்கள் திருப்பி அனுப்ப, அடித்து பிடித்து இல்லத்திற்கு வந்து, முககவசத்தை அணிந்து கொண்டு மீண்டும் செல்கையில்...

ஞாயிறு, 5 ஜூலை, 2020

எங்க அப்பா மட்டும் இருந்து இருந்தா?

எங்க அப்பா  மட்டும் இருந்து இருந்தா? 

என்று சொல்லி கொண்டே அம்மணி எதிரில் வர...

"கார் ஆயில் ரிப்பேர் எல்லாம் அவரே செஞ்சி இருப்பாரா?"

"அதுவும் தான்"

"அதுவுமா?!!!, பாத்ரூமில் லேசா தண்ணி லீக் ஆகுதே அதை அவரே சரி பண்ணி  இருப்பாரா?"

"அதுவும் தான், கண்டின்யு"

"பின்னால கதவு லேசா ஆடுதே, அதை ."

"கண்டிப்பா, ஆனா  சொல்ல வந்தது வேற.."

"வேற என்னவா இருக்கும்?"

என்று கேட்கையிலே..

வெள்ளி, 3 ஜூலை, 2020

என்னை பற்றி மூன்றில் எது பொய்?

பதிவுலகத்தில் பல வருடங்கள் உலா வந்துள்ள அடியேனை பற்றி உங்களில் அநேகருக்கு தெரியும். தங்களில் சிலரை பதிவுலகத்திற்கு வருவதற்கு முன்பே தெரியும். உங்களில் சிலர் அடியேனின் பதிவுகளை படித்து பிடித்து  நெருக்கமான நட்பாகவும் மாறி விட்டீர்கள். 

மற்றும் சிலர், நட்ப்பாக மாறாவிடினும் பின்னூட்டத்தில் வாழ்த்து சொல்வீர்கள். பலர் சைலன்ட் ரீடர்ஸ். ஒரு சீக்ரட் அட்மைரர்.

என்னுடைய பதிவுகள் பொதுவாகவே என்வாழ்வின் நடந்த நிகழ்ச்சிகள் தான். உண்மையான நிகழ்ச்சிகளை நடுவில் மானே தேனே போட்டு எழுதுவேன். 

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு ஐம்பது வயதை சார்ந்த தம்பதியரை சந்திக்க நேர்ந்தது. அவர்களிடம் நண்பர் ஒருவர்..

"மீட் விசு, இவர் தமிழில் பிளாக் எழுதுவார்"

வியாழன், 2 ஜூலை, 2020

பல் எல்லாம் மாணிக்க பல் ஆகுமா?


போன வாரமே அம்மணி ..

"அடுத்த வாரம் உங்களுக்கு டென்டிஸ்ட் அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு, மறந்துடாதீங்கன்னு"

சொல்ல..

"கொரோனா நேரத்தில் எல்லாம் மூடி இருப்பங்களே"

"மூடி தான் இருந்தாங்க.. இந்த வாரம் தான் திறந்தாங்க, மறக்காம போங்க"

என்று அன்போடு அதட்ட..

என்னாடா இது.. ஒரு ஜுரம் மூச்சு திணறல் வறட்டு இருமல் வந்தா கூட டாக்டரிடம் நாம போக மாட்டோம் . டென்டிஸ்ட்க்கிட்ட போக வேண்டி இருக்கே, என்று நினைத்து கொண்டு இருக்கையில்..

இளையவள்.. 

"அம்மா.. நான் டென்டிஸ்ட்க்கிட்ட போய் ஆறு மாசத்துக்கு மேலே ஆச்சி. எனக்கும் அப்பாயிண்ட்மெண்ட் வாங்குங்க"

புதன், 1 ஜூலை, 2020

ஆளில்லா கடையில் டீ ஆத்தின்னு இருக்கும் பதிவர்!!!


