அந்த ரூமில் போய் அந்த பெட்டியில் இருந்து அங்கே இருக்கும் அதை அப்படியே எடுத்துன்னு வா என்று சொல்வார்கள். அதை நாம் சரியாக எடுத்து கொண்டுவர வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
பின் குறிப்பு:
இந்த விஷயத்தில் நாம் எப்போதும் தடுமாறி தவறாக தான் செய்வோம். "சமையல் அறையில் போய் அங்குள்ள சர்க்கரை டப்பாவை எடுத்து கொண்டு வா" என்று விளக்கி சொல்லும்போதே தவறாக உப்பை எடுத்து வரும் ஜென்மங்கள் தானே ஆண்கள். ஆதலால், இவ்வாறாக மனைவி சொல்லும்போது, கோபபடாமல், அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அவர்களுக்கு வேண்டியதை என்னவென்று கேட்டு எடுத்து வரவும்.
இதில் மற்றொரு விஷயம். அவர்களை பரிசோதிக்க நானும் ஒரு முறை "அங்கே சென்று, அங்கேயுள்ள அதை எடுத்து கொண்டு வா" என்று சொன்னேன். அவர்கள் ஒரு மறு கேள்வியும் கேட்காமல் நான் எதிர்பார்த்ததை சரியாக எடுத்து வந்து கொடுத்து விட்டு... "இது தானே.. இதற்க்கு ஏன் அவ்வளவு பெரிய விளக்கம்" என்றார்கள்.
அதானே...? !
பதிலளிநீக்கு***இந்த விஷயத்தில் நாம் எப்போதும் தடுமாறி தவறாக தான் செய்வோம். ***
பதிலளிநீக்குநீங்க என்னண்ணே, எல்லா ஆண்களையும் ஒரேதா "ஸ்டீரியோ டைப்" பண்ணிக்கிட்டு.
அதுவும் ஒலகத்திலே உள்ள ஆம்பளைகளை எல்லாம் ஒங்களை மாதிரியே "க்ளோன்" பண்ணிக்கிட்டு, "நம்ம இப்படிச் செய்வோம்", "நம்ம அப்படிச் செய்வோம்"னு பொத்தாம் பொதுவாச் சொல்லிக்கிட்டு..
நீங்க சொல்றதைப் பார்த்தால் "இவதான் நம்ம காதலி, நம்ம பொண்டாட்டி" னு சொல்றாப்பிலே இருக்கு, "ஆசம்"ண்ணே! :))
பொதுவா "நம்ம' என்று சொல்லிட்டேன் வருண். இனிமேல், கவனமா இருக்கேன்.
நீக்குசிறந்த பகிர்வு
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குசரியாக விடயத்தை நச் என்று சொல்லியுள்ளீர்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-