ஒவ்வொரு முறையும் என் இடுகையின் பக்கம் போகும் போதும், அதன் அருகில் யார் எந்த நாட்டில் இருந்து வந்து படிகின்றார்கள் என்று வரும். அது பார்க்கும் போது மனதில் ஒரு சந்தோசம். அடேடே, உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்து நாம் எழுதும் எழுத்துக்களை பல்லாயிர கணக்கான மைல்களுக்கு அப்பார்ப்பட்டு வசிக்கும் தமிழர்கள் படிக்கின்றார்கள் என்பதை நினைத்தாலே மீண்டும் மீண்டும் எழுத தோன்றும்.
இப்படி இருக்கையில் சில நேரங்களில் சில ஊர்களின் பெயர்கள், சில நாடுகளின் பெயர்கள் வரும். இந்த நாடுகளுக்கு, ஊர்களுக்கு நமக்கும் செல்ல ஆசை தான். இருந்தாலும், போக முடியவில்லையே என்ற ஏக்கம்.
நாம் எழுதும் இந்த இடுகைகளை படித்து விட்டு, நமக்கு அறிமுகமே இல்லாத தமிழர் ஒருவர், பின்னோட்டம் இடும் போது வருகிறதே... அதன் சுகமே தனி. அதுவும், அந்த பின்னோட்டத்தில்... நம் எழுத்தை ரசித்து பாராட்டினால், எதோ நாம் பெற்ற குழைந்தைகள் பெரிய பரிசு வாங்குவது போல் ஒரு உணர்ச்சி.
ஏன் இருக்காது...? ஒவ்வொரு இடுகையும், ஒரு பிள்ளை அல்லவா? அதை யோசித்து, எடுத்து வளர்த்து மற்றவர்கள் பார்த்து ரசித்து பாராட்ட எந்த தகப்பன்-தாய்க்கு தான் பிடிக்காது.
சென்ற மாதம், நண்பர் பரதேசி (பேருதாங்க பரதேசி, இவர் பெரிய தேசி...) என்னை அழைத்து, விசு, "இங்கே என் நகரத்தில், எனக்கு அறிமுகமான ஒருவர் உன் இடுகையை படித்து ரசிக்கிறார்" என்று சொன்னவுடன். அது எனக்கு " விசு, உன் மூத்த பிள்ளை இங்கே நடந்த போட்டியில் முதல் பரிசை தட்டி சென்றாள்" என்று தானே கேட்டது.
பல நண்பர்கள் பின்னோட்டம் இட்டு பிறகு மின்னஞ்சல் - தொலை பேசி மூலம் பேசி பழகி, இடுகை நட்பு, ஒரு படி தாண்டி பேச்சு நட்ப்பாகி உள்ளது.
அது எல்லாம் சரி, இந்த தலைப்பிற்கும் இந்த இடுகைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கின்றீர்களா? சொல்கிறேன்...இங்கே பெயர் தெரியாத நண்பர்கள் வந்து என் இடுகையை படிக்கும் போது நானே அவர்களுக்கு ஒரு பெயர் வைத்து அவர்கள் வருகைக்காக ஒரு நன்றி சொல்வேன்..
அப்படி வைத்ததுதான்..
செனெகல் சிநேகிதன்
பொலிவிய புகழ்
சில்லி சம்பந்தி
ஆஸ்ட்ராலியா ஆசாமி
நியூசிலாந்து நகரத்தான்
நைஜீரியா நம்பாளு
கடைசியாக..
பின்லாந்த் பின்லேடன்...
இதுவும் நல்லாத்தான் இருக்கு!...
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குதாங்கள் சொல்வது உண்மைதான்... ஒரு மகிழ்ச்சிதான்...
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 போட்டி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறந்த பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்
படியுங்கள் இணையுங்கள்
தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
http://eluththugal.blogspot.com/2014/08/2014.html
உங்கள் நட்பின் பலமும் பலவீனமும் ஒருசேர வெளிப்படும் பதிவு இது.
பதிலளிநீக்குஒரு வித்தியாசமான பார்வையாக இருக்கிறது! சின்ன வயதில் பள்ளியில் ஒருவருக்கொருவர் வெள்ளந்தியாக பட்டப் பெயர் சொல்லி அழைத்து விளையாடிய மகிழ்ச்சி நிழலாடியது.
பதிலளிநீக்கு