பல வருடங்களுக்கு முன்பு குறிப்பாக சொல்லப்போனால் 2013ம் வருடத்தில் போல் நண்பன் ஒருவர் 

"நம்ம பரதேசி@நியூயார்க்  அல்ப்ரெட் அண்ணனின் பதிவுகளை படித்து இருக்கிறாயா?"

 என்று கேட்டார்?


"இது என்ன பதிவு?" 
என்று கேட்க அவரோ.. 

"அட பாவி! தமிழ் பதிவுலகத்தை பத்தியே உனக்கு தெரியாது போல இருக்கே. இப்ப அதுதான் லேட்டஸ்ட். போய் சிலரோட பதிவை படிச்சி பாரு.சிறுகதை, தொடர்கதை, உண்மை நிகழ்வுகள், அரசியல், சமூதாயம், சினிமா , நகைசுவைன்னு வைச்சு தாக்குறாங்க. படிச்சி பாரு"

என்று சொல்ல...

முதலில் கண்ணில் தென்பட்டது ..

"தருமி" அவர்களின் பதிவு.

பேராசிரியர் சாம் அவர்கள் தருமி என்ற பெயரில் எழுதிய சில எழுத்துக்களை படித்தேன். பல விடயங்களை யாருக்கும் பயப்படாமல் வெளிப்படையாக எழுதி இருந்தார். அவற்றை படிக்கையில் ஒரு பின்னூட்டத்தில் பரதேசி என்ற பெயர் தென்பட  அவரின் "காதல் கசக்குதய்யா" என்ற ஒரு பதிவை படிக்க ஆரம்பித்தேன். மிகவும் ரம்மியமாக நகைச்சுவையோடு இருந்தது.

செவ்வாய், 30 ஜூன், 2020

டயர் நக்கி அடிமை கேட்டான் பாரு ஒரு கேள்வி!

சாத்தான் குளத்தில் நடந்த கேவலமான கொடுமையான சம்பவத்தை பற்றி நிறைய தொலைகாட்சி நிகழ்ச்சியில் நடக்கும் விவாதங்களை பார்க்கையில் இந்த அதிமுக அடிமைகளின்  பேச்சு நம்மை வாந்தி எடுக்கும் அளவிற்கு அருவருப்பாக இருக்கின்றது.


ஒரு பெண்மணி ஒவ்வொரு முறை பேச ஆரம்பிக்கையில்..

மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்களின் ஆட்சியில் என்று ஆரம்பிக்கும் போது, இதெல்லாம் ஒரு ஜென்மமா என்று நினைக்க தோன்றுகின்றது.

ஏழைமக்களின் பணத்தை கணக்கு வழக்கில்லாமல்;சேர்த்து அதற்காக Accused  1  என்று பெயர் பெற்று, தீர்ப்பிற்கு முன்பு மரணம் அடைந்த ஒரே காரணத்தினால் சிறைக்கு செல்லவேண்டிய ஒருவரை..

மாண்பு மிகு இதய தெய்வம் என்று பொது வழியில் அழைக்கின்றார்கள் அதையும் ஏற்று கொள்ளும் மக்களின் மனபாவம்.

சின்ன சின்ன ஆசை! சில்லறை ஆசை!

ஐந்தாவது படித்து கொண்டு இருந்த நாட்கள். பத்து வயது போல் என்று நினைக்கின்றேன். அடியேனின் தாயார் ஒரு தனியார் பள்ளியின் நிர்வாகியாக  பணிபுரிந்து கொண்டு இருந்தார்கள். எங்கோ ஒரு பள்ளி விடுதியில் படித்து கொண்டு இருந்த நான் கோடை விடுமுறைக்கு அம்மாவிடம் வர...(இந்த ஊரின் பெயர்  பருகூர். தருமபுரி மாவட்டத்தில் ஒரு சிறிய ஊர். )

வீட்டின் எதிரில் கார் ஹார்ன் சத்தம் கேட்க, வெளியே ஓடி வந்து எட்டி பார்த்தேன். ஓர் வெள்ளை நிற அம்பாஸடர் கார். மார்க் IV என்று படித்ததாக நினைவு.

