திங்கள், 28 ஜூலை, 2014

(4)இந்நாட்டில் (அமெரிக்காவில்) பிடித்தவை : 'நூலகம் - புத்தக கடைகள்"

 'நூலகம் - புத்தக கடைகள்"

அமெரிக்காவிற்கு வந்த புதிது. முழ நேர வேலை - அதற்க்கும் மேலே படிப்பு. மூச்சு விட நேரம் கிடையாது. அந்த நேரத்தில் சோகமாக சுத்தி கொண்டு இருந்த என்னை பார்த்து இந்திய நண்பன் ஒருவன் கேட்டார் :



என்ன விசு , 9000 மைல்க்கு விமானம் ஏரி வந்து எதோ அந்த காலத்து சிவாஜியோட சோக படத்த பார்த்தவன் போல  இவ்வளவு சோகமா இருக்க?

அது ஒன்னும் இல்ல பாலு. நான் இந்தியாவில் படித்த ஆள். அதுவும் கணக்கியல் - வணிகவியல் படித்தவன். இங்க அது எதுவும் செல்லாதுன்னு சொல்லிட்டாங்க, அதனால் வேலையை பார்த்துக்கொண்டே படித்து கொண்டு இருக்கிறேன்.

அது உங்களுக்கு மட்டும் இல்ல, எல்லா துறையிலும் அப்படிதான். எங்க படிச்சிட்டு வந்தாலும், இந்த ஊர் "லைசன்ஸ்" வேண்டும், இல்லாவிட்டால், இங்கே அந்த துறையில் வேலை செய்ய முடியாது. சரி ரெண்டு வருஷம் தானே படிச்சிடு விசு, அப்புறம் இந்த பிரச்சனை இல்லை.

பாலு, அதே எண்ணத்தில் தான் நானும் முயற்சி பண்றேன். இது அப்பார்ட்மெண்ட் இல்லைய. பக்கத்துக்கு அப்பார்ட்மெண்டில் எப்ப பாரு பார்ட்டி, சத்தமா டிவி, முயுஸிக்ன்னு வைச்சி தாக்குறாங்க. படிப்பில் கவனம் செலுத்த முடியல. ரொம்ப குழப்பமா இருக்கு.

அட விசு, இது ஒரு பிரச்சனையே இல்ல.இங்க இருந்து அஞ்சே நிமிஷ நடை பொது நூலகம். நம்ப ஊரு 5 ஸ்டார் பாணியில் இருக்கு. அங்கே போய் ஏசி அறையில் போய் நிம்மதியா நல்ல ஒரு இடத்தில உட்கார்ந்து மணிகணக்குல படி. உன்னை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

இதுல இன்னொரு விஷயம் இருக்கு பாலு. என் படிப்பிற்கு நான் இன்டர்நெட் உபயோகபடுத்த வேண்டி இருக்கு. அதற்க்கு வீட்டில் தானே வசதி.
விசு, நூலகத்தில் போய் ஒரு அடையாள அட்டை வாங்கிக்கோ.

அது உடனே அஞ்சி நிமிஷத்தில் அங்கேயே போட்டோ எடுத்து கொடுப்பாங்க. அதை வச்சி  நீ அங்கேயே இலவசமா இன்டர்நெட் உபயோக படுத்தி கொள்ளலாம்.

ரொம்ப நன்றி, பாலு. நாளைக்கே அங்கே போய் பார்க்கின்றேன்.

அடுத்த நாள் அருகே இருந்த நூலகதிர்க்கு சென்ற எனக்கு பல இன்ப அதிர்ச்சிகள். ஆயிரகணக்கான புத்தகங்கள், CDக்கள், கணினி வசதி, அருமையான, அமைதியான சூழ்நிலை. நண்பன் பாலுவிற்கு மனதிலே ஒரு நன்றி போட்டு விட்டு, அங்கேயே என் கூடாரத்தை போட்டு விட்டேன். என்னை போலவே நிறைய பேர், படிப்பதற்காக மணிகணக்கில் அங்கே வந்து அமர்ந்து விடுகிறார்கள். நிறைய பெற்றோர்கள் பிள்ளைகளோடு வந்து வெவ்வேறு இடத்தில அமர்ந்து படித்து கொண்டு இருகின்றார்கள். பாலகர்களுக்கு என்று ஒரு தனி இடம். நிறைய பொம்மைகள், விளையாட்டு பொருட்களின் மத்தியில் அவர்களுக்கான புத்தகங்கள். அவர்களுக்கு அதை படித்த காட்ட அங்கே வந்துள்ள சமூக சேவகர்கள். அடடே... அருமை. 

சில நாட்கள் களித்து நண்பன் பாலுவை சந்தித்தேன்.

என்ன விசு, படிப்பு எப்படி போகுது?

நீ நல்லா இருக்கனும் பாலு, நூலகம் சூப்பர் அப்பு. அங்கேயே செட்டில் ஆயிட்டேன்.

ரொம்ப சந்தோசம் விசு. அதுக்கு பக்கத்திலேயே "Barnes & Noble" ன்னு ஒரு புத்தக கடை இருக்கு. அங்கே போனா உனக்கு வேண்டிய புது புது புத்தகம் எல்லாம் இருக்கும்.

அந்த புத்தகதைஎல்லாம் நீ எடுத்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உட்கார்ந்து படிக்காலாம். இது ஒரு தனியார் கடையா இருந்தாலும், இங்கேயும் பொது நூலகம் போல ஒரு இடம் இருக்கும். அங்கே போய் நீ உட்கார்ந்து படிக்கலாம்.

ரொம்ப தேங்க்ஸ் பாலு, என்னதான் சொல்லு, வீட்டிலே படிக்கும் பொது தேவையான நேரத்தில் ஒரு காபி, ஒரு திண்டி.. இங்க வெளியே எதுவும் குடிக்க, கொறிக்க முடியலையே பாலு.



விசு, "Barnes & Noble" உள்ளே "ஸ்டார் பக்ஸ்" கடை இருக்கு பா. அதுவும் நூலகம் மாதிரி தான் இருக்கும். தேவையானபோது காபி குடிச்சி,  படிப்ப முடிக்கிற வேலைய பாரு.

 ரொம்ப சந்தோசம் பாலு, மீண்டும் உனக்கு ஒரு கோடி நன்றி.

பின் குறிப்பு:
இவ்வளவு வசதிகள் இருந்தும், படிக்கும் பழக்கம் நம்முடைய அடுத்த தலை முறையினரிடம் குறைவதை பார்த்தல் மனது சோர்ந்து போகிறது. 

3 கருத்துகள்:

  1. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. I love the libraries in the US too. I still have my first library card.

    Our current library allows borrowing of books and movies over the internet. I am impressed.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாடோடிப் பையன் : You said it Bro. One can just love the libraries here. Thanks for dropping by.

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...