இந்நாட்டில் (அமெரிக்காவில்) எனக்கு பிடித்த சின்ன சின்ன விஷயம் -1
இன்றுமுதல் எனக்கு இங்கே பிடித்த விஷயத்தை எண்ணிக்கையிட்டு சொல்ல போகிறேன். இவைகள் மற்றவர்கள் கண்ணுக்கு மிகவும் சிரியவைகளாக தெரியலாம். ஆனால், எனக்கு மிகவும் பிடித்தவை.
1. பிள்ளைகளின் பள்ளிக்கூடம்:
எனக்கு தெரிந்தவரை, என் பிள்ளைகளும் சரி, என் உறவினர் மற்றும் நண்பர்கள் பிள்ளைகளும் சரி, அவரவர் இல்லத்தின் அருகே உள்ள அரசு பள்ளிக்கு தான் செல்கின்றார்கள். "இந்த இந்த" விலாசத்திற்கு "இந்த இந்த" பள்ளி என்று விதி முறைகள் வரையரைக்க பட்டு உள்ளது. சில வேளைகளில் பெற்றோர்களின் அலுவலக விலாசம் மற்றும் வேறு சில காரணங்களினால் பிள்ளைகளை வேறு பள்ளிக்கு சேர்க்க வாய் ப்புகள் உண்டு. சில பெற்றோர்கள் (மொத்த மக்கள் தொகையில் 5% மட்டும்) தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகூடத்திற்கு அனுப்புவார்கள்.
இது என்ன பெரிய விஷயாமா என்று கேட்கலாம்? ஆம் பெரிய விஷயம்தான்.
முதலாவதாக, பிள்ளைகள் அவர் அவர் இல்லத்தின் அருகே உள்ள பள்ளிக்கு செல்வதினால், பள்ளிகூட போக்குவர நேரமே மொத்தம் 5-10 நிமிடம் தான் ஆகும். நிறைய பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களுடன் நடந்து வருவார்கள். சென்ற வருடம் நான் இந்தியா வந்த இருந்தபோது, என் உறவினர் சிலருடைய பிள்ளைகள் தம் பள்ளிக்கோ - கல்லூரிக்கோ சென்று வர ஒரு நாளைக்கு கிட்ட தட்ட 2 மணி நேரம் போல் ஆகிறது என்று கேள்வி பட்டு நொந்து போய்விட்டேன்.
என் மூத்த மகளின் பள்ளிகூட (Golf) அணி!
(இதில் உங்கள் மகள் எது என்று கேட்டு "லொள்ளு" பண்ண கூடாது.)
(இதில் உங்கள் மகள் எது என்று கேட்டு "லொள்ளு" பண்ண கூடாது.)
இந்தியாவிலும் சரி, மேலும் சில வளரும் நாடுகளிலும் சரி அரசு பள்ளியை "இலவச பள்ளி" என்று ஏளனமாக பார்க்கின்றார்கள். அவ்வாறு பார்ப்பதால் அந்த பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புவது எதோ தங்கள் குடும்பத்திற்கு அவமானம் போல் கருதுகின்றார்கள். ஆனால், இங்கே, அரசு பள்ளி நம்முடைய "வரி பணத்தில்" தான் நடத்த படுகின்றது என்ற எண்ணம் இருப்பதினால் அந்த பிரச்னை இல்லை.
சில நேரங்களில் அரசு சார்பான வேலைகள் (நூலகம் கட்டுதல், தெரு அமைத்தல் போன்றவை) நடக்கும் இடத்தில உங்கள் "வரி பணம் வேலை செய்கின்றது" என்ற பலகை மாட்ட பட்டு இருக்கும். அதை பார்க்கையில் மனதில் ஒரு நிம்மதி. நாம் கட்டும் வரி நமக்காகத்தான் செலவு செய்ய படுகின்றது என்று. அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை மக்கள் என்று "இலவசம்" என்று பார்க்காமல் " நமது வரி பணத்தினால் வரும் உரிமை" என்று பார்க்கின்றோமோ, அன்று தான் அந்த நாட்டுக்கு விடிவு காலம்.
இந்த காரியங்கள் மட்டும் இல்லாமல் மற்றொரு முக்கியமான காரியம். பிள்ளைகளின் மத்தியில் ஏற்ற தாழ்வு மனப்பான்மை இல்லை.
உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம் :
நான் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன். எனக்கு அதிகாரிகள் உண்டு. எனக்கு கீழே வேலை செய்பவர்களும் உண்டு. எங்கள் அனைவருடைய பிள்ளைகளும் அருகில் உள்ள பள்ளிக்கு சென்று அருகருகே அமர்ந்து தான் படித்து வருகிறார்கள். பெற்றோர்களின் படிப்பிலும், வருமானத்திலும், வாழ்க்கை நடையிலும் வித்தியாசங்கள் இருந்தாலும், பிள்ளைகள் ஒன்றாக ஒரே பள்ளியில் படிப்பது என்னை பொறுத்தவரை ஒரு நல்ல காரியம் என்பேன்.
பின் குறிப்பு:
இந்த தொடர் இங்கே எனக்கு என்ன என்ன படிக்கும் என்பதற்கே. தயவு செய்து யாரும் என்னை தாய்நாட்டை பற்றி தவறாக எழு துகிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் தாய் நாட்டை பற்றி தவறாக நினைப்பவன் என்றால் இங்கே உங்களிடம் "தமிழில்" எழுதி இருக்க வாய்ப்பே இல்லை. நன்றி.
விடிவு காலம் வருமோ...? ம்...!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குகாலம் ஒரு நாள் பதில்சொல்லும்.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-