வாகன ஓட்டுநர் என்னை பார்த்து..

"வண்டி ரெடின்னு அம்மாட்ட சொல்லு"

என்று சொல்ல.. நான் ஓடும் முன்பே உள்ளே இருந்து வெளிய வந்த அம்மாவின் உதவியாளர் ஓட்டுனரிடம்...

"அம்மா உங்களை உள்ள வந்து டிப்பன் சாப்பிட சொன்னாங்க.. அவங்க ரெடி, நீங்க சாப்பிட்டவுடன் கிளம்பலாம்"

என்று சொல்ல அவரும் உள்ளே செல்ல..அந்த உதவியாளர் என்னிடம் ..

"நீயும் போய் ப்ரெக்பாஸ்ட முடிச்சிடு"

திங்கள், 29 ஜூன், 2020

பழமுதிர் சோலையில் ரமதான் கிறிஸ்துமஸ் தீபாவளி

ஞாயிறு காலை ஆன் லைனினில் ஆண்டவனை வேண்டிய பின்னர் அம்மணி..

"வாங்க அப்படியே ஒரு ட்ரைவ் போகலாம்"

என்று சொல்ல...

ஆளுக்கொரு முக கவசம் எடுத்து கொண்டு வாகனத்தை கிளப்பி...

""எங்க போறோம்"

"ஒன்னரை மணி நேரம் ட்ரைவ்... ஒரு பழமுதிர் சோலை இருக்கு. அங்கே போய் நாமே பழங்கள் பிடுங்கின்னு வரலாம்."

"இவளுங்க வர மாட்டாளுங்களா?"

"கேட்டேன், இல்லைன்னு சொல்லிட்டாங்க"

மனதில்..

எங்கேயாவது போகும் போது இவளுங்க வரலைன்னு சொன்ன.. "ஓகே பை"ன்னு சொல்லிட்டு கிளம்பும் அம்மணி.. நாம்ம வரலைன்னு சொல்றதுக்கு கூட ஒரு வாய்ப்பு தர மாற்றங்களே.. சொல்லும் போதே.. கிளம்புங்கன்னு தானே சொல்றாங்க

என்று நினைத்து கொண்டே.. 

வண்டியை விட்டேன்.

ஞாயிறு, 28 ஜூன், 2020

கிழஞ்சது போ அஞ்சி ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்.

என் இனிய தமிழ் மக்களே...

கொரோனாவில் தாக்கப்பட்டு உடல் ரீதியாக மன ரீதியாக பண ரீதியாக கிட்ட தட்ட பிணம் போல் வாழும் நமக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி.


கடந்த சில மாதங்களாக, கொரோன என்று நாம் கேள்வி படுமுன்பே  பல நிகழ்ச்சியில் சில பொருளாதார நிபுணர்கள்

இந்தியாவனின் பொருளாதாரம் படு பாதாளத்தை நோக்கி போய்கொண்டு இருக்கின்றது. அரசாங்கம் உடனடியாக ஏதாவது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி வந்தார்கள். 

இதற்கு பதில் சொல்வதற்காக ஆளுங்கட்சியாளருக்கு ஆதரவாக தமிழ் தொலைகாட்சியில் வலது சாரி என்ற போர்வையில் சேஷாத்திரி, ஆச்சாரி ,  இன்னும் சில பொருளாதாரத்தை பற்றி கொஞ்சமும் அறிவு இல்லா பொருளாதார நிபுணர்கள்

சனி, 27 ஜூன், 2020

சிறிய தவறால் பெரிய சோகம்!

இந்த பதிவை கோவத்தில் எழுதுகின்றேனா அல்ல சோகத்தில் எழுதுகின்றேனா என்று எனக்குள் ஒரு குழப்பம்.

