புதன், 9 ஜூலை, 2014

'ஒன்று நூறாகி தலை குனிந்து நிற்கும் நெல் கதிர் வயல்'

 'இதுதானே நாம் கற்ற பள்ளி" யின் தொடர்ச்சி..


அருமையான மாணவர்களே... ஆசீரீயர்களே, மற்றோரே..வணக்கம்.
என் தொழில் சார்ந்த இடத்திலும் சரி, ஆன்மிக வாழ்கையிலும் சரி, சமூக வாழ்கையிலும் சரி நான் பல இடங்களில் பேச வாய்ப்பு கிடைத்ததுள்ளது.  இந்த இடங்களில் எல்லாம் பேசுகையில் எனக்கு வார்த்தைகள் தயக்கம் இல்லாமல் வரும். ஆனால் இன்று ஏனோ மனதில் ஒரு தயக்கம். ஒரு பயம். இருந்தாலும் அதை எல்லாம் மீறி சில வார்த்தைகளை மட்டும் சொல்லி விட்டு போகிறேன்.



இதே மேடையில் பல வருடங்களுக்கு முன் என் ஆறாவது ஆசிரியை  சாந்தா அவர்கள் கூறியதால் 'ஜவஹர்லால் நேருவின் பார்வையில் இந்தியா" என்ற தலைப்பில் பேசினேன், பரிசும் பெற்றேன். அது இன்று நினைவிற்கு வருகிறது.
என்னிடம் ஒன்றுமே இல்லாதபோது, எனக்குள் ஏதோ இருக்கின்றது என்று என்னை நம்பி மேடையில் ஏற்றி அழகு பார்த்த அந்த ஆசிரியை இன்று, நான் இங்கே வந்து உள்ளேன் என்று அறிந்து  'ஒன்று நூறாகி தலை குனிந்து நிற்கும் நெல் கதிர் வயல்' போலாகி என் எதிரில் நிற்கையில் எப்படி வரும் பேச்சு. நன்றி டீச்சர். உங்கள் நம்பிக்கைக்கு.அவர்களை போலவே என்னை வழி நடத்திய மற்ற அனைத்து ஆசிரீயர்களுக்கும் என் நன்றி.

என் சொந்தமான மாணவர்களே, மாதா, பிதா, குரு, தெய்வம் என்று முன்னோர் கூறினார்கள். என்னை பொறுத்தவரை ஏன் அந்த வரிசையில் கூறினார்கள் தெரியுமா?  மாதா இல்லாத உயிர் இல்லை. அந்த மாதாதான் நம் பிதா யார் என்று நமக்கு காட்டுவார்கள்.அந்த பிதாவின் மூலமாக நமக்கு அறிமுக படுத்தபடுவது தான் குரு - ஆசிரியர்கள். இந்த ஆசிரியர்கள் தான் நமக்கு தெய்வத்தையே அறிமுகபடுதுவார்கள். வருடங்கள் பல ஆகினும் நம் பள்ளியின்  குறிகோளான "கடவுளுக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" என்பது சிறிய வயதிலே ஏன் மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்தது.  இவ்வாறான பிதாவிற்கும் தெய்வத்திற்கும் நடுவில் உள்ள குருவை மதியுங்கள், மற்ற அனைத்தும் தானாக நடை பெரும்.

இங்கே உள்ள  ஆசிரிய ஆசிரியைகளுக்கு நான் தாழ்மையுடன் கூறிகொள்வது என்னவென்றால் நாங்கள் படிக்கும் வேளையிலே ஒவ்வொரு மாணவனும் ஒரு ஆசிரியரை தன மனதில் மானசீக குருவாக ஏற்று கொண்டு அதன் படி நடப்பான்.  இப்படியான ஆசிரியர்களாக நீங்கள் அனைவரும் இருப்பீர்கள் என்பது ஏன் ஆழ்ந்த நம்பிக்கை.  ஒரு மாணவன் வாழ்வதும் தாழ்வதும் உங்கள் கையில் உள்ளது. ஒரு மாணவன் தன வாழ்வில் வெற்றி பெற்றால் அது ஒரு பரம்பரையே மாற்றும்.

அன்று நான் கணக்கு பாடத்தில் தவறிய போது, மற்ற மாணவர்களின் எதிரில் ஏன் காதை கண்ணில் கண்ணீர் வரும் வரை திருகிவிட்டு, பள்ளி கூடம் முடியும் நேரத்தில் என் அருகில் வந்து, இன்று மாலையில் இருந்து 6 மணிக்கு என் வீட்டிற்கு வா, உன்னை கணக்கு பிள்ளை ஆக்குவேன் என்று சபதமிட்டாரே எனக்கு பிரியமான ரபேல் வாத்தியார்.

சார், நான் விடுதியில் தங்கி உள்ளவன். ஊரில் உள்ள என் அம்மாவிடம் இதற்கான கட்டணத்தை பற்றி பேசி சம்மதம் வாங்கி பிறகு ஆரம்பிக்கலாமே என்றேன்.  நான் உன்னிடம் கட்டணம் கேட்டேனா, அதை பற்றி நீ யோசிக்காதே, நீ வந்து தேறும் வழியை பார் என்றார்.  அவர் இன்று இங்கே இல்லாவிடிலும் பள்ளியின் அருகில் தான் வாழ்கிறார் என்று கேள்வி பட்டேன் . இங்கே பேசி முடித்தவுடன் நான் நேராக அவரை பார்க்க செல்கிறேன்.

என் தலைமை ஆசிரியர், அற்புதராஜ்! மறக்க முடியுமா அவரை?. ஒரு தவறை செய்த என்னை தன் அறையில் கூட்டி  சென்று கதவை சாதி விட்டு, உன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்து உள்ளேன். நீ இப்படி செய்து விட்டாயே, யு லாஸ்ட் மை டிரஸ்ட். ஐ அம் வெரி அப்சட், என்று சொல்லி தலையில் கை வத்து தன் இருக்கையில் அமர்ந்தாரே, 'தீயினார் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு" என்பதை நல்ல முறையில் உணர்த்தினாரே,  அவரை மறக்க இயலுமா?


இன்று இங்கே என் பிள்ளைகளும் இந்த மேடையில் உள்ளனர். அவர்களை ஏன் அழைத்து வந்தேன் தெரியுமா? அவர்களுக்கு  நான் படித்த பள்ளியை காட்டதான். நாளை அவர்கள் தம் தம் பிள்ளைகளை அவர்கள் படித்த பள்ளிகூடத்திற்கு  கூட்டிக்கொண்டு மற்றவர் வாழ்த்த வளம் வரவேண்டும் என்ற ஒரு நல்ல நப்பாசையில் தான்.

மாணவர்களே.. நான் என் பேச்சை முடிக்கும் முன் ஒரு சின்ன அறிவுரை.

'நான் அந்த தெய்வத்தை கேட்ப்பது எல்லாம், ஆண்டவா! எனக்கு கிடைத்த வாய்ப்புகள் போல் இங்கே உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் மாணவிகளுக்கும் நீ தர வேண்டும். அந்த வாய்ப்புகள் வருகையில் இவர்கள் அதை உணர்ந்து,  உபயோக படுத்தி கொள்ள வேண்டும்.

வாய்ப்பிற்கு நன்றி.

பின் குறிப்பு;
பேசி முடித்து மீண்டும் தலைமை ஆசிரியரின் அறைக்கு சென்று, ஒரு தேநீர் பருகி விட்டு. சார், அந்த கணக்கு வாத்தியார் ரபேல் வீட்டிற்கு என்னை அழைத்து செல்ல முடியுமா என்றேன். அது சரி,  விசு.. அது ஏன் அவரை பார்க்க இப்படி துடிக்கிறாய் என்றார். அது ஒன்னும் இல்ல சார்...
அவரிடம் ஒரு கணக்கு பாக்கி இருக்கு, அத பைசல் பண்ண வேண்டும் என்றேன்.. அது என்ன பாக்கி  என்று கேட்கின்றீர்களா...

அடுத்த இடுகையில் வரும்..

4 கருத்துகள்:

  1. நன்றி நினைவில் ஜொலிக்க அருமையான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜேஸ்வரி அவர்களே. இவையெல்லாம் " மறக்க முடியாத அனுபவங்கள்" இங்கே அளிப்பதே "யாம் பெற்ற இன்பம்" என்ற நோக்கத்தினால் தான். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. இவ்வாறு ஆவலை அதிகரிப்பது தான் எண்ணமா...? ஹிஹி...

    பதிலளிநீக்கு
  3. தம்பி விசு , ஒரு பரவசமான உன் அனுபவத்தை உன் எழுத்து மூலம் எம் அனுபவமாக மாற்றிக்காட்டியதர்க்கு நன்றி.
    நகைச்சுவைப்பேச்சு மட்டுமல்ல நீ எந்தப்பேச்சையும் சுவையாக பேசுவாய் என்று இதன் மூலம் நிரூபணம் ஆகி இருக்கிறது .வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...