சனி அதுவுமாய் காலை எழுந்து கணினியை தட்டினால் 

"ஒரே குடும்பத்தில் மூன்று பேர் தங்கள் வீட்டின் பின்புறம் இருந்த நீச்சல் குளத்தில் மூழ்கி சாவு."

இந்த தலைப்பு செய்தியை படித்தவுடன் என்னை அறியாமல் மனதில் வந்தது.

அரசாங்கமே! காவல் துறைக்கு இனிமேலாவது சம்பளம் கொடு!

என்னமோ தெரியவில்லை. சிறிய வயதில் இருந்தே காவல் துறையினரை கண்டால் எனக்கு என்னமோ பயமோ மரியாதையோ என்று எதுவும் தோன்றுவதில்லை. 

இன்னும் சொல்லப்போனால் ஆரம்ப பள்ளி நாட்களில் யாராவது போலீஸ் திருடன் விளையாட்டிற்கு அழைத்தால், எங்கள் பள்ளியின் அனைவரும் திருடன் ரோல் கேட்டு தான் ஆடம் பிடிப்பார்கள். போலீஸ் என்றால் மற்றவர்கள் கிண்டல் செய்வார்கள் என்ற ஒரு நினைப்பு. 
காவலர்களை பார்த்தல்   ஒரு பரிதாபமும் மற்றும்.. "என்ன இவ்வளவு தாழ்ந்து போய் இருக்காங்களே." இவங்களுக்கு அரசாங்கம் சம்பளம் தருவதில்லையா? என்ற ஒரே நினைப்பே தான் வரும்.

தற்போது நடந்த சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு காரணம் ஒரு இலவச செல் போனுக்கு என்று  எங்கோ படித்தவுடன், கண்டிப்பாக இருக்குமென்ற  எண்ணம் மட்டுமே வந்தது.

வெள்ளி, 26 ஜூன், 2020

விஸ்வநாதா வேலை வேண்டாம் !

மார்ச் மாதம் போல் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இளைய ராசாத்தி கிட்ட தட்ட அழுதுகொண்டே என்னிடம் வர...!

"ஏன் அழுவுற..?"

"நான் அழுவுல !"

"ஏன் சோகமா இருக்க!!!?"

"ஐ ஹேட் திஸ் கொரோனா, என் வேலையே போச்சி"

ஒப்பாரி வைத்தாள்.

இங்கே பிள்ளைகளுக்கு பதினைந்தரை வயதில் வாகன ஓட்டுரிமை கிடைத்தவுடன் அவர்கள் வேலைக்கு போக ஆரம்பித்து விடுவார்கள். பள்ளி நாட்களில் மாலையிலும் மற்றும் வார  இறுதியிலும் கிட்டத்தட்ட  20  - 30  மணி நேரம் வேலைக்கு செல்வார்கள். குறைந்த பட்ச ஊதியமாக மணிக்கு 13 டாலர்கள் கிடைத்தாலும் வாரத்திற்கு வருமான வரியை பிடித்து மிச்சம் முன்னூறு டாலராவது கிடைக்கும்.

வியாழன், 25 ஜூன், 2020

பென்னிக்ஸ் ஜெயராஜும் ஜார்ஜ் பிலோய்ட்டும்!

அப்பா மகன் என்று இருவர், 24 மணி நேர இடைவெளியில் மரணித்து இருக்கின்றார்கள்.எங்கேயோ மருத்துவமனையில் அல்லது சாலை விபத்திலோ அல்ல.

தாம் நடத்தும் கடையை கொரோனா நேரத்தில் விதிக்கு புறம்பாக அதிக நேரம் திறந்து வைத்ததால் காவல் துறையால் விசாரிக்க அழைக்க பட்டு

அங்கே நடந்தது ஆண்டவுனுக்கே வெளிச்சம்.

விசாரணை எதுவும் நடக்கும் முன்பே தமிழக முதல்வர் அந்த மகன் நெஞ்சு வலியினாலும்  அப்பா காய்ச்சலினாலும் இறந்தார் என்று அறிக்கை விட்டு இருக்கின்றார்.

பத்திரிகைகளையும் மற்றும் காணொளிகளும் இவர்கள் உடலில் அதிக இரத்த காயங்கள் காணப்பட்டதாக தகவல்.

புதன், 24 ஜூன், 2020

கண்ணதாசன் எழுதிய பாட்டிற்கு சம்பளம் வாங்கிய வாலி (கண்ணதாசன் 7)

"சைனா டவுன்"ன்னு ஒரு ஹிந்தி படம். சக்கை போடு போடுது. படத்தின் கதையை கேட்டா என்னமோ MGR க்கே எழுதி இருக்க மாதிரியே இருக்கு என்று சொல்லி கொண்டே வந்தார் அக்காலத்து இயக்குனர் K ஷங்கர். இது நடந்த வருடம் 1968 .

அப்படி என்ன MGR க்கு ஏத்த கதை?

இரட்டை பிள்ளைகளின் அப்பா கொலை செய்ய படுகிறார். ஒரு குழந்தையை அம்மாவும் இன்னொரு குழந்தையை அந்த கொலைகாரனும் வளக்குறாங்க. அம்மா செண்டிமெண்ட்!  ஒரு குழந்தை ஹோட்டலில் நடமாடி பாடுபவர் !இன்னொருத்தார் கொள்ளைகாரார்! சண்டை பாட்டு ஆட்டம்னு..! எல்லாம் MGRக்கு சரியா அமையும்!

என்று அவர் சொல்ல ஒரு தயாரிப்பாளரும் அதற்கு மயங்கி விழ "சைனா டவுன்"  படத்தின்  தமிழ் படைப்பாக  வெளி வந்தது MGRரின் "குடியிருந்த கோயில்" 

செவ்வாய், 23 ஜூன், 2020

கற்க கசடற (2 of 7 )

கற்க கசடற கற்றவை கற்றப்பின் நிற்க அதற்கு தக"!

என்ற குறளையொட்டி பள்ளிக்கூடத்து நாட்களில் நடந்த ஒரு நிகழ்ச்சியை முந்தைய பதிவில் தந்து இருந்தேன்.

அந்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.

அந்த பதிவில் இக்குறளில் மொத்தம் ஏழு குறள் அடங்கி உள்ளது என்று  சொல்லி இருந்தேன். மீதி ஆறை சீக்கிரம் எழுது என்ற அன்பு கட்டளைக்கு அடி பணிந்து, இதோ அந்த இரண்டாம் குறள்.

அதே ஏழு வார்த்தை , வேறொரு துவக்கத்துடன்.

கசடற கற்றவை கற்றப்பின் நிற்க, அதற்கு தக, கற்க "!

கசடற என்பதின் பொருள்

அப்பழுக்கற்ற மற்றும் தவறில்லா என்றாகும். களவும் கற்று மற, என்ற மொழிகளை வழி தள்ளிவிட்டு  நல்லவைகளை மட்டும் கற்று கொள்.

இப்படியான நன்பொருள்களை கற்ற பின் அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ளவேண்டும். ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது என்பது போலாகிவிடக்கூடாது.

இப்படி அப்பழுக்கற்றவகைளை கற்று கொண்டு அதற்கேற்றாற் போல் நடந்து கொள்வது நிறைகுடம் ததும்பாது என்பதை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டுவது போல் இருக்கவேண்டும்.

அதற்கு தக கற்க,

இப்படி ஒரு மேன்மையான வாழ்வை வாழ அதற்கேற்றவாறு  தொடர்ந்து மென் மேலும் கற்க வேண்டும்.

இதுதான் இரண்டாம் குறள்..